Followers

Copyright

QRCode

Saturday, April 3, 2010

யார் கவிஞன்?

                               

                                 தேடி சோறு நிதம் தின்று


                                  கூடி பல சின்னச்சிறு கதைகள் பேசி


                                  மனம் வாட துன்பம் மிக உழன்று


                                  பிறர் வாட தீமை பல செய்து


                                   நரை கூடி கிழப்பருவம் எய்து


                                   கொடுகூற்றுக்கிரையென மாயும்


                                   பல வேடிக்கை மனிதர் போல்


                                   நான் வீழ்வேன் என நினைத்தாயோ?



என் மனம் கவர்ந்த பாரதியாரின் பாடல் , நேற்று தூத்துக்குடியில் இருந்து அருப்புகோட்டைக்கு பேருந்தில் பயணம் செய்தேன், வண்டி எட்டயபுரம் வழியாக சென்றது , அப்பொழுதுதான் பாரதியாரின் நினைவு வந்தது எனக்கு.... எவ்வளவு பெரிய கவிஞன் அவர், எதற்காகவும் தன்னுடைய கொள்கைகளை விட்டு கொடுக்காமல் கடைசி வரை வறுமையுடனே வாழ்ந்தவர்.... தன்னுடைய கவித்திறமையை என்றைக்குமே காசுக்கு விற்க்காதவர்.... பாரதியாரின் காலத்தில் நம் சமூகத்திற்கு தேவையாய் இருந்தது அந்நிய சக்திகளிடம் இருந்து விடுதலை... அவர் தன திறமையை அதற்காக பயன்படுத்தினார்... அவர் நினைத்திருந்தால் அன்று ஆங்கிலேயர்களுக்கு சொம்பு தூக்கி பதவி பணம் என்று தன வாழ்க்கையும் தன பிள்ளைகளின் வாழ்க்கையையும் மேம்படுத்தி இருக்கலாம், அவர் செய்யவில்லை.... கடைசி வரை அவர்களுக்கு எதிராகவே மக்களிடம் விடுதலை உணர்ச்சியை தூண்டும் விதமாகவே அவர் பாடல்கள் இருந்தன.....



இன்றைய காலகட்டத்தில் ஏன் அவரை போன்ற ஒரு கவிஞன் தமிழ்நாட்டில் இல்லை... தமிழனின் திறமை குறைந்து விட்டதா? இல்லை அவனின் தன்மானம் அழிந்து விட்டதா? இன்றும் நம் நாட்டில் பல கவி பேரரசுகள் இருக்கிறார்கள் , நாட்டில் பல பிரச்சனைகளும் இருக்கின்றன.... ஆனால் பாரதி போல ஒருவரும் இல்லை ... திறமை இருக்கின்றவர்கள் இன்று ஆளுபவர்களுக்கு கூஜா போட்டு கொண்டு இருக்கிறார்கள் இல்லை சினிமாவில் கதாநாயகியின் மார்பை வர்ணித்து கொண்டு இருக்கிறார்கள்....

அவர்கள் திறமை பாரதியை போல மக்களிடம் விழிப்புணர்ச்சியை உண்டாக்க பயன்படவில்லை... மாறாக ஆளுபவர்களின் முதுகு சொறியத்தான் பயன்படுகிறது... மக்களுக்காக பாட்டு எழுதி வறுமையில் வாழ்ந்து அனாதையாய் சாக அவர்கள் ஒன்றும் பாரதி இல்லையே? அவர்களுக்கு இந்த சமூகத்தை விட அவர்களின் வாழ்க்கை அவர்கள் பிள்ளைகளின் சொகுசுதான் முக்கியம்... இருந்து விட்டு போகட்டும் , எல்லாரும் அப்படிதானே , எனக்கு இதில் ஒரு கோபம் என்ன வென்றால் மக்களுக்கு பயன்படாத கவிதைகள் எழுதும் இவர்களுக்கு ஏன் கவிபேரரசு , வாலிப கவிஞன் என்று பட்டம், இவர்களை நாம் இப்படி பட்டம் வைத்து கூறினால் அது நாம் பாரதிக்கு செய்யும் பெரிய அவமானம் .... பாரதிக்கு வாழும் பொது எதுவுமே கொடுக்காத நாம் , அவர் இறந்த பிறகு அவருக்கு செய்யும் ஒரே ஒரு மரியாதை கவிஞன் என்னும் பட்டம் அவருக்கு மட்டுமே, வேறு யாரையும் அந்த பட்டம் கொடுத்து அழைக்காமல் இருக்கலாம்... மற்றவர்களை பாடல் ஆசிரியர் என்று அழைத்தால் போதாதா?



ஆனால் இது நடக்காது , கலைஞர் என்னும் பட்டம் என்றுமே ஒருவருக்கு மட்டுமே , வேறு யாருமே அந்த பட்டதை தன பெயருக்கு முன்னாடி வைத்து கொள்ளமுடியாது.. அவர் எந்த கலையில் அறிஞர் என்பது அவருக்கே தெரியாது , இருந்தாலும் கடைசி வரை அவர் மட்டுமே கலைஞர் .... காரணம் அதிகாரம்........ திறமை , நல்ல மனம் இவற்றை விட அதிகாரம்தான் எதையும் சாதிக்கும்.... நம்மால் எதையும் சாதிக்க முடியாது நம்மால் இயன்ற ஒரே ஒரு விஷயம் நாமாவது இனி மேல் இவர்களை கவிங்கர்கள் என்று கூறாமல் இருக்கலாம்... ஏதோ அந்த மகா கவியின் திறமைக்கும், அவரின் அடிபணியாமல் வாழ்ந்த வாழ்க்கைக்கும் நம்மால் செய்ய முடிந்த ஒரு சின்ன மரியாதை....
 
(நான் முதல் பத்தியில் எழுதியிருக்கும் பாடலை வெறும் கற்பனையாய் பாரதி எழுதவில்லை , அதை போலவே வாழ்ந்து காட்டியவர் அவர்... இன்று தன்னை கவின்கர்கள் என்று சொல்லி கொள்ளும் அனைவரும் அந்த பாடலில் பாரதி கூறியதிற்கு எதிர்மறையாய் வாழ்ந்து கொண்டு இருப்பவர்கள் , இவர்களை எப்படி பாரதியை போல கவிஞர் ஜாதியில் சேர்க்க முடியும் , கவிதை எழுதுபவர் எல்லாம் கவிங்கனா?)

3 comments:

Yoganathan.N said...

மிகவும் அருமையான பதிவு.

//இன்றைய காலகட்டத்தில் ஏன் அவரை போன்ற ஒரு கவிஞன் தமிழ்நாட்டில் இல்லை... தமிழனின் திறமை குறைந்து விட்டதா? இல்லை அவனின் தன்மானம் அழிந்து விட்டதா? இன்றும் நம் நாட்டில் பல கவி பேரரசுகள் இருக்கிறார்கள் , நாட்டில் பல பிரச்சனைகளும் இருக்கின்றன.... ஆனால் பாரதி போல ஒருவரும் இல்லை//

எல்லாவற்றிற்கும் சுயனலம் தான் காரணம். :(

//அவர் இறந்த பிறகு அவருக்கு செய்யும் ஒரே ஒரு மரியாதை கவிஞன் என்னும் பட்டம் அவருக்கு மட்டுமே, வேறு யாரையும் அந்த பட்டம் கொடுத்து அழைக்காமல் இருக்கலாம்... மற்றவர்களை பாடல் ஆசிரியர் என்று அழைத்தால் போதாதா?//

ஆம். நெத்தியடி கருத்து. மனதார ஒப்புக் கொள்கிறேன். :)

பாரதியாரையும் அவரது பாடலையும் நினைவுக் கூர்ந்ததற்கு நன்றிகள் பல.

"ராஜா" said...

@ Yoganathan.N

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பா

Yoganathan.N said...

@ராஜா
நண்பரே, இன்றைய 'கவிஞர்களை' விடுவோம்... கவியரசு கன்னதாசன், பட்டுக்கோட்டை போன்றவர்களைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஒரு பதிவு போடுங்க... :)

LinkWithin

Related Posts with Thumbnails