அழகியல்
சேலை கட்டினால்
அழகு கூடும் என்றேன்
எனக்கா? என்று ஆசையாய்
கேட்டாய் நீ ..
சேலைக்கு என்றேன்
அழகின் உச்சத்தை
உன் வெட்கத்தில் காட்டி
விட்டு சென்றாய்...
ஹைக்கூ
ஆசையாய்
அணைத்து முத்தமிட்டதும்
பரவியது உதட்டில்
ஒரு வெப்பம்
சிகரெட்...
தொலைபேசி
உன் பிரிவில்
துயரம் கொள்வது
நான் மட்டும் இல்லை..
தினமும் இரவில்
நீ தரும் முத்தத்தில்
சூடாகிபோன என்
தொலைபேசியும்தான்....
தேவதை
குடுகுடுப்பைகாரன்
சொல்லியதை நான் நம்பியதில்லை
உன் வீட்டின் முன் நின்று
இங்கே ஒரு தேவதை வாழ்கிறது
என்று அவன் சொல்லியதை கேட்கும் வரை...
இரவில் நீ
பெண்களுக்கு
வெட்கம்தான் அழகு
என்று எண்ணி இருந்தேன்
உன்னோடு நான் தங்கிய
அந்த இரவில்
நீ பண்ணிய அடாவடிகளை
காணும் வரை...
யுத்தம்
கொடுப்பவரும்
வாங்கியவரும்
சுகம் காணும்
ஒரே யுத்தம்
முத்த யுத்தம்....
கவிதை எழுதி ரொம்ப நாலு ஆச்சேன்னு நேத்து ரொம்ப பீல் பண்ணி எழுதின
கவிதை இதெல்லாம் ....பிடிச்சிருந்தா கமெண்ட் போடுங்க... மொக்கையா இருந்தா திட்டியாவது போடுங்க.... யாருப்பா அது சொல்லிக்கிட்டு இருக்கும்போதே க்ளோஸ் பட்டன அமுக்குறது... ஒரு ஓட்டயாது போட்டுட்டு போகலாம்ல....
5 comments:
அழகா இருக்கு உங்க கவிதைகள்
வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றி அப்பாவி அவர்களே...
ஆ... என்ன இது... உங்களுக்குள் இப்படி ஒரு குட்டி கண்ணதாசன் இருப்பது தெரியாமல் போயிற்றே... மேலும் எழுதுங்கள், நன்றாக உள்ளது. வாழ்த்துகள். :)
பவனா பிடிக்குமோ???
@ yoganathan
//என்ன இது... உங்களுக்குள் இப்படி ஒரு குட்டி கண்ணதாசன் இருப்பது தெரியாமல் போயிற்றே...
நன்றி தல இருந்தாலும் கண்ணதாசன இப்படி அசிங்கபடுத்த கூடாது....
//பவனா பிடிக்குமோ???
பாவனா பிடிக்குமாவா? என் உசுரு தல அந்த பொண்ணு ? என்ன அழகா சிரிக்கும்... அது சிரிப்ப பாத்துகிட்டே இருக்கலாம்... ஜெயம்கொண்டான்ல சுற்றி வரும் பூமி பாட்ட பாருங்க தல... அதுல அவங்க சிரிப்ப மட்டும் கவனிங்க .. நீங்களும் தலைவி ரசிகனா மாறிடுவீங்க ....
Anupavam pesuthunkala....
Post a Comment