முரளிதரன் இன்றைய கிரிக்கெட் உலகின் மிக தலைசிறந்த ஒரு வீரர் ... கிரிக்கெட் என்பதே டெஸ்ட் போட்டிகள்தான் .. அதில்தான் வீரர்களின் உறுதித்தன்மை வெளிப்படும் , அத்தகைய டெஸ்ட் போட்டிகளில் உலகிலேயே அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர் அவர் என்பது ஒன்றும் சாதாரணமான விஷயம் கிடையாது ... கிரிக்கெட்டை உண்மையாக நேசிக்கும் எல்லோருமே கண்டிப்பாய் நாடு , இனம் கடந்து அவரை நேசிப்பார்கள் ... நான் இன்னும் கொஞ்சம் அதிகமாக அவரை நினைத்து பெருமைப்படலாம் ... காரணம் அவரும் ஒரு தமிழர் என்பதே ... உலகில் பல கோடி மக்களால விரும்பி பார்க்கப்படும் ஒரு விளையாட்டில் தமிழன் ஒருவன் சாதனை படைத்து உள்ளான் என்பதே நாம் என்றென்றும் நினைத்து பெருமைபடகூடிய விசயம்தான் .... தமிழர்களின் திறமைக்கு இவர் ஒரு சோற்று பதம் .... இந்த சாதனை கோட்டையை அவர் ஒன்றும் சாதாரணமாக கட்டிவிடவில்லை ... வார்னேவின் சாதனைகளை ஒரு ஆசியன் உடைத்துவிடகூடது என்பதற்காக ஆஷ்திறேளியர்கள் அவருக்கு கொடுத்த டார்செர்கள் கொஞ்சம் நஞ்சம் இல்லை .... பந்தை எறிகிறார் இவற்றின் மணிக்கட்டு சுழற்சியை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று அவர்களின் வெறியை காட்டி அவர் மனஉறுதியை சீர்குலைக்க பார்த்தார்கள் ... கீழே உள்ள படத்தை பார்க்கும் போதெல்லாம் இவ்வளவு சாதனைகள் படைத்த ஒரு சிறந்த வீரனை அவமானபடுத்துகிரார்களே , அவர் மனம் எவ்வளவு பாடுபட்டிருக்கும் என்று அவருக்காக வருந்தியிருக்கிறேன் ...
ஆனால் அவர் அதையும் சிரிப்புடனே ஏற்றுகொண்டார் .... அந்த சிரிப்பின் அர்த்தத்தை தன சிகரம் தாண்டிய சாதனைகள் மூலம் அவரை அவமானபடுத்தியவர்களுக்கு உணர்த்தியும் விட்டார் ... அவரை குறை கூறியவர்கள் எல்லாரும் இன்று வாய்மூடி மௌனமாகவே இருக்கிறார்கள் ...

ஆனால் இப்படியெல்லாம் அவரின் சாதனைகளை நினைத்து பெருமை பட்டு கொண்டு இருந்தாலும் என் அடி மனதில் முரளியை பற்றிய பிம்பம் ஒன்று ஆழமாய் பதிந்து விட்டது .. அது அவர் சாதனைகளுக்காக தன முதுகெலும்பை அடமானம் வைத்துவிட்டாரோ என்று?
ஹென்றி ஒளங்கோ என்று ஒரு பந்துவீச்சாளர் இருந்தார் ஜிம்பாபே அணியில் ஞாபகம் இருக்கிறதா? சிறு வயதில் அவரை கண்டாலே எனக்கு பிடிக்காது ... காரணம் அவர் ஒரு போட்டியில் சச்சினின் விக்கெட்டை வீழ்த்தி விட்டு அவரை சைகையால் கேலி செய்தார் என்பதற்காக ... அது அறியா பருவம் ... அவர் அணியில் விளையாடி வந்த காலகட்டம் ஜிம்பாபே அரசியலில் பெரிய புயல் வீசிய நேரம் ... வெள்ளையர்களிடம் இருந்து கருப்பர்கள் புரச்சி செய்து ஆட்சியை பிடித்து கொண்டு வெள்ளையர்கள் மேல் இனவாத தாக்குதல் நடத்தி கொண்டு இருந்த காலகட்டம் ... ஒளங்கோ ஒரு கறுப்பர் .... நடப்பது அவர் இன ஆட்சி ... கொள்ளபடுபவர்கள் அவர் இணைத்தை ஒரு காலத்தில் கொடுமைபடுத்தி வந்த வெள்ளையர்கள் ... அவர் அப்பொழுதுதான் ஒரு நல்ல பந்து வீச்சாளராக வளர்ந்து கொண்டு இருந்தார் .... அவர் நினைத்திருந்தால் ஆளும் அவர் இன தலைவர்களுக்கு சொம்பு அடித்து அணியில் நிரந்திர இடம் பிடித்து இருந்திருக்கலாம் ... அவர்மேல் யாரும் குற்றம் சொல்ல போவதில்லை ... காரணம் அவரும் ஒரு கறுப்பர் ... ஆனால் அவர் அப்படி செய்யவில்லை .. மாறாக என் நாட்டில் நடக்கும் கொடுமைகள் என்னால் கொஞ்சமேனும் வெளி உலகிற்கு தெரிய வேண்டும் .... நான் இந்த போட்டி முழுவதும் கையில் கருப்பு பட்டை அணிந்து விளையாட போகிறேன் ... இதன் மூலம் என் நாட்டில் சிறிதேனும் மாற்றம் வந்தால் அதுவே எனக்கு போதும் என்று தன சக ஆட்டக்காரர் ஆண்டி பிளவருடன் இணைந்து ஒரு போட்டி தொடங்குவதற்கு முன் அறிக்கை விட்டார் ...
அவருக்கு தெரியும் கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டும் இல்லை ... உலகில் பல கோடி பேர் விரும்பி பார்க்கும் கூர்ந்து கவனிக்கும் ஒரு விஷயம் .... நல்ல விசயங்களை இந்த கிரிக்கெட் மூலம் நாம் உலகிற்கு பரப்ப முடியும் என்பது ... சத்தியமாக சொல்கிறேன் இந்த நிகழ்ச்சிக்கு பின்னர்தான் எனக்கு சிம்பாபேயில் இப்படி இன படுகொலைகள் நடக்கிறது என்பதே தெரியும் .... எனக்கு அது தெரிவதால் யாருக்கும் எந்த பயனும் இல்லை .. ஆனால் என்னை போல பல கோடி பேர்களுக்கு அந்த படுகொலைகள் தெரிய வந்து இருந்திருக்குமே ... அதனால் எந்த மாற்றமும் இருந்திருக்காது என்றாலும் மாற்றத்தின் முதல்படியாய் அந்த விஷயம் இருந்திருக்குமே .... வெள்ளையர்கள் துரத்தி அடிக்க பட்ட அந்த அணியில் இன்று மீண்டும் கொஞ்சம் வெள்ளை தலைகள் தென்படுவதற்கு ஓலைங்கோவின் அந்த செயலும் ஒரு காரணமே ... சரி அதனால் மாற்றமே இல்லாமல் போனாலுமே பணத்திற்கும் புகழுக்கும் அடிபணியாமல் கிரிக்கெட் விளையாட்டின் சாதனை கல்வெட்டில் தன பெயரை பொறிக்காமல் போனாலும் மனிதநேயமிக்க ஒரு மனிதனாய் அந்நாட்டு மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்து விட்டார் ...

இவரை நினைத்து பார்க்கும் பொழுது முரளியை என்னால் தலையில் தூக்கி வைத்து கொண்டாட முடியவில்லை .... தன இனமக்கள் கொத்து கொத்தாய் கொன்று குவிக்க பட்டு கொண்டு இருக்க படும் பொழுது இவர் அவர்களுக்காக குரல் கொடுக்ககூட முன்வரவில்லை... இவர் ஆதரவாக குரல்கூட கொடுத்திருக்க வேண்டாம் , ஏதேனும் ஒரு பேட்டியிலையாவது ஒரு வருத்தமாவது தெரிவித்து இருக்கிறாரா என்றால் இல்லை ... கேட்டால் அவரின் ஆதரவாளர்கள் விளையாட்டை விளையாட்டாக மட்டும் பாருங்கள் என்கிறார்கள் ... ஏன் விளையாட்டு வீர்கள் தான் சார்ந்த சமுதாயத்திற்கு எதுவும் நல்லது செய்ய கூடாதா , இல்லை இதுவரை யாரும் செய்ததில்லையா? இன்னும் சில பேர் அவர் ஒரு சாதாரண ஆள்தான் அவரால் அரசாங்கத்தை எதிர்த்து ஒன்றும் செய்ய முடியாது என்று கூறுகிறார்கள் ... ஐய்யா தமிழர்கள் காலம் காலமாய் பெருமைப்பட்டு கொள்ளும் ஒரு குணம் அவர்களின் வீரம்தானே? முரளி குரல் கொடுத்து இருந்தால் தெரிந்திருக்கும் அவர் சாதாரணமான ஆளா இல்லையா என்று?
சரி போர் நடக்கும் பொழுதுதான் அவரால் எதுவும் செய்ய முடியவில்லை.... மீறி செய்தால் தேச குற்றம் ஆகிவிடும் அபாயம் இருக்கிறது ... போர் முடிந்த பின்னர் பாதிக்கப்பட்ட மீதி இருக்கும் தமிழர்களின் மறு சீரமைப்பு நடவடிக்கைகளிலாவது அவர் ஆர்வம் காட்டினாரா? இப்படியெல்லாம் நான் கூறினால் நீ பொறாமையில் பேசுகிறாய் ... போய் எறியும் உன் வயிறை அணைக்க பெட்ரோல் வாங்கி குடி என்று சொல்கிறார்கள்.... ஐயா எனக்கு தெரிந்து முரளி இலங்கை தமிழர்களின் மிக பெரிய அடையாளம், அவர் அளவிற்கு உலகம் முழுவதும் புகழ் பெற்று விளங்கிய ஒரு இலங்கை தமிழன் இருக்கிறானா என்பது சந்தேகமே (நான் அரசியல்வாதிகலியோ அரசியல் சார்ந்த இயக்கங்களையோ சொல்லவில்லை ), அப்படிப்பட்ட ஒருவர் தன் இனம் துன்பங்களை சந்தித்த பொழுது வாய்மூடி மௌனியாக இருந்தால் அந்த இனத்திற்கு அது ஒரு அவமானமே... நானும் அந்த இனத்தை சேர்ந்தவன்தான் என்பதால் நானும் சில முறை அந்த அவமானத்தை உணர்ந்து இருக்கிறேன்... உடனே என்னை தமிழ் இன காவலர்கள் படையில் சேர்த்து விடாதீர்கள் .... இதை சொல்ல அந்த படையில் தன்னை இணைத்து கொள்ளவேண்டிய அவசியம் இல்லை அந்த அளவிற்கு எனக்கு அரசியல் தெரியாது ... நான் தமிழன் என்ற உணர்வு இருந்தாலே போதும் .... ஆனால் இதை நான் வெளிபடுத்திய பொழுது எனக்கு கிடைத்த சில எதிர்ப்புகள் அதுவும் இலங்கை தமிழ் நண்பர்களிடம் இருந்து கிடைத்த எதிர்ப்புகள் எனக்கு ஒரு மிக பெரிய சந்தேகத்தை உருவாக்கி விட்டது .... இங்கே இருக்கும் ஒரு சிலர்தான் தமிழன் ,ஈழம், போர்குற்றம் என்று பிதற்றி கொண்டு அலைகிறோமோ? அங்கெ உண்மை நிலைமை வேறு மாதிரி இருக்கிறதோ? அங்கெ வாழும் தமிழர்கள்கூட அதை பெரிய விசயமாக எடுத்துகொள்ளவில்லையோ? என்று ....

எது எப்படியோ , இதுவரை முரளியை ஒரு தமிழனாக பார்த்து கொண்டு இருந்தேன் ,,, ஆனால் நம் மனதில் உருவகபடுத்த பட்டுள்ள தமிழர்கள் வேறு அங்கு இருக்கும் தமிழர்களின் உண்மை நிலை வேறு என்று அவர்களே சொல்லி விட்டார்கள் ... அதனால் அதிகமாக எதிர்பார்த்தது என் தவறுதான் என்பதால் , முரளியின் 800 க்கு வாழ்த்துகள் சொல்லி விட்டு , இன்று போல என்றும் நிம்மதியான வாழ்க்கை அவருக்கு கிடைக்க கடவுளிடம் வேண்டி பதிவை முடித்து கொள்கிறேன்...
7 comments:
ராஜாவுக்கு வணக்கங்கள்,இலங்கையிலிருந்து நண்பன் அருண்,நீங்கள் அதிகமாக எதிர்பார்த்தது தவறில்லை,ஆனால் ஒரு சில விஷயங்களை தெளிவு படுத்த நான் விரும்புகிறேன்,இதை எல்லோரும் பார்க்கும்படியாக கூற முடியாது எனவே விரைவில் மின்னஞ்சல் மூலம் தெரியப்படுத்துகிறேன்.ஆங் சொல்ல மறந்துட்டேன் சூப்பரான பதிவு.
//ஐய்யா தமிழர்கள் காலம் காலமாய் பெருமைப்பட்டு கொள்ளும் ஒரு குணம் அவர்களின் வீரம்தானே?//
நீங்கள் சொல்லுவது உண்மைதான்.
இனிமேல் ஈழத்தில் இருந்து ஒரு தமிழனாவது இலங்கை கிரிக்கெட் அணிக்கு வரமுடியுமா ??
ஒரு தமிழ் வாலிபனவது கிரிக்கெட் அணிக்கு வரும் நிலைமையில் இருப்பானா என்பது சந்தேகமே !!!
Murali plays cricket for Money, Girls and Drink.
Don't expect anything worth from sissy game cricket players
மிகச்சரியாக இப்பொழுதுதான் புரிந்துகொண்டுள்ளீர்கள் . உண்மையில் முரளிதரனின் சாதனையை யாராலும் மறுக்க முடியாது மறக்க முடியாது. அவர் தமிழர் ஒருவர் என்பதில் உங்களுக்கு எப்படி பெருமையோ, அதே போலத்தான் அவர் ஒரு இலங்கை தமிழர் என்பதில் எங்களுக்கு மேலதிக பெருமை.
அனால் முரளி தமிழர்களுக்காக எதுவுமே செய்ததில்லை என்று நீங்கள் கூறுவதை எங்களால் ஏற்றுகொள்ள முடியாது, அவர் எவ்வளவோ செய்துள்ளார் , ஏன் சமீபத்தில் கூட ஓய்வின் பின் வடக்கு கிழக்கு புனரமைப்பில் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளார், நீங்கள் அதை அறியாதது துரதிஷ்டமே .... அது மட்டுமல்ல , சுனாமியின் பின்னும் புனரமைப்பு பணிகளில் குறிபிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளார்.
அதே போல் நீங்கள் எங்களை பற்றி இறுதி வரிகளில் கூறியிருப்பது அனேகமாக உண்மையே. // நம் மனதில் உருவகபடுத்த பட்டுள்ள தமிழர்கள் வேறு அங்கு இருக்கும் தமிழர்களின் உண்மை நிலை வேறு // உங்கள் அரசியல் வாதிகளும், வியாபாரிகளும், பதிவர்களும் உங்கள் மனதில் எங்களை பற்றிய மிகவும் பரிதாபமான தோற்றபாடை உண்டாக்கி விட்டார்கள். உண்மையில் நாம் இங்கு பெரிதாக பிரச்சினை எதுவும் இல்லாமல் தான் இருக்கிறோம், முகாம்களில் சில தமிழ் மக்கள் இருப்பது உண்மையே. அனால் அவர்களின் மீள் குடியேற்றத்துக்காக அரசாங்கமும் , சர்வதேச நிறுவனகளும் நடவடிக்கை எடுத்துக்கொண்டுதான் இருக்கின்றன. கண்ணிவெடிகள் மிக அதிக அளவில் புதைகப்பட்டிருப்பதே கால தாமதத்திற்கு காரணம் என்று அரசியல் வாதிகள் கூறுகிறார்கள்.
மேலும் உங்கள் நாட்டை நாம் நேசிக்கின்றோம், பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் நம் நாடும் உங்கள் நாடும் இணைந்தே இருந்தன, நீங்களும் நாங்களும் ஒரு வழிதோன்றல்களே. ஆகவே உங்களிடம் நாம் கேட்டு கொள்வதெல்லாம் ஒன்றே ஒன்றுதான் எங்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள் . உண்மையின் எங்கள் மகிந்தவுக்கும் உங்கள் சீமானுக்கும் , வைகோவுக்கும் பெரிதாய் வித்தியாசம் இல்லை, ஏனெனில் இரு தரப்புமே எங்களை வைத்துதான் அரசியல் செய்கின்றன.
முகவரியில்லா மோகன் மற்றும் சக்ரபணியே ....உங்களுக்கு தெரியாவிட்டால் நீங்களே ஒன்றை உருவாக படுத்திகொண்டு கூறாதீர்கள் . முரளி எப்பேர்பட்ட ஒழுக்க சீலர் என்பதை இந்த உலகறியும். Mr.Clean அன்றே கிரிக்கட் உலகில் முரளியை அழைப்பார்கள். மேலும் நீங்கள் எப்படி கூறுவீர்கள் //இனிமேல் ஈழத்தில் இருந்து ஒரு தமிழனாவது இலங்கை கிரிக்கெட் அணிக்கு வரமுடியுமா ??
ஒரு தமிழ் வாலிபனவது கிரிக்கெட் அணிக்கு வரும் நிலைமையில் இருப்பானா என்பது சந்தேகமே !// என்று? திறமை இருக்கும் பட்சத்தில் தமிழர் மட்டுமல்ல முஸ்லிம், கதோலிகரும் இலங்கையில் அணியில் இடம் பிடிப்பார்கள். 8 கோடி தமிழர் இருக்கும் உங்கள் நாட்டிலேயே இன்னும் ஒரு உறுதியான தமிழ் கிரிக்கெட் வீரர் இல்லாத பொழுது, வெறும் 20 லட்சம் தமிழர் இருக்கும் எங்கள் நாட்டில் இருந்து ஒருவர் 20 ஆண்டுகளாக நிலையான வீரராக விளையாடி இருக்கிறார் என்பதை மறவாதீர்கள் .
@ Arun prasath
நண்பரே உங்கள் மெயிலை எதிர்பார்கிறேன்
@ Mohan
நன்றி தங்கள் கருத்துக்கு
@ chakrapani
முரளியை பார்த்தால் மாதிரி தெரியவில்லை எனக்கு .. இருந்தாலும் யாருக்கு தெரியும் உண்மை என்னவென்று?
@ இலங்கை தமிழன்
//ஏன் சமீபத்தில் கூட ஓய்வின் பின் வடக்கு கிழக்கு புனரமைப்பில் பங்கேற்க போவதாக அறிவித்துள்ளார், நீங்கள் அதை அறியாதது துரதிஷ்டமே ....
அறிவித்தார் சென்றாரா?
//சுனாமியின் பின்னும் புனரமைப்பு பணிகளில் குறிபிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளார்.
எங்கே செய்தார்?
// 8 கோடி தமிழர் இருக்கும் உங்கள் நாட்டிலேயே இன்னும் ஒரு உறுதியான தமிழ் கிரிக்கெட் வீரர் இல்லாத பொழுது, வெறும் 20 லட்சம் தமிழர் இருக்கும் எங்கள் நாட்டில் இருந்து ஒருவர் 20 ஆண்டுகளாக நிலையான வீரராக விளையாடி இருக்கிறார் என்பதை மறவாதீர்கள்
ஏன் இங்கிருந்தும் பல திறமையான வீரர்கள் நீண்ட காலம் அணியில் விளையாடி இருக்கிறார்களே... அதில் முக்கியமானவர் ஸ்ரீகாந்த்
Post a Comment