Followers

Copyright

QRCode

Saturday, July 17, 2010

நானும் கிரிக்கெட்டும் ....
சின்ன வயசுல கரத்தவாண்டி வேட்டைக்கு போகி இருக்கீங்களா? எப்பவாவது உங்க ஊரு பக்கம் கிராஸ் பண்ணிட்டு போற ரயிலுக்காக மணிகணக்குல  காத்து கெடந்து அது வரப்ப டாட்டா காட்டி அத தொரத்திகிட்டே ஓடி இருக்கீங்களா? கம்மாய் தண்ணியில விலாங்கு மீன் பிடிச்சி பழகி இருக்கீங்களா? உங்க வீட்டு திண்ணையில உக்காந்துகிட்டு அடிக்கிற மழையில தெருவுல ஓடுற தண்ணியில கத்தி கப்பல் விட்டு விளையாண்டு  இருக்கீங்களா? வீட்டு மாடி தூம்புல இருந்து விழுற மழை  தண்ணியில குளிச்சிருக்கீங்களா?  மொட்ட வெயிலுல மரம்  ஏறி  புளியங்காய் அடிச்சி கல்லுல உரசி  நாக்குல எச்சி ஊற புளிப்ப ருசி பாத்துருக்கீங்களா? நாள் முழுக்க கிணத்து தண்ணியில நீச்சல் அடிச்சி வெளையாண்டு இருக்கீங்களா? இது ஒவ்வொன்னும் ஒவ்வொரு சுகம்... கிராமத்து வாழ்கையில மட்டுமே கிடைக்கிற சொர்க்க சுகங்கள் ... எங்களுக்கெல்லாம் பள்ளிக்கூடம் போறது மாதிரி பெரிய சந்தோசம் வேற எதுவுமே கிடையாது .. காரணம் எந்த வேலையும் செய்யாம மதிய சாப்பாடு கெடைக்கும் ... சாப்பாட்டோட சேத்து முட்டையும் கெடைக்கும் .. மதிய சப்பாட்டுகாகவே பள்ளிக்கூடம் வந்து நல்லா படிச்சி வாழ்கையில நல்ல நிலைமைக்கு வந்த பல பேரு இருக்கானுக ...  நகரங்களுள பசங்க வெளையாட எடமே இல்லை.. ஆனா எங்களுக்கு எங்க ஊரே மைதானம்தான்... திருடன் போலிஸ் வெளையாட்டுல நாங்க எந்த வீட்டுக்குள்ள வேணும்னாலும் போய் ஒளிஞ்சிகுவோம்... யாரும் திட்ட மாட்டார்கள் ... நாங்க  போற நேரம் சாப்பாட்டு நேரமா இருந்தா அந்தவேளை சாப்பாடு எங்களுக்கு அந்த வீட்டுலதான்... எங்களுக்கு ஒவ்வொரு சீசனுக்கும் ஒவ்வொரு வெளையாட்டு... கொஞ்ச நாள் பம்பரம் விட்டுகிட்டு திரிவோம் , அடுத்து பட்டம் பறக்க விடுவோம் , கோழி குண்டு  அடிப்போம், கில்லி தாண்டா வெளையாடுவோம் . எந்த வெளையாட்ட இருந்தாலும் எங்களுக்கு அது மான பிரச்சனை... கரெக்டா சொல்லி வச்ச மாதிரி அத்தன பசங்களும் காலயில ஒன்னு சேந்திடுவோம்  .... எப்பவுமே எங்களுக்குள ரெண்டு டீம் இருக்கு ... ஒரு டீம் வெள்ளாளர் பள்ளிகூடத்துல படிக்கிறவனுக .. இன்னொரு டீம் நாடார் பள்ளிகூடத்துல படிக்கிறவனுக ... எங்க ஊருல அந்த ரெண்டு பள்ளிகூடம்தான் இருக்கு... தோக்குற பள்ளிகூடத்து பசங்க ஜெயக்கிற பசங்களுக்கு அடுத்த ஒரு வாரம் காலையிலயும் , மதியமும் எங்க ஊரு கெழவி கடையில  பருத்தி பால் வாங்கி தரனும் .. இதுதான் எப்பவும் பெட்... எங்க வீட்டுல எனக்கு டெய்லி ஒரு ரூபா செலவுக்கு கொடுத்து விடுவாங்க ... அது போக நானும் அப்பப்ப வீட்டுல ஒரு ரூபா ரெண்டு ரூபான்னு ஆட்டைய போட்டு பசங்களுக்கு அப்பளம் , முறுக்குன்னு வாங்கி தருவேன் , அதனால எங்க டீமுக்கு எப்பவும் நான்தான் தலைவன்.... தோத்தா நான்தான்  செலவு பண்ணுவேன் ... அதுக்கு பரிகாரமா  திருட்டுத்தனமா  எங்க பசங்க புளியங்கா , கொய்யாப்பழம், இளநி பறிக்க போனா மொத படையல் எனக்குதான்...

கொஞ்சம் பெரிய பையனா ஆனா பின்னாடி எங்க மொத்த வாழ்க்கையையும் கிரிக்கெட்டுக்கே அர்பணித்து  விட்டோம்... மொத மொத நாங்க கிரிக்கெட் விளையாடினது உஜாலா பாட்டுல பந்தாவும் , சின்ன மரக்கட்டைய பேட்டாவும் வச்சிதான்... எங்க பள்ளிகூடத்து மைதானத்துல விளையாடுவோம் ... எங்க கூட அந்த பள்ளிகூட பசங்களும் விளையாடுவானுக ... இது எங்க பள்ளிகூடத்து head masterக்கு பிடிக்கல , மைதானத்த சுத்தி கம்பி வேலி போட்டு, ஒரு வாட்ச்மேன்னையும் காவலுக்கு போட்டுட்டாரு.... எங்க கிரிகெட் வாழ்க்கைக்கு விழுந்த முதல் தடை அது... எங்களுக்கு விளையாட  ஒரு மைதானம் தேவை பட்டது ...எங்க கண்ணுல விழுந்த ஒரே எடம் எங்க ஊரு நந்தவனம் ...
அங்க எங்களோட அண்ணன்மார்கள் வெளையாடிக்கிட்டு இருப்பானுக.... எங்களை ஆட்டையில செத்துகவே மாட்டானுக .. மொத்த கிரௌன்டையும் அவனுகளே ஆக்கிரமிச்சிகிடுவாணுக... நாங்க ஒரு ஓரமா வழக்கம் போல உஜாலா தப்பாவ வச்சி வெளையாடிக்கிட்டு இருப்போம் ... அப்ப எனக்கெல்லாம் அவனுக கூட விளையாடனும்கிறது பெரிய கனவு ... அந்த கனவு ஒரு வருஷம் கழிச்சி பலித்தது ...யாரோ ஒருத்தன் அடிச்ச பந்து சீறி பாஞ்சி வந்துகிட்டு இருந்தது என்னை நோக்கி ... எல்லாரும் டேய் தள்ளுடா பந்து அடிச்சிசுனா ஏதாவது ஆகிட போகுதுன்னு கத்துனாணுக, ரெண்டு நாளைக்கு முன்னாடிதான் கார்க் பால் வச்சி ஒருத்தன் மண்டைய பொளந்து அவன ஆஸ்பத்திரியில படுக்க வச்சி அவன் அம்மாகிட்ட நார வசவு வாங்கி இருந்தானுக  ... நான் கொஞ்சம் கூட பயப்படாம என் நெஞ்சுக்கு நேர வந்த பந்த ஒத்த கையாள கேட்ச் பிடிச்சி நிறுத்தினேன் ... எல்லாருக்கும் பயங்கர ஷாக் ... அப்பத்தான் அவனுகளே கார்க் பால் வச்சி விளையாட ஆரம்பிச்சி இருந்தானுக .. அதுனால அவனுகளே பந்த பிடிக்க பயந்துகிட்டு இருந்தானுக சின்ன பையன் நான் பந்த பயமே இல்லாமே பிடிச்சிட்டேன் ... அன்னைக்கி மேட்ச் முடிஞ்சி நடந்த ஆலமரத்தடி அரட்டை கச்சேரில இந்த விசயம்தான் மெயின் டாபிக்... பையன் பயம் இல்லாம இருக்கான்டா அவன நம்ம டீம்ல சேத்துக்கலாம்டான்னு  ஒரு குரூப் எனக்கு சப்போர்ட் பண்ணுச்சி , இல்லடா ஏதோ பயத்துல கைய நீட்டிட்டான் பந்தும் அவன் கையில மாட்டிகிடிச்சி அவ்ளோதாண்டா , இத போய் திறமைநேல்லாம்  சொல்ல முடியாதுன்னு ஒரு குரூப் என்னக்கு எதிரா கால வாற பத்தாணுக
.கடைசியில என்னோட திறமைய டெஸ்ட் பண்ணி பாக்குறதுன்னு முடிவு பண்ணுனாணுக... இடம் அதே நந்தவனம் .. டெஸ்ட் நான் பழனி அண்ணனோட பந்துவீச்சுல ஒரு ஓவர் பேட்டிங் பிடிக்கணும் , ஒரு பாலுக்கு கூட பயப்படகூடாது , உடம்புல அடிவாங்கிரகூடது, ஆறு பாலையும் பயப்படாம உடம்புல அடிபடாம விளையாண்டு முடிச்சிட்டா இவன டீம்ல சேத்துக்கலாம்னு முடிவு பண்ணிட்டானுக , பழனி அண்ணன் அவர்தான் எங்க சுத்து வட்டாரத்துளையே பெரிய பௌலேர்... அவர் பந்து வீச பவுண்டரி லைன்ல இருந்து  ஓடி வர்ற வேகத்த பாத்தாலே பேட்ஸ்மேனுக்கு அடி வயிறு கலங்கும்.. அவர் வீசுற பந்தால  காலுல அடி வாங்கி ரெண்டு மாசமா நடக்க முடியாம முட்ட பத்து போட்டுக்கிட்டு நொண்டிகிட்டு திரிஞ்ச பல பேர் இருக்கானுக ஊருக்குள்ள .. எனக்கு மனசுக்குள்ள பயமா இருந்தாலும் , எங்க ஊர் டீம்ல சேர இதுதான் நல்ல வாய்ப்புங்கிரதுனால ஒத்துகிட்டேன் ...

(அடுத்த பதிவுல மீதி)3 comments:

Yoganathan.N said...

//சின்ன வயசுல கரத்தவாண்டி வேட்டைக்கு போகி இருக்கீங்களா? எப்பவாவது உங்க ஊரு பக்கம் கிராஸ் பண்ணிட்டு போற ரயிலுக்காக மணிகணக்குல காத்து கெடந்து அது வரப்ப டாட்டா காட்டி அத தொரத்திகிட்டே ஓடி இருக்கீங்களா? கம்மாய் தண்ணியில விலாங்கு மீன் பிடிச்சி பழகி இருக்கீங்களா? உங்க வீட்டு திண்ணையில உக்காந்துகிட்டு அடிக்கிற மழையில தெருவுல ஓடுற தண்ணியில கத்தி கப்பல் விட்டு விளையாண்டு இருக்கீங்களா? வீட்டு மாடி தூம்புல இருந்து விழுற மழை தண்ணியில குளிச்சிருக்கீங்களா? மொட்ட வெயிலுல மரம் ஏறி புளியங்காய் அடிச்சி கல்லுல உரசி நாக்குல எச்சி ஊற புளிப்ப ருசி பாத்துருக்கீங்களா? நாள் முழுக்க கிணத்து தண்ணியில நீச்சல் அடிச்சி வெளையாண்டு இருக்கீங்களா?//

சாரி பா... நான் மலேசியா. :P
இருந்தலும், இது போன்ற விசயங்களை அனுபவித்திருக்கேன்.
அப்ப்டியே, சின்ன வயச ஞபகப் படுத்தியத்ற்கு நன்றி. காண்டிப்பாக ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுகம் தான்.

Btw, 'கரத்தவாண்டி வேட்டை' என்றால் என்ன?

Yoganathan.N said...

//சின்ன வயசுல கரத்தவாண்டி வேட்டைக்கு போகி இருக்கீங்களா? எப்பவாவது உங்க ஊரு பக்கம் கிராஸ் பண்ணிட்டு போற ரயிலுக்காக மணிகணக்குல காத்து கெடந்து அது வரப்ப டாட்டா காட்டி அத தொரத்திகிட்டே ஓடி இருக்கீங்களா? கம்மாய் தண்ணியில விலாங்கு மீன் பிடிச்சி பழகி இருக்கீங்களா? உங்க வீட்டு திண்ணையில உக்காந்துகிட்டு அடிக்கிற மழையில தெருவுல ஓடுற தண்ணியில கத்தி கப்பல் விட்டு விளையாண்டு இருக்கீங்களா? வீட்டு மாடி தூம்புல இருந்து விழுற மழை தண்ணியில குளிச்சிருக்கீங்களா? மொட்ட வெயிலுல மரம் ஏறி புளியங்காய் அடிச்சி கல்லுல உரசி நாக்குல எச்சி ஊற புளிப்ப ருசி பாத்துருக்கீங்களா? நாள் முழுக்க கிணத்து தண்ணியில நீச்சல் அடிச்சி வெளையாண்டு இருக்கீங்களா?//

சாரி பா... நான் மலேசியா. :P
இருந்தலும், இது போன்ற விசயங்களை அனுபவித்திருக்கேன்.
அப்ப்டியே, சின்ன வயச ஞபகப் படுத்தியத்ற்கு நன்றி. காண்டிப்பாக ஒவ்வொன்றும் ஒவ்வொரு சுகம் தான்.

Btw, 'கரத்தவாண்டி வேட்டை' என்றால் என்ன?

Yoganathan.N said...

என்ன தான் கிரிக்கேட் is not my cup of tea, நீங்க சொல்லும் விதம் பிடித்திருக்கிறது. சுவாரசியம் கலந்துள்ளது. அதனால், தொடர் பதிவுக்கு காத்திருக்கிறேன்.

LinkWithin

Related Posts with Thumbnails