Followers
Copyright
Friday, January 29, 2010
சில்வண்டு சிக்கும் ... சிறுத்த சிக்காதுலே...
இப்போது விளையாட்டு உலகில் பெரும் சர்ச்சையை கிளப்பி கொண்டு இருப்பது IPL ஏலம்தான்.இந்த தடவை நடந்த ஏலத்தில் பாக்கிஸ்தான் வீரர்கள் யாரையுமே எந்த அணியும் எடுக்கவில்லை.உடனே இது இந்திய அரசின் சதி செயல் , பாக்கிஸ்தானை கேவலபடுத்தும் செயல் என்று பாகிஸ்தான் அணி நிர்வாகம் கொட்டி தீர்த்து விட்டது. இவ்வளவுக்கும் பாக்கிஸ்தாந்தான் இப்போதைய உலக சாம்பியன், அந்த அணி வீரர்கள் எல்லோருமே ட்வென்டி ட்வென்டி போட்டிகளில் நல்ல போர்ம்மில் உள்ளனர், இருந்தும் அவ்வணி வீரர்கள் யாருமே ஏலத்தில் எடுக்கபடாததர்க்கு காரணம் அவர்கள் இந்தியா வருவதற்கு உள்ள சிக்கல்கள்தான்.. மும்பை குண்டு வெடிப்பிற்கு பின்னர் பாக்கிஸ்தானில் இருந்து இந்திய வருவதற்கு விசா வழங்குவதில் நிறைய கெடுபிடிகள் கொண்டு வரப்பட்டு உள்ளன ... போட்டிகள் தொடங்குவதற்கு மிக குறைந்த கால அவகாசமே உள்ள நிலையில் அவர்களுக்கு அதற்குள் விசா கிடைத்து விடுமா என்பதே சந்தேகம்தான். எனவே எந்த ஒரு அணியும் அவர்களை ஏலத்தில் எடுத்து ரிஸ்க் எடுக்க விரும்பவில்லை. இதனால் அதிகம் பாதிக்க பட்டு இருப்பது அந்த அணி வீரர்களே.. பின்ன கோடிகணக்கில் அவர்களுக்கு பணம் நட்டம் இதனால்... IPL பொறுத்தவரை ஒரு அணி ஒரு வருடத்தில் அதிகபட்சம் இருபது போட்டிகளில்தான் விளையாடும் அதற்கு இவ்வளவு பணம் என்றால் யாருக்குதான் ஆசை வராது? அது கிடைக்கவில்லை என்றவுடன் இப்போது தேச பிரச்சனை ஆக்கிவிட்டார்கள்.
இது அவர்களுக்கு கிரிக்கெட் மேல் உள்ள ஆசையை வெளிபடுத்துகிறது என்றும் எடுத்து கொள்ள முடியவில்லை. காரணம் உண்மையிலேயே அவர்கள் தங்களால் இந்தியாவில் வந்து விளையாட முடியவில்லை என்ற வருததினால்தான் இப்டி பேசினார்கள் என்றால் இதற்கு முன் பல தடவை இந்தியா பாக்கிஸ்தான் போட்டிகள் ரத்து செய்யப்பட்ட பொழுது இவர்கள் இவ்வாறு கூப்பாடு போட்டதில்லை, அமைதியாகத்தானே இருந்தார்கள் பணம் போட்சே என்ற வருததினால்தான் இப்படி இந்தியா மேல் அபாண்டமாக பழி போடுகிறார்கள் , IPL நிர்வாகமும் வெட்கமே இல்லாமல் அடுத்த முறை வாய்ப்பு தருகிறோம் என்று அவர்களை சமாதான படுத்துகிறார்கள். அடுத்த முறை அவர்கள் சும்மா இருந்தாலும் இவர்களே போய் எங்ககூட சண்டைக்கு வரேன்னு சொன்னேங்க வரவே இல்லைன்னு கேப்பானுக போல, அந்த அளவுக்கு இதனால் IPLலுக்கு நல்ல பப்ளிசிட்டி கிடைத்து விட்டது. கூடிய விரைவில் நமக்கு கிரிக்கெட் மேல் இருக்கும் ஆசையை கெடுத்து விடுவார்கள் போல .
சமீபத்தில் தினகரன் நாளிதழில் ஒரு செய்தி வந்திருந்தது.. வேட்டைக்காரனின் மாபெரும் வெற்றியை??? தொடர்ந்து சுராவையும் sun picture வாங்கி விட்டது என்று.. இவர்களுக்கு வெற்றி என்றால் என்னனு சொல்லி கொடுங்கப்பா? ஆனால் பாவம் விஜய் வேட்டைக்காரனின் இந்த மாபெரும் வீழ்ச்சிக்கு காரணமே sun picture தான், sun TV ஒரு பொருளை அதிகமா விளம்பரபடுதுனாலே நமக்கு புரிஞ்சிடும் அது நொண்டி குதிரைன்னு , அதும் அந்த பொருளுக்கு இலவசமா ஏதாவது தந்தானுகண்ணா சின்ன கொழந்தைக்கு கூட புரியும் அது விக்காத சரக்கு , நம்மள ஏமாத்தி நம்ம தலையில கட்ட பாக்குறானுகன்னு (இலவசத்த நம்பி குங்குமம் வாங்கி அப்புறம் பத்திரிக்கை படிக்கிற பழக்கத்த விட்டவங்க பல பேர் நம்ம தமிழ்நாட்டுல ).இந்த ஜோசியம்தான் வேட்டைகாரனையும் குப்பற கவுத்திடுசி... இப்ப மறுபடியும் அவங்ககிட்டயே மாட்டுறாரு தளபதி .. பாவம் அவர் ரசிகர்கள்....
தலயின் அம்பதாவது படத்த தயாநிதி அழகிரி தயாரிக்க போறார்னு ஒரு நியூஸ் கசியித்து... அப்படி ஏதாவது நடந்ததுனா தலைக்கு அது போதாத காலமாதான் அமையும், வாரம் ஒருதடவ அவர் கலைஞர் டீவீக்கு பேட்டி தரனும், தயாநிதி வீட்டு விழாக்களுக்கு எல்லாம் போய் கலந்துகிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுக்கணும், முதல்வர் கலைஞர் எழுதி தர்ற வசனத்த பேசி நடிக்கணும், அதுகூட பரவா இல்ல அவர வாரம் ஒரு தடவ பாராட்டி பேசணும் , மதுர புல்லா அழகிரிக்கு நன்றி சொல்லி போஸ்ட்டர் ஓட்டனும், ஆனா தல மாட்டாதுன்னுதன் நெனைக்கிறேன் ஏன்னா "சில்வண்டு சிக்கும் ... சிறுத்த சிக்காதுலே... "
Tuesday, January 26, 2010
உளறல்கள்
நேற்று விஜய் டிவி காபி வித் அனுவில் ஆண்ட்ரியா மற்றும் G.V.பிரகாஷின் பேட்டி.... வழக்கம் போல கல கலப்பாக இருந்தது நிகழ்ச்சி. மாலை நேரம் பாடலை பதிவு செய்த விதம் பற்றி பிரகாஷ் கூறினார், ஆண்ட்ரியாவின் தமிழ் மொழி புலமையை பற்றி அவர் கூற ஆண்ட்ரியாவும் சிரித்து கொண்டே தமிழை உச்சரிக்க தான் பட்ட கஷ்டங்களை கூறினார். நிகழ்ச்சியில் அவர் ஆயிரத்தில் ஒருவன் படத்தின் ஸ்கிரிப்ட் படபிடிப்பின் கடைசி வரை செல்வராகவனுக்கு மட்டுமே தெரியும் என்றும் நடிகர்கள் யாருக்கும் தெரியாது என்றும் கூறினார்... படத்தில் எல்லாருடைய நடிப்பை பார்த்தல் அவ்வாறு தெரியவில்லை...
தலயின் அசல் எப்ப ரிலீஸ் ஆகும் என்று தெரியவில்லை... ரசிகர்கள் எல்லாம் மிகுந்த ஆவலுடன் உள்ளோம்.. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்னரே தலயின் வசூல் வேட்டை ஆரம்பம் ஆகி விட்டது. எங்கள் ஊரில் அசல் படம் திரையிடுவதற்கு இரண்டு தியேட்டர்களுக்கு இடையே பெரிய போட்டியே நடந்தது... அதில் ஒருவர் இரண்டு மாதங்களுக்கு முன்னரே 15 லட்சம் முன்பணம் கொடுத்து படத்தை புக் செய்து விட்டார். ஆனால் தற்போது இன்னொருவர் அதை விட பெரிய அமௌன்ட் கொடுத்து பட பெட்டியை வாங்கி விட்டார். அது மட்டும் இல்லை ஏற்கனவே புக் செய்து வைத்து இருந்தவருக்கு நஷ்ட ஈடாக மட்டும் 5 லட்சம் கொடுத்து உள்ளாராம். சும்மா நஷ்ட ஈடாக மட்டும் 5 லட்சம் கொடுக்கிறார் என்றால் தல படங்களுக்கு எவ்வளவு லாபம் கெடைக்கும் என்று பாருங்கள். அதும் எங்கள் ஊர் 'C' சென்டர்தான். தல போல வருமா
Monday, January 18, 2010
ஆயிரத்தில் ஒரு(த்தி)வன் - ரீமா சென்
பெரிய எதிர்பார்ப்புகளுக்கு நடுவில், நீண்ட நாள் கழித்து வெளிவந்திருகிறது செல்வாவின் "ஆயிரத்தில் ஒருவன்" . செல்வராகவன் ஒரு பேட்டியில் இவ்வாறு சொல்லி இருந்தார் " இந்த படம் வெற்றி பெற்றால் இனி என்னுடைய பாதை இதுவாகத்தான்(வித்தியாச முயற்சி) இருக்கும்" என்று... அனால் படம் வெற்றி பெற்றதா என்றால் ஆம் இல்லை என்று ஒற்றை வரியில் பதில் சொல்லுவது கடினம். சில விசயங்களில் வெற்றியும் சில விசயங்களில் தோல்வியும் அவருக்கு கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
கதை இதுதான், பல நூற்றாண்டுகளுக்கு முன்னாள் பாண்டிய மன்னர்களுக்கும் சோழ மன்னர்களுக்கும் இடேய நடந்த போரில் பாண்டியர்கள் சோழ நாட்டை கை பற்றுகின்றனர்... ஆனால் பாண்டியர்களின் குல தெய்வ சிலை ஒன்று சோழர்களின் கைக்கு மாறி விடுகிறது,, அந்த சிலையை எடுத்து கொண்டு அப்போதைய சோழ இளவரசன் நாட்டை விட்டு தம் மக்களுடன் வெளியேறுகிறான், அவனை தூது வரும் வரை காத்து இருக்குமாறு மன்னன் சொல்லி அனுப்புகிறான்... அந்த இளவரசன் கடல் கடந்து வியட்நாம் அருகில் உள்ள ஒரு தீவில் சென்று தங்குகிறான், தன்னை யாரும் கண்டு பிடித்து விடாமல் இருக்க வரும் வழிகளில் பல ஆபத்துகளை உண்டு பண்ணி விட்டு வருகிறான்.... அவனை பின் தொடர்து சென்ற ஒரு பாண்டிய தளபதி பாதி தூரம் சென்று பின் முன்னேற முடியாமல் இந்த ஆபத்துகளை எல்லாம் ஓலை சுவடுகளில் எழுதி வைத்திருக்கிறான்.... பின் படம் 2009 க்கு வருகிறது.... அந்த ஓலை சுவடுகளில் உள்ள வழி தடங்களை கொண்டு ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அந்த தீவை கண்டு பிடிக்கிறார்... அவர் சோழர்கள் வாழ்த்த கோட்டைக்குள் சென்ற பின் காணாமல் போகிறார்.... இவை அனைத்தும் படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களில் நடந்து முடிந்து விடுகிறது ... பின் ரீமா சென் தன்னுடைய குழுவினருடன் அந்த தீவை கண்டுபிடிக்க செல்கிறார் அவருக்கு துணையாய் அந்த காணாமல் போன ஆராய்ச்சியாளரின் (பிரதாப் போதன்) மகள் ஆண்ட்ரியா மற்றும் எடுபிடிகளாய் கார்த்தி செல்கின்றனர். கார்த்தி அறிமுகமே அட்டகாசம் ரீமா சென் மற்றும் ஆண்ட்ரியாவிடம் மாறி மாறி ஜொள்ளு விடுவதும் பின் ரீமா சென் கோபக்காரி என்று தெரிந்தவுடன் அவரை நையாண்டி செய்வதாகட்டும் பட்டய கெளப்பி இருக்காரு... அதுவும் ஆண்ட்ரியா மற்றும் ரீமா சென் அவரைகட்டி பிடித்து தூங்கும் காட்சியில் தியேட்டரே அதிருது .. ஆனால் படத்தில் இவருக்கு என்று பெரிதாய் கதையிலோ திரைகதையிலோ இடம் இல்லை... சைடு ஆக்டர் போல வந்து போகிறார் .... கடைசி காட்சியில் திரைகதை இவர் பக்கம் திரும்பும் போது நமக்கு எதிர்பார்ப்பு பெரிதாய் வந்தாலும் பின்னர் புஷ்வானம் ஆகி விடுகிறது..... better luck next time karthi....
ஆண்ட்ரியா பார்க்க பல காட்சிகளில் அப்பாவியாய் தெரிகிறார்... பாடல் காட்சிகளில் தாராளம் காட்டுகிறார் ... பின் தன அப்பாவை பார்த்த வுடன் அழுகிறார் ... எனக்கு புதுபேட்டையில் வரும் சோனியா பாத்திரத்துக்கும் இவரது இந்த பாத்திரத்துக்கும் பெரிதாய் வித்தியாசம் தெரியவில்லை , செல்வராகவனுக்கு மட்டுமே தெரியும் இந்த படத்தில் இந்த character ஏன் வந்தது என்று ....
இந்த படத்தில் நடிப்பில் சும்மா கங்கனா சூரியன் போல ஜொலிப்பவர்கள் இரண்டு பேர் மட்டுமே அது ரீமா மற்றும் பார்த்திபன் ... அதும் ரீமாவுக்கு கண்டிப்பாய் இது life time பிலிம்.. அதோ அந்த பறவை போல் பாடலில் அவரின் நடன அசைவுகள் top class... அசாதாரணமாய் துப்பாகிகளை கைகளில் பிடித்து சுடுகிறார் , பார்க்கும் நமக்கு அது காமடியாய் தெரியாமல் இருந்ததே பெரிய விஷயம்.... இரண்டாம் பாதியில் முழுக்க முழுக்க தனி ஆவர்த்தனம் செய்கிறார் ... படம் பார்த்தல் அது தெரியும்
இன்னொருத்தர் பார்த்திபன்.. ரீமாவிடம் சண்டை இடும் சீனாகட்டும் , இறுதியில் தோற்று போனவுடன் கடலை பார்த்து அழுவதாகட்டும் மனிதர் பின்னுகிறார்... இதுக்கு mela
அவர பத்தி சொன்னா படத்தோட சுவாரசியமே போயடும்கிரதுனால படத்துல பாத்து தெரிஞ்சிகோங்க....
செல்வராகவன் தமிழ் சினிமால இருக்குற முக்கியமான இயக்குனர்... அவரோட 7g rainbow colony படம் பெரிய hit ஆனதுக்கு காரணம் அந்த படத்தோட திரைகதை, ஆனா இந்த படத்துல அது மிஸ்ஸிங்...
படத்த பாக்கும் போது அவரோட மூன்று வருஷ உழைப்பு தெளிவா தெரியிது..ரெண்டாவது பாதியில திரைகதையில தெரியிற சில குழப்பங்கள சரி பண்ணி இருந்திருந்தால் உழைப்பு வீணா போய் இருந்திருக்காது... பெரும்பான்மையான மக்களுக்கு கண்டிப்பா அவர் சொன்ன பல விசயங்கள் புரிஞ்சிருக்காது .. இதுதான் படத்தோட பெரிய மைனஸ்... இருந்தாலும் தமிழ் சினிமால இது ஒரு வித்தியாசமான முயற்சி... கண்டிப்பா அத நாம வரவேற்க வேண்டும் .. அப்பத்தான் இது போன்ற முயற்சிகள் தொடரும் ...
கண்டிப்பாய் ஒரு தடவை பார்க்கலாம்
Subscribe to:
Posts (Atom)