Followers

Copyright

QRCode
Showing posts with label டக்லஸ். Show all posts
Showing posts with label டக்லஸ். Show all posts

Wednesday, August 5, 2009

கணினி வீரன்

நம்ம கம்பெனி பெஞ்சுல பருத்தி வீரனும் செவ்வாளையும் ஒக்காந்துட்டு இருக்காங்க. அந்த இடத்துல நம்ம டக்லஸ் அண்ணன் புதுசா சாப்ட்வேர் இன்ஜினியரா செர்த்துருக்கார். அங்க நடக்குற ஒரு நிகழ்ச்சி:
மேனேஜர் (பருத்தி வீரன் செவ்வாளையை பார்த்து): ஏண்டா இப்பிடி வெட்டியாவே பெஞ்ச தேச்சுட்டு இருக்கிங்களே.. போயி ஒழுங்கா எதாச்சும் புராஜெக்ட் பண்ணுங்கடா... எண்டா செவ்வாள கூடயே சுத்துரையே நீயாது அவனுக்கு கோடிங் எழுத சொல்லி தர கூடாது....
செவ்வாளை: எங்க சார் கேக்குறான்? கண்ட நாய்ங்க எல்லாம் புத்தி சொல்லும் வாடா, கோடிங் எழுதலாம்னு சொன்னா கேக்க மாட்டேங்கிறான் . இதோ இப்போ நீங்க சொல்லிட்டிங்கள்ள....
மேனேஜர்: 'ஏண்டா நக்கலா? ஒழுங்கா ஒரு ப்ராஜக்ட தேடி பிடுச்சு வேலைய பாருங்க டா!'
செவ்வாளை(டக்லஸ் அண்ணனை கைகாட்டி): அத மேனேஜர சொல்ல சொல்லுயா
மேனேஜர்: யார்ரா மேனேஜரு?
செவ்வாளை: இதோ நம்ம டக்லஸ் அண்ணே தான்
மேனேஜர் (டக்லஸ் அண்ணன பார்த்து ): ஏண்டா உன்ன நேத்து தான் ப்ராஜெக்ட்ல சேர்த்தேன். நீயா மேனேஜரு?
செவ்வாளை (மேனேஜர பார்த்து ): யோவ் மரியாதையா பேசு யா .. அவரே உன்ன பாவம்னு ப்ராஜக்ட்ல செதுருக்காரு. வெரட்டி விட்டுட போறாரு
மேனேஜர்: இந்த வெண்ண என்ன டா என்ன வெரட்டி விட ... (டக்லஸ் அண்ணன பார்த்து ) ஏண்டா பெஞ்சு பசங்க கிட்ட இப்டித்தான் சொல்லிட்டு திருஞ்சுட்டு இருக்கியா? கெளம்புடா மொதல்ல ப்ராஜக்ட்ல இருந்து ...
டக்லஸ் அண்ணன் (செவ்வாளையை பார்த்து ): சந்தோசமா?
செவ்வாளை: அப்பா நீ மேனேஜர் இல்லையா? (மேனேஜரிடம்) அவன் அப்பிடிதாங்க சொன்னான். பயபுள்ள பொய் சொல்லிட்டான் போல இருக்கு ....

LinkWithin

Related Posts with Thumbnails