Followers

Copyright

QRCode

Saturday, September 18, 2010

பிஸியா வேலை செய்வது போல நடிப்பது எப்படி?


நான் பதிவுலகத்திற்கு வந்து நூறு பதிவுகள் எழுதி விட்டேன் .. எனக்கு ஆரம்பத்தில் tamilish, tamilmanam போன்ற திரட்டிகள் பற்றி எதுவும் தெரியாது, அதனால் கொஞ்சம் கூட எனக்கு ஹிட்ஸ் கிடைக்கவில்லை ... நான் கடைசியாக எழுதிய நாற்பது பதிவுகளை மட்டுமே திரட்டிகளில் இணைத்து இருந்தேன் ... கொஞ்சம் கொஞ்சமாக என் ஹிட்ஸ் ரேட் எகிற தொடங்கியது ... இப்பொழுது அது முப்பதாயிரத்தை தாண்டி விட்டது... இதற்கெல்லாம் காரணம் என் பதிவுகளை ஆபீசில் இருந்து படிக்கும் என்னை போன்ற பதிவுலக வாசகர்கள் மற்றும் சக எழுத்தாளர்களே(ஹி ஹி நாங்களும் எழுத்தாளர் ஆகிட்டோம்ல ) ... இவர்களுக்கெல்லாம் நான் என்ன கைம்மாறு செய்ய போகிறேன் என்று கேள்வி கேட்டு என் மனசாட்சி என்னை இரண்டு மூன்று நாட்களாக தூங்க விடவில்லை ... அதன் பாதிப்புதான் இந்த பதிவு... (ஆனானப்பட்ட ரஜினியே ரசிகர்களை பத்தி கவலை படுவதில்லை .. சுண்டக்கா பையன் நீ , உனக்கு ஏன் இந்த கவலை என்று நீங்கள் கேட்பது எனக்கும் கேட்கிறது ... என்ன பண்ண ஆண்டவன் நமக்கு இரக்க குணத்த இரக்கமில்லாம அதிகமா படச்சிட்டானே)

 நம்ம பதிவர்கள் பல பேருக்கு இருக்கிற பெரிய கவலையே அலுவலகத்தில் நாமளும் வேலை பார்க்கிறோம் அப்படின்னு மத்தவங்களை நம்ப வைப்பது எப்படி என்பதுதான்.... நான் வேலை பார்க்கும் இடத்தில் இருக்கும் எப்பொழுதும் வேலை மட்டுமே பார்த்து கொண்டு இருப்பதை போல மற்றவர்களுக்கு காட்டி கொள்ளும் சிலரை ரெண்டு மூன்று நாட்களாக நோட்டம் விட்ட பொழுது அவர்கள் உண்மையிலேயே வேலை பார்ப்பது இல்லை , சில நடவடிக்கைகளின் மூலமாய் மற்றவர்களை அப்படி நம்ப வைக்கிறார்கள் என்று தெரிந்து கொண்டேன்(ரொம்ப லேட் சார் நீங்க என்று நீங்கள் சொல்லுவது தெரிகிறது) ... இதோ அவர்கள் செய்யும் டகால்டி வேளைகளில் சில ... இது நம்மள போன்ற பல பேருக்கு யூஸ் ஆகும்னு நெனைக்கிறேன் ... 



டிக்கி sorry டிஸ்கி:  நீங்க உண்மையிலேயே ஆபீசில் உண்மையாக வேலை பார்க்கும் ஆசாமியா தயவு செய்து இதுக்கு மேல படிக்காதீங்க ... இத படிச்சி நீங்களும் வேலை பார்க்காமல் டகால்டி வேலைகளை கற்று கொண்டு ஸீன் போட ஆரம்பித்து விட்டால் ஆபீசில் எந்த வேலையும் நடக்காது ... பிறகு எல்லாரும் கூண்டோடு மாட்டி கொண்டு விடுவார்கள் ... நீங்க வியர்த்தா நம்ம உடம்புக்கு ஆகாது என்று வியர்வைக்கு பயப்படும் ஆசாமியா ... ம்ம் start music

1. பதிவுகளை படிக்கும் போது பதிவு சம்பந்தமான உணர்சிகளை உங்கள் முகத்தில் காட்டாதீர்கள் .... கொஞ்ச நேரம் படித்து விட்டு , ரொம்ப நேரமா உங்க மானிட்டரையே மொறச்சி பாத்துகிட்டு இருங்க ... அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சி உங்க பைல் எடுத்து ஏதாவது ஒரு டாகுமெண்ட கையில வச்சிக்கிட்டு இன்னும் கொஞ்சம் நேரம் மானிடர மொறச்சி பாருங்க ... எல்லாரும் ஏதோ முக்கியமான டாகுமென்ட் ரெடி பண்ணிக்கிட்டு இருக்கீங்கன்னு நெனப்பாணுக ... ஆனா நீங்க உங்களுக்கு பிடிச்ச பதிவ படிச்சிகிட்டு இருக்கீங்கன்னு யாருக்கும் தெரியாது ...

2. பதிவ படிக்கும்போது சில சமயம் உங்களையும் அறியாமல் சிரித்து விடுவீர்கள் , அது மற்றவர்களுக்கு காட்டி கொடுத்து விடும் , எனவே அப்பப்ப தலையை சொரிந்து கொள்ளுங்கள் , பல்லை கடித்து கொண்டே ரெண்டு மூன்று வார்த்தை டைப் செய்து கொள்ளுங்கள் .. உங்கள் ஆபீஸ் போன் எடுத்து உங்கள் நம்பருக்கே கால் பண்ணுங்க ... ரெண்டு மூணு தடவ இப்படி உங்களுக்கே கால் பண்ணிட்டு போன் ரிசீவர கோபமா வையுங்க ... சுத்தி இருக்கிறவங்க எல்லாம் ஏதோ முக்கியமான வேலையா யாருக்கோ போன் பண்ணி லைன் கெடைக்காம கோபத்துல இருக்கீங்க போலன்னு நெனச்சிகிடுவாணுக 

3. கம்ப்யூட்டர் மவுஸை அடிக்கடி யூஸ் பண்ணுனா நாம browse பண்ணிக்கிட்டு இருக்கோம்னு சுத்தி  இருக்கிறவனுக்கு டவுட் வந்திடும் .. அதனால ப்ரௌசெர் விண்டோ   maximize minimize பண்ணுரதகூட keyboard short cut keys யூஸ் பண்ணியே பண்ணுங்க .. அப்பத்தான் நாம ஏதோ கோடிங் டைப் பண்ணிக்கிட்டு இருக்கோம்னு எல்லாரும் நம்பிடுவாணுக 

4. அடிக்கடி கம்ப்யூட்டரை முறைத்து அல்லது வெறித்துப் பார்க்கவும். கூடவே நகத்தையும் கடித்து வையுங்கள்.

5. சீட்டில் சாய்ந்து உட்காராமல் முன்னால் இழுத்து விட்டு சில நிமிடங்களுக்கு சீட் நுனியில் உட்கார்ந்து டைப் அடிக்கவும்.

6. சும்மா கம்ப்யூட்டர் மட்டும் நோண்டிகிட்டு இருந்தா எவனும் நம்பமாட்டான் ..அவ்வப்போது பேப்பர் ஃபைல்களை கலைத்துவிட்டு பெருமூச்சு விடுங்கள். நீங்கள் எதையோ தேடுவதாக நினைத்துக் கொள்வார்கள். கடைசியில் ஏதாவது ஒரு பேப்பரை எடுத்து சிரித்தபடியே "எஸ்...." என்றோ அல்லது "சக்சஸ்" என்றோ சொல்லுங்கள்.

7. ரொம்ப நேரம் பதிவ படிச்சிட்டு அடுத்து சாப்பிட canteen  போகும்போது சொங்கி மாதிரி நடந்து போகாதீங்க ...எங்காவது எழுந்து போகும்போது மிக வேகமாக நடந்து போங்கள். ஏதோ முக்கியமான விஷயத்துக்காகப் போகிறீர்கள் என மற்றவர்கள் நினைத்துக் கொள்வார்கள்.

8. அப்பறம் ரொம்ப முக்கியமான விஷயம் எப்பவாது மீட்டிங் போகும்போது சும்மா வெறும் கைய வீசிக்கிட்டு போகாதீங்க ... கையில ஒரு பேனா மற்றும் நோட்டு புத்தகம் கொண்டு போவது வேலை பார்ப்பது போல நாம் ஸீன் போடுவதற்கு மிகவும் உதவும் ... பால்ம்டாப் இருந்தால் இன்னும் நலம் .. அது ஆபீசில் இருக்கும் பிகர்களின் கண்கள் உங்கள் மேல் திரும்ப வைக்க உதவும் ...

9. உங்கள் மானிட்டரின் அருகில் எப்போதும் ஒரு நோட்டுப் புத்தகத்தையும் பேனாவையும் திறந்தே வையுங்கள். அதில் ஏதாவது ஒன்றிரண்டு வார்த்தைகளையும், நம்பர்களையும் கிறுக்கிக் கொண்டிருங்கள்.

10. அப்பறம் ரொம்ப முக்கியமான விஷயம் மத்தியான சாப்பாட்டுக்கு மொத ஆளா போய் உக்காரகூடாது ... பத்து நிமிடம் கூடுதலாக சில பதிவுகளை படித்து விட்டு எல்லாரும் பாதி சாப்பாடு முடித்து விட்ட பின்னர் அவசர அவசரமாக சென்று கொஞ்சம் வேலை இருந்தது அதான் லேட் என்றுயாரும் உங்களிடம் காரணம் கேட்கா விட்டாலும் அனைவர் காதிலும் கேட்கும் படி சொல்லுங்கள் .. அதே போல்தான் டீ கொண்டுவந்து கொடுத்தவுடன் குடித்து விடாதீர்கள் ... கொஞ்சநேரம் அதை ஆறவைத்து விட்டு வேறு டீ கேட்டு வாங்கி குடியுங்கள் ... 

11 .வேலை நேரம் முடிந்தவுடனே ஆபீசில் இருந்து கிளம்பிவிட கூடாது ... குறைந்தபட்சம் ஒரு அரைமனிநேரமாவது சாட்டில் நண்பர்களுடனோ இல்லை பிகருடனோ பேசி விட்டு கிளம்புங்கள் ... இப்படி லேட்டா கிளம்பும்போது உங்கள் project leader கண்ணில் படுமாறு அவர் கேபின் வழியாக செல்வது நலம் ... 


இதையும் மீறி எப்பவாது நீங்க உருப்படியா ஒரு வேலை பார்த்து விட்டீர்கள் என்று வைத்து கொள்ளுங்கள் ... அதை நோட்டிஸ் போர்டில் ஒட்டாத குறையாக எல்லாரிடமும் சொல்லி பெருமை பட்டு கொள்ளுங்கள் .... அடுத்தவன் யாராவது உருப்படியாய் வேலை செய்து கொண்டு இருக்கும் போது நீங்களாக சென்று தெரியுமோ தெரியாதோ ஏதாவது அவனுக்கு ஐடியா கொடுங்கள் ... கடைசியில் அவன் செய்த வேலை சொதப்பி விட்டால் நான் அப்பவே சொன்னேன் இப்படி மாத்தி பண்ணுடான்னு .. நான் சொன்னத மாதிரி பண்ணிருந்தேனா இந்நேரம் உன் வேலை முடிந்திருக்கும் என்று கூசாமல் எல்லார் முன்னாடியும் பலியை அவன் மேல் தூக்கி போட்டு விடுங்கள் ... 

உங்களுக்கு கீழே சில அல்லகைகள் வேலை செய்தால் உங்கள் வேலைகளை எல்லாம் அவர்களிடமே கொடுத்து செய்ய சொல்லுங்கள் ... வேலை சரியாக முடிந்தால் மேலதிகாரியடம் கையெழுத்து வாங்குவதற்கு நீங்கள் மட்டும் தனியாக  சென்று வாங்குங்கள் ... அவரிடம் உங்கள் அல்லகைகள் யாரும் வேலை பார்க்கவில்லை என்றும் நீங்கள் தனி ஆளாக இந்த வேலையை முடித்ததாகவும் சொல்லி வையுங்கள் ...பின்னாளில் நீங்கள் கொடுத்த வேலையை சரியாக செய்து முடிக்காமல் போனால் மேலதிகாரி உங்கள் அல்லகைகளைதான் திட்டுவார் நீங்கள் escape ஆகி விடலாம் ...

மேல நான் சொன்ன ஐடியா எல்லாமே மற்றவர்கள் உங்களை நம்பும் வரைக்கும்தான் work out ஆகும்... உங்க மேல கொஞ்சூண்டு டவுட் வந்தாலும் மக்கா ரொம்ப ஆபத்து .. நீங்க கண்டிப்பா வேலை பாத்துதான் ஆகணும் ... சில பதிவர்கள் நடுவில் ஒரு மாதம் இல்லை ரெண்டு மாதம் பதிவே போடாமல் இருப்பார்கள் .. அதற்க்கு காரணம் இதுதான் ... அதை போன்ற ஒரு நிலைமை உங்களுக்கு வராமல் பார்த்து கொள்ளுங்கள் 


"தப்பே பண்ணாம எல்லாவற்றையும் சமாளிக்கிரவன் புத்திசாலி 
மாட்டிக்காம தப்பு பண்ணுறவன் அதிபுத்திசாலி..."

போனஸ் : ஒரு அழகான பெண்ணின் படம்  கீழே 


 மக்கா நீங்க ஒழுங்கா வேலை செய்யலேன்னு வச்சிகோங்க.. இப்படிதான் ஒரு அழகான பொண்ணு நீங்க இப்ப ஒக்காந்து இருக்கிற சீட்டுல உக்காந்து ஸீன் போட்டுக்கிட்டு இருப்பா .. என்ன அத பாக்கத்தான் நீங்க அந்த ஆபீஸ்ல இருக்க மாட்டீங்க  


30 comments:

Unknown said...

இப்பிடியெல்லாம் யோசிப்பீங்களா? இருங்க நம்ம ஆபிஸ் பக்கம் கொஞ்சம் எட்டிப் பார்க்கிறேன் .. அப்பதானே சொம்மா பதிவ மெயரவைன்களே தூக்கிட்டு அந்த பொண்ணு மாதிரி நெறைய பேரை வேலைக்கு வைக்க முடியும் ...

Jeyamaran said...

*/போனஸ் : ஒரு அழகான பெண்ணின் படம் கீழே
மக்கா நீங்க ஒழுங்கா வேலை செய்யலேன்னு வச்சிகோங்க.. இப்படிதான் ஒரு அழகான பொண்ணு நீங்க இப்ப ஒக்காந்து இருக்கிற சீட்டுல உக்காந்து ஸீன் போட்டுக்கிட்டு இருப்பா .. என்ன அத பாக்கத்தான் நீங்க அந்த ஆபீஸ்ல இருக்க மாட்டீங்க /*

அந்த அழகான பொண்ண பார்த்து சந்தோஷ பட்ட இப்படியா அப்பு அடிப்பது very dangerous

Unknown said...

Mind la vechuruken thala ... Use panikuren ...!!!

முனைவ்வ்வர் பட்டாபட்டி.... said...

அப்பறம் கொஞ்ச நேரம் கழிச்சி உங்க பைல் எடுத்து ஏதாவது ஒரு டாகுமெண்ட கையில வச்சிக்கிட்டு இன்னும் கொஞ்சம் நேரம் மானிடர மொறச்சி பாருங்க//

O...ஆபீஸ்ல மானிட்டரு எல்லாம் Allow பண்றாங்களா?..


சார்..பிளீஸ்..அந்த ஆபிஸ் அட்ரஸ்ச மெயில் பண்ணுங்க..ஹி..ஹி

Prathap Kumar S. said...

ஹஹஹஹ...தலைவா ஐடியாவுலாம் ரொம்ப கரீட்டு...

ஆனா நாங்க இதுல பி.எச்.டி. எடுத்து ஆளுங்களாச்சே... 5 வருஷம் ஆச்சு
ஒரு பய கண்டுபிடிச்சிருப்பானா....வெற்றிகரமாக ஆறாவது ஆண்டில் அடிஎடுத்துக்வைக்கும்

இப்படிக்கு
நாஞ்சில் பிரதாப்
நிரந்தர உறுப்பினர்
ஆபிசில் ஒ.பி.அடிப்பபோர் சங்கம்
அமீரக கிளை...

"ராஜா" said...

//இப்பிடியெல்லாம் யோசிப்பீங்களா? இருங்க நம்ம ஆபிஸ் பக்கம் கொஞ்சம் எட்டிப் பார்க்கிறேன் .. அப்பதானே சொம்மா பதிவ மெயரவைன்களே தூக்கிட்டு அந்த பொண்ணு மாதிரி நெறைய பேரை வேலைக்கு வைக்க முடியும் ..

பாஸ் இப்படி சோக்கா பொண்ணுங்கள வேலைக்கு எடுத்தீங்கன்னா , அப்புறம் எவனும் வேலைய என்ன பதிவ கூட பாக்க மாட்டான் ... அப்புறம் இந்த பொண்ண மேயரவண வேலைய விட்டு தூக்க வேண்டி வரும் .. அப்பறம் ஆபீஸ்ல ஒரு பய இருக்க மாட்டான் ... ஊத்தி மூட வேண்டி வரும் பாத்து ஜாக்கிரதை

"ராஜா" said...

//அந்த அழகான பொண்ண பார்த்து சந்தோஷ பட்ட இப்படியா அப்பு அடிப்பது very dangerous

ஹீ ஹீ ... பொண்ணுகன்னாலே எப்பவும் dangerதான் தல ...

"ராஜா" said...

//Mind la vechuruken thala ... Use panikuren ...!!!

எத தல அந்த பிகரையா?

கவி அழகன் said...

mm will try

"ராஜா" said...

//O...ஆபீஸ்ல மானிட்டரு எல்லாம் Allow பண்றாங்களா?..


சார்..பிளீஸ்..அந்த ஆபிஸ் அட்ரஸ்ச மெயில் பண்ணுங்க..ஹி..ஹி

தல தமிழ்நாட்டுல டாஸ்மாக்குன்னு போர்டு போட்டு ஊருக்கு ஊரு கவர்மெண்டே ஆபீஸ் நெறையநடத்துது ..... அங்க மானிட்டரு மட்டும் இல்ல எல்லா சரக்கும் allow பண்ணுவானுக ..

"ராஜா" said...

ஹஹஹஹ...தலைவா ஐடியாவுலாம் ரொம்ப கரீட்டு...

ஆனா நாங்க இதுல பி.எச்.டி. எடுத்து ஆளுங்களாச்சே... 5 வருஷம் ஆச்சு
ஒரு பய கண்டுபிடிச்சிருப்பானா....வெற்றிகரமாக ஆறாவது ஆண்டில் அடிஎடுத்துக்வைக்கும்

இப்படிக்கு
நாஞ்சில் பிரதாப்
நிரந்தர உறுப்பினர்
ஆபிசில் ஒ.பி.அடிப்பபோர் சங்கம்
அமீரக கிளை...


ஹீ ஹீ ... நான் தமிழ்நாடு கிளையோட நிரந்தர உறுப்பினர் .. வேலைக்கு சேந்த அடுத்த நாளே இந்த சங்கத்துல ஆயுட்கால உறுப்பினரா சேந்தாச்சி...

"ராஜா" said...

////mm will try

உங்க profile photo பாத்தாலே தெரியிது தல ... நீங்களும் நம்ம சங்கத்து நிரந்தர உறுப்பினர்கிறது... ஹீ ஹீ...

எம் அப்துல் காதர் said...

எப்புடி பாஸ் இதெல்லாம் ஹா.. ஹா.. good post

"ராஜா" said...

//எப்புடி பாஸ் இதெல்லாம் ஹா.. ஹா.. good post

எல்லாம் நம்ம சொந்த அனுபவம்தான் தல ...

வினோ said...

ராஜா வணக்கம்..இதுல பாதி தெரியும்,மீதியும் கடைபிடிக்கிறேன்..

நன்றி....

Sriakila said...

இப்படி ஆபீஸ்ல போய் வேலை பாக்கற மாதிரி நடிக்கிற இந்த வெட்டி வேலைக்குத்தான் காலையில வீட்ல உள்ளவங்களை எல்லாம் ஆபீஸ்ல அவ்வளவு வேலை இருக்கு, இவ்வளவு வேலை இருக்குன்னு டென்ஷன ஏத்தி, பாடாய் படுத்திறீங்களோ?

இருக்கட்டும்..இருக்கட்டும்..

செல்வா said...

நீங்க எங்க சார் வேலை பாக்குறீங்க .. ஓ , தப்பா சொல்லிட்டேன் நீங்க எங்க ப்ளாக் எழுதறீங்க ..?

செல்வா said...

அது சரிங்க அங்கயும் நம்மல மாதிரியே ஒருத்தர் இருந்தார்னா என்னை பண்ணுறது ..?
அதுக்கும் ஒரு வழி இருக்கு ..?
நீங்க ப்ளாக் எழுதறத உங்க ஆபீசுல யாரு கிட்டயும் சொல்லக்கூடாது .. அப்படி சொல்லிட்டா மத்தவங்களுக்கு உங்க மேல சந்தேகம் வரும் . நமக்கு நேரமே இல்லையே , இவன் எப்படி இவ்ளோ எழுதறான் .. புதுசா எழுத வரவங்களுக்கு சிரமம் தான் .. ஏன்னா நிறைய பேர் அவுங்க ஆபீசுல இருக்குறவங்ககிட்ட தானே அவங்களோட முதல் பதிவுகள காட்டுறாங்க ..!!

"ராஜா" said...

//இப்படி ஆபீஸ்ல போய் வேலை பாக்கற மாதிரி நடிக்கிற இந்த வெட்டி வேலைக்குத்தான் காலையில வீட்ல உள்ளவங்களை எல்லாம் ஆபீஸ்ல அவ்வளவு வேலை இருக்கு, இவ்வளவு வேலை இருக்குன்னு டென்ஷன ஏத்தி, பாடாய் படுத்திறீங்களோஇருக்கட்டும்..இருக்கட்டும்.

ஆமாம் மேடம் .. இனிமேல் ஏமாறாதீங்க...

//நீங்க எங்க சார் வேலை பாக்குறீங்க .. ஓ , தப்பா சொல்லிட்டேன் நீங்க எங்க ப்ளாக் எழுதறீங்க ..?

ஹி ஹி .. நான் வேலை நேரம் தவிர மற்ற நேரங்களில் மட்டுமே பதிவு எழுதுவேன் ... (நம்பணும்)

// அது சரிங்க அங்கயும் நம்மல மாதிரியே ஒருத்தர் இருந்தார்னா என்னை பண்ணுறது ..?

என்ன பண்றது .. இன்னும் நாலஞ்சி பெற தயார்பண்ணி உள்ளுக்குள்ளே ஒரு சங்கம் ஆரம்பிக்க வேண்டியதுதான்...

//புதுசா எழுத வரவங்களுக்கு சிரமம் தான் .. ஏன்னா நிறைய பேர் அவுங்க ஆபீசுல இருக்குறவங்ககிட்ட தானே அவங்களோட முதல் பதிவுகள காட்டுறாங்க ..!!

ஆரம்பத்துல அப்படிதான் இருப்பானுக..ஆபீஸ்ல ரெண்டு மூணு தடவ ரிவீட் வாங்கினவுடனே சரி ஆகிடும் ...

"ராஜா" said...

//ராஜா வணக்கம்..இதுல பாதி தெரியும்,மீதியும் கடைபிடிக்கிறேன்..

நன்றி vino

ப.கந்தசாமி said...

எனக்கு வருத்தம் என்னான்னா, நான் ஆபீசுல வேலை பார்த்த காலத்தில இந்தக் கம்ப்யயூட்டரெல்லாம் இல்லாமப் போச்சேங்க்றதுதான்.

yeskha said...

காப்பி அடிச்சாலும் எங்கேயாவது வலைப்பூவில் இருந்து காப்பி அடிங்கடா... யூத்ஃபுல் விகடனையே தைரியமா காப்பி அடிக்கிறீங்க, சோறு தானே திங்கிறீங்க... (தைரியம் இருந்தா இந்த பின்னூட்டத்தை வெளியிடுங்க பாக்கலாம்) http://youthful.vikatan.com/youth/yeskhawit17072009.asp

சேலம் தேவா said...

இந்த பதிவு என் நண்பர் எஸ்கா அவர்களால் ஏற்கனவே பகிரப்பட்டது.இன்னொருவருடைய கற்பனையை சொந்தம் கொண்டாடுவது நல்ல பண்பு அல்ல.அவருடைய பெயரையாவது குறிப்பிட்டிருக்கலாம்.இந்த தவறை மீண்டும் செய்யாதீர்கள்.கற்பனை வறட்சி வந்தால் தாமதமாக கூட பதிவிடலாம்.தவறில்லை.என் நண்பர் ஒன்றரை வருடங்களுக்கு முன்பே வெளியி்ட்டுள்ளார்.அதனுடைய இணைப்பு
http://youthful.vikatan.com/youth/yeskhawit17072009.asp

சேலம் தேவா said...

உங்களுடைய மற்ற பதிவுகளின் மேலும் சந்தேகம் வரவைத்துவிட்டது இந்த பதிவு.இத்தனை பேர் உங்களை நம்பி ஓட்டு வேறு போட்டுள்ளனர்.அவர்களை இனிமேல் ஏமாற்றாதீர்கள்.

"ராஜா" said...

Nandri deva avarkale, ithu mailil vantha oru matter. Athai nirayave matri pathivittullen. Irandayum parthale teriyum. Matrapadi unkal nanbarin pathivai parththathillai. Ithan moolam avarthan yendral avarukku nandri. Yennudaya paniyil pala matram seithe pathivil yetri ullen.

சேலம் தேவா said...

வருத்தத்தை என் நண்பருக்கு தெரிவியுங்கள்.

"ராஜா" said...

சரி நண்பரே அவரிடமும் என் தவறுக்கு மன்னிப்பு கேட்டு கொள்கிறேன்.... இப்பவும் சொல்கிறேன் நண்பரே மெயிலில் வந்ததை கொஞ்சம் என் பாணியில் மாற்றி பதிவில் ஏற்றினேன் .. உங்கள் நண்பரின் பதிவு அது என்று தெரியாது எனக்கு ... இந்த பதிவையே தூக்கி விட்டு நான் இதற்க்கு மன்னிப்பு கேட்டு ஒரு பதிவு எழுதி உள்ளேன் அதை மட்டும் வைத்து விடுகிறேன் ...

Jeyamaran said...

yes Nanbar Raja meethu enakku entha thavarum iruppathaga enakku theriyavillai enakkum intha mail vanthathu ithai avar satru matri irukkiraar itharkkaaga commends pottavangaluku ippadaiya mail anuppvathu "Mr.yeskha" ungalukaludaiya seyal thavaru enru sollavillai ethayum porumaiyaga seiya vendukiren

yeskha said...

ரொம்ப நல்லா இருக்கு மிஸ்டர்.ஜெயராமன். காப்பி அடிப்பது (இல்லை என்று மறுக்கப்படுகிறது திரு.ராஜா அவர்களால்) தவறில்லை. ஆனால் அதை சுட்டிக் காட்டுவது தவறா?

ப.கந்தசாமி said...

தவறு என்று அறியாமல் செய்த பிறகு, அது தெரிந்தவுடன் மன்னிப்பு கேட்டுவிட்டார் ராஜா அவர்கள். ஒருவர் சொல்வதை நம்பித்தான் ஆகவேண்டும். உள்நோக்கங்கள் கற்பிக்கவேண்டாம். நகைச்சுவை பதிவு சந்தோஷப்பதிவாக இருக்கட்டுமே.

LinkWithin

Related Posts with Thumbnails