இப்பொழுது இணையத்தில் ஒரு விதமான அறிவாளி கும்பல் ஒன்று பல்கி பெருக ஆரம்பித்திருக்கிறது , அது என்னவென்றால் அஜித் விஜய் போன்ற நடிகர்கள் நடிக்கும் படங்களை (ஹீரோயிசம் காட்டும் படங்களாம் ) பார்ப்பவன் ரசிப்பவன் எல்லாம் படு முட்டாள்கள் போலவும் ஷங்கர் , ஆனந்த் , மிஸ்கின் போன்ற பெரிய பெரிய இயக்குனர்கள் (அவர்கள் பார்வையில் திறமையான இயக்குனர்கள் ஆனால் உண்மையில் வயதிலோ இல்லை உருவத்திலோ மட்டும் ) எடுக்கும் படங்களை மட்டும் ரசிப்பவர்கள் பெரிய அறிவாளிகள் போலவும் தாங்களாகவே கற்பனை செய்து கொண்டு எழுதும் காமெடி பீசுகள் அடங்கிய கும்பல் அது ... அதில் பெரும்பாலும் வெளிநாட்டில் பொட்டி தட்டும் மாமேதைகளும் , சில உள்நாட்டு பொட்டி தட்டும் சராசரி மேதைகளும் அடங்குவார்கள் .. இத்தகைய தனக்கு தானே அறிவாளிகளின் முகத்தில் காரி உமிழ்ந்து செருப்பால் அடித்திருக்கிறார் K.V.ஆனந்த் ..
திருக்குறளுக்கு அகர முதல போல தமிழ் சினிமாவுக்கு பழிவாங்குதல் , இந்த படத்திலும் அதையேதான் காட்டியிருக்கிறார்கள் ஆனால் ஒட்டி பிறந்த இரட்டையர்கள் , ஒலிம்பிக் , ஊக்க மருந்து , பால் பவுடர் , அடுத்த தலைமுறை ஆபத்து என்று சுபாவின் கைவண்ணத்தில் கலந்து கட்டி அடிக்க முயரசித்திருக்கிரார்கள் ஆனால் அவர்கள் படத்தில் காட்டும் எனேர்ஜியான் போலவே பார்பவர்களுக்கு பேராபத்தாக வந்திருக்கிறது படம்... முருகதாஸ் தன்னுடைய அறிவியல் வாத்தியாரை பழிவாங்க ஏழாம் அறிவு எடுத்ததை போல இந்த ஆனந்த்துக்கும் அவர் கெமிஸ்ட்ரி வாத்தியார் மேல என்ன கோபமோ? அவரை இந்த படத்தின் மூலம் நீயெல்லாம் கிளாஸ் எடுத்தா எனக்கு கெமிஸ்ட்ரி இப்படிதான் அரைகுறையா மண்டையில ஏறும் என்று கல்பாத்தியின் காசில் ஊருக்கே வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார்.. இனி ஆனந்த்துக்கு நான்தான் வாத்தியார் என்று அவரால் பெருமையாக சொல்லிக்கொள்ள முடியாது ..
இந்த படத்தில் சூரியா ரெட்டையாக நடித்திருக்கிறார் . இரண்டு வேடம் என்றால் ஒருவன் நல்லவனாகவும் இன்னொருவன் மோசமானவனாகவும் இருக்க வேண்டும் என்று குடியிருந்த கோயிலில் வாத்தியார் சொல்லித்தந்த பாடத்தை இந்த படத்திலும் கடைபிடித்திருக்கிறார் , ஆனால் சூரியா என்றால் வித்தியாசம் என்று ஒக்ஸ்போர்ட் அகராதியிலேயே அர்த்தம் இருப்பதால் அதையும் காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்துக்காக கதைக்கோ , திரைகதைக்கோ கொஞ்சம் கூட தேவையே இல்லாமல் ஒட்டி பிறந்த ரெட்டையாக நடித்திருக்கிறார் ... அதில் ஒன்றில் ஆயுத எழுத்து சூரியா போலவும் , இன்னொன்றில் அயன் சூரியா போலவும் உடல்மொழி காட்டி நடித்திருக்கிறார் , இந்த மொக்கை நடிப்புக்கு வாலி அளவுக்கு போக தேவையில்லை என்பதால் சாருலதா என்ற படத்தில் பிரியாமணி இதைவிட அபாரமாக இரண்டு வேடங்களை வித்தியாசபடுத்தியிருப்பார் என்பதோடு ஒப்பீட்டை முடித்து கொள்கிறேன்... சருலாதாவில் பிரியாமணி பறந்து பறந்து சண்டை போட இயக்குனர் வாய்ப்பளிக்கவில்லை என்பதால் சூரியா ரசிகர்கள் ( தனக்கு தானே அறிவாளிகள் ) சண்டைகாட்சிகளில் சூரியா கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார் என்று சொல்லி தங்களை ஆறுதல்படுத்திகொள்ளலாம்...
காஜல் அகர்வால் இந்த படத்தில் குடும்ப குத்துவிளக்கா இல்லை அயிட்டமா? அழகாக இருக்கிறாரா இல்லை மொக்கையாக இருக்கிறாரா? என்று எந்த பரிமாணத்திலும் அவரை புரிந்து கொள்ளவே முடியாத அளவுக்கு அவர் பாத்திரத்தை செதுக்கியிருக்கிறார் இயக்குனர் ... ஒரு சூரியாவை காதலித்து விட்டு அவர் இறந்த உடனே கொஞ்சம் கூட காத்திருக்காமல் அடுத்த பாடலிலேயே இன்னொரு சூரியாவை காதலிக்க ஆரம்பிக்கிறார்.. இரண்டாம் பாதியில் sub title போடுவதால் தயாரிப்பாளருக்கு ஆகும் வீண் செலவை குறைக்க மட்டுமே பயன்படுகிறார்...
இயக்குனர் ??? வழக்கமாக கேப்டன் , இளையதளபதி போன்றவர்கள் செய்து கொண்டிருந்தத அதே மக்களை அழிக்க நினைக்கும் தீவிரவாதிகளை , ரௌடிகளை ஹீரோ துவம்சம் பண்ணும் கதைதான் ... அதில் அவர்கள் அதீத பில்ட் அப்புடன் பஞ்ச் வசனங்கள் பேசி கொண்டு செய்ததை நம் ஹீரோ பஞ்ச் எதுவும் பேசாமல் அமைதியாக செய்தால் போதும் , அதோடு கொஞ்சூண்டு அறிவியலை கலந்து விட்டால் ரசிகர்கள் திருப்திபட்டு விடுவார்கள் என்று நினைத்து விட்டார் போலும் ... இரண்டாம் பாதியில் திரையரங்கில் இருக்கும் ஒவ்வொரு ரசிகனும் கொலைவெறியோடு எப்படா படத்தை முடிப்பீங்க நான் வீட்டுக்கு போய் நிம்மதியா தூங்கனும்டா என்று கதறி கொண்டிருக்கிறான்... முதல் பாதியில் எனேர்ஜியான் குடித்த குழந்தை போல சுறுசுறுப்பாக இருக்கும் ரசிகனை இரண்டாம் பாதியில் பால்டாயில் குடித்த பஞ்சாயத்து போல படுக்கையில் கிடத்தி விடுகிறார் ...
ஹாரிஸ் புண்ணியத்தில் தலைவலியும் , வெளியே பெய்த மழை மற்றும் திரையரங்க ஏ சி புண்ணியத்தில் காய்ச்சலும் , ஒடுக்கமான சீட்டில் பொழுதே போகாமல் இரண்டு மணி நேரமாக நெளிந்து கொண்டே இருப்பதால் மூட்டு வலியும் நமக்கு மாறி மாறி வருகிறது ... இது போதாதென்று கடைசியாக கிளைமாக்ஸில் இயக்குனர் இனிமே என் படத்தை பாக்க வருவியா என்று நம்மை துடைப்பகட்டையால் அடித்து துவைக்கிறார் ... அப்பாடா இதோட நம்மளை விட்டுடுவாங்கடா என்று பெருமூச்சு விட போகும் போதே அடுத்த தண்டனையாக சூரியா நம்மை எலியை விட்டு கடிக்க வைக்கிறார் ... இப்படி ஒவ்வொரு தண்டனையாக அவர்கள் நமக்கு கொடுத்து கடைசியாக போனால் போகிறது என்று பெரிய மனது வைத்து சுபம் போடும் வேளையில் குற்றுயிரும் குலையுருமாக கிடக்கும் ரசிகனை தூக்கி செல்ல ஒவ்வொரு திரையரங்கின் வெளியிலும் கருணை உள்ளம் கொண்ட அம்மாவின் 108 ஆம்புலன்ஸ் ஒன்றை நிறுத்தி வைத்தால் இந்த படத்தை எடுத்து சேர்த்து கொண்ட பாவத்தை கல்பாத்தி கொஞ்சம் குறைத்து கொள்ளலாம்...
இந்த படத்தில் எனக்கு பிடித்திருந்த ஒரே ஒரு நல்ல விஷயம் பாடல் காட்சிகளில் கண்ணை கவரும் ஒளிவண்ணம் ... கேமராமேன் வேறு ஒருவர்தான் என்றாலும் இதில் கண்டிப்பாக ஆனந்தின் பங்கு இருந்திருக்கும் என்று நினைக்கிறேன் ... அவ்வளவு அழகு ... ஆனந்த் தான் ஒரு சிறந்த இயக்குனர் என்பதை விட சிறந்த ஒளிபதிவாளர் என்பதை இந்த படத்தின் மூலம் நிரூபித்திருக்கிறார் ... இயக்குனராக ஆனந்த் இந்த படத்தில் என்னை அட போட வைத்த ஒரே ஒரு காட்சி ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற விளையாட்டு வீரர்களின் இன்றைய நிலையை காட்டும் அந்த காட்சிதான்... ஆனால் அந்த காட்சியை பார்த்த பொழுது கனா கண்டேன் , அயன் , கோ எடுத்த ஆனந்த்தான் என் ஞாபகத்துக்கு வந்தார் .. அதீதமான புகழும் ஒரு வகையில் இவர்கள் காட்டும் எனர்ஜியான் போலத்தானோ?
4 comments:
அருமையான விமர்சனம். இந்த மொக்க படத்துக்கு சாருலதா எவளவோ தேவலாம்னு சொல்றாங்க. ஆமா என்ன இப்பலாம் டாக்டரை பத்தின பதிவுகள் போடுறதில்ல. இந்த டாக்டர் ரசிகனுங்க வேலாயுதம் அப்புறம் நண்பன் படத்த எல்லாம் பிளாக்பஸ்ட்டர் நு சொல்லிக்கிட்டு திரியறானுங்க. அத பத்தியாவுது ஒரு நல்ல பதிவா போடுங்க.
ரொம்ப நாள் கழிச்சி வந்தாலும் சூடு குறையவே இல்லை. மொத்ததில படம் தேறாதுன்னு சொல்லீட்டிங்க.. நன்றி.
அப்படியே இந்த லிங்க் போய் பாருங்க.. உங்க விமர்சனத்தில உள்ள உண்மை... http://www.amsenthil.com/2012/10/blog-post_15.html
@ Enathu Ennangal
செத்த பாம்பை எத்தனை தடவதான் அடிக்கிறது .. நீங்க keettuteenga அதனால சொல்லுறேன் ... பரிட்ச்சையில எப்பவும் என்பது மார்க் வாங்குறவன் எப்பவாவது முப்பது மார்க் வாங்குனா அவனை எல்லாரும் திட்டுவாங்க ,., ஆனா எப்பவுமே ஜீரோ வாங்குறவன் எப்பவாவது ஒரு இருபது இருபத்தைந்து வாங்கிட்டானா அவனுக்கும் அவனை சுத்தி இருக்கிரவனுக்கும் ரொம்ப சந்தோசமா இருக்கும் ... நம்ம தலைவலி அந்த ஜீரோ மார்க் வாங்குற பையன் மாதிரிதான் .
@ Karthikeyan
ஆணி கொஞ்சம் அதிகம் , இருந்தாலும் இந்த படம் பார்த்த உடன் இதை பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது அதான் ஆணிகளை ஒதுக்கி விட்டு இதை எழுதினேன் ... படம் ரொம்பவும் நீளம் என்பதுதான் படம் பார்த்த அனைவரும் சொல்லும் விஷயம் ... ஜவ்வு மிட்டாய் என்ற உவமைக்கு சிறந்த உதாரணம் இந்த மாற்றான்
அடிக்கடி எழுதுங்க தல..
Post a Comment