Followers

Copyright

QRCode

Friday, June 18, 2010

தலைவிக்கு ஆதரவு தருவோம் வாரீர்....


நம்ம நாட்டு மக்கள் எப்பதான் திருந்த போரானுகளோ? பொண்ணுங்களுக்கும் மனசு இருக்கு , ஆசை இருக்கு அப்படிங்கிரத எப்பதான் புரிஞ்ச்சிக்க போறானுகன்னு தெரியல.. ஒரு பொண்ணு கஷ்டப்பட்டு உழைத்து  கொஞ்சம் முன்னேறி வந்துட கூடாது ... இவனுகளுக்கு எங்க எரியும்னு தெரியல , தூக்கிகிட்டு வந்திடுவாணுக ஏதாவது பிரச்சனையை...இப்ப என்ன பிரச்சனைன்னா நம்ம பாய்ஸ் ஜெனீலியா இருக்கால்ல அவளுக்கு தடை விதிக்க போரானுகலாம்... அத கேட்டதுல இருந்து எனக்கு சோறு தண்ணி எறங்க மாட்டேங்கிது... பின்ன எப்படி எறங்கும் .. ஏழு வருசமா அவளை நெனச்சி ஏங்காத நாளே கிடையாதே... சித்தார்த் அவளை நெனச்சி எகிறி குதிச்சாரோ இல்லையோ , நான் பல தடவ படுக்கையில இருந்து எகிறி குதிச்சி முட்டி எலும்பு தேய அடி வாங்கி இருக்கேன் .. நம்ம தளபதி படத்த ஒரு தடவ பாத்தாலே நமக்கெல்லாம் நாலு நாளைக்கு சோறு எறங்காதுன்னு உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும் .. அதையும் மீறி அந்த பாழா போன சச்சின் படத்த இன்னைக்கி வரைக்கும்  வாய்ப்பு கெடைக்கும் போதெல்லாம் பாத்துக்கிட்டுதான் இருக்கேன் .. காரணம் என் ஜெனி குட்டி...

அவ இந்த தமிழ் நாட்டையும் என்னையும் அம்போன்னு விட்டுட்டு , தெலுங்கு படத்துல நடிக்க போனப்ப , நானும் பிறந்ததுல இருந்து பேசுன தாய் மொழி தமிழையும் , தமிழ்நாட்டையும் விட்டுட்டு தெலுங்கு கத்துகிட்டு ஆந்திராவுல போய் செட்டில் ஆகலாமுன்னு தெலுங்கு கத்துக்க ஆரம்பிச்சேன் .. நல்ல வேளை நம்ம ஜெயம் ரவி மறுபடியும் ஜெனிய தமிழ் நாட்டுக்கு கூட்டிட்டு வந்தாப்புல... அதனால தெலுங்கும் , ஆந்திராவும் என்கிட்டே இருந்து தப்பிச்சது .. அதுக்கு நன்றி கடனா நான் அவரோட மொக்க படம் பேராண்மைய மொத நாளே போய் பாத்தேன்...


இப்படி ஜெனிக்காக நான் பட்ட கஷ்டமெல்லாம் வீணா போய்டுமோன்னு கவலையா இருக்கு... நாதாரி பயலுக இனி ஜெனி தமிழ் படங்கள்ல நடிக்க கூடாதுன்னு தடை விதிக்க போரானுகலாம் .. காரணம் அவ இலங்கையில நடந்த பட விழாவுக்கு  போனாளாம் ... ஏம்பா இது உங்களுக்கே கொஞ்சம் ஓவரா தெரியல... பாவம் அவளே சின்ன பொண்ணு .. எந்த விவரமும் தெரியாம  ஏரோ ப்ளேன்ல பறக்க போறோம்கிற ஆசையில ஓசி டிக்கெட் கொடுத்தவுடனே சரின்னு சொல்லி இருப்பா... அவளுக்கு என்னப்பா தெரியும் உங்க பிரச்சனை எல்லாம் ...  

ஏண்டா ரத்த சரித்திரம்னு ஒரு படம் வரப்போகுது .. அதுல விவேக் ஓபராய் நடிச்சிருக்கான் .. அவனும் நீங்க சொன்ன அந்த விழாவுக்கு போனவன்தான் ... அந்த படத்த தடை செய்யுங்க பாக்கலாம்.. மாட்டீங்களே ...

ஜெனி என்ன சாமியார கரக்ட் பண்ணி குஜாலா இருந்தாப்புலையா? இல்லை கற்புக்கு எதிரா குரல் கொடுத்தாளா? சிங்கப்பூர் கூட்டிட்டு போறோம்னு சொல்லி ஏமாத்தி இலங்கைக்கு கடத்திட்டு போய்டாணுக... இலங்கைன்னு தெரிஞ்சவுடனே அடுத்த பஸ்ஸ புடிச்சி இங்க வந்துட்டாப்புல... அவர ஏன் வம்புக்கு இழுக்குறீங்க? தைரியம் இருந்தா ரஞ்சியவும் குஷ்ஷையும் மிரட்டி பாருங்கடா?எங்க தலைவியையும் எங்களையும் என்ன விரல் சூப்புற பச்ச கொழந்தைகள்ன்னு நெனச்சிகிட்டு இருக்கீங்களாடா? எங்க தலைவி பின்னாடி ஒரு பெரிய கூட்டமே இருக்கு... எங்க ஜெனி முன்னேற்ற சங்க தலைவர் உங்களை எச்சரிச்சி ஏற்கனவே இங்க அறிக்கை விட்டிருக்காப்புல.. அதையும் மீறி எங்க தலைவி மேல கை வச்சீங்க ... நீங்க எகிருடுவீங்க ... எங்க சங்க தலைவர் குல தொழில் என்னன்னு தெரியும்லப்பு... அதனால வாயையும் அதையும் பொத்திகிட்டு பத்திரமா வீட்டுக்கு போய் புள்ள குட்டிகள படிக்க வைங்கப்பு ..

(நம்ம மக்கள் காசுல உடம்ப வளத்து புட்டு நம்ம எதிரி நடத்துற விழாவுக்கு போனவளுக்கு ஏண்டா சப்போர்ட் பண்ணுறன்னு பின்னூட்டம் போடுகிறவர்களுக்கு , திருமாவளவன் மற்றும் கவிஞர் கனிமொழியின் ஆளுயர புகைப்படம் மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும்)

2 comments:

உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...

:-)

அருமையான பதிவு

வாழ்த்துக்கள்

Yoganathan.N said...

நம்மெல்லாம் ஒரே செட்டு... நானும் ஜினி குட்டி ரசிகன் தான். நம்ம தல கூட ஒரு படம் பண்ணினால் சூப்பரா இருக்கும். :)

//நம்ம தளபதி படத்த ஒரு தடவ பாத்தாலே நமக்கெல்லாம் நாலு நாளைக்கு சோறு எறங்காதுன்னு உங்க எல்லாருக்கும் நல்லா தெரியும் .. அதையும் மீறி அந்த பாழா போன சச்சின் படத்த இன்னைக்கி வரைக்கும் வாய்ப்பு கெடைக்கும் போதெல்லாம் பாத்துக்கிட்டுதான் இருக்கேன் .. காரணம் என் ஜெனி குட்டி...//

எப்படிங்க இப்படி எல்லாம்... ஹஹஹ...

LinkWithin

Related Posts with Thumbnails