Followers

Copyright

QRCode

Thursday, October 14, 2010

ரசிகனும் நடிகனும்


இது எந்த குறிப்பிட்ட நடிகரையோ இல்லை அவரின் ரசிகர்களையோ குறித்து எழுதப்பட்ட பதிவு இல்லை ...எல்லா நடிகர்களுக்கும் அவர்களின் ரசிகர்களுக்கும் பொருந்தும் ....

இப்ப எல்லாம் தலைவா வணக்கம் .. நான்தான் உன்னோட தீவிர ரசிகன் பேசுறேன் அப்படின்னு ஏதாவது பதிவ பாத்தா கடுப்பா வருது ... காரணம் நீங்களும்தான் வருசகணக்கா இப்படிஎழுதிகிட்டு இருக்கீங்க  யாராவது  திருந்தினார்களா? அப்பறம் எதுக்கு இப்படி எல்லாம் பொலம்புரீங்க... நீங்க வயித்தெரிச்சல்ல சொல்லுறீங்களோ இல்லை சமூக அக்கறையோட சொல்லுறீங்களோ எப்படி சொன்னாலும் சரி... ஒரு விஷயம் உண்மை  நீங்க சொல்லுறது நூற்றுக்கு நூறு   ... இந்த நடிகர்களால் யாருக்கு என்ன நன்மைன்னு யோசிச்சி பாத்தா ஒரு மண்ணாங்கட்டியும் இல்லை ... மன்னர்கள் காலத்திலெல்லாம் உழைத்து கலைத்து சோர்ந்து பொய் இருக்கும் மக்களை அந்த சோர்வில் இருந்து கொஞ்சம் குஷிபடுத்த கூத்தாடிகள் என்று ஒரு குழு இருப்பார்கள் ... அவர்கள் தினமும் ஒவ்வொரு தெருவில் சென்று அந்த மக்களை குஷிபடுத்தி விட்டு மக்கள் தரும் உணவை உண்டு நாடோடிகள் போல வாழ்ந்து கொண்டு இருந்தவர்கள் ... அந்த நாடோடிகள் வழி வந்த எச்சமே இன்றைய நடிகர்கள் கூட்டம்.. ஆனால் இன்று நம் நாட்டையே ஒரு ஆட்டு மந்தைகூட்டமாய் மாற்றும் ஒரு சக்தி இவர்கள் கையில்... சினிமா என்பது ஒரு பொழுதுபோக்கு நிகழ்ச்சி அவ்வளவே ... ஆனால் இன்று பொழுதுபோக்கு என்பதை விட அதை  ஒரு சூதட்டமாய் மாறி போக செய்ததில் இந்த நடிகர்களின் பங்கு ரொம்ப பெரியது ... அவர்கள் அந்த சூதாட்டத்தில் ஜெய்க்க பல இளைங்கர்களின் வாழ்கையை பணயம் வைத்து கொண்டு இருக்கிறார்கள் ...  

இன்று ஒரு நடிகனின் கட் அவுட்டுக்கு பால் ஊற்றி கொண்டு இருக்கும் ஒரு ரசிகன் கண்டிப்பாய் கணினி துறையில் பல லட்சங்களை சம்பாதித்து கொண்டு பொழுதுபோகாமல் தன அபிமான நடிகனின் படத்திற்கு முதல் நாள் சென்று தன மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ள வந்தவன் இல்லை ... ஒன்று அவன் ஒரு கலூரி மாணவனாக இருக்க வேண்டும் இல்லை அன்றாடம் உழைத்தால்தான் சாப்பாடு என்ற நிலையில் இருக்கும் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்தவனாகத்தான் இருக்க வேண்டும் ...  தான் கோடி கோடியாய் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காய் நடிகன் திரையில் வீசும் வலைகள் எல்லாம் இந்த ஏமாந்த சோணகிரி மீன்களை நோக்கிதானே...

இந்த தூண்டில் போடும் வேலையை   முதன் முதலில் ஆரம்பித்தது எம்.ஜி.ஆர்தான்... அவர் நன்றாக குளு குளு அறையில் படுத்து கொண்டு தன படங்களில் வியர்வை சிந்தி உழைக்கும் உழைப்பாளர் வர்க்கத்திற்கு தூண்டில் போடுவார் ... அவர் படங்களில் பெரும்பாலும் கதாநாயகன் கஷ்டப்பட்டு உழைக்கும் பாட்டாளியாகவும் வில்லன் அவன் உழைப்பை சுரண்டும் முதலாளியாகவுமே இருப்பான்... ஆனால் நிஜத்தில் இவர்தான் சினிமா என்னும் பேரில் உழைப்பாளர்களை ஏமாற்றி அவர்களை மூளை சலவை செய்து பணம் சம்பாதித்த முதலாளி ... ஆனால் இவருக்கு கிடைத்த பேரோ பாட்டாளி மக்களின் தலைவன் அவர்களின் அமோக ஆதரவுடன் அரசியலிலும் இறங்கி வெற்றி பெற்று கோடிகளை குவித்தார் ... தமிழ் நாட்டில் மட்டுமே இப்படி எல்லாம் நடக்கும்...  அடுத்து வந்த நடிகர்களும் அந்த வழியிலேயே சென்றார்கள்... அவர்களின் இலக்கு தனக்கு பின்னே ஆட்டுமந்தைகளை போல ஒரு கூட்டம் வேண்டும் ... தான் என்ன செய்தாலும் அவர்கள் அதை ரசிக்க வேண்டும் ... அவர்களை வைத்து நான் கோடி கோடியாக பணம் சம்பாதிக்க வேண்டும்... அவ்வளவுதான் எந்த நடிகனும் தான் இவ்வளவு சொகுசாக வாழ்வதற்கு காரணமான ரசிகனுக்கு இதுவரை எதுவும் செய்ததில்லை ... படம் வெளிவரும் நேரத்தில் மட்டுமே ரசிகர்கள் அவர்களுக்கு கடவுள் ... தனக்கு தேவை என்றால் அவர்களை பயன்படுத்திக்கொள்ள தயங்க மாட்டார்கள் ... தன சுயநலத்திற்காக தன எதிரியிடம் சண்டை இட செய்து பின்னர் வேறு  சுயநல காரனத்திர்க்காய் ரசிகனை கழட்டி விட்டு  அதே எதிரியின் காலில் விழும் நடிகர்கள்தான் இங்கே அதிகம்.. ஆனால் அதன்பின்னரும் அந்த ரசிகன் அவர் பின்னால் இருப்பான் அந்த அளவுக்கு மூளை சலவை செய்யும் சக்தி சினிமா என்னும் துறைக்கு உள்ளது ... அதை இவர்கள் நன்கு பயன்படுத்தி கொண்டுள்ளனர் ...


சினிமாவை சினிமாவாக பார்க்கும் ரசிகர்கள் இங்கே மிகவும் குறைவு .. திரையில் வரும் பிம்பங்களை நிஜ மனிதர்களாய் நினைத்து கொள்ளும் பாமர மனம் கொண்ட ரசிகனே இங்கு அதிகம் ... தன ஆடம்பர வாழ்க்கைக்கு அவனை விலை பேசி விற்று விடுகிறார்கள் இவர்கள் ... நிஜ வாழ்கையில் ஊழலுக்கு எதிராக சண்டை இடும் ஐ.பி.எஸ் அதிகாரிகள் இங்கு இருக்கிறார்கள் .. ஆனால் அவர்களுக்கு இங்கே யாராவது ரசிகர் மன்றம் ஆரம்பித்து இருக்கிறார்களா? அவர்கள் கஷ்டப்படும் பொழுது அவர்களுக்கு ஆதரவாக குரல் ஓங்கி ஒலிக்குமா நம் நாட்டில் ... அவரை பற்றிய செய்தியை கூட ஒளிபரப்ப ஆள் கிடையாது இங்கு.. ஆனால் ஒரு நடிகன் சினிமா எடுத்து அதை யாராவது தவறாக பேசி விட்டால் உடனே அவர் எவ்வளவு கஷ்டப்பட்டு படம் எடுத்துள்ளார் அதை ஏன் தவறாக பேசுகிறாய் என்று பலத்த சத்தம் கேட்கும் ... நொடிக்கு ஒருமுறை அம்மா வாங்க ஐய்யா வாங்க வந்து படத்த பாருங்க என்று டிவீ பெட்டிகள் அலறும்... 


இப்படி எல்லாமே தலைகீழாய் மாறி போனதிர்க்கு மிக மிக முக்கிய காரணம் நாம் நாட்டு மக்களின் உணர்ச்சிகரமான மனப்பான்மை.. எதர்க்காகவும் எளிதில் உணர்ச்சிவசபடும் ஆட்கள் நாம் எல்லாம்... 

ஒரு நடிகரை ரசிப்பதில் தவறேதும் இல்லை .. அதை ஏதோ கொலைகுற்றம் அளவுக்கு  குற்றம் சொல்லுவது கண்டிப்பாய் தவறுதான் .. ஆனால் ரசனை எல்லை மீறி அந்த நடிகரை கடவுளாய் துதிக்கும் ரசிகனை கண்டிப்பாய் குறை  சொல்லித்தான் ஆகவேண்டும் ...எந்த  ஒரு நடிகனும் சும்மா கஷ்டமே இல்லாமல் பணம் சம்பாதித்து விடுவதில்லை ... எனவே அவர்களையும் நாம் குற்றம் சொல்ல முடியாது ... ஆனால் நடிகர் தன நடிப்பு திறமையால் நம்மை மூன்று மணி நேரம் சந்தோசபடுத்துகிறார் , நாமும் மூன்று மணி நேரம் என்ஜாய் பண்ணுகிறோம்  என்பதோடு நமக்கும் அந்த நடிகனுக்கும் இருக்கும் உறவு முடிந்தால் யாரும் இந்த நடிகனையோ இல்லை ரசிகனையோ  குறை சொல்ல போவதில்லை  , ஆனால் எப்பொழுது ஒரு நடிகன் தன பின்னால் ஒரு கூட்டம் சேர்ந்து விட்டது என்று நினைத்து தன சுயநலத்திற்காக அவர்களை தவறாக பயன்படுத்த ஆரம்பிக்கிறானோ அப்பொழுதுதான் அந்த நடிகனிடமும் ரசிகனிடமும் சில கேள்விகள் கேட்க்க வேண்டியதாகிறது ... நீ இந்த சமூதாயத்திற்கு என்ன செய்து கிழித்து விட்டாய் என்று அரசியலில் இறங்க போகிறாய்? என்று நடிகனிடமும் உனக்கு அவர் என்ன செய்தது விட்டார் என்று இவருக்கு இப்படி வக்காலத்து வாங்குகிறாய்?அவன் பணம் சம்பாதிக்க உன்னை பயன்படுத்துகிறான் என்று புரிந்துகொள்ளகூட முடியாமல் இருக்கும் அடிமுட்டாளா நீ ?  என்று அந்த ரசிகனிடமும் கேட்க வேண்டியதாகிறது.. ஆனால் இதை  ரஜினி ரசிகனை பார்த்து நம் கேட்டால் நம்மை கமல் ரசிகன் என்று சொல்லி வயித்தெரிச்சல்  பார்ட்டி  என்று பட்டம் குத்திவிடுவார்கள் ... கமல் ரசிகனிடம் கேட்டால்  ரஜினி ரசிகன் என்று முத்திரை குத்தி விடுகிறார்கள் ....  ஒரு குறிப்பிட்ட நடிகன் மேல் இருக்கும் சொந்த வெறுப்பே உன்னை இப்படியெல்லாம் பேச வைக்கிறது என்று நம் மேல் சேரை வாரி இறைக்கிறார்கள்... உனக்கேண்டா இந்த அக்கறை யாருக்கும் இல்லாத அக்கறை , நீ இல்லாம போனா இந்த சமூதாயம் என்ன ஆகும் என்று கேலி செய்வார்கள் ... அவர்கள் உணர்வுகளுக்கு அடிமையானவர்கள்தானே , அதனால்தான் இப்படி யோசிக்காமல் எளிதில் உணர்ச்சிவசப்பட்டு பேசி விடுவார்கள் ... இந்த விசயத்தில் கொஞ்சம்  உணர்வுகளை தள்ளி வைத்து விட்டு சுய அறிவை கொண்டு சித்தித்தால் அவர்களுக்கும் உண்மை புரியும்... 

அதேபோல் படமே பார்க்க கூடாது படங்கள்தான் இன்றைய இளைங்கர்கள் வாழ்க்கையை சீரழிக்கிறது muthalil சினிமாவை தடை பண்ண வேண்டும் என்று கூருவதும் மிக பெரிய தவறு .. இப்படி இளைங்கனை சீரழிக்கிறது என்று சொல்லி ஒவ்வொன்றாக தடை பண்ண ஆரம்பித்தால் நாம் திரும்பவும் கற்கால மனிதனை போல காட்டுக்குள் ஆடை இல்லாமல் அம்மணமாக வாழ வேண்டியதுதான் ...  எல்லா விசயங்களிலும் நல்லதை போல கேட்டதும் இருக்கத்தான் செய்யும் ... ஆனால் எது நல்லது எது கேட்டது என்று நாம்தான் பகுத்தறிய வேண்டும் ...

நடிகனை நடிகனாய் பார்த்து ரசிக்கலாம்  .. ஆனால் அவனை கடவுளாய் நினைத்து துத்திப்பது கண்டிப்பாய் தவறுதான் இதை என்ன்றைக்கு   நம் இளைங்கர்கள் உணர போகிறார்கள் என்று தெரியவில்லை  

5 comments:

வினோ said...

/ நடிகனை நடிகனாய் பார்த்து ரசிக்கலாம் .. ஆனால் அவனை கடவுளாய் நினைத்து துத்திப்பது கண்டிப்பாய் தவறுதான் /

இந்த நிலை மாற வேண்டும்..

DHANS said...

//இன்று ஒரு நடிகனின் கட் அவுட்டுக்கு பால் ஊற்றி கொண்டு இருக்கும் ஒரு ரசிகன் கண்டிப்பாய் கணினி துறையில் பல லட்சங்களை சம்பாதித்து கொண்டு பொழுதுபோகாமல் தன அபிமான நடிகனின் படத்திற்கு முதல் நாள் சென்று தன மனதை ரிலாக்ஸ் செய்து கொள்ள வந்தவன் இல்லை //

not true my friend, friend of mine who is working in the IT field who bought milk pockets for recently released movie.
not only himself, along with 6 more guys did something which i never feel good.

your post is excellent but i dont think no one will think

எஸ்.கே said...

நன்றாகவே உள்ளது!

ILLUMINATI said...

//சினிமாவை சினிமாவாக பார்க்கும் ரசிகர்கள் இங்கே மிகவும் குறைவு //

//ரஜினி ரசிகனை பார்த்து நம் கேட்டால் நம்மை கமல் ரசிகன் என்று சொல்லி வயித்தெரிச்சல் பார்ட்டி என்று பட்டம் குத்திவிடுவார்கள் ... கமல் ரசிகனிடம் கேட்டால் ரஜினி ரசிகன் என்று முத்திரை குத்தி விடுகிறார்கள் ....

ஒரு குறிப்பிட்ட நடிகன் மேல் இருக்கும் சொந்த வெறுப்பே உன்னை இப்படியெல்லாம் பேச வைக்கிறது என்று நம் மேல் சேரை வாரி இறைக்கிறார்கள்... உனக்கேண்டா இந்த அக்கறை யாருக்கும் இல்லாத அக்கறை , நீ இல்லாம போனா இந்த சமூதாயம் என்ன ஆகும் என்று கேலி செய்வார்கள் ...//

சத்தியமான உண்மை.நமது ஆட்களுக்கு உணர்ச்சிவசப்படத் தெரிந்த அளவுக்கு சிந்திக்க தெரியாது.

Sarav said...

கண்டிப்பாக வரும் காலத்தில் இந்த நிலை மாறும்.. மாற வேண்டும்?!

அருமை ... நல்லா எழுதி இருக்கீங்க !!

LinkWithin

Related Posts with Thumbnails