Followers

Copyright

QRCode

Saturday, July 31, 2010

தல., தளபதி அனல் பறக்கும் ஆட்டம் ஆரம்பம்......

நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்ட்டா வருவேன் ... சூப்பர் ஸ்டார் பேசுன வசனம் , அவருக்கு அப்புறம் இந்த வசனம் சரியா பொருந்தும்னா அது தல அஜித்துக்கு மட்டும்தான் ... சில பேரு வரிசையா நாலு படம் ஹிட் ஆனா பரபரப்பா பேசபடுவார்கள் , சில பேரு படத்துல ஏதாவது வித்தியாசமா பண்ணி பரபரப்பை உருவாக்குவாங்க , சில பேரு சன் டிவி புண்ணியத்துல அடிக்கடி பேட்டி கொடுத்தோ இல்ல ஏதாவது விளம்பரம் தேடிகிட்டோ பரபரப்பை உண்டு பண்ணுவார்கள் ,  ஆனா தமிழ் சினிமால ரெண்டே ரெண்டு பேருதான் படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே அந்த படத்த பத்தின பரபரப்ப உண்டு பண்ணிருவாங்க ... அதுவும் அவங்களா உண்டு பண்ண மாட்டாங்க அதுவா பிரபலம் ஆகிரும் ... அதுல முதலாமவர் நம்ம சூப்பர் ஸ்டார் , அவர் எது பண்ணுனாலும் பரபரப்புதான் .. இங்க மட்டும் இல்ல ஜப்பானே பரபரப்பாகும் அவர் பட வேலைகளை ஆரம்பிச்சா ... அவருக்கு அடுத்து நம்ம தலைதான் ... 


அவர் சாதாரணமா ஒரு படம் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடியே பல வதந்திகள் அந்த படத்த பத்தி கெளம்பும் ... இப்ப அவர் பண்ண போறது அவரோட அம்பதாவது படம் ... சும்மா விடுவாங்களா , அவருக்கே தெரியாத பல விசயங்கள இவங்க இஸ்டத்துக்கு கிளப்பி விட்டார்கள் ... தயாநிதி அழகிரி அவரோட அம்பதாவது படத்த தயாரிக்க போறாருன்னு சொன்ன வுடனே ஆரம்பிச்சிடுச்சி இந்த மங்காத்தா ஆட்டம் , பல இயக்குனர்கள் உள்ளே வெளியே ஆட்டம் ஆடிட்டு போய் விட்டார்கள் ..... கௌதம் மேனன் ஒரு போலீஸ் கதையோட தயாரா இருந்தாரு ஆனா தல அப்ப ரேஸ்ல பிசி .... படம் தள்ளி போச்சி ... உடனே கௌதம் மேனனுக்கும் அஜித்துக்கும் மனகசப்பு கௌதம் அஜித் படத்திலிருந்து விலகி விட்டாருன்னு ஒரு வதந்தி .... ஆனா கொதமே ஒரு பெட்டியில அது வதந்திதான் நானும் அஜித்தும் இணைந்து படம் பண்ணுவது உறுதின்னு அறிக்கை விட்டார்... அஜித் எப்ப வராரோ அப்பத்தான் படம் ஆரம்பிக்கணும்னு தயாநிதி உறுதியா சொல்ல , இடைப்பட்ட நாட்களை வீணாக்க விரும்பாமல் கௌதம் நடுநிசி நாய்கள் படத்த ஆரம்பிக்க போய் விட்டார் , அவரின் கணக்கு அஜித் படம் ஆரம்பிக்க அக்டோபர் மாதம் ஆகும் அதற்குள்ளாக இந்த படத்தை இயக்கி முடித்து விடலாம் என்பதே .. ஆனால் அஜித்தின் முடிவு வேறு மாதிரி அமைந்து விட்டது , அவர் ரேசை முடித்து விட்டு ஜூலை மாதமே வந்து விட , படம் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்க வேண்டிய நிலை .... கௌதம் கால்ஷீட் அக்டோபர் மாதமே இருக்க , அவரால் அஜித்தின் அம்பதாவது படத்தை இயக்க முடியவில்லை ... ஆனால் தயாநிதி இந்த கூட்டணியை இழக்க விரும்பவில்லை
அஜித்தின் அம்பத்தி ஒன்றாவது படத்தையும் அவரே தயாரிக்க முடிவு செய்து விட்டாராம் .. அந்த படம் டிசம்பர் ,மாதம் ஆரம்பிக்கும் இதே கூட்டணியுடன் ...


அம்பதாவது படம் கௌதம் இல்லை என்று முடிவானவுடன் வேறு இயக்குனர்களை வைத்து இயக்க தயாநிதி முடிவு செய்தார் , அவரின் மனதில் இருந்த முதல் இயக்குனர் வெற்றிமாறன் .. ஆனால் அவரின் வாய்கொழுப்பு அவருக்கு இந்த அருமையான வாய்ப்பை கைநழுவி போக செய்தது ... இந்த நிலைமையில் அஜித்தின் மனதில் தோன்றியவர்தான் அவரின் சினிமா உலக ரசிகரும் அவரின் நண்பருமான வெங்கட் பிரபு ,,, அஜித்திற்கு என்று ஒரு ராசி உண்டு அவர் சினிமாவில் கொஞ்சம் சறுக்கிய பொழுதெல்லாம் அவரி மீண்டும் வெற்றி படி ஏற்றியவர்கள் அவரின் நண்பர்களே(அகத்தியன் ,சரண் , S.J.சூரியா , K.S.ரவிக்குமார் ) ... இதற்க்கு முன்பு அந்த பணியை சரியாக செய்து வந்தவர் சரண் ஆனால் சமீப காலமாய் அவர் கற்பனை வறச்சியில் இருப்பதால் அவருக்கு மாற்றாக அஜித்துக்கு ஒரு இயக்குனர் தேவைபட்டார்.. உடனே அவரின் மனதில் வந்தவர்தான் இந்த வெங்கட் பிரபு... அஜித் படம் இயக்குவது என்றால் யாருக்குதான் கசக்கும் ... தமிழ் சினிமாவில் எந்த இயக்குனரும் சரி அவர் மக்களிடம் இருந்து அதிகமாக எதிர்கொள்ள வேண்டி இருக்கும் கேள்விகள் ரெண்டே ரெண்டுதான் ... ஒன்று எப்ப நீங்க சூப்பர் ஸ்டார இயக்க போறீங்க? இன்னொன்று எங்க தலையை வைத்து எப்ப நீங்க படம் பண்ண போறீங்க? என்பதுவே இதுதான் அவர்களின் மாஸ் ... கௌதம் மேனனே இதை பல பெட்டிகளில் கூறி இருக்கிறார்... அப்படி ஒரு வாய்ப்பு வந்தவுடன் வெங்கட்டும் தலைக்கு ஏற்ற மாதிரியும் அதே சமயம் அவரின் ஸ்டைல் முல்டி ஸ்டார் வகை கதை ஒன்றை கூற அது எல்லாருக்கும் பிடித்து போக , படம் முடிவாகி விட்டது ... ஒன்னாம் வகுப்புக்கு போற சின்ன கொழந்தைக்கு கூட தெரியும் அந்த படத்தோட பேரு மங்காத்தா என்பது .... எனக்கு தலை படங்களில் மிகவும் பிடித்த படம் தீனா , அதில் தலையும் சுரேஷ் கோபியும் ரணகளபடுத்தி இருப்பார்கள் அதே போல மங்காத்தாவில் தலையும் நாகர்ஜூனாவும் இணைகிறார்கள் ... 


ஆனால் அஜித் கௌதம் மேனனை விட்டு வேறு இயக்குனருடன் இணைவது அவரின் ரசிகர்கள் பலருக்கு பிடிக்கவில்லை ... ஆனால் என்னை பொறுத்தவரை தல எடுத்திருக்கும் முடிவு மிக சரியான முடிவே ... கௌதமின் கடைசி மூன்று படங்களும் மரண மொக்கை படங்கள் ... மூன்றும் கொஞ்சமேனும் தப்பித்ததிர்க்கு காரணம் பாடல்களே ... தலையை வைத்து இப்படி ஏதாவது மொக்கை படம் கொடுத்தால் ரசிகர்கள் கொதித்து விடுவார்கள் ... எங்களுக்கு தேவை musical hit album இல்லை ஒரு மரண மாஸ் படமே வெங்கட் பிரபு அதை சரியாக கொடுப்பார் என்று நம்புவோம் , மேலும் கௌதம் அடுத்து அஜித்துடன் இணைவது உறுதி ஆகிவிட்டது , அதில் அவர் வேட்டையாடு விளையாடு போல ஒரு "மாஸ் பிளஸ் கிளாஸ்" படம் கண்டிப்பாக கொடுப்பார் ... 


இப்படி அடுத்தடுத்து இரண்டு பிரமாண்ட படங்கள் பற்றிய செய்திகளில் சந்தோசத்தின் உச்சியில் இருக்கும் தல ரசிகர்களுக்கு அதைவிட இனிப்பான ஒரு செய்தி சமீபத்தில் உறுதி செய்யப்பட்டது ... அஜித்தின் சினிமா வாழ்கையில் மிக பெரிய திருப்புமுனையாக அமைந்த படம் பில்லா .. ரஜினி பண்ணிய ஒரு படத்தை அவர் நடித்து கொண்டு இருக்கும் பொழுதே அதுவும் அவர் உச்சத்தில் இருக்கும் பொழுதே நடித்து அதில் கொஞ்சம் கூட ரஜினியை பின்பற்றாமல் தன்னுடைய பாணியில் நடித்து அதை வெற்றியும் பெற செய்வது சாதாரணமான விஷயம் இல்லை ... அந்த வெற்றியில் அஜித்துக்கு முழு ஒத்துழைப்பும் கொடுத்தவர் இயக்குனர் விஷ்ணுவரதன் ... இருவரும் மீண்டும் இணைகிறார்கள் ... இது சென்ற வருடமே ஆரம்பிக்க பட வேண்டிய படம் ... சில பிரச்சனைகளின் காரணமாக தள்ளி வந்து கொண்டு இருந்தது இப்பொழுது அது விஷ்ணுவரதனால் உறுதி செய்ய பட்டு விட்டது ... ஆம் தல மீண்டும் பில்லாவாக நடிக்க போகிறார் மிரட்டலாக .... தலையின் அம்பத்தி மூன்றாவது படமாக இது அமையும் .... 


இப்படி அடுத்தடுத்து மூன்று மெகா கூட்டணி படங்கள் எங்களை இப்பொழுதே கண்ணா பின்னாவென்று எதிர்பார்க்க வைத்து விட்டது ... கண்டிப்பாக ஒவ்வொரு படமும் ரிலீஸ் ஆகும் பொழுது நாங்கள் ஒரு மினி தீபாவளியே நடத்தி காட்டுவோம் .... 


அஜித் என்றாலே அவருக்கு போட்டியாக ஞாபகம் வரும் நடிகர் விஜய் ... அவரும் சமீப காலமாய் சொதப்பி கொண்டு இருந்தார் ... தல தளபதி போட்டி இல்லாமல் தமிழ் சினிமா கொஞ்சம் கூட சுவாரசியம் இல்லாமல் பங்களாதேஷ் கென்யா டெஸ்ட் மேட்ச் போல மந்தமாக போய் கொண்டு இருந்தது ... இப்பொழுது அவரும் முழித்து கொண்டு விட்டார் ... அவரின் அடுத்த மூன்று படங்கள் ராஜா , லிங்குசாமி , சங்கரை வைத்து எடுக்க போகிறாராம் .... ஆக அடுத்த இரண்டு வருடங்களில் இந்த இரண்டு குதிரைகளும் போட்டி போட்டுகொண்டு களத்தில் இறங்க போகின்றன ... மீண்டும் தல தளபதி போட்டி தமிழ் சினிமாவில் ஆரம்பிக்க போகிறது ... அனல் பறக்கும் ஆட்டம் ஆரம்பம் தமிழ் நாட்டில் ... இந்த ஆட்டம் உலக கிண்ண கால்பந்தை விட பரபரப்பாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை ...

17 comments:

அருண் said...

ஆமா பாஸ்,பட்டைய கிளப்ப போறாங்க..

"ராஜா" said...

ஆகா மொத கமெண்டே ஒரு தினுசா வருதே .... நம்புங்கப்பா அனல் பறக்கும் ....

Suresh Gandhi said...

ஆமாம் பாஸ்.. தல எப்போதுமே தல தான்..

Unknown said...

Thala oru tharu thala....

கார்க்கிபவா said...

// கௌதமின் கடைசி மூன்று படங்களும் மரண மொக்கை படங்கள்//

ஹாஹா. அப்ப சைடு பார்ல 5ஒவது படம்ன்னா இபப்டி இருக்கணும்ன்னு போட்டது????

//கொதமே ஒரு பெட்டியில அது வதந்திதான் நானும் அஜித்தும் இணைந்து படம் பண்ணுவது உறுதின்னு அறிக்கை விட்டார்./

அதே கெளதம்தான் இன்னொரு பேட்டியில் நாலு ஹீரோவுல ஒரு ஆளா நடிக்க போறார்ன்னு கிண்டல் செய்திருக்கார். அது தெரியுமோ?

// படம் ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்க வேண்டிய நிலை/

அப்போ மங்காத்தா இந்த மாதம் ஸ்டார்ட் ஆயிடும்னு நம்பறீஙக்ளா? ஆல் தி பெஸ்ட் சகா. நான் ஆகஸ்ட் 31 மீண்டும் வறேன்

"ராஜா" said...

சகா எப்ப வந்தாலும் சைடு பார பத்தியே பேசுறீங்களே அது உங்க மனச இந்த அளவுக்கு பாதிச்சிடுச்சா? அதுக்கு காரணம் அந்த சைடு பாரா இல்ல தளபதியோட அம்பதாவது படமா?

//அதே கெளதம்தான் இன்னொரு பேட்டியில் நாலு ஹீரோவுல ஒரு ஆளா நடிக்க போறார்ன்னு கிண்டல் செய்திருக்கார். அது தெரியுமோ?

அப்படியா சகா இதுக்கு பேருதான் கிண்டலா?


//நான் ஆகஸ்ட் 31 மீண்டும் வறேன்

வாங்க சகா நான் மங்காத்தா லான்ச் பங்க்சன் ஸ்டில்லே அப்ப காட்டுறேன் உங்களுக்கு... மதுரையில நடக்க போவுது சகா .. தலையோட நான் எப்படியும் ஒரு போட்டோவாவது எடுத்திருப்பேன் அதையும் காட்டுறேன் உங்களுக்கு...

kanavugalkalam said...

தல தளபதி போட்டி ILLAMAL PONATHAL THAN IPPA SURIYA, KARTHIK ENDRU VANTHU VITRAGAL....

Yoganathan.N said...

@ ராஜா
தல + கௌதம் கூட்டணி சாத்தியம் இல்லை என்று தெரிய வருகிறது.

@ கார்க்கி
இப்போ என்ன பிரச்சனை உங்களுக்கு?

"ராஜா" said...

//தல + கௌதம் கூட்டணி சாத்தியம் இல்லை என்று தெரிய வருகிறது.

ஏன்? விளக்கமாக கூறுங்கள்....

"ராஜா" said...

@ Goutham

நல்லா இருக்கீங்களா தல? treatment எல்லாம் எப்படி போகுது? கீழ்பாக்கம் சரிபடலேனா இந்த பக்கம் வாங்க பாண்டிமடம், ஏர்வாடின்னு நெறைய இருக்கு ஏதாவது ஒண்ணுல சேத்து விடுறேன்

Yoganathan.N said...

//ஏன்? விளக்கமாக கூறுங்கள்.... //
இது தான் நடந்தது.

http://sify.com/movies/tamil/fullstory.php?id=14951870

என்ன ஒரு அகம்பாவம் இந்த மனுஷனுக்கு... இந்த விசயத்தை ஆரம்பத்திலிருந்து உன்னிப்பாக கவனித்தவர்களுக்கு, யார் மீது தவறு என்று தெரியவரும்.

He blames Thala on hearing stories with other directors. But, while Thala is away for races, he can commit himself in Hindi VTV, Nadunisi NaaikaL and one more movie. Unfair.
If the script is ready for a July start, how come the same producer opted for Ajith + VP combo?

எனக்கு படம் பண்ணதது கூட வருத்தம் இல்லை. அதற்காக அனாவசியமாக, சிவகுமார் பையனை எல்லாம் ஒப்பிட்டு பேசினாரே, அது தான் பயங்கர கோபம்.

"ராஜா" said...

தல sify.com பத்தி உங்களுக்கு தெரியாதா? கௌதம் உண்மையிலேயே அப்படி சொல்லி இருந்தால் இந்நேரம் பெரிய சண்டையே வெடித்திருக்கும்... இது sify.com வத்தி வச்ச புரளி... நம்பாதீங்க தல ... வேறு ஏதாவது source இருந்தா சொல்லுங்க நம்பலாம் .. அவனுங்க ஒரு வெங்கபயலுக , அவனுக சொல்லுரதைஎல்லாம் நம்ப முடியாது

"ராஜா" said...

//I want to work with people who have their head firm on their shoulder

இந்த வார்த்தையை எல்லாம் அவர் பயன்படுத்தி இருக்கவே மாட்டார் .... இது சண்டை மூட்டுற வேலை...

சூர்யா எல்லாம் ஒரு ஆளா? அவருக்காக எல்லாம் யாராவது வேய்ட் பன்னுவானுகளா? இதுல இருந்தே தெரியல இது பொய்யான தகவல்கிறது...

Yoganathan.N said...

இது உண்மையா இல்லையா என்பது ஒரு புறம் இருக்கட்டும். கௌதம் பற்றி அனைவரும் அறிந்ததே. அடுத்தவனைப் பற்றி பேசவில்லையேல், இவருக்கு தூக்கம் வராது. சுப்ரமணியபுறம் சசிகுமர், விஜய் இப்போது அஜித்.
இவரது, 'past records'-ஐ பார்க்கும்போது, இதன் நம்பகத்தன்மை வலுப்படுகிறது. அதுமட்டுமில்லாமல், இப்ப எல்லாம் நிறைய இயக்குணர்கள், நடிகர்கள் 'Sify chat'-இல் கலந்து கொள்கிறார்கள். So, சாத்தியம் அதிகம்.
அவர் அப்படி கூறியே இருந்தாலும், நியாயம் நம் பக்கம். நான் முன்பே கேட்ட கேல்விகளுக்கு அவரால் பதில் சொல்ல முடியுமா என்பது ச்ந்தேகமே...
ஆரம்பத்தில், அக்டோபரில் தான் இந்த கூட்டணி என்று முடிவெடுக்கும்போது, அவர் 'coma'-வில் இருந்தாரா? அவரது விடுபட்ட படங்களை முதலில் முடிக்கும்படி தல சொல்லியிருப்பார். அந்த இடைவெளியில், தான் வெங்கட் பிரபுவுடன் ஒரு படம் பண்ணுவதாக தெரிவித்தவுடன், இவர் இப்படி கொந்தளிக்கிறார்.
அதற்காக, பிற நடிகர்களைத் துணைக்கு இழுத்து, அஜித்தை அவமானப் படுத்துவது totally unprofessional.

Yoganathan.N said...

//I want to work with people who have their head firm on their shoulder

இந்த வார்த்தையை எல்லாம் அவர் பயன்படுத்தி இருக்கவே மாட்டார் .... இது சண்டை மூட்டுற வேலை... //

இது போன்ற திமிர் பிடித்த வசனங்களில் பிரசித்தி பெற்றவர் தான அவர். அப்படியே இல்லையாயினும், இதே அர்தமுல்ல வேறு வசனங்களையாவது சொல்லியிருக்க கூடும்.

//சூர்யா எல்லாம் ஒரு ஆளா? அவருக்காக எல்லாம் யாராவது வேய்ட் பன்னுவானுகளா? இதுல இருந்தே தெரியல இது பொய்யான தகவல்கிறது... //
என்ன இப்படி சொல்லிட்டீங்க... அவர் தான் அடுத்த 'கமல்'-ஆம்... :P

"ராஜா" said...

தல சிபி எப்பொழுதும் தலைக்கு எதிராகவே எழுதும் ஒரு குப்பை கூடம்... அவர்கள் தலையை பற்றி அவருக்கு எதிராக எழுதும் எந்த விசயமும் உண்மையாக இருக்க வாய்ப்பே இல்லை.... இது சிண்டு முடியும் வேலையே .... இதை எல்லாம் கண்டு கொள்ளாதீர்கள்... அவனுகளை எல்லாம் அப்படியே விட்டுடனும் கண்டுகிட்டு பெரிய ஆளுகளா ஆக்கிட கூடாது...
கௌதம் தலையை பற்றி அப்படி சொல்லி இருக்க வாய்ப்பே இல்லை ... சொல்லி இருந்தால் அது சிபியில் மட்டும் வந்திருக்காது , எல்லா ஊடகங்களிலும் பெரியதாய் பேசபட்டிருக்கும்.... கௌதம் தலையின் ஒரு நண்பர் என்பதாலேயே பல படங்களில் நடிக்க முடியாமல் போனாலும் திரும்ப திரும்ப இருவரும் இணைந்து படம் பண்ண ஆசைபடுகிறார்கள் ... ஒவ்வொரு முறை அவர்கள் படம் தாமதம் ஆகும்பொளுதும் இப்படி சிண்டு முடியும் வேலைகள் நடக்கும் ... எவ்வளவோ பாத்திருக்கோம் நமக்கு தெரியாதா?

//என்ன இப்படி சொல்லிட்டீங்க... அவர் தான் அடுத்த 'கமல்'-ஆம்... :

ஹீ ஹீ போங்க பாஸ் .. காமெடி பண்ணாதீங்க....

கார்க்கிபவா said...

//கார்க்கி said...
// கௌதமின் கடைசி மூன்று படங்களும் மரண மொக்கை படங்கள்//

ஹாஹா. அப்ப சைடு பார்ல 5ஒவது படம்ன்னா இபப்டி இருக்கணும்ன்னு போட்டது/

இதுக்கு ஏன் சகா பதிலே சொல்ல மாட்றீங்க?

யோகநாதன், உஙக்ளுக்கு என்ன பிரச்சினையோ அதேதான் சகா எனக்கும் :)

LinkWithin

Related Posts with Thumbnails