( DISC1 : இது விஜயை மட்டும் ஓட்டுவதற்கு எழுதிய பதிவு இல்லை )
ஒரு வேற்று மொழி படத்த ஆட்டைய போட்டு நம்ம ஊருல படம் எடுக்கிறத பார்த்திருக்கிறேன்...
ஏன் சில பன்னாடைகள் நம்ம ஊரு படத்தையே ஆட்டைய போட்டு நமக்கே புது படம் ஓட்டுவாணுக...
ஆனால் உலக சினிமா சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு விடியோ கேமை ஆட்டைய போட்டு படம் எடுக்கிறாரு நம்ம தளபதி ... பாருங்க மக்களே அந்த கொடுமைய ...
(போஸ்தான் ஒரே மாதிரி இருக்கு தொப்பியவாது மாத்திறிக்க கூடாதா? )
(இயக்குனர் ராஜா : ஏய் போட்டோகிராபர் ... ஒரிஜினல் படத்துல டிரஸ் காத்துல பறக்கவே இல்ல ... நம்ம படத்துல காத்துல பறக்குது ... தப்பு தப்பா எடுக்காத .. வா இன்னொரு டேக் போகலாம்... அடுத்த தடவையாவது சரியா அதுல இருக்கிற மாதிரியே எடு...
போட்டோகிராபர் : இல்ல சார் அவரு சாதாரண ஆளு அதனால லைட்டா பறக்குது நம்ம தளபதி சுத்தி அடிக்கிற சூறாவளி அதான் கொஞ்சம் தூக்கலா பறக்குது
)
சினிமா உலக சரித்திரத்தில் முதல முறையாக ஒரு வித்தியாசமான தொழில்நுட்பத்தை அறிமுகபடுத்தியுள்ளார் நம்ம தளபதி.... நாவல படமா எடுத்து பாத்திருப்பீங்க ... நாடகத்த படமா எடுத்து பாத்திருப்பீங்க .. புராணகதைகளை படமா எடுத்து பாத்திருப்பீங்க ... உண்மை சம்பவங்களை படமா எடுத்து பாத்திருப்பீங்க ... ஆனா விடியோ கேம படமா எடுத்து பாத்திருப்பீங்களா? ஜேம்ஸ் கேமரூனுக்கே வராத ஒரு யோசனை நம்ம தளபதிக்கு வந்திருக்கு பாருங்களேன்....
பின்ன என்னங்க யார் யார் எந்த விசயத்துல எக்ஸ்பெர்ட்டோ அந்த விசயத்துலதான அவங்க புதுமைகளை புகுத்த முடியும் ...
நான் போக்கிரி காப்பி பாத்திருக்கேன்
சந்தோஷ் சுப்ரமணியன் காப்பி பாத்திருக்கேன்
ப்ரு காப்பி பாத்திருக்கேன்
பில்ட்டேர் காப்பி பாத்திருக்கேன்
ஏன் ஈ அடிச்சான் காப்பி கூட பாத்திருக்கேன்
ஆனா இது உலக மகா காப்பிடா சாமீ....
13 comments:
//(போஸ்தான் ஒரே மாதிரி இருக்கு தொப்பியவாது மாத்திறிக்க கூடாதா? )//
சத்தியமா சொல்றேன்... பயங்கரமாக சிரித்தேன்.
Btw, திடீரென்று எதிர் தரப்பைப் பற்றியே எழுதுகிறீர்களே...
என்னத்த சொல்ல ...நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு இல்லை...
who is the heroine
//(போஸ்தான் ஒரே மாதிரி இருக்கு தொப்பியவாது மாத்திறிக்க கூடாதா? )//
:))))))))))))
Superb.....
/* ( DISC1 : இது விஜயை மட்டும் ஓட்டுவதற்கு எழுதிய பதிவு இல்லை ) */
ஹா! ஹா! ராஜாவ சேத்து ஓட்டுவதர்க்கா!?
But good find out!!
@ Yoganathan
ஐயோ தல ... ரொம்ப நன்றி .....
@ தனி காட்டு ராஜா
வொய் பிளெட்.. சேம் பிளட் ...
@ ராம்ஜி_யாஹூ
காந்த கண்ணழகி ஜெனீ குட்டி
@ sen22
நன்றி தல ... தங்கள் முதல் வருகைக்கு
@ sarav
க . க . க . போ.
Vijay total damage.
Heard that the movie is a remake of telugu film "Aazad"
"ஆனால் உலக சினிமா சரித்திரத்தில் முதல் முறையாக ஒரு விடியோ கேமை ஆட்டைய போட்டு படம் எடுக்கிறாரு நம்ம தளபதி"
இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். ஏற்கனவே ஹிட்மென் என்ற கேம் படமாக ஆக்கப்பட்டு உள்ளது. அதனால இந்த யோசனையும் ஒரு திருடப்பட்ட யோசனை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.
@ தனுசுராசி
//ஏற்கனவே ஹிட்மென் என்ற கேம் படமாக ஆக்கப்பட்டு உள்ளது.//
அது எந்த படம்?
@Yoganathan.N
அந்த படத்தோட பெயரும் ஹிட்மேன் தான் தல...
உங்களுக்கு சந்தேகம் இருந்தால் இந்த சுட்டியை பார்க்கவும்...
http://www.imdb.com/title/tt0465494/
@ தனுசுராசி
//இந்த யோசனையும் ஒரு திருடப்பட்ட யோசனை என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்//
விடுங்க தல புதுமையை திருடி இன்னொரு புதுமை படைகிறதும் ஒரு புதுமைதான... அதத்தான் சொன்னேன் பதிவுல..
காப்பியடிக்கிறது ஒன்னும் தமிழ் சினிமாவுக்கு புதுசு இல்ல,But இது புதுசு கண்ணா புதுசு
Post a Comment