Followers

Copyright

QRCode

Thursday, November 15, 2012

குற்றாலமும் , போடா போடியும் பின்னே முருகதாஸும் ....குற்றாலம்  எனக்கு தீபாவளி பண்டிகை  மற்ற தினங்களை போல ஒரு சாதாரண நாள்தான் , தல படங்கள் வந்தால் மட்டுமே தீபாவளி களைகட்டும் , இப்பொழுதெல்லாம் தல படம் வந்தாலே அது தீபாவளிதான் என்பதால் எனக்கு தீபாவளிக்கு தனியாக  ஸ்பெஷல் என்று எதுவும் கிடையாது . வழக்கம் போல இந்த முறையும் குடும்பத்தோடு குற்றாலம் சென்றிருந்தேன் , அங்கே எங்கள் சர்ச் தலைமை இயக்கத்தால் ஒரு விசேஷ ஜெபகூட்டம் ஒன்று நடந்தது , முன்பெல்லாம் என்னுடைய அப்பாவை சமாளித்து எளிதாக அதில் இருந்து தப்பிவிடுவேன் , ஆனால் இம்முறை என்னை அங்கே இழுத்து செல்லும் பொறுப்பு என் மனைவியிடம் கொடுக்கப்பட்டதால்  எளிதாக  தப்ப முடியவில்லை. என்னை மிரட்டி எங்கே அழைத்து சென்றது மட்டுமில்லாமல் மாலை ஐந்து மணிவரை கூட்டம் நடக்கும் , அதுவரை அங்கேதான் இருக்க வேண்டும் வேறு எங்கும் குறிப்பாக அருவிக்கு குளிக்க செல்ல கூடாது என்று ஏகப்பட்ட கெடுபிடிகள் வேறு , ஆனால்  வழக்கம் போல மதியத்தோடு டிமிக்கி கொடுத்து அருவிக்கு சென்று குளித்தது தனி சுகம் என்றால் மாலை என் வீட்டுக்காரியிடம் அடிவாங்கியது ஆனந்த அனுபவம் ... வழக்கமாக இந்த சீசனில்  ரொம்பவும் கூலாக இருக்கும் குற்றாலம் அன்று மட்டும் ரொம்ப ஹாட்டாக இருந்தது , ஆனால் அந்த வெயிலில் அருவியில் குளித்த சுகமே தனி.. அனேகமாக சிகரெட் சினிமா இல்லாமல் நான் கடந்து வந்த முதல் தீபாவளி இதுவாகத்தான் இருக்கும் ... இதற்க்கெல்லாம் சேர்த்து வரும்  பொங்கலில் மொத்தமாக ஆடி தீர்த்து விட வேண்டியதுதான்... 

போஸ்டர் முன்பெல்லாம் வருடா வருடம் தீபாவளி அன்று எங்கள் ஊரில் கண்டிப்பாக ஒரு போஸ்டர் கண்ணில் படும் , அது கமல் ரசிகர்களால் அடிக்கப்படும் கருப்பு தீபாவளி என்னும் போஸ்டர்தான் ... இப்பொழுது இந்த விளையாட்டில் தல ரசிகர்களும் சேர்ந்து விட்டார்கள் . எங்கள் ஊரில் கண்ணில் பட்ட ஒரு போஸ்டரில் இருந்த வாசகம் "தீபாவளிக்கு படம் ரிலீஸ் பண்றது காக்கா ஸ்டைல் ... படம் ரிலீசையே தீபாவளியாக்குறது எங்க தல ஸ்டைல்" , இதில் காக்கா என்று யாரை சொல்லியிருக்கிறார்கள் என்று சத்தியமாக தெரியவில்லை. ரசிகர் மன்றமே வேணாம்டா போய் உங்க வேலையை பாருங்கடா என்று தல தண்ணி தெளித்து விட்ட பிறகும் இவனுங்க பண்ற அளப்பரையை இருக்கே .... 

போடா போடி தீபாவளிக்கு மறுநாள் விடுமுறை என்பதால் போடா போடி திரைப்படம் பார்க்க நேர்ந்தது .. எனக்கு வாழ்க்கையில் கல்யாணம் என்ற ஒன்று நடப்பதற்கு முன்னாள் இப்படி ஒரு படத்தை பார்த்திருந்தால் கண்டிப்பாக இடைவேளையோடு எழுந்து வந்திருப்பேன் , ஆனால் இப்பொழுது இந்த படத்தை மிகவும் ரசித்து பார்க்கும்படி நிலைமை தலைகீழாக மாறி விட்டது , கல்யாணம் ஒரு மனிதனை எப்படியெல்லாம் மாத்துது பாத்தீங்களா பாஸ்? என்னுடைய அம்மா தபால் துறையிலும் , என் மாமியார் ஆசிரியராகவும் வேலை பார்த்தாலும் அதெல்லாம் அவர்களுக்கு பார்ட் டைம்தான் , அவர்களின் முழு நேர வேலையே எனக்கும் என் மனைவிக்கும் வரும் சண்டைகளை தீர்த்து வைப்பதுதான்... இது எனக்கு மட்டும் இல்லை பெரும்பாலான வீட்டில் நடப்பதுதான் , இதைதான் போடா போடியில் ஹை டெக்காக காட்டியிருக்கிறார்கள் , படம் ஒட்டு மொத்தமாக பார்க்கும் பொழுது கொஞ்சம் போர் அடிப்பது போல இருந்தாலும் சில காட்சிகளில் நம்மை ரொம்பவே ரசிக்க வைக்கிறார்கள் , ஹீரோயினுக்கு பிரசவம் நடக்கும் காட்சி , சிம்புவின் மேல் இருக்கும் கோபத்தில் வரலட்சுமி அவர் போட்ட மோதிரத்தை கழட்டி டாய்லெட்டில் எரிந்து விட்டு கொஞ்ச நேரத்திலேயே மனது மாறி அதற்குள் கையை விட்டு மோதிரத்தை எடுக்கும் காட்சி என்று பல இடங்களில் சிக்ஸர் அடித்திருக்கிறார் இயக்குனர் , ஆனால் சில சீரியஸ் ஆன காட்சிகளில் சிம்பு சின்னபுள்ளத்தனமாக பேசும் வசனங்களை குறைத்திருக்கலாம் சில இடங்களில் அது அந்த காட்சியின் வீரியத்தை நீர்த்து போக செய்கிறது குறிப்பாக குழந்தை இறந்த பிறகு சிம்பு வரலட்சுமியின் வீட்டிற்கு வந்து அவரை கூப்பிடும் காட்சியில் வசனங்களை இன்னும் கொஞ்சம் பெட்டராக வைத்திருக்கலாம்... படத்தின் மிக பெரிய பலமே பாடல்கள்தான் , சிம்புவுக்கும் மட்டும் எப்படி இப்படியான பாடல்கள் அமைகிறது என்று தெரியவில்லை , ஒஸ்தி பாடல்களே எனக்கு இன்னமும் அலுக்கவில்லை அதற்குள் போடா போடி , படம் புதுசா கல்யாணமான மக்களுக்கு மிகவும் பிடிக்கும் மற்றவர்கள் ஒரு முறை பார்க்கலாம்... 

துப்பாக்கி கடைசியாக அண்ணன் தமிழகத்தின் ஒரே அறிவாளி இயக்குனர் முருக்குதாஸ் சாரி முருகதாஸ் அவர்கள் இயக்கிய ஒரு படம் இந்த தீபாவளிக்கு வெளிவந்திருக்கிறது , அண்ணனிடம் கேட்பதற்கு எனக்கு பல கேள்விகள் உண்டு , (நான் உங்கள் படத்தை இடைவேளை வரைக்கும்தான் பார்த்தேன் அதற்க்கு மேல் என்னால் பொறுமையாக உக்கார முடியவில்லை ... உங்கள் அளவுக்கு எனக்கு அறிவு கிடையாது அண்ணே , அதனால் உங்கள் அறிவுதிறமையின் செழுமையால் விளைந்த முத்தான காட்சிகளை என்னால் ஜீரணம் செய்ய இயலவில்லை அண்ணே... மன்னிச்சிகோங்க ,  ஆனால் முழுவதும் பார்த்த நண்பர்கள் சிலர் சொல்லிய விசயங்களில் இருந்து எனக்கு தோன்றிய சந்தேகங்கள் அண்ணே இதெல்லாம்) முதலில் என்ன காரணத்துக்காக இந்த படத்தை ராணுவ வீரர்களுக்கு சமர்ப்பணம் செய்தீர்கள்?தமிழ் நாட்டில் உங்களை போல பல பேர் இந்த டகால்டி வேலையை செய்து கொண்டு இருக்கிறார்கள் , காவல் துறைக்கு சமர்பிக்கிறேன் , ஊனமுற்றவர்களுக்கு சமர்பிக்கிறேன் இல்லை கூலி தொழிலாளிகளுக்கு சமர்பிக்கிறேன் என்று வருடா வருடம் யாராவது ஒருவர் கிளம்பி விடுகிறீர்கள்.. சமர்ப்பணம் என்று எந்த அர்த்தத்தில் சொல்லுகிறீர்கள் ?ஹீரோ ராணுவ வீரனாக இருப்பதால் இந்த சமர்பணமா (அப்படியானால் நான் ஈ படத்தை ராஜ மௌலி ஈக்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கலாம் ,) இல்லை  உங்கள் படத்தின் மூலம் கிடைக்கும் மொத்த பணத்தையும் அப்படியே ராணுவத்துக்கு அள்ளி தந்து விட போகிறீர்களே அதற்காக இந்த சமர்ப்பணமா?

 வாகை சூட வா என்று ஒரு படம் , அந்த படத்தின் இறுதியில் இது ஆசிரியர்களுக்கு சமர்ப்பணம் என்று போட்டிருந்தால் திரையரங்கமே எழுந்து கைதட்டியிருக்கும் ,   ஆனால் அந்த படத்தின் இயக்குனர் அந்த முட்டாள்தனத்தை செய்யவில்லை , ஒருவேளை அவர் நிறைகுடமாக இருக்கலாம்.. அண்ணே அதுக்காக உங்களை குறைகுடம் என்று சொல்லவில்லை ... உங்களின் முதல் படமான தீனாவை போல அடுத்து தமிழ் சினிமாவில் காதலையும் ஆக்சனையும் சரி விகிதத்தில் கலந்து ஒருவராலும் ஒரு படம் கொடுக்க முடியவில்லை , அந்த திறமை தமிழ் சினிமாவில் இரண்டே இரண்டு பேரிடம்தான் இருக்கிறது ஒன்று சரண் இன்னொன்று நீங்கள் , ஆனால் நீங்கள் தமிழனை தூக்கி பிடிக்கிறேன் , ராணுவத்தை ரவுண்டு கட்டி அடிக்கிறேன் என்று உங்களுக்கு கொஞ்சம் கூட ஒத்துவராத ஒரு பாதையில் சென்று கொண்டிருக்கிறீர்கள் , என்னுடைய இரண்டாவது சந்தேகம் இதுதான் அண்ணே நீங்க எப்படி  வேண்டுமானாலும் படம் எடுங்கள் அது உங்கள் மற்றும் உங்கள் தயாரிப்பாளர் சம்பந்தப்பட்ட விஷயம் , ஆனால் தயவு செய்து தமிழனை பெருமை பட வைக்க போறேன் , ராணுவத்துக்கு மரியாதை செலுத்த போறேன் என்று வியாக்கியானம் பேசிவிட்டு  சாதாரண மொக்கை மசாலா படங்களை எடுத்து தள்ளாதீர்கள் ... சாதாரண பொழுதுபோக்கு மசாலா படம் என்று சொல்லிவிட்டு நீங்கள் படம் எடுத்தால் உங்கள் படத்தில் யாரும் லாஜிக் பார்க்க போவதில்லை , ஆனால் வீணாக வாய் சவாடல் விட்டுவிட்டு சின்ன புள்ளத்தனமாக நீங்கள் படம் எடுப்பதை பார்க்கும் பொழுது கடுப்படிக்குதுண்ணே .... பத்து வருடங்களுக்கு முன்னாள் உங்கள் ரமணா படத்தை தமிழன் ரசித்து விட்டான் என்பதற்காக அவனை அடிமுட்டாள் என்று நினைத்து கொண்டு  இன்றும் 7 ஆம் அறிவும் துப்பாக்கியும் எடுத்து அடுத்த மணிரத்தினமாக நீங்கள் மாற நினைப்பதை பார்க்கும் பொழுது உங்கள் மேல் பரிதாபம்தான் வருதுண்ணே ... தயவு செய்து ரமணாவை மறந்து விடுங்கள் , தீனாதாண்ணே நமக்கு சரியானா பாதை ... 

மூன்றாவதாக என்னிடம் இருக்கும் கேள்வி தீவிரவாதிகள் என்றாலே அது முஸ்லிம்தானா? பல நூறாண்டுகளுக்கு முன்னாள் தீவிரவாதிகளை அழிக்கும் வேலையை தமிழ் சினிமாவில் செய்து கொண்டிருந்த நம்ம கேப்டன் கூட தீவிரவாதிகளை பாக்கிஸ்தானில் இருந்து ஆப்கானிஸ்தானில் இருந்து வந்து எல்லையில் ஊருடுவி காஷ்மீரிலோ இல்லை லடாக்கிலோ ஒரு கூடாரம் போட்டு பொட்டி  பொட்டியாக நவீன ஆயுதங்கள் வைத்திருக்கும் ஒரு சர்வதேச குற்றவாளியாகவே காட்டி வந்தார் , ஆனால் நீங்கள் நம்ம பக்கத்து தெரு அப்துல்லாவையும் , இப்ராஹிமையும் தீவிரவாதிகளாக சித்தரித்துள்ளீர்கள் , இது வெறும் படம்தாண்டா படத்தை படமாக பாருங்கடா என்று நீங்கள் சொல்லலாம் , நாங்களும் இதை வெறும் படமாக பார்த்து விட்டு போயிருப்போம்  இந்தியாவுக்கு எப்படியெல்லாம் ஆபத்து வரக்கூடும்னு நான் படத்தில் காட்டியிருக்கிறேன் என்று நீங்கள் திருவாய் மலராமல் இருந்திருந்தால் ,  உங்கள் படத்துக்கு விளம்பரம் கிடைக்க இது படம் இல்லை மக்களுக்கு நான் எடுத்திருக்கும் பாடம் என்று நெஞ்சை நிமிர்த்து சொல்லும் நீங்கள் அதில் நாங்கள் குறைகள் சொல்லும் போதுமட்டும் ஏய் படத்தை படமாக பாருங்கடா என்று முதுகை திருப்பி கொண்டு ஓடுவது ஏன்? 

கஜினிக்கு அடுத்து ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு படியாக இறங்கி கொண்டிருக்கும் நீங்கள் அடுத்த படத்திலாவது மேலே ஏறி உங்கள் பழைய இடத்தை பிடிப்பீர்கள் என்று உங்களின் மிக பழைய ரசிகனாக இன்னமும் நம்புகிறேன் ... உங்களின் துர்பாக்கியம் இந்த துப்பாக்கியோடு ஒழிந்து போகட்டும் ... 


 

(படத்தின் மீதியை ஒரு நண்பனின் உதவியோடு பார்த்து விட்டேன் , கலைபுலியின் ராசி இந்த படத்திலும் தொடர்கிறது , 7 ஆம் அறிவு அளவுக்கு கூட இந்த படம் வசூலிக்குமா என்பது சந்தேகமே? 7 ஆம் அறிவை சூரியாவின்  மார்கெட் கொஞ்சமேனும் காப்பாற்றியது , இந்த படத்தில் அதற்க்கு வாய்ப்பில்லை என்பதால் தப்பிப்பது கஷ்டமே , விஜயகாந்த் டைப் பட  பிரியர்கள் வேண்டுமானால் ரசிக்கலாம் பாஸ் போர்ட் சைஸ் போட்டோ எடுக்க பி. ஸி . ஸ்ரீராமை கூட்டி போன கதையாகவே இருக்கிறது இந்த படத்துக்கு சந்தோஷ் சிவனை ஒளிபதிவு செய்ய வைத்தது , காஜல் நாற்பது வயதில் ரம்யா கிருஷ்ணன் அடைந்த முதிர்ச்சியை தன்னுடைய இருபத்தைந்தாவது வயதிலேயே அடைந்து விட்டார் , அங்கிளுக்கு ஏத்த ஆன்டியாக சரியாக பொருந்துகிறார்.. இயக்குனரிடம் ஒரே ஒரு கேள்வி அண்ணே எங்கூர்ல ஐநூறு ரூபாய் காசு அடிக்கிற பிக் பாக்கெட் திருடன் கூட போலிஸ் கிட்ட மாட்டிகிட்டு தப்பிச்சி வந்தா  அவனோட கூட்டாளிகளை நாலு நாளைக்கு பாக்க மாட்டான் , ஆனால் மும்பையில பாம் வைக்கிற தீவிரவாதி மிலிட்டரி  ஆபிசரிடம் இருந்து தப்பி நேரே அவனுடைய கூட்டாளியை சந்திக்க போறானாம் , அவ்ளோ கூமுட்டையானே அவன், இந்த கலிகாலத்திலேயும் கம்யுனிகேசனுக்கு வேற வழியா இல்லை  ... உச்சகட்ட காமெடி என்னவென்றால் ஆம்பளையா இருந்தா அவுத்து விடுடா என்று ஒரு மிலிட்டரி ஆபிசர் கேட்டவுடன் கருணை உள்ளத்தோடு அவுத்து விடும் தீவிரவாதியை விஜயகாந்த் கூட பார்த்திருக்க மாட்டார் ... முருகதாசுக்கு காமெடி வராது என்று ஆண்டாண்டு காலமாக வாய் கூசாமல் பேசிகொண்டிருக்கும் மூடர்களின் வாயை 12 பேர் 12 தீவிரவாதிகளை கொல்லும் காட்சியிலும் , நாயை கொண்டு மோப்பம் பிடிக்கும் காட்சியிலும் ஒரு டன் பெவிகாலை தள்ளி அடைத்து இருக்கிறார் ,...)


15 comments:

K.s.s.Rajh said...

////ஆம்பளையா இருந்தா அவுத்து விடுடா என்று ஒரு மிலிட்டரி ஆபிசர் கேட்டவுடன் கருணை உள்ளத்தோடு அவுத்து விடும் தீவிரவாதியை விஜயகாந்த் கூட பார்த்திருக்க மாட்டார் ////

ஹி.ஹி.ஹி.ஹி............

SRI said...

pooda pub=ndalaakka

star parthiban said...

nee ajith rasiganan endranalla padam nalla illanu sollalam appa billa 2 va ennanu solluva

star parthiban said...

nee ajith rasiganan endranalla padam nalla illanu sollalam appa billa 2 va ennanu solluva

"ராஜா" said...

@ sri & star parthiban

என்னதான் சொல்ல வரீங்க ... கொஞ்சம் தெளிவா சொல்லுங்க பாஸ்
... அது சரி உங்க டுபாக்கூர் இதுவரைக்கும் ஓடாத படத்துக்கெல்லாம் மூணாவது நாளே சக்சஸ் மீட் வச்சது அந்த ஆண்டவனுக்கே பொறுக்கலை பாத்தீங்களா? இந்த படத்துக்கு அது மாதிரி ஒரு மீட்டிங் வைக்கவே முடியாதபடி பண்ணிட்டான் ...

priyan said...

you stupid... nee ajith fanthanada... unna mathiri aatkalaiyellam pidichchi encounterla podanumda.

priyan said...

ARM is best director, unnala ramanaala varra oru sceneavathu yosikka mudiyumada.... neeyellam vimarchanam panna vanthutta....

"ராஜா" said...

@ priyan

போங்க பாஸ் வெத்து துப்பாக்கிய காட்டி எங்களை பயமுறுத்த முடியாது

தமிழ் சினிமா வரலாற்றிலேயே இப்படி ஒரு படம் எடுத்ததுக்கு எங்களை மன்னிச்சிடுங்கன்னு இயக்குனர் தயாரிப்பாளர் ஹீரோன்னு எல்லாரும் ஒன்னுகூடி பொது மன்னிப்பு கேட்ட முதல் படம் உங்க டாக்குட்டர் படம்தான்

Karthikeyan said...

//பொறுப்பு என் மனைவியிடம் கொடுக்கப்பட்டதால் எளிதாக

தப்ப முடியவில்லை// வாய்ப்பே இல்லை.

அப்புறம் கவனிச்சீங்களா? ஒரு நாய்க்குட்டிய வச்சு ஒரு தீவிரவாத கும்பலையே கண்டுபிடிக்கிறதும் (கதவை திறந்தே வச்சிருக்காங்க) அத்தனை ஏகே47 யும் ஒரு பிஸ்டலை வச்சி போட்டு தள்றதுக்கும் ஒரு திறமை வேணும்ல.. அப்புறம்
உடைஞ்சு போன கையை இன்னொரு கையால தூக்கி மாட்டுறாரே.. அடடடா.. டாக்டர்னு நிருபிச்சிட்டாரு.. உங்க தலை எல்லாம் கை உடைஞ்சா கட்டுதான் போடுவாரு.. நாங்க எல்லாம் வெறும் கையாலயே தூக்கி மாட்டுவம்ல..

"ராஜா" said...

// வாய்ப்பே இல்லை.

அங்கயும் இப்படிதானா sir?

//உடைஞ்சு போன கையை இன்னொரு கையால தூக்கி மாட்டுறாரே.. அடடடா.. டாக்டர்னு நிருபிச்சிட்டாரு..

சார் டாக்குடர் பட்டம் வாங்கிட்டு இதைகூட பண்ணலேனா எப்புடி?

Rajesh kumar said...

நண்பா நானும் படம் பார்த்தேன், நெறைய லாஜிக் ஓட்டைகள் இருந்தாலும் எனக்கு படம் நல்லாவே இருந்தது மாதிரி தோணிச்சு. பெரும்பானமையான மக்களோட எண்ணமும் இதுதான்.. கிளைமாக்ஸ் காமெடி செம்ம காமெடி அத தவிர்த்து பார்த்தா டீசெண்டா தான் இருந்திச்சு.. அணில் இந்த படத்துல தப்பிச்சிட்டான்னு தான் சொல்லணும்..

aro said...

are you man?

"ராஜா" said...

@ rajeshkumar

நண்பா அணிலை மிலிடரி ஆபிசராக பார்க்கும் பொழுது எப்படி இருந்தது ... சாமி படத்தில் அணில் நடித்திருந்தால் அந்த படம் என்ன கதியாகியிருந்திருக்குமோ அதுதான் துப்பாக்கிக்கும் ஆகியிருக்கிறது .... ஹீரோ சரியாக அமைந்திருந்தால் (கம்பீரமான ராணுவ வீரனாக உடல் மொழிகளால் அசத்தும் ஹீரோவாக இருந்திருந்தால் ) சாமி போலவே இதிலும் லாஜிக் ஓட்டைகள் பெரிதாக துருத்தி கொண்டிருந்திருக்காது ... எனக்கு படம் பிடிக்காமல் போனதற்கு பெரிய காரணமே இதுதான் நண்பரே ... அணில் ரசிகர்களுக்கு வேண்டுமானால் அவர் இதற்க்கு முன்னாள் நடித்த படங்களை விட நன்றாக நடித்திருப்பதாக தெரியலாம் , ஆனால் கேப்டன் அளவுக்குகூட இவரை ஏற்றுகொள்ள முடியவில்லை

Karthikeyan said...

//அங்கயும் இப்படிதானா sir?// எங்கயுமே இப்படித்தான்.. :-)

"ராஜா" said...

// எங்கயுமே இப்படித்தான்.. :-)

ஆனால் அதுலயும் ஒரு சந்தோசம் இருக்குது சார் ... அவங்க சந்தொசபடுவதை அவங்க முகத்தில் பார்க்கும் சந்தோசம் இருக்கே கோடி கொடுத்தாலும் கிடைக்காது சார் ... (உங்களுக்கு தெரியாததா?)

LinkWithin

Related Posts with Thumbnails