Followers

Copyright

QRCode

Monday, January 18, 2010

ஆயிரத்தில் ஒரு(த்தி)வன் - ரீமா சென்




பெரிய எதிர்பார்ப்புகளுக்கு நடுவில், நீண்ட நாள் கழித்து வெளிவந்திருகிறது செல்வாவின் "ஆயிரத்தில் ஒருவன்" . செல்வராகவன் ஒரு பேட்டியில் இவ்வாறு சொல்லி இருந்தார் " இந்த படம் வெற்றி பெற்றால் இனி என்னுடைய பாதை இதுவாகத்தான்(வித்தியாச முயற்சி) இருக்கும்" என்று... அனால் படம் வெற்றி பெற்றதா என்றால் ஆம் இல்லை என்று ஒற்றை வரியில் பதில் சொல்லுவது கடினம். சில விசயங்களில் வெற்றியும் சில விசயங்களில் தோல்வியும் அவருக்கு கிடைத்திருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும்.
கதை இதுதான், பல நூற்றாண்டுகளுக்கு முன்னாள் பாண்டிய மன்னர்களுக்கும் சோழ மன்னர்களுக்கும் இடேய நடந்த போரில் பாண்டியர்கள் சோழ நாட்டை கை பற்றுகின்றனர்... ஆனால் பாண்டியர்களின் குல தெய்வ சிலை ஒன்று சோழர்களின் கைக்கு மாறி விடுகிறது,, அந்த சிலையை எடுத்து கொண்டு அப்போதைய சோழ இளவரசன் நாட்டை விட்டு தம் மக்களுடன் வெளியேறுகிறான், அவனை தூது வரும் வரை காத்து இருக்குமாறு மன்னன் சொல்லி அனுப்புகிறான்... அந்த இளவரசன் கடல் கடந்து வியட்நாம் அருகில் உள்ள ஒரு தீவில் சென்று தங்குகிறான், தன்னை யாரும் கண்டு பிடித்து விடாமல் இருக்க வரும் வழிகளில் பல ஆபத்துகளை உண்டு பண்ணி விட்டு வருகிறான்.... அவனை பின் தொடர்து சென்ற ஒரு பாண்டிய தளபதி பாதி தூரம் சென்று பின் முன்னேற முடியாமல் இந்த ஆபத்துகளை எல்லாம் ஓலை சுவடுகளில் எழுதி வைத்திருக்கிறான்.... பின் படம் 2009 க்கு வருகிறது.... அந்த ஓலை சுவடுகளில் உள்ள வழி தடங்களை கொண்டு ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளர் அந்த தீவை கண்டு பிடிக்கிறார்... அவர் சோழர்கள் வாழ்த்த கோட்டைக்குள் சென்ற பின் காணாமல் போகிறார்.... இவை அனைத்தும் படம் ஆரம்பித்த பத்து நிமிடங்களில் நடந்து முடிந்து விடுகிறது ... பின் ரீமா சென் தன்னுடைய குழுவினருடன் அந்த தீவை கண்டுபிடிக்க செல்கிறார் அவருக்கு துணையாய் அந்த காணாமல் போன ஆராய்ச்சியாளரின் (பிரதாப் போதன்) மகள் ஆண்ட்ரியா மற்றும் எடுபிடிகளாய் கார்த்தி செல்கின்றனர். கார்த்தி அறிமுகமே அட்டகாசம் ரீமா சென் மற்றும் ஆண்ட்ரியாவிடம் மாறி மாறி ஜொள்ளு விடுவதும் பின் ரீமா சென் கோபக்காரி என்று தெரிந்தவுடன் அவரை நையாண்டி செய்வதாகட்டும் பட்டய கெளப்பி இருக்காரு... அதுவும் ஆண்ட்ரியா மற்றும் ரீமா சென் அவரைகட்டி பிடித்து தூங்கும் காட்சியில் தியேட்டரே அதிருது .. ஆனால் படத்தில் இவருக்கு என்று பெரிதாய் கதையிலோ திரைகதையிலோ இடம் இல்லை... சைடு ஆக்டர் போல வந்து போகிறார் .... கடைசி காட்சியில் திரைகதை இவர் பக்கம் திரும்பும் போது நமக்கு எதிர்பார்ப்பு பெரிதாய் வந்தாலும் பின்னர் புஷ்வானம் ஆகி விடுகிறது..... better luck next time karthi....
ஆண்ட்ரியா பார்க்க பல காட்சிகளில் அப்பாவியாய் தெரிகிறார்... பாடல் காட்சிகளில் தாராளம் காட்டுகிறார் ... பின் தன அப்பாவை பார்த்த வுடன் அழுகிறார் ... எனக்கு புதுபேட்டையில் வரும் சோனியா பாத்திரத்துக்கும் இவரது இந்த பாத்திரத்துக்கும் பெரிதாய் வித்தியாசம் தெரியவில்லை , செல்வராகவனுக்கு மட்டுமே தெரியும் இந்த படத்தில் இந்த character ஏன் வந்தது என்று ....

இந்த படத்தில் நடிப்பில் சும்மா கங்கனா சூரியன் போல ஜொலிப்பவர்கள் இரண்டு பேர் மட்டுமே அது ரீமா மற்றும் பார்த்திபன் ... அதும் ரீமாவுக்கு கண்டிப்பாய் இது life time பிலிம்.. அதோ அந்த பறவை போல் பாடலில் அவரின் நடன அசைவுகள் top class... அசாதாரணமாய் துப்பாகிகளை கைகளில் பிடித்து சுடுகிறார் , பார்க்கும் நமக்கு அது காமடியாய் தெரியாமல் இருந்ததே பெரிய விஷயம்.... இரண்டாம் பாதியில் முழுக்க முழுக்க தனி ஆவர்த்தனம் செய்கிறார் ... படம் பார்த்தல் அது தெரியும்
இன்னொருத்தர் பார்த்திபன்.. ரீமாவிடம் சண்டை இடும் சீனாகட்டும் , இறுதியில் தோற்று போனவுடன் கடலை பார்த்து அழுவதாகட்டும் மனிதர் பின்னுகிறார்... இதுக்கு mela
அவர பத்தி சொன்னா படத்தோட சுவாரசியமே போயடும்கிரதுனால படத்துல பாத்து தெரிஞ்சிகோங்க....
செல்வராகவன் தமிழ் சினிமால இருக்குற முக்கியமான இயக்குனர்... அவரோட 7g rainbow colony படம் பெரிய hit ஆனதுக்கு காரணம் அந்த படத்தோட திரைகதை, ஆனா இந்த படத்துல அது மிஸ்ஸிங்...
படத்த பாக்கும் போது அவரோட மூன்று வருஷ உழைப்பு தெளிவா தெரியிது..ரெண்டாவது பாதியில திரைகதையில தெரியிற சில குழப்பங்கள சரி பண்ணி இருந்திருந்தால் உழைப்பு வீணா போய் இருந்திருக்காது... பெரும்பான்மையான மக்களுக்கு கண்டிப்பா அவர் சொன்ன பல விசயங்கள் புரிஞ்சிருக்காது .. இதுதான் படத்தோட பெரிய மைனஸ்... இருந்தாலும் தமிழ் சினிமால இது ஒரு வித்தியாசமான முயற்சி... கண்டிப்பா அத நாம வரவேற்க வேண்டும் .. அப்பத்தான் இது போன்ற முயற்சிகள் தொடரும் ...
கண்டிப்பாய் ஒரு தடவை பார்க்கலாம்

2 comments:

Senthil said...

nice review....
this type of films shoulb be appreciated...

Anonymous said...

எண்டா உங்களுக்கெல்லாம் ரீமா சென் அவுத்து போட்டு ஆடுனா படம் புடிசிடுமே....
வேட்டைக்காரன் வசூல்ல சாதன பண்ணுதே அதெல்லாம் உங்க கண்ணுக்கு தெரியாதே

LinkWithin

Related Posts with Thumbnails