ஒரு படம் நடிக்க பத்து கோடி தரவும் தயாரிப்பாளர்கள் தயாராக இருக்கிறார்கள்... இந்த ஆறு மாத இடைவேளையில் ஒரு படம் நடித்து பத்து கோடி சம்பாதித்து விடலாம்.ஆனால் தனக்கு கார் பந்தயங்களில் உள்ள ஈடுபாட்டின் காரணமாக படம் எதையும் ஒத்துகொள்ளாமல் போர்முல 2 பந்தயத்தில் கலந்து கொள்ள சென்று விட்டார் தல. அதில் அவருக்கு முதலில் ஸ்பொன்சர் செய்ய யாரும் முன்வரவில்லை. இருந்தாலும் தன சொந்த காசை செலவு செய்து அதில் கலந்து கொள்ளும் முடிவுக்கு வந்தார் தல , இறுதியில் eurosia நிறுவனம் அவருக்கு ஸ்பொன்சர் கொடுக்க முன்வந்து செலவில் குறிப்பிட்ட அளவை ஸ்பொன்சர் செய்த்தது.
முதலில் நடைபெற்ற பயிற்சி போட்டிகளில் அவர் கடைசி இடங்களையே பெற முடிந்தது. மொத்தம் இருபத்து மூன்று பேர் கலந்து கொண்ட அந்த போட்டியில் அவர் கடைசியாகவே வந்தார். அவரை தவிர போட்டியில் பங்கு பெற்ற அனைவருமே தொழில்முறை போட்டியாளர்கள். அவர்களிடம் போட்டி போடுவதே தலைக்கு பெரிய கௌரவம்தான் ..
அதன் பின்னால் நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் தல பதினெட்டாவது இடத்தை பிடித்து அசத்தி விட்டார். அவருக்கு பின்னால் நான்கு தொழில்முறை வீரர்கள். இது குறித்து தல தெரிவிக்கையில் போட்டியில் "வெற்றி பெற வேண்டும் என்பதற்காக கலந்து கொள்ளவில்லை, இதில் பங்குபெருவதே பெரிய கௌரவம்தான், முதல் போட்டியிலேயே நல்ல இடம் பிடித்து இருப்பது சந்தோசம் தருகிறது, இதன் பின்னர் வரும் போட்டிகளில் இன்னும் சிறந்த வெற்றிகளை பெறுவேன்" என்று கூறினார். கண்டிப்பா அவர் ஒரு தொழில்முறை கார் பந்தய வீரராக இருந்தால் இன்னும் நிறைய சாதனைகளை புரிந்திருப்பார்.
சினிமாவில் சம்பாதித்த பணத்தை கொண்டு கட்சி ஆரம்பித்து , கோட்டையை பிடித்து இன்னும் நிறைய பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற கனவுகளோடு திரியும் இந்த சினிமா உலகில் , தன்னுடைய இளவயது கனவு நிறைவேற வேண்டும் என்பதற்காக கார் பந்தயங்களில் பங்கேற்று குறிப்பிடத்தகுந்த வெற்றியும் பெற்று இருக்கிறார் தல. என்னை போன்ற தல ரசிகனுக்கு இது பெருமையான விஷயம். மேலும் இவரெல்லாம் கார் பந்தயங்களில் கலந்து கொண்டு என்ன செய்ய போகிறார் என்று சொல்லிய பல பேரின் வாயை இந்த வெற்றியின் மூலம் அடைத்து விட்டார் தல.. தன்னுடைய கன்னி போட்டியில் குறைந்த கால பயிற்சியை மட்டுமே கொண்டு இந்த இடத்தை பிடித்துள்ளார் தல... அவர் இனிவரும் போட்டிகளில் இதைவிட சிறந்த வெற்றிகளை பெற வாழ்த்துகிறோம் அவர் ரசிகர்களின் சார்பாய்...
தல அடுத்து மே மாதம் மொராக்கோவில் துவங்கும் போட்டிகளில் கலந்து கொள்ள போகிறார்... எல்லா பந்தயங்களும் முடிந்த பின்னர்தான் , கௌதம் மேனனின் படம் ஆரம்பிக்க இருக்கிறது. உண்மையான ஹீரோவின் அடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துவோம்...
(என்னதான் தல கார்பந்தயங்களில் கலந்து கொள்ள சென்று இருந்தாலும் அவரின் ரசிகர்கள் அவரின் அடுத்த படத்த மிக சீக்கிரம் ஆரம்பிக்க வேண்டும் என்று எதிர்பார்க்க துவங்கிவிட்டனர். ஆனால் தல எல்லா போட்டிகளும் முடிந்த பிறகுதான் கால்ஷீட் தந்து உள்ளாராம். செப்டம்பர் மாதம் படம் துவங்கும் என்று தயாரிப்பாளர் தரப்பில் கூறப்படுகிறது. எது எப்படியோ தல அடுத்த படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிவர்த்தி செய்யும் விதமாய் தந்தால் போதும்)
7 comments:
/////உண்மையான ஹீரோவின் அடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றி பெற வாழ்த்துவோம்..////////////// தல சினிமாவில மட்டுமில்லை நிஜத்திலேயே ஹீரோ தான்...
போட்டி என்று வந்துவிட்ட பிறகு தொழில்முறை வீரர், பொழுதுபோக்கு வீரர் என்று எல்லாம் சொல்லக்கூடாது. வேண்டுமானால் தொடக்க நிலை வீரர் என்று சொல்லலாம்.
இருந்தாலும் தன்னம்பிக்கை மிகுந்த அவரின் செயலை பாராட்டுவதில் தப்பில்லை.
//போட்டி என்று வந்துவிட்ட பிறகு தொழில்முறை வீரர், பொழுதுபோக்கு வீரர் என்று எல்லாம் சொல்லக்கூடாது. வேண்டுமானால் தொடக்க நிலை வீரர் என்று சொல்லலாம்.
சரிதான் தல. உலக கோப்பை போட்டியில் ஒரு முறை பாக்கிஸ்தான் அணியை அயர்லாந்த் அணி வென்றது ஞாபகம் இருக்கும் என்று நினைக்கிறேன்... அந்த அணியின் ரசிகர்கள் அந்த வெற்றியைவே உலக கோப்பையை வென்றதை போல கொண்டாடினார்கள். அது போலவே அஜித்தின் இந்த வெற்றி எங்களுக்கு...
//இருந்தாலும் தன்னம்பிக்கை மிகுந்த அவரின் செயலை பாராட்டுவதில் தப்பில்லை
பாராட்டாமல் இருப்பதே தவறு என்பது என்னை போன்ற அஜித் ரசிகர்களின் கருத்து.
கலக்கல் பதிவு நண்பரே... கண்டிப்பாக எதிவரும் போட்டிகளில் இன்னும் முன்னேற்றமடைவார் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன். :)
நேரம் இருந்தால் என் பக்கம் வாங்க. :)
//போட்டி என்று வந்துவிட்ட பிறகு தொழில்முறை வீரர், பொழுதுபோக்கு வீரர் என்று எல்லாம் சொல்லக்கூடாது. வேண்டுமானால் தொடக்க நிலை வீரர் என்று சொல்லலாம்.//
இப்போட்டியில் பங்கு பெரும் அனைத்து வீரர்களும் தொடர்ந்து முழு நேர போட்டியாளர்கள். இவரோ ஆரு வருடம் கழித்து தான் steering-இல் கையை வைக்கிறார். அதுவும் மிகக் குறைவான பயிற்சிகள். அன்மைய பேட்டியில், இந்த காரின் clutch வேறுபட்டிருப்பதும் அது அவருக்கு பழக்கமில்லை என்பதையும் கூறியிருந்தார். இவரது முந்தய கார்களில் clutch-ஐ வழக்கமான முறையில் பயன்படுத்தலாம் எனவும் இந்த காரில் கையால் உபயோகிக்க வேண்டிய கட்டாயம் எனவும் குறிப்பிட்டிருந்தார்.
//இருந்தாலும் தன்னம்பிக்கை மிகுந்த அவரின் செயலை பாராட்டுவதில் தப்பில்லை.//
இத சொன்னா நம்மல பைத்தியம்பாய்ங்க...
//இத சொன்னா நம்மல பைத்தியம்பாய்ங்க...
நண்பா அவங்களையெல்லாம் நாம் பொருட்படுத்தவே கூடாது....
//கலக்கல் பதிவு நண்பரே... கண்டிப்பாக எதிவரும் போட்டிகளில் இன்னும் முன்னேற்றமடைவார் என இறைவனை வேண்டிக் கொள்கிறேன். :)
நன்றி நண்பா... தல கண்டிப்பாய் கலக்குவார் என நம்பலாம்
Post a Comment