Followers

Copyright

QRCode

Thursday, January 12, 2012

கடவுள் (பாகம் 1 )






(இந்த வருடத்திலிருந்து இந்த வலைபூவில் வேறு சில நண்பர்களையும் எழுதவைக்கலாம் என்று முடிவு செய்திருக்கிறேன். என்னுடைய சிந்தனைகளை மட்டுமே இங்கு எழுதிக்கொண்டிருந்தால் மிக விரைவில் இதை படிக்கும் நண்பர்களுக்கு போர் அடித்துவிடக்கூடிய வாய்ப்பு இருப்பதால் இந்த முடிவு. இதன் முதல் கட்டமாக எனக்கு தெரிந்த சில நண்பர்களிடம் கடவுள் பற்றிய அவர்களின் கருத்துகளை எழுதசொல்லி ஒரு தொடராக அவற்றை வரிசையாக இந்த வலைபூவில் வலையேற்றலாம் என்று முடிவெடுத்திருக்கிறேன். அந்த வரிசையில் என்னுடைய அலுவலகத்தில் பணிபுரியும் சக ஊழியரும் , நண்பருமான வினோத் அவர்களின் கட்டுரை இந்த பதிவில். அவர் இதை ஒரு முன்னோட்டமாக என்னுடைய வலைபூவில் பதிவேற்றுகிறார். அவரின் எழுத்து நடை உங்களுக்கு பிடித்திருந்தால் கமெண்ட்டில் அவரை ஊக்கபடுத்துங்கள், ஏதேனும் பிழைகள் இருந்தாலும் தெரியபடுத்துங்கள் நாங்கள் திருத்திக்கொள்ள)

           கடவுள் இருக்கிறாரா இல்லையா என்று சொல்லும் அளவுக்கு நமக்கு அறிவு இருக்கிறதா என்று எனக்கு தெரியவில்லை. இவ்வுலகில் பல விஷயங்கள் நமது அறிவுக்கு எட்டாதவையாகவே உள்ளது. நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது அது கடவுள் தானா என்று எனக்கு சொல்ல தெரியவில்லை. அந்த சக்தியைதான் இவ்வுலகில் உள்ள மக்கள் கடவுளாக வழிபடுகின்றனர் என்று நான் நினைக்கிறேன். பல விஷயங்கள் நமக்கு தெரிந்திருந்தாலும் அதை மற்றவர்கள் நம்ப வேண்டும் என்றால் அதை நீருபிக்க வேண்டும். பல விஷயங்களை நிரூபணம் மூலம் நம் அறிவியல் அறிஞர்கள் நிரூபித்துள்ளனர். கடவுள் இருக்கிறார் என்று சொல்ல தெரிந்த அவர்களுக்கு கூட நிரூபிக்க தெரியவில்லை. எனது கோணத்தில் பல விஷயங்கள் மனித அறிவுக்கு அப்பாற்பட்டது அதில் கடவுளும் ஒன்று என்றே நான் கருதுகிறேன். இதற்கு உதாரணமாக பூமிக்கு கீழே என்ன உள்ளது, அகாயத்துற்கு மேல என்ன உள்ளது என்று எல்லாம் நாம் பார்க்க இயலாது. ஆனால் மற்றவர்கள் கருத்தை நாம் நம்புகிறோம் அவன் நாதீகன் ஆகட்டும் அல்லது ஆத்திகன் ஆகட்டும். கடவுள் இருக்கிறாரா இல்லையா என்பதை அறிவியல் கொண்டோ அல்லது கணிதம் கொண்டோ நிரூபிக்க இயலாது. ஏன் என்றால் கடவுள்(ஒரு சக்தி) என்பவரை ஒரு குறுப்பிட்ட வட்டதிற்குள் அடைக்க இயலாது. பல விஷயங்களில் நாம் நம் முன்னோர்களேயே கடைபிடிக்குறோம். இவ்வுலகில் பெரும்பான்மையான விஷயங்கள் உறுதி செய்ய நாம் கடைபிடிப்பது பெரும்பாலானோர் சொல்வதிலிருந்தே நாம் அதனை உறுதி செய்கிறோம். அது போல இவ்வுலகில் பெரும்பான்மையான மக்கள் கடைப்பிடிப்பதை கொண்டு நாம ஒரு முடிவுக்கு வருவோம். இவ்வுலகில் நமக்கு மேலே ஒரு சக்தி உள்ளது அது கடவுளாகவும் இருக்கலாம் என்று.


           இவ்வுலகில் பலர் நிம்மதியை தேடி அலைகின்றனர் அதற்கு பெரும்பாலானோர் தேர்வு செய்யும் இடம் கோவில்களும் ஆலையங்களுமே அதற்கு காரணமும் உள்ளது. அங்குதான் அவர்களுக்குள்ள ஆனவத்தையும் தலைக்கனதையும் சிறிது ஒதுக்கி வைக்கின்றனர். இவ்வுலகில் தேடல்கள் அதிகரிக்க அதிகரிக்க பிரச்சனைகளும் அதிகரிக்கதான் செய்கின்றன. அதற்காக நான் தேடாமல் இருக்க சொல்லவில்லை கடவுளை பற்றி ஆராய்ச்சி செய்யாதீர்கள் என்றுதான் சொல்கிறேன் ஏனென்றால் அதை ஆராயும் அளவுக்கு நமக்கு அறிவு போதுமா என்றுதான் எனக்கு தெரியவில்லை. ஒன்றுமே படிக்காதவனிடம் போய் விஞ்ஞானம் பற்றி விவரிக்க இயலாது அது போலதான் கடவுளை பற்றி தெரியாதவனிடம் போய் கடவுளை பற்றி விவரிக்க இயலாது. இவ்வுலகில் பல விஷயங்கள் சூட்சமாகவே உள்ளன அதில் கடவுளும் ஒன்று என்றே நான் நம்புகிறேன். பிறகு வேறு வழிதான் என்ன கடவுளை பற்றி தெரிந்து கொள்ள என்று நீங்கள் கேட்கும் கேள்வியின் ஆதங்கம் எனக்கு புரிகிறது.


          
           இவ்வுலகம் முழுவதும் அணுக்கலால் ஆக்கபட்டது இவ்வுலகில் உள்ள ஒவ்வொரு பொருட்களுக்கும் ஒரு சக்தி உள்ளது. அது போல நம் கற்பனைக்கும் சக்தி உள்ளது எண்ணங்கள் மிக வலிமையானவை நம் எண்ணத்தின் மூலம் ஒரு பொருள் இருப்பதாக நினைத்தால் அப்பொருள் இல்லை என்றாலும் உருவாவதற்கான சாத்தியங்கள் அதிகமாகவே உள்ளது. அதுபோல் கடவுள் இருக்கிறார் / இல்லை என்று நினைத்தாலும் அது அவரவர் மன நிலையை பொறுத்தே கடவுள் உருவாகலாம் அல்லது உருவாகமலும் போகலாம். அதற்காக கடவுள் இருக்கிறார் அல்லது இல்லை என்று சொல்ல இயலாது. நமக்கு மேல் ஒரு சக்தி உள்ளது அதைத்தான் இக்கட்டுரையில் நான் கடவுளாக உருவகப்படுத்தி உள்ளேன். ச்சக்தியை பற்றி ஆராயும் அளவுக்கு நமக்கு அறிவு போதாமையால் அதை இல்லை என்று சொல்லிவிட முடியாது. எண்ணங்கள் மிக வலிமையானவை அந்த எண்ணங்களில் இருந்து சொல் உருவாகிறது சொல்லில் இருந்து செயல் உருவாகிறது செயலில் இருந்து பழக்கம் உருவாகிறது அப்பழக்கதில் இருந்து பண்பாடு உருவாகிறது. நம் பண்பாடு அனைத்தும் நம் எண்ணத்தை சார்ந்தே உள்ளது. ஆகையால் நம் எண்ணத்தை தூய்மையாக வைத்திருப்போம். நம் பண்பாட்டை உயர்த்த பாடுபடுவோம்.

************************************************************************

Tuesday, January 10, 2012

டாக்டர் vs டாக்டர் – பொங்கல் ரேஸில் ஜெயிக்க போவது யாரு?




டிஸ்கி : இது கண்டிப்பாக டாக்டர் அவர்களை ஓட்டும் பதிவுதான். ஆனால் எந்த டாக்டர் என்பது படிக்கும் உங்கள் மனநிலையை பொறுத்தது?



வரும் வியாழன் நண்பன் வெளிவருகிறதாம். நான் பிளாக் எழுத ஆரம்பித்து இதுவரை வந்த விஜய் படங்கள் அனைத்துமே மொக்கை படங்களாகவே வந்திருக்கிறது. அது ஒருவகையில் நமக்கு சாதகமான விஷயமே. விஜயை ஓட்டுவதை விட அவரின் ரசிகர்களை ஓட்டுவதில் ஒரு தனி இன்பம் இருக்கதான் செய்கிறது. காரணம் ஒவ்வொரு படமும் வருவதற்க்கு முன்னாள் சமூக இணைய தளங்களில் அவர்கள் பேசும் பேச்சுகள்தான். படம் வந்தபின்னர் ஊரே கடுப்புடன் அவர்களை பழிவாங்குவதற்க்கு காரணம் இதுதான். 

முன்பெல்லாம் தீவிர விஜய் ரசிகர்கள் அவர்கள் படம் வரும்பொழுது கூடவே அஜீத் படமும் வெளிவந்தால் பேஸ்புக் , ஆர்குட் என்று எல்லா இடங்களிலும் ஆன்டி அஜீத் இயக்கம் என்று ஒரு கம்யூனிட்டி உருவாக்கி அதில் வெளிவர போகும் அந்த அஜித் படத்தையும் அதில் அவரின் கெட்டப்பையும் நாறடிப்பார்கள். முதலில் இது அஜித் விஜய் ரசிகர்களின் சண்டையாகவே பார்க்கபட்டது, ஆனால் ரஜினியின் சந்திரமுகியும்  விஜய்யின் சச்சினும் ஒன்றாக வெளிவந்த காலகட்டங்களில் விஜய் ரசிகர்கள் ஆன்டி ரஜினி  கம்யூனிட்டிகளை உருவாக்கிய பொழுதுதான் அவர்களின் வக்கிரபுத்தி உலகம் அறியதொடங்கியது. அடுத்து அவர்கள் தனுஷ் , சூரியா , சிம்பு என்று ஒருவரையும் விட்டுவைக்கவில்லை. தனுஷ் பொல்லாதவனில் அழகிய தமிழ் மகனை புரட்டி புரட்டி எடுத்ததிலிருந்து  இப்பொழுதெல்லாம் தனுஷ் படம் வெளியாகும் பொழுதெலாம் ஆன்டி தனுஷ் கம்யூனிட்டி அதிகம் உலவ ஆரம்பித்து விட்டது. வேலாயுதத்துடன் 7 ஆம் அறிவு ரிலீசாகிய  தருணங்களில் இந்த இணையதளங்களில் தீவிர விஜய் ரசிகர்களால் 7 ஆம் அறிவு எந்த அளவுக்கு நாறடிக்கபட்டது என்பதை உலகம் அறியும்...  


சரி விசயத்திற்க்கு வருவோம் , இப்படி சச்சின் , சுறா போன்ற மொக்கை படங்கள்  வெளிவரும் போதெல்லாம் அளவுக்கு அதிகமாக ஆடிய விஜய் ரசிகர்கள் இப்பொழுது 3 இடியட்ஸ படத்தின் ரீமேக்கில் , அதுவும் இந்தியாவின் ஸ்பீல்பெர்க் என்று விஜய்யால் அன்புடன் அழைக்கபடும் , ஹை பட்ஜெட் பேரரசு  ஷங்கரின் இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் நண்பன் படம் வெளிவரபோகும் சமயம் மிக அமைதியாக எந்த ஆராவாரமும் இல்லாமல் இருக்கிறார்களே என்று பலருக்கு  சந்தேகம் வரலாம்... ஆம் அவர்கள் எந்த ஆர்பாட்டமும் இல்லாமல் அமைதியாகவே இருக்கிறார்கள் , ஆனால் அவர்கள் திருந்திவிட்டார்கள் என்று தவறாக நினைத்துவிடாதீர்கள்... அவர்கள் வேறுவழியில்லாமல் அமைதியாக இருக்கிறார்கள். .. நண்பன் படம் வெளிவரும் அதே நாளில் இன்னொரு நடிகரின் படமும் வெளியாகபோகிறது என்று காற்று வழி செய்திகள் இப்பொழுதே கசியதொடங்கியதான் விளைவே இவர்களின் இந்த அமைதி.. ஆம் சென்ற வருடம் வந்த பெரிய நடிகர்கள் படங்கள் நூறு நாட்கள் ஓடுவதற்கே முக்கி கொண்டிருந்த பொழுது , வெற்றிகரமாக முன்னூறு நாட்களை  தாண்டி இன்றும்   ஓடி கொண்டிருக்கும் லத்திகா படத்தின் நாயகன் பவர் ஸ்டார் என்று எல்லோராலும் அன்போடு அழைக்கபடும் டாக்டர் சீனிவாசனின் ஆனந்த தொல்லை படம் பொங்கலுக்கு வெளிவரபோகிறதாம்.

இப்பொழுது புரிகிறதா விஜய் ரசிகர்களின் அமைதிக்கு காரணம்? பவர் ஸ்டாரை எதிர்த்தால் என்ன நடக்கும் என்பது அவர்களுக்கு தெரியாதா? ஆனானப்பட்ட சூப்பர் ஸ்டாரே பவர் ஸ்டாரின் மூன்று படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்கு காத்து கொண்டிருப்பதை அறிந்து தன்னுடைய ராணா படத்தின் ஷூட்டிங்கை தள்ளிவைத்திருக்கிறார். அப்படிபட்ட பவர் ஸ்டாரை எதிர்க்க முடியுமா? அதையும் மீறி விஜய் ரசிகர்கள் சிலர் பேஸ்புக் ஆர்குட் என்று சில இடங்களில் பவர் ஸ்டாரை கேலிசெய்து சில கம்யூனிட்டிகளை உருவாக்கியதாகவும் , ஆனால் அதை தொடங்கியவுடனே நம் பவர் ஸ்டார் கொலைவெறி படை  பவர் ஸ்டாரின் கீழ்க்கண்ட சில படங்களை அந்த கம்யூனிட்டிகளில் அப்லோட் செய்து அவற்றை சின்னாபின்னமாக சிதைத்து விட்டதாகவும் தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.








அதற்க்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் தளபதியின் போர்படை பவர் ஸ்டார் ரசிகர்கள் நடத்தும் கம்யூனிட்டிகளில் தளபதியின் கீழ்க்கண்ட சில படங்களை அப்லோட் செய்து சிதைத்து கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவருகிறது...








படம் வெளிவருவதற்க்கு முன்னரே இவ்வளவு போட்டி என்றால் படம் வெளிவந்தால் என்னவெல்லாம் நடக்க போகிறதோ என்று தெரிந்து கொள்ள தமிழகம் மட்டுமில்லை , உகாண்டா , நபீமியா என்று பவர் ஸ்டார் ரசிகர்கள் எங்கெல்லாம் இருக்கிறார்களோ அங்கெல்லாம் ரசிகர்கள் ரத்தம் சூடேறிபோய் அலைகிறார்கள்...
பொறுத்திருந்து பார்ப்போம் ஜெயிக்க போவது போலி டாக்டரா இல்லை ஒரிஜினல் டாக்டரா என்று?


விஜய் ரசிகர்கள் யாராவது இந்த பதிவை படித்து என்னை திட்டி கமெண்ட் போடும் எண்ணத்தில் இருந்தால் தயவுசெய்து   பதிவின் தொடக்கத்தில் இருக்கும் டிஸ்கியை மீண்டும் ஒரு முறை படித்து விட்டு கமெண்ட் போடவும்

LinkWithin

Related Posts with Thumbnails