Followers

Copyright

QRCode

Thursday, July 22, 2010

வேண்டா வெறுப்புக்கு பூஜை போட்டு காவல்காரன்னு பேரு வச்சாங்களாம்...


நம்ம இளைய தளபதிக்கு இப்ப சனி உச்சத்துல இருக்குப்பா... பின்ன ரெண்டாயிரத்து பதினோண்ணுல பிரதமர் ஆக வேண்டியவர் அவரு விதி வெளையாடி ஒரு வார்டு கவுன்சிலராக கூட முடியாத நிலைமையில இப்ப இருக்காரு.... மக்கள் திலகம் பாணியில வேட்டைகாரனு பேரு வச்சி தமிழ் நாட்ட வேட்டையாடிடலாம்னு நெனச்சாப்புல, ஆனா பாவம் வேட்டைபுலியா பாய வேண்டிய படம் டையர்ல மாட்டுன எலியா நசுங்கி போய்டுச்சி... 

ஆனா நாங்க எல்லாம் சிங்கமுல்ல .. நொண்டி அடிச்சாலும் செத்தத நோண்டி திங்க மாட்டோம்ல ... நல்ல கதையில பில்ட் அப்பே இல்லாம நடிக்க நாங்க என்ன உன்னை போல் ஒருவன் கமலா , இல்ல அடுத்தவன் படத்துல ஒரு ஓரமா வந்து நடிச்சிட்டு போக குசேலன் ரஜினியா?சந்திரமுகிக்கே சவால் விட்ட சச்சின்ல அவரு ... வேட்டையில விட்டத புடிக்க சுராவுக்கு வல வீசுனாப்புல ... மக்கள் திலகம் படத்தோட பேர வச்சாதான் படம் ஓட மாட்டேங்கிது ... அவர் கதையவே ஆட்டைய போட்டா அவரு மாதிரியே மக்கள் இதயங்களில் சிம்மாசனம் போட்டு அதுல பெவிக்கால் ஒட்டி நிரந்தரமா உக்காந்திரளாம்னு கணக்கு போட்டாப்புல .... பாவம் கடலுல கம்பீரமா நீச்சல் அடிக்க வேண்டிய சுறா , சீக்கிரமே சீக்கு வந்து செத்து போய் கர ஒதுங்கிடுச்சி... 

வரிசையா ஐந்து படம் ... எல்லாம் உங்க ஊத்து எங்க ஊத்து இல்ல .. கொக்காமக்கா ஊத்து (நன்றி பேரரசு : சிவகாசி) ... பெட்டி பெட்டியா பணத்த வாங்கிட்டு குடும்பம் பிளஸ் குட்டி(கள்)யோட அமேரிக்கா , மலேசியான்னு சந்தோசமா சுத்திகிட்டு இருந்தவருக்கு வச்சான் அந்த பண்ணி சீ பன்னீர் செல்வம் ஆப்பு...கேடி பையன் கோடி கோடியா காசு கொடு இல்லைனா கடைசி வர வீட்டுலையே ரெஸ்ட்டு எடுன்னு .... தலைவரு வரிசையா படம் ஊத்துணப்ப கூட இம்புட்டு கவலைபடல... காசகுடுடான்னு கேட்டவுடனே சும்மா பதறி அடிச்சி ஓடி வந்தாரு ... வழக்கம் போல வெட்டி பயலுக கூட்டம்லாம் போட்டு பேசி ஒரு முடிவுக்கு வந்தானுக ... அடுத்த படத்துல வர்ற லாபத்த வச்சி இந்த நட்டத்த விஜய் சரி கட்டுவாருன்னு ...... முடிவுக்கு காரணம் அது விஜய் படம்கிறதுனால இல்ல .. அந்த படத்தோட இயக்குனர் சித்திக் ... அவர நம்பித்தான் இந்த முடிவையே எடுத்தானுக .... 

வழக்கமா எந்த படத்தோட பூஜையையும் பிரமாண்டமா பண்ணுற விஜய் கோஸ்டி வேண்டா வெறுப்பா இந்த படத்துக்கு பூஜை போட்டாங்க... அப்பவே என் மனசுல உசார்பத்தினி ரெய்டு வந்துச்சி... என்னடா எலி அம்மணமா ஓடுதேன்னு... படம் ஓடுனாலும் நமக்கு லாபம் இல்லைங்கிறத நல்லா புரிஞ்சிக்கிட்டுதான் இந்த படத்துல வேண்டா வெறுப்பா நடிக்கவே ஆரம்பிச்சாரு தளபதி... அவரு கடைசி வரைக்கும் படத்துக்கு பேரே வைக்கவில்லை... அதுவும் இந்த படம் பாடிகார்ட் அப்படிங்கிற மலையாள படத்தோட ரீமேக்காம்... அட்டு கதைய படமா எடுத்தசுறா இயக்குனரே, இந்த கதைய படமா எடுத்தா படம் ஓடாதுங்கிறத சரியா சொல்லிடுவாரு ... அவ்ளோ அருமையான கதை .. இருந்தும் விஜய் அவரோட ரசிகர்கள் இருக்கிற தைரியத்துல (எத காட்டுனாலும் ரசிப்பானுகள்ள) நடிச்சிக்கிட்டு இருந்தார் ... ஆனா அவர் ஆசையில மண்ணை அள்ளி கொட்டிருச்சி இந்த அசின் பொண்ணு ... அதுபாட்டுக்க இலங்கைக்கு போய் அதிபர் குடும்பத்தோட கொஞ்சி குலாவிகிட்டு திரிய .. விஷயம் பயங்கரமா வெடிக்க ஆரம்பிச்சிருச்சி... கொஞ்ச நாளா எந்த வேலையும் இல்லாம சும்மா கெடந்த நடிகர் சங்கம் ... ஆகா பெரிய பீசு மாட்டிகிடுச்சி .. அதுவும் கொஞ்சம் அழகான பீசு வேற , மெரட்டி பாப்போம் , ஏதாவது கெடைக்கும் அப்படின்னு அசினிக்கு தடை விதிக்க ஆளா பறக்குராணுக... இது போதாதுன்னு அசின் சல்மான் கான் கூட நடிக்க ஹிந்தி பட வாய்ப்பு வந்ததும் , காவல்காரன அம்போன்னு விட்டுட்டு சல்மான்காக் கூட டூயேட் பாட கெளம்பிடுச்சி...

நடுவுல இந்த R.M.வீரப்பன் வேற காவல்காரன்கிற பேர இந்த படத்துக்கு வைக்ககூடதுன்னு புகார் பண்ண , விஜய் கோஷ்டி முப்பது லட்சம் தரோம்னு காச அள்ளி எறச்சி பாத்தும் , எம்.ஜி .யார் பட தலைப்பு மேல இருக்கிற மரியாதையை விட்டு கொடுக்க அவர் முன் வரல.. முக்குக்கு முக்கு வேட்டைக்காரன் போஸ்டர் மேல அடிச்சி இருந்த சாணிய பாத்து இருப்பார் போல ... படத்தோட தலைப்பும் போச்சி... இப்ப வேற ஏதோ தலைப்பு வச்சிருக்காரு "காவல் காதல்ன்னு"... படம் கண்டிப்பா கேரளாவுல பிச்சிகிட்டு போகும் .... பின்ன ஷகீலா படத்துக்குகூட இப்படி ஒரு tempting தலைப்பு இதுவரைக்கும் அமைந்ததில்லை.... 


ஆனா ஒன்னு விஜய் இந்த படத்த ரொம்ப எதிர்பார்கிராரோ இல்லையோ அவர் ரசிகர்கள் நிறைய நம்பி இருக்காங்க இந்த படத்த ... பின்ன ஏரியாக்குள்ள தலை நிமிர்ந்து நடந்து பல வருஷம் ஆச்சுல்ல ... இதுவாது ஓடி அவனுங்க தலைய நிமித்தனும்... ஆனா விஜய்க்குன்னு ஒரு எக்குதப்பான செண்டிமெண்ட் இருக்கு .. அது படி பாத்தா இந்த படம் படு பயங்கரமான ப்ளாப் ஆகும்.. அது என்னன்னு கேக்குறீங்களா?


காதலுக்கு மரியாதை - கண்ணுக்குள் நிலவு -சுறா 
கில்லி - குருவி 
போக்கிரி - வில்லு 
நினைத்தேன் வந்தாய் - வசீகரா 


மேல இருக்கிற லிஸ்ட் பாத்தா ஒன்னு தெளிவா புரியும் ... விஜய் முதல் படத்துல ஒரு இயக்குனர்கிட்ட ஹிட் படம் கொடுத்திருந்தா , அடுத்த தடவ அதே கூட்டணி அமையும் பொழுது படம் பப்படம் ஆகிடும்... விஜய் இயக்குனர் மட்டும் இல்லை விஜய் - தயாரிப்பாளர் கூட்டணியும் அப்படித்தான் ... உதாரணம் சங்கலி முருகன் ....


அப்படி பார்த்தால் பிரண்ட்ஸ் - காவல் காதல் என்னவாகும் ??????? விஜய் - சித்திக் கூட்டணியும் இந்த எக்கு தப்பான சென்டிமென்ட்ல சிக்குமா? இந்த லிஸ்ட்ல சிக்காம ஒரே ஒரு இயக்குனர் இருக்காரு அவர்தான் மசாலா அணுகுண்டு பேரரசு ... அவர் மாதிரி சித்திக்கும் தப்பிச்சிடுவாரா? பொறுத்திருந்து பார்க்கலாம் காவல் காதல் ரிலீஸ் ஆச்சுனா?

இருந்தாலும் முந்தய செண்டிமெண்ட்களை எல்லாம் உடைத்து காவல் காதல் புது சரித்திரம் படைக்க வாழ்த்துக்கள் 

44 comments:

Yoganathan.N said...

பதிவைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. எதாவது சொல்ல போக, எதுக்கு வீண் வம்பு... :P

//மசாலா அணுகுண்டு பேரரசு//
எப்படி, இப்படி எல்லாம்? அதுவா வர்ரது இல்ல... ஹஹா

தனி காட்டு ராஜா said...

//எம்.ஜி .யார் பட தலைப்பு மேல இருக்கிற மரியாதையை விட்டு கொடுக்க அவர் முன் வரல.. முக்குக்கு முக்கு வேட்டைக்காரன் போஸ்டர் மேல அடிச்சி இருந்த சாணிய பாத்து இருப்பார் போல ...//

இல்லியா பின்ன ?

SShathiesh-சதீஷ். said...

//வழக்கமா எந்த படத்தோட பூஜையையும் பிரமாண்டமா பண்ணுற விஜய்//

விஜயை தாக்கவே எழுதப்பட்ட பதிவில் சொல்ல ஒன்றும் இல்லை. இருப்பினும் வழக்கமாய் விஜய் படங்கள் பிரமாண்ட பூஜை போடப்படுவதே இல்லை. வேலாயுதம் மட்டுமே அப்படி பூஜை போடப்பட்டது.

பட வரிசைகளை சொன்ன மகான்
பேரரசுடன் சிவகாசி திருப்பாச்சி வெற்றி
அதேபோல தயாரிப்பாலரில் அற.பி சவுத்திரி மறந்து போச்சா...

சினிமா அறிவே இல்லாமல் பதிவு எழுதுகிண்றீர்களோ தெரியவில்லை. தவறுகளை திருத்திக்கொள்ளுங்கள்.

ILLUMINATI said...

அந்த காவல் காதல் மேட்டர் சூப்பர். :)

Bala said...

@ SShathiesh-சதீஷ்.

ஆதி, மின்சாரக்கண்ணா பட பூஜை எல்லாம் மறந்து போச்சா?

//சினிமா அறிவே இல்லாமல் பதிவு எழுதுகிண்றீர்களோ தெரியவில்லை.

ஏன் இப்படி டென்சன் ஆகுறீங்க? டெக்னிகலாக இவர் எதுவும் எழுதவில்லையே. இவர் கூறிய விஷயங்கள் சாதாரணமானவர்களுக்கு கூட விளங்குபவைதானே? ஆர் பி சவுத்ரி விஷயத்தை மறந்தது ஒரு குற்றமா? இல்லை சில உண்மைகளை கொஞ்சம் பச்சையாக சொன்னதால் வந்த கோபமா?

SShathiesh-சதீஷ். said...

வாங்கோ பால நீங்கள் வருவின்கள் என எதிர்பார்த்தேன்.

//Bala said...
@ SShathiesh-சதீஷ்.

ஆதி, மின்சாரக்கண்ணா பட பூஜை எல்லாம் மறந்து போச்சா?
//

ஐம்பதில் இரண்டு படத்துக்கு தான் பூஜை நீங்கள் ஏதோ ஐம்பதுக்கும் நடப்பது போல

//வழக்கமா எந்த படத்தோட//

இந்த வரியின் அர்த்தம் என்னவோ எனக்கு தெரிந்த தமிழ் எல்லாம் என்பதே. சிலவேளை உங்கள் அளவுக்கு எனக்கு தமிழ் அறிவு இல்லை என்றால் மன்னிக்கவும்.

////சினிமா அறிவே இல்லாமல் பதிவு எழுதுகிண்றீர்களோ தெரியவில்லை.

ஏன் இப்படி டென்சன் ஆகுறீங்க? டெக்னிகலாக இவர் எதுவும் எழுதவில்லையே. இவர் கூறிய விஷயங்கள் சாதாரணமானவர்களுக்கு கூட விளங்குபவைதானே? ஆர் பி சவுத்ரி விஷயத்தை மறந்தது ஒரு குற்றமா? இல்லை சில உண்மைகளை கொஞ்சம் பச்சையாக சொன்னதால் வந்த கோபமா?//

எனக்கு கோபம வரவில்லை. கருத்துக்கள் தவறாக இருப்பதால் தான் அதை சுட்டிக்காட்டினேன். ஆர்.பி.சொவ்த்திரியை மறந்தது குற்றம் தான் காரணம் குற்றம் சொல்லும் போது இரண்டு மடன்கையும் பார்க்கவேண்டும். நீங்கள் சொன்னது போல இந்த பதிவு டெக்னிகல் பதிவு இல்லை தான் எல்லோருக்கும் புரியும் தான். அதுக்காக நீங்கள் சொல்லும் எல்லாம் சரியாகாது நான் சொல்வதும் சரியாகாது. அதை நீங்கள் புரிய வேண்டும் நண்பரே.

"ராஜா" said...

//விஜயை தாக்கவே எழுதப்பட்ட பதிவில் சொல்ல ஒன்றும் இல்லை

மன்னிக்கணும் தல இந்த பதிவில் நான் யாரையும் தாக்கி எழுதவில்லை ....உங்க பதிவுகளில் நீங்க பின்பற்றும் பாணிதான் ... சில உண்மைகளையும் எனக்கு இருக்கும் சில சந்தேகங்களையும்தான் சொன்னேன்...

//பட வரிசைகளை சொன்ன மகான்
பேரரசுடன் சிவகாசி திருப்பாச்சி வெற்றி

பேரருசவை பற்றி சொல்லி இருக்கிறேன் கவனிக்கவில்லையா நீங்கள்...
சௌத்ரி படத்துல விஜய் பிளோப்பே கொடுக்கவில்லைன்கிற மாதிரி எழுதி இருக்கீங்க... ஷாஜகான மறந்துட்டீங்களே தல

//சினிமா அறிவே இல்லாமல் பதிவு எழுதுகிண்றீர்களோ தெரியவில்லை

ஏங்க விஜய பத்தி எழுதுனா சினிமா அறிவே இல்லைன்னு அர்த்தமா? நீங்க மட்டும் 3 இடியத்ஸ்ல அஜித் நடிக்கிராருன்னு எழுதி இருக்கீங்க ... ஹீ ஹீ நீங்கதான் வளக்கணும் அறிவ(சினிமாவ மட்டும் சொல்லல)... அப்புறம் இந்த பதிவு உங்களோட அந்த பதிவுக்கு எழுதப்பட்ட எதிர் வினைதான் ... இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன் நாங்களும் எம்புட்டு tension ஆகி இருந்திருப்போம்னு....

SShathiesh-சதீஷ். said...

//மன்னிக்கணும் தல இந்த பதிவில் நான் யாரையும் தாக்கி எழுதவில்லை ....உங்க பதிவுகளில் நீங்க பின்பற்றும் பாணிதான் ... சில உண்மைகளையும் எனக்கு இருக்கும் சில சந்தேகங்களையும்தான் சொன்னேன்.//

தகவலுக்கு நன்றி.

//பேரருசவை பற்றி சொல்லி இருக்கிறேன் கவனிக்கவில்லையா நீங்கள்...
சௌத்ரி படத்துல விஜய் பிளோப்பே கொடுக்கவில்லைன்கிற மாதிரி எழுதி இருக்கீங்க... ஷாஜகான மறந்துட்டீங்களே த//

பேரரசு பற்றி நீங்கள் பட வெற்றியை குறிப்பிடவில்லை என நினைக்கின்றேன். சௌத்திரி படம் ஒன்று தோல்வி தான் ஆனால் அதில் மற்ற படங்கள் வெற்றி. எனவே உங்கள் பதிவின் சாரமே பிளைக்கின்றதே தலைவா? விஜய் முதல் ஜோடி சேரும் இயக்குனர் தயாரிப்பாளருடன் மீண்டும் சேர்ந்தால் தோல்வி என்றீர்கள் ஒருவேளை இந்த படம் வெல்லலாமே? சிந்திக்க வேண்டிய விடயம் தலிவா?

//ஏங்க விஜய பத்தி எழுதுனா சினிமா அறிவே இல்லைன்னு அர்த்தமா? நீங்க மட்டும் 3 இடியத்ஸ்ல அஜித் நடிக்கிராருன்னு எழுதி இருக்கீங்க ... ஹீ ஹீ நீங்கதான் வளக்கணும் அறிவ(சினிமாவ மட்டும் சொல்லல)... அப்புறம் இந்த பதிவு உங்களோட அந்த பதிவுக்கு எழுதப்பட்ட எதிர் வினைதான் ... இப்ப உங்களுக்கு புரிஞ்சிருக்கும்னு நெனைக்கிறேன் நாங்களும் எம்புட்டு tension ஆகி இருந்திருப்போம்னு....//

அந்த படத்தில் அஜித் நடிக்க வாய்ப்பு இல்லை என்று தான் நான் பதிவு எழுதினேன். அந்த நேரத்தில் அஜித்துடன் பேச்சு நடக்கின்றது என்று எல்லா தளத்திலும் வந்த நேரம் அந்த செய்தியை குறிப்பிட்டு அஜித் நடிக்க மாட்டார் என்று என் கருத்தை சொன்னேன். உங்களுக்கே புரிகிறதா அஜித் நடிக்க வாய்ப்பு இல்லை என்று. எனக்கு சினிமா அறிவு குறைவு தான் அதற்காக இப்படியான விடயங்கள் இஎளுதும் போது கொஞ்சம் கவனமாய் இருப்பேன் .அகரணம் தரவுகள் பொய் சொல்லாது.

"ராஜா" said...

@ bala
ஐ அவர் பிரமாண்டமா பூஜை போட்ட படம் எல்லாம் சூப்பர் டூப்பர் ஹிட்டு .. அப்ப வேலாயுதம்?

@ illuminatti
தல நீங்க நம்ம கச்சி

@yoganathan
என்ன தல அடிச்சி ஆடுவீங்கன்னு எதிர்பார்த்தேன்

@ sshathiesh
majarity தான் எப்பவும் ஜெய்க்கும் அதே போலதான் majarityபத்திதான் எப்பவும் எழுதணும் ... இது என்னோட பாலிசி...
நான் பேரருசுவை இந்த லிஸ்ட்டில் இருந்து தப்பிய இயக்குனர் என்றுதான் சொல்லி இருந்தேன் ... நல்லா படிச்சி பாருங்க...
அஜித் வைரஸ் கதாபத்திரத்தில் நடிக்க போகிறார் என்று நீங்கள்தானே உங்கள் பதிவில் பகடி செய்திருந்தீர்கள் ... அதில் முகப்பு புஸ்தக கமெண்ட் எல்லாம் தலையை தாக்கிதானே இருந்தது .... நான் இந்த பதிவில் விஜயை தாக்க அஜித் பெயரை பயன்படுத்தவே இல்லை ....

வேட்டைக்காரன் தோல்வி பெற வேண்டும் என்று நான் சொல்லவே இல்லையே .... வெற்றி பெற வேண்டும் என்றுதான் சொல்லி இருப்பேன் ...

SShathiesh-சதீஷ். said...

//@ sshathiesh
தான் எப்பவும் ஜெய்க்கும் அதே போலதான் பத்திதான் எப்பவும் எழுதணும் ... இது என்னோட பாலிசி...
நான் பேரருசுவை இந்த லிஸ்ட்டில் இருந்து தப்பிய இயக்குனர் என்றுதான் சொல்லி இருந்தேன் ... நல்லா படிச்சி பாருங்க...
அஜித் வைரஸ் கதாபத்திரத்தில் நடிக்க போகிறார் என்று நீங்கள்தானே உங்கள் பதிவில் பகடி செய்திருந்தீர்கள் ... அதில் முகப்பு புஸ்தக கமெண்ட் எல்லாம் தலையை தாக்கிதானே இருந்தது .... நான் இந்த பதிவில் விஜயை தாக்க அஜித் பெயரை பயன்படுத்தவே இல்லை ....

வேட்டைக்காரன் தோல்வி பெற வேண்டும் என்று நான் சொல்லவே இல்லையே .... வெற்றி பெற வேண்டும் என்றுதான் சொல்லி இருப்பேன் ..//

அந்த பதிவல் நான் இன்னும் பின்னூட்டங்களுக்கு பதில் அளிக்கவில்லை என நம்புகின்றேன். அதில் அஜித்தை சாடி வந்தது என் கருத்து அல்லா மற்ற நண்பர்களின் கருத்துக்கள் அதை தான் போட்டேன். அதில் விஜயையும் சாடி இருந்தது. கண்ணை திறந்து பாருங்கள் .என் கருத்து இல்லாமல் அடுத்தவர் கருத்தை என் கருத்து என்கின்ரீர்களே உங்களுக்கு என்ன நடந்தது. என் பதிவில் விளக்கமாய் பின்நூட்டுகின்றேன்.

//@ sshathiesh
majarity தான் எப்பவும் ஜெய்க்கும் அதே போலதான் majarityபத்திதான் எப்பவும் எழுதணும் ... இது என்னோட பாலிசி..//

ஹா ஹா உங்க தலையிலையே மண்ணை வாரி போட்டிடின்களே

அண்ணே எனக்கொரு சந்தேகம் 48 பெரிசா 2 பெரிசா இல்லை உங்களுக்கு கணக்கும் தமிழும் தெரியாதா? விஜயின் இரண்டு படங்களுக்கு மிகப்பிரமாண்ட பூஜை போடப்பட்டதாக சொன்ன நீங்கள் ஏண் எல்லா படங்களும் என்ற கருத்தை பிரயோகித்தீர்கள். அடுத்து உங்கள் பதிலை திருப்பி பாருங்கள் அப்போ நீங்கள் சொன்ன கருத்து சரியா? ஹா ஹா இதுக்கு மேல் நான் என்ன சொல்ல. என் முரளி பற்றிய பதிவில் உங்கள் பின்னூட்டம் பார்த்தேன். உண்மை நிலை தெரியாது எதுவும் கதைக்காதீர்கள் நண்பரே. உங்களை போல இந்தியாவில் நானும் இருந்தால் நானும் அத்தனையையும் போட்டு உடைப்பேன் நான் இருப்பது இலங்கையில் அதனால் என் வாயும் கையும் கட்டுப்படும். உங்களை நேரே சந்தித்தால் நான் சொல்வேன் அப்போது நீங்களே அந்த பின்னூட்டம் பற்றி சிந்திப்பீர்கள்.

கருத்து மோதலால் மனம் நோன்திருந்தால் மன்னிக்கவும்

"ராஜா" said...

தல வழக்கமாக நான் பட பூஜைகளை பற்றி கண்டுகொள்ளுவதில்லை ... தல படங்களின் பூஜையை தவிர ... வேலாயுதம் பூஜையை பற்றி கேள்விப்பட்ட வுடன் விஜய் எல்லா படங்களுக்கும் இப்படிதான் பூஜை போடுவார் என்று நினைத்து கொண்டேன் .... மேலும் சுறா பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தினார்கள் , மேலும் விஜய் ஒரு விளம்பர பிரியர் என்று எல்லாருக்கும் தெரியும் , இந்த காரணங்களினால் நான் எல்லா படங்களுக்கும் பூஜை இப்படிதான் போடுவார் என்று நினைத்து விட்டேன் ... நண்பர் பாலா சொல்லிய பின்னரே என் தவறு தெரிய வந்தது.....

முரளி பற்றிய பின்னூட்டம் என்னுடைய சொந்த கருத்து ... அதிலே தெளிவாக சொல்லி இருப்பேன் விளையாட்டு வீரனாக அவரை மதிக்கிறேன் என்று .... ஒரு தமிழனாக அவர் கடமையை செய்ய தவறி விட்டாரோ என்றுதான் சொல்லி இருந்தேன்

"ராஜா" said...

மற்றபடி கருத்துகள் பரிமாறியதில் எனக்கு மன வருத்தம் எதுவும் இல்லை தல...

SShathiesh-சதீஷ். said...

//தல வழக்கமாக நான் பட பூஜைகளை பற்றி கண்டுகொள்ளுவதில்லை ... தல படங்களின் பூஜையை தவிர ... வேலாயுதம் பூஜையை பற்றி கேள்விப்பட்ட வுடன் விஜய் எல்லா படங்களுக்கும் இப்படிதான் பூஜை போடுவார் என்று நினைத்து கொண்டேன் .... மேலும் சுறா பாடல் வெளியீட்டு விழாவை பிரமாண்டமாக நடத்தினார்கள் , மேலும் விஜய் ஒரு விளம்பர பிரியர் என்று எல்லாருக்கும் தெரியும் , இந்த காரணங்களினால் நான் எல்லா படங்களுக்கும் பூஜை இப்படிதான் போடுவார் என்று நினைத்து விட்டேன் ... நண்பர் பாலா சொல்லிய பின்னரே என் தவறு தெரிய வந்தது....//

தகவலை வழங்க முன்னர் அதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். விஜய் விளம்பர பிரியர். ஹா ஹா இதற்க்கு மேல் உங்களிடம் வாதிக்க நான் விரும்பவில்லை.

முரளி பற்றி உங்கள் கருத்துக்களுக்கு அங்கே பதில் தந்திருக்கின்றார்கள் சிலர் அங்கே வந்து உங்கள் நியாயத்தை சொல்லுங்கள்.

Sarav said...

விஜய் அஜித் ஒண்ணா நண்பர்களா தான் இருக்காங்க போல.. ஆனா இந்த பதிவுலகம் மற்றும் அவர்கள் ரசிகர்கள் தான் திருந்த மாட்டாங்க போல... Continue Pani Enjoy Panunga...

"ராஜா" said...

வணக்கம் தல .... வருகைக்கு நன்றி ... அப்புறம் விஜய் அஜித்கூட எல்லாம் தோள்மேல கை போட்டு பேசுற அளவுக்கு நெருக்கமோ நீங்க .... அவங்க நட்ப பத்தி எல்லாம் புட்டு புட்டு வைக்கிறீங்க....

அப்புறம் நான் இந்த பதிவுல அஜித்துன்னு ஏதாவது ஒரு வார்த்த யூஸ் பண்ணி இருக்கேன்? இல்ல மறைமுகமா அவர புகழ்ந்து எழுதி இருக்கேனா? உங்களை மாதிரி ஆளுகதான் பாஸ் கோர்த்து விட்டு போறதே...

Yoganathan.N said...

//உங்களை மாதிரி ஆளுகதான் பாஸ் கோர்த்து விட்டு போறதே... //

ஏதோ தெரியாம பேசிட்டாரு, லூசா விடுங்க... :P

Sarav said...

"ராஜா" said...

/* அப்புறம் விஜய் அஜித்கூட எல்லாம் தோள்மேல கை போட்டு பேசுற அளவுக்கு நெருக்கமோ நீங்க */
உங்க அளவுக்கு நெருக்கம் எனக்கு இல்லங்க...


/* அவங்க நட்ப பத்தி எல்லாம் புட்டு புட்டு வைக்கிறீங்க.... */

ஒண்ணா நண்பர்களா தான் இருக்காங்க போலனு.. ஒரு வரி தானங்க சொன்னேன்.. அப்படி என்ன நான் புட்டு வைச்சேன்...

/* அப்புறம் நான் இந்த பதிவுல அஜித்துன்னு ஏதாவது ஒரு வார்த்த யூஸ் பண்ணி இருக்கேன்? இல்ல மறைமுகமா அவர புகழ்ந்து எழுதி இருக்கேனா? */

நீங்க அஜித் புகழ்ந்து எழுதி இருக்கீங்கனு நான் சொல்லவே இல்லயே!! நீங்களா தான் சொல்றீங்க ஏன் தெரிலங்க!!

ஏன்னா நான் போட்ட Comment நீங்களும் SShathiesh-சதீஷ் ரெண்டு
பேரும் அடிச்ச Comment ku தான்..


/* உங்களை மாதிரி ஆளுகதான் பாஸ் கோர்த்து விட்டு போறதே */

கோர்த்து விடலங்க உங்க பதிவு மற்றும் Comment எல்லாம் அப்படி தான் இருக்கு..

Ex:

/* அம்பதாவது படம்னா இப்படி இருக்கணும்... */

இன்னும் வரவே இல்லயேங்க.. ஒரு வேல போஸ்டர் சொல்றீங்களா?!

Sarav said...

நான் போட்ட Comment தப்பா இருந்த Sorry ங்க...

Sarav said...
This comment has been removed by the author.
Sarav said...

Yoganathan.N said...

/* ஏதோ தெரியாம பேசிட்டாரு, லூசா விடுங்க... :P */

நன்றி தலைவா!!!


/* Yoganathan.N said...
பதிவைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை. எதாவது சொல்ல போக, எதுக்கு வீண் வம்பு... :P */

இப்படி தான் நானும் நினைச்சேன் ஆனா விஜய்க்கு Support பன்ன போய் நானும் மாட்டிக்கிட்டேன்..

அப்புறம் தான் நண்பரோட தளம் பார்த்தேன் ஒரே தல புராணம் இருந்துச்சு...

அப்புறம் விஜய்க்கு Support பன்ன போய் நானும் மாட்டிக்குவேன்..

So தல வாழ்க! தல வாழ்க!

"ராஜா" said...

// அம்பதாவது படம்னா இப்படி இருக்கணும்... */

இன்னும் வரவே இல்லயேங்க.. ஒரு வேல போஸ்டர் சொல்றீங்களா//இதுக்கு பேருதான் பாஸ் கோர்த்து விடுறது ...

நான் தல ரசிகன்தான் ... ஆனால் யாருடனும் வீணாய் சண்டை போட மாட்டேன் ... அவர்கள் தலையை பற்றி எழுதினால் நானும் எழுதுவேன் அவர்களின் தளபதியை பற்றி ... அப்புறம் சண்ட போட்ட நானும் அவருமே அமைதியாகிட்டோம் நீங்க ஏன் எல்லாம் முடிஞ்ச பின்னாடி சமாதானம் பேச வரீங்க ...

பாஸ் சினிமாவே ஒரு பொழுதுபோக்கு ஊடகம்தான் ... அதை எங்கள் வாழ்க்கையில் எந்த எல்லை வரை நுழையவிட வேண்டும் என்பது எங்களுக்கு நன்றாகவே தெரியும் ... நானும் ரொம்ப எடத்துல பாக்குறேன் அஜித் ரசிகனும் விஜய் ரசிகனும் சண்ட போட்டா உடனே சண்ட போடாதீங்க ஏட்டையான்னு சமாதானம் பேச சில பேரு கெளம்பி வரீங்க .... எங்க சண்டையால என்ன உலகபோரா ஆரம்பம் ஆகிட போகுது ...

பாஸ் என்ன பொறுத்த வரை இதெல்லாம் சின்ன சின்ன சந்தோசங்கள் ... தலையை பத்தி பெருமையா ரெண்டு வார்த்த எழுதும்போது அப்படியே ஜிவ்வுன்னு மனசுல சின்ன சந்தோசம் எட்டி பாத்துட்டு போகும் பாருங்க அந்த சந்தோசத்திற்காக ... அவ்வளவுதான் ... உங்களுக்கு அது முட்டாள்தனமாக தெரிந்தால் , அதை முட்டாள்தனம் என்று என்னும் உங்களை போன்றவர்களை பார்த்தால் எனக்கு முட்டாள்தனமாகத்தான் தெரியும்

"ராஜா" said...

//தல வாழ்க! தல வாழ்க!

டென்சன் ஆகாதீங்க தலைவா ... பதிவுலகத்தில இதெல்லாம் சாதாரணம் ...

tanx for your first visit and comments...

Yoganathan.N said...

@ Sarav
//அப்புறம் தான் நண்பரோட தளம் பார்த்தேன் ஒரே தல புராணம் இருந்துச்சு... //

U talking about me?

Sarav said...

/* இதுக்கு பேருதான் பாஸ் கோர்த்து விடுறது */

கோர்த்து விடலங்க...உள்ளத தான் சொன்னேன்...நான் கேட்டதுக்கு பதில் சொல்லாம கோர்த்து விட ரேனு சொல்றீங்க...


/* அப்புறம் சண்ட போட்ட நானும் அவருமே அமைதியாகிட்டோம் நீங்க ஏன் எல்லாம் முடிஞ்ச பின்னாடி சமாதானம் பேச வரீங்க */

சமாதானம் பேச நான் யாருங்க?.. நீங்க யார்? அவர் யார்? எனக்கு தெரியாது.. ஏதாட்ச்சியா உங்க தளம் வந்தேன் பதிவு பாத்தேன் கமெண்ட்ஸ் படிச்சேன்..கொஞ்சம் நெறைய பேசற மாதிரி இருந்துச்சு அது தான் நான் Generala கமெண்ட்ஸ் போட்டேன்..


/* எங்க சண்டையால என்ன உலகபோரா ஆரம்பம் ஆகிட போகுது */

ஹா ஹா ஹா வர்ல்ட் வார் வராது... இவ்வளவு தூரம் படிச்சுட்டு இன்னும் ஒரு ஆக்டர்காக சண்ட போட்றது நல்லவா இருக்கு... அத தான் சொன்னேன்..

/* நானும் ரொம்ப எடத்துல பாக்குறேன் அஜித் ரசிகனும் விஜய் ரசிகனும் சண்ட போட்டா உடனே சண்ட போடாதீங்க ஏட்டையான்னு சமாதானம் பேச சில பேரு கெளம்பி வரீங்க */

அப்போ என்ன தான் யார் யார் சொன்னாலும் இன்னும் நாங்க சண்ட தான் போடுவோம் சொல்றீங்க..

சண்ட போட தான் ரசிகனா?
இல்ல சண்ட போட்டா தான் ரசிகனா?

/* சின்ன சின்ன சந்தோசங்கள் */

உங்க சந்தோசத்த கெடுக்க நான் யாருங்க? அதுக்கு தான் "Continue Pani Enjoy Panunganu" என் ஃபர்ஸ்ட் காமெண்ட்ல சொன்னேன்..

Sarav said...

/* உங்களுக்கு அது முட்டாள்தனமாக தெரிந்தால் , அதை முட்டாள்தனம் என்று என்னும் உங்களை போன்றவர்களை பார்த்தால் எனக்கு முட்டாள்தனமாகத்தான் தெரியும் */

கண்டிப்பா உங்களுக்கும் முட்டாள்தனமாகத்தான் தெரியும்..

Sarav said...

/* டென்சன் ஆகாதீங்க தலைவா ... */

ஹா ஹா ஹா.. Tension ஆகர அளவுக்கு நீங்க என்ன எதும் காய படுத்தல...

/* பதிவுலகத்தில இதெல்லாம் சாதாரணம் */

எனக்கு இது தெரியாதுங்க..நான் ஒரு வாசகன் இல்லான வழிப்போக்கன்.. இந்த மாதிரி வந்து படிக்கறவங்களுக்கு தாங்க தெரியாது நீங்க எழுதும் எழுத்து யாருக்காகணு...

Sarav said...

/* Yoganathan.N said...
U talking about me? */

No No Thala.. Only for RAJA..

Yoganathan.N said...

//சண்ட போட தான் ரசிகனா?
இல்ல சண்ட போட்டா தான் ரசிகனா? //

ம்ம்ம்... சிந்திக்க வைக்கும் வரிகள்... :)

"ராஜா" said...

//அப்போ என்ன தான் யார் யார் சொன்னாலும் இன்னும் நாங்க சண்ட தான் போடுவோம் சொல்றீங்க..

சண்ட போட தான் ரசிகனா?
இல்ல சண்ட போட்டா தான் ரசிகனா?

தல சண்டை போடுவதை எதனால் நீங்கள் தவறு எங்கிறீர்கள்? இதனால் யாருக்கு என்ன நட்டம் ... எங்களுக்கு பொழுதுபோகவே நாங்கள் வாதம் செய்கிறோம்...

ரசிகனாய் இருப்பதே time pass செய்யவே.... இந்த வயசுல இதெல்லாம் செய்யலேனா எந்த வயசுல பண்ணுறது.... உங்களை போன்றவர்கள்தான் எங்களை நினைத்து வருந்தி கொண்டு இருக்கிறீர்கள்... இன்று அடித்து கொள்ளும் நானும் அவரும் நாளையே விக்ரம் படம் வந்தால் சேர்ந்து கொண்டு அதை ஓட்டுவோம்.....இந்த சண்டையை தேச துரோகம் ரேஞ்சிக்கு build up பண்ணிடாதீங்க...

"ராஜா" said...

//ம்ம்ம்... சிந்திக்க வைக்கும் வரிகள்... :)

கவுத்திடீங்களே தல ... சரி நீங்களே சொல்லிடீங்க , விட்டிடுவோம்

Sarav said...

/* தல சண்டை போடுவதை எதனால் நீங்கள் தவறு எங்கிறீர்கள்? இதனால் யாருக்கு என்ன நட்டம் */


அப்போ நீங்க சரினு சொல்றீங்களா? நட்டம் நமக்கு தாங்க Energy, மனக்கஸ்டம்,Tension....

ஒரு ரசிகனா இருந்து வாதம் பன்னுங்க விமர்சனம் பன்னுங்க... சண்ட வேண்டாம்... நியாயமா எழுதுங்க... . ஒருததவங்கல தாழ்த்தி நாம மேல வர வேண்டாம்...

Thanx for ur all reply.. Bye for Now..

pozhthupoku said...

மசாலா அணுகுண்டு பேரரசு ... arumaiyana title thalaiva....

Yoganathan.N said...

//கவுத்திடீங்களே தல ... //
ஹஹா... அப்படி எல்லாம் இல்லை. நண்பர் Sarav போன்றவர்கள் போற போக்கில், என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போய் விடுவார்கள். இருந்து போராடுவது நாம் தானே...
கண்டிப்பா கவுத்திட மாட்டேன். ஹிஹி

Sarav said...

/* போற போக்கில் */

எதும் தப்பா சொல்லிட்டெனா??

/* என்ன வேண்டுமானாலும் சொல்லிவிட்டு போய் விடுவார்கள் */

பார்த்தீங்களா தல

/* ம்ம்ம்... சிந்திக்க வைக்கும் வரிகள்... :) */

இப்படி சொல்லிட்டு உங்க நண்பருக்காக என்ன மூணாவது மனுசனாக்கிட்டிங்கலே!!!


/ *இருந்து போராடுவது நாம் தானே... */

All the Best !!

Yoganathan.N said...

//எதும் தப்பா சொல்லிட்டெனா??//
காண்டிப்பாக இல்லை.

//பார்த்தீங்களா தல//
Sorry for the misunderstanding. What I meant there was Internet world is beyond our control and everybody is entitled for their own opinions. We can't expect everyone to respond to a topic in a same way, can we? If fren Raja doesn't write, someone else will and it's just unstoppable if u ask me.

//இப்படி சொல்லிட்டு உங்க நண்பருக்காக என்ன மூணாவது மனுசனாக்கிட்டிங்கலே!!! //
அப்படி அல்ல. இனிமேல் நீங்கள் நம்ம 'செட்டு'. அடிக்கடி இங்க வந்துட்டு பொங்க. மாற்று கருத்து இருந்தால் தான், கலந்துரையாடல்களில் ஒரு சுவாரசியம் இருக்கும்.

A few queries:
1. R u a Vj fan?
2. R u a programmer?

"ராஜா" said...

@ sarav

தல நாங்கள் உங்களை மூன்றாவது மனிதனை போல் நினைக்கவில்லை ..... உங்கள் கருத்து எங்களுக்கு எதிராக இருப்பதால் நாம் நிறைய விவாதித்தோம் அவ்வளவே .... நான் இன்னமும் சொல்வது இதெல்லாம் பெரிய விசயமே இல்லை ... சண்டை போட்டதால் நாங்கள் எதிரிகளாய் நினைத்து கொள்வதில்லை ....மாறாக எங்களுக்குள் ஒரு நட்பு உருவாகும் ... இது நான் அனுபவித்தது பதிவுலகில் .... இப்பொழுது உங்களை பற்றி எனக்கும், நண்பர் யோகாவுக்கும்,, எங்களை பற்றி உங்களுக்கும் ஒரு புரிதல் உருவாக்கி இருக்கும் , இதுவும் நட்பிற்கு முதல் படியே ... அடிக்கடி வாருங்கள் சண்டை போடுவோம் ... நட்பை வளர்த்து கொள்ளுவோம் ... நண்பர் யோகா சொன்னைதை போல நீங்களும் நம்ம செட்டுதான் இனி...


அப்புறம் எனக்கும் அந்த சந்தேகம் இருந்திச்சி நீங்க விஜய் ரசிகரா??


@ Yoganathan
தல தலைக்கான நம் போராட்டம் கண்டிப்பா தொடரும் நான் இந்த பதிவுலகில் இருக்கும் இறுதி வரை ....

Sarav said...

@ Yoganathan.N said...


/* We can't expect everyone to respond to a topic in a same way, can we? */

Yes Thala, Ofcourse we cant. We can quote any comments,but that should relevant and realistic. That is my point


/* it's just unstoppable */

May be bt We can have fullstop for everything,if we watch and love the film as his fan.We may take the film if we like that,otherwise just drop.nothing is going to happen..


/* நம்ம 'செட்டு' */

உங்க செட்டா நண்பரா இருக்கேன்

/* அடிக்கடி இங்க வந்துட்டு பொங்க */

இனி கண்டிப்பா வருவேன் அடிக்கடி...

/* ஒரு சுவாரசியம் இருக்கும். */

உண்மை தான்...


/* 1. R u a Vj fan? */

இந்த கேள்விய நீங்க ஆரம்பத்துல கேப்பீங்கணு நினைச்சேன்!

i m not a Vijay fan..bt என்னுடைய நண்பர்கள் இருந்தார்கள்..விஜய் ரசிகராகவும் அஜித் ரசிகராகவும் ... இப்பவும் அப்படி தான் இருக்காங்க... ஆனால் ஒண்ணா இல்ல... விஜய் பத்தி அஜித் பத்தி வாதம் பன்னுவாங்க.. ஒரு ஸ்டேஜ்ல இவங்கள பத்தி அவுங்க தப்பா பேசறது அவுங்கள பத்தி இவுங்க தப்பா பேசுனது சண்டயா மாறி போச்சு... அது தான் நான் உங்க கிட்ட பேச காரணம்... நியாயமா பேசுங்க... நியாயமா எழுதுங்க... இல்லாத ஒரு விசயத்த இருக்குற மாதிரி எழுத வேண்டாம்... உங்க கிட்ட நான் பண்ணின வாதம் பாத்தீங்கனா தெரியும் நான் என்ன சொல்ல வரேனு....

நான் Time Pass ku படத்துக்கு போவேன் So Entertainingகாக நான் படம் பார்ப்பேன்.....

/* 2. R u a programmer? */

Yezz.. I m a Programmer..

Sarav said...

*/ பெரிய விசயமே இல்லை */

ஒரு வேல நீங்க பாதிக்கப்படாதனால இருக்கலாம்.. நான் பாதிக்கப்பட்டேன் அது தான் எனக்கு பெரிய விசயமா இருக்கு...


/* அப்புறம் எனக்கும் அந்த சந்தேகம் இருந்திச்சி நீங்க விஜய் ரசிகரா?? */

ஹா ஹா!! நீங்க தான் ஃபர்ஸ்ட் கேட்பீங்கணு நினைச்சேன் bt அவர் முந்தி கொண்டார்

Sarav said...

Yoganathan.N

உங்க கிட்ட 1 கேள்வி

/ * 1. R u a Vj fan? */

இது Ok

/* 2. R u a programmer? */

இது எதுக்கு கேட்டீங்க?

Yoganathan.N said...

@ Sarav

//Yes Thala, Ofcourse we cant. We can quote any comments,but that should relevant and realistic. That is my point//
I think everyone's comment(s) here are relevant to the post.

//இந்த கேள்விய நீங்க ஆரம்பத்துல கேப்பீங்கணு நினைச்சேன்! //
நீங்கள் அந்த நடிகருக்கு பரிந்து பேசியதனால் தான் அவரது ரசிகரா என்று கேட்டதாக எண்ண வேண்டாம். பொதுவாக நான் சந்திக்கும் புதியவர்களிடம் கேட்கும் கேள்வி அது. தவறாக எண்ண வேண்டாம். :)

மற்றபடி உங்கள் நண்பர்கள் மத்தியில் நடப்பது எங்கும் நடப்பது தான்.

//இனி கண்டிப்பா வருவேன் அடிக்கடி... //
அப்போ, இது மாதிரி பதிவுகள் எல்லாம் பழகிவிடும். ஹிஹி

//ஒரு வேல நீங்க பாதிக்கப்படாதனால இருக்கலாம்.. நான் பாதிக்கப்பட்டேன் அது தான் எனக்கு பெரிய விசயமா இருக்கு...//
என்ன இப்படி சொல்லிபுட்டீங்க? இந்த பாதிக்கப்பட்ட வட்டத்தில் அனைவரும் அடங்கியுள்ளோம்.

//
/* 2. R u a programmer? */

இது எதுக்கு கேட்டீங்க?//
Becoz, you used '/*... */' for comments, hence the doubt. I'm a programmer too. Nice to meet you. :shaking-hands: :P

Sarav said...

/* நண்பர்கள் மத்தியில் நடப்பது எங்கும் நடப்பது தான். */

உண்மை தான்.. இது மாதிரி எங்கும் நடக்க கூடாதுனு தான் சொல்லவரேன் ...


/* இது மாதிரி பதிவுகள் எல்லாம் பழகிவிடும் */

ஹா ஹா!! எனக்கு அப்படி பழகுவதாக இருந்தால் ஆறு வருடத்துக்கு முன்னாடி நடந்து இருக்கும்

/* இந்த பாதிக்கப்பட்ட வட்டத்தில் அனைவரும் அடங்கியுள்ளோம். */

பாதிக்கப்பட்டவங்களுக்கு கண்டிப்பா பெரிய விசயமா தான் இருக்கும் சொல்றேன்

/* for comments */

Ha Ha !! நாம எப்போதும் Comments ku /* ... */ இது தான யூஸ் பண்ணுவோம் அதே பழக்கம் இங்க வந்துடுச்சு...


/* Nice to meet you. :shaking-hands: :P */

Mee Tooooooooooo!!!!


Intha Conversation Ipo Nikkathu pola...

Sarav said...
This comment has been removed by the author.
Yoganathan.N said...

//உண்மை தான்.. இது மாதிரி எங்கும் நடக்க கூடாதுனு தான் சொல்லவரேன் ...//
21 நூற்றாண்டிலே, இப்படி ஒரு பொதுநலவாதியா... :clap:

@ நண்பர் ராஜா - இவர 'நோட்' பண்னி வச்சுகுவோம். :P

//ஹா ஹா!! எனக்கு அப்படி பழகுவதாக இருந்தால் ஆறு வருடத்துக்கு முன்னாடி நடந்து இருக்கும்//
எங்க கூட சேர்ந்துட்டீங்களே, இனி கண்டிப்பா பழகிடும். ஹிஹி

//Intha Conversation Ipo Nikkathu pola...//
Yes yes... Romba lenghth-A pOi kittu irukku...

Sarav said...

/* இவர 'நோட்' பண்னி வச்சுகுவோம். :P */

Dai Sarav விடு ஜூட்!! Escape!!!

/* கண்டிப்பா பழகிடும் */

No Chance Thalaiva!!!

LinkWithin

Related Posts with Thumbnails