Followers

Copyright

QRCode

Monday, April 19, 2010

சுறா vs வாடாபிச்சை எடுத்த பெருமாள தெரியுமா?... இந்த கலியுகத்துல அவர எங்கயாவது பாத்து இருக்கீங்களா? அது வேற யாரும் இல்ல நம்ம இளைய தளபதி அண்ணன் விஜய்தான்... பாவம் அவரு படத்த ஓட வைக்க என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு... கிட்டத்தட்ட கலாநிதி மாறன் காலுலே விழுந்துருவாறு போல...

அண்ணே அவனுகள பத்தி தெரியாதா உங்களுக்கு , அவனுக எடுத்த படம் எதுவுமே நல்லா இருந்தது கெடையாது அயன தவிர... ஆனா எல்லாத்தையும் அவங்கதான் ஓட வச்சத மாதிரி ஒரு கெத்த  டெவலப் பண்ணிகிட்டாணுக.... இப்ப ஒரு பேச்சிக்கு உங்க சுறா படம் தப்பி தவறி நல்லா இருந்து(யாருப்பா அது இது விஜய் படம்னு எனக்கு ஞாபகம் படுத்துறது , அதான் ஒரு பேச்சுக்குன்னு சொல்லிட்டேன்ல), உங்க ரசிக கண்மணிகள்( என்னது அவர் ரசிகர்கள் எல்லாம் "கண்ணில்லாதமணி"கள்தானா? யெப்பா நான் பதிவுலகத்துக்கு புதுசு ... விஜய் ரசிகர்கள பகைச்சிகிட்டு இங்க யாராவது கடையில டீ ஆத்த முடியுமா?) படத்த பத்து பத்து தடவ பாத்து ஹிட் ஆக்கிட்டாலும் நம்ம மக்கள் "அடிச்சது யாரு நம்ம கைப்பிள்ளைலங்கிற" ரேஞ்ச்ல "எடுத்தது யாரு நம்ம சன் பிக்ஷர்ஸ்லன்னு" பேசிருவாங்க...

கண்ணில்லாத மணிகளே கொஞ்சம் 15 வருஷம் பேக்ல போங்க... ரசிகன் விஷ்ணு செந்தூரபாண்டி படமெல்லாம் ஞாபகம் வருதா... அந்த படமெல்லாம் பத்து நாலாவது ஓடுச்சினா அது யாருக்காக?... சுவாதி , யுவராணி ஆண்டிகலுக்காகதான ஓடுச்சி... ஆனா நீங்க அப்ப என்ன சொன்னீங்க , உங்க தளபதியின் நடனத்திற்காகவும் , அவர் பாடிய பாடல்களுக்காவும் , அவர் அப்பா எழுதிய உலக தரமான கதைக்காகவும்தான் அந்த படம் ஓடிச்சுன்னு கண்கட்டி வித்தை காட்டுனீங்க... சுவாதி யுவராநிஎல்லாம் விட்ட சாபம்தான் இப்ப உங்க தலைவரை கண்டவங்கிட்ட எல்லாம் பிச்சை எடுக்க வக்கிது.... சுறா ஓடுச்சின்னா அது சன் பிக்ஷர்சின் மற்றுமொரு வெற்றி படம் , இல்லை என்றால் அது விஜயின் மற்றுமொரு தோல்வி படம் ...

சன் பிக்சர்சின் சுறா பீதியை கெளப்பிகிட்டு இருக்கிற இந்த நேரத்துல தமிழ் நாட்டை தாக்க ஒரு சுனாமியே வந்துகிட்டு இருக்கு ,, அது நம்ம குஷ்பூ அக்காவோட வூட்டுகாரரு அண்ணன் சுந்தர். சி நடிச்சி வெளி வர போற "வாடா" என்ற காவியம்தான்.. இந்த சுனாமியில சுறாவெல்லாம் சின்னா பின்னமாக போவது உறுதி... நாங்க எல்லாம் வேட்டைகாறனவே சமாளிச்சவங்க இதெல்லாம் சுசூப்பின்னு சொல்லுறவங்க எல்லாம் கீழ இருக்குற படத்த பாத்திட்டு உயிரோட இருந்தா , சுந்தர்.சி அண்ணன கொறச்சி பேசுனதுக்கு பரிகாரமா "வாடா" என்ற இந்த உலக தரமான திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கு டிக்கெட் வாங்கி படத்த பாக்க போங்க .. அங்க ஸ்ரீ ஸ்ரீ சுந்தரானந்தாவும் , மொக்கைமிகு விவேக்ஆனந்தாவும் (விவேகாணந்தர் மன்னிப்பாராக) உங்களை மோட்ச நிலை அடைய செய்து விடுவார்கள்.


இதோ அந்த படம் உங்களுக்காக ...

(நன்றி: ஜெட்லி)


வேட்டைகாரன்ல "வாடா" ன்னு வில்லன் ஒரு சவுண்ட் விடுவாரு அதுக்கே படம் பிச்சிகிட்டு ஓடுச்சி ... இப்ப அந்த பேர்ல ஒரு படமே வர போகுது ... தமிழ் நாடு தாங்காதுங்கன்னா?

3 comments:

Yoganathan.N said...

//சுறா ஓடுச்சின்னா அது சன் பிக்ஷர்சின் மற்றுமொரு வெற்றி படம் , இல்லை என்றால் அது விஜயின் மற்றுமொரு தோல்வி படம் ...//

இது என்னமோ உண்மை தான்.
போற போக்கைப் பார்த்தால், இனி வரும் அனைத்து பெரிய படங்களும் 'சூரியனிடமிருந்து' தப்ப முடியாது போல உள்ளது. :(

"ராஜா" said...

// இனி வரும் அனைத்து பெரிய படங்களும் 'சூரியனிடமிருந்து' தப்ப முடியாது போல உள்ளது. :

நடக்கலாம் ... என்ன தமிழ் சினிமாவின் தரம் தாழ்ந்து விடும் அபாயம் உண்டு ... வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

Bala said...

////
வேட்டைகாரன்ல "வாடா" ன்னு வில்லன் ஒரு சவுண்ட் விடுவாரு அதுக்கே படம் பிச்சிகிட்டு ஓடுச்சி ... இப்ப அந்த பேர்ல ஒரு படமே வர போகுது ... தமிழ் நாடு தாங்காதுங்கன்னா/////////// சூப்பர் பதிவு தல...

LinkWithin

Related Posts with Thumbnails