Followers

Copyright

QRCode

Saturday, September 15, 2012

கூடங்குளம் - ரிஸ்க் எங்களுக்கு ரஸ்க் உங்களுக்கா?


செர்நோபில் அணு உலை விபத்து பற்றி அறிந்ததுண்டா? உக்ரைனில் இருந்த ஒரு ரஷிய கம்பெனி உலை அது ...இது வரை நடந்த அணு உலை விபத்துகளில் மிக மோசமான விபத்து , விபத்து நடந்தவுடன் நேரடியாக சுமார் நான்காயிரம் மக்கள் உயிரிழந்தனர். அடுத்த நான்கு வருடங்களில் சுமார் பத்து லட்சத்துக்கும் மேற்பட்டோர் கதிரியக்க தாக்குதலால் கேன்சர் வந்து இறந்துள்ளனர். அந்த விபத்து நடந்த சமயத்தில் அந்த அணுஉலைக்கு அருகில் இருந்த பிபியட் என்ற நகரமே அழிந்து விட்டது.. அங்கு குடியிருந்த ஏறக்குறைய அம்பதாயிரம் பேர் அகதிகளாக வேறு இடங்களுக்கு இடம்பெயர்த்தபட்டனர்... அந்த விபத்து நடந்த சமயம் ரஷ்யாதான் அணு விஞ்ஞானத்தில்  முன்னோடியாக இருந்தது என்பது இங்கே கவனிக்கப்பட வேண்டியது . ஏகப்பட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள் பயன்படுத்தபட்டிருந்தாலும் அணு உலையில் வேலை செய்த ஒரு ஊழியர் செய்த சிறு தவறு இவ்வளவு பெரிய விபத்து உருவாக காரணமாகி விட்டது..

                                            (பிபியட்டின் இன்றைய நிலைமை )
இப்பொழுது அதே ஆபத்து நம் தலைக்கு மேலும் தொங்குகிறது.. முழுமையான பாதுகாப்பு உபகரணங்கள் செயல்படுத்த பட்ட செர்நோபிள்ளே வெடிக்கும் பொழுது , இந்தியாவில் என்னவெல்லாம் நடக்க வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லவும் வேண்டுமா? போபால் விஷ வாயு கசிவு நாம் அனைவரும் அறிந்ததுதானே.. அங்கெ  தொழிற்சாலையில்   கசிவு ஏற்படாமல் தடுக்கும் எந்த பாதுகாப்பு வழிமுறைகளும் பயன்படுத்தப்படவில்லை... அப்படிப்பட்ட ஒரு ரசாயன கம்பெனிக்கு நம் அரசாங்கமும் பாதுகாப்பானது என்று முத்திரை குத்தி அனுமதி வழங்கியிருந்தது... அரசாங்கத்தின்  அக்கறை இல்லாத தன்மையினால்   சுமார் முப்பது லட்சம்  மக்கள்   ஒரே  இரவில்   மாண்டனர் , அந்த விபத்தின் பாதிப்பு இன்னமும் அங்கு தொடர்கதையாக தொடர்ந்து  கொண்டே  இருக்கிறது .  அந்த விபத்துக்கு காரணமான அரக்கர்களை  நம் இந்திய அரசாங்கமே பாதுகாப்பாக தனி விமானத்தில் ஏற்றி அவர்கள் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்த துரோகமும் அரங்கேறியது... அப்படிப்பட்ட ஒரு அரசாங்கம்தான் இன்று நம்மூரில் அதை விட ஆபத்தான அணு உலையை தொடங்கியிருக்கிறது... இந்த அணு உலை நாட்டின் மின்சார தேவையை பூர்த்தி செய்யவாம்... ஜப்பான்  , அமேரிக்கா  போன்ற  பெரிய பெரிய ஜாம்பவான்களே  அணு உலைகளே   வேண்டாம் என்று அவற்றை மூட தொடக்கி இருக்கும் இந்த காலத்தில் நம் அரசாங்கம் எந்த கவலையும் இல்லாமல் இங்கே தொடங்கிவிட்டது,,, அதுவும் உலகிலேயே மக்கள் குடியிருக்கும் பகுதிக்கு மிக அருகில் இயங்க போகும் ஒரே அணு உலை என்ற பெருமையோடு... ஆம் உலகில் வேறு எங்கும் மக்கள் அதிகம் குடியிருக்கும் பகுதிகளில் அணு உலை கிடையாது  ... 

இந்த அணு உலையால் நமக்கு கிடைக்க  போகும் ஒரே லாபம்  மின்சாரம் மட்டுமே , அணு உலைகள் மூலம் மின்சாரம் தயாரிப்பது தோல்வியடைந்த  முறை , இந்த முறையில்   அதிக முதலீடு , அதிக உயிர்  பணயம்     வைத்து    மிக குறைந்த அளவே மின்சாரனம்தயாரிக்க முடியும் ..  இதை விட நீராற்றல் மூலம் இதை விட குறைந்த செலவில் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லாமல் அதிக அளவில் மின்சாரம்  தயாரித்து     விடலாம்   ...  நம்மூரில்தான் நீர் வளம்    குறைந்து   விட்டது   ஆனால்  வடக்கில்   இன்னமும் மழைகாலங்களில் வெள்ளம்  பெருக்கெடுத்து   ஓடும் அளவுக்கு மழை பெய்கிறது ... நம் அரசாங்கம் உண்மையிலேயே மக்கள் நலனில் அக்கறை கொள்வதை இருந்தால் இந்தியாவில் இருக்கும் அத்துணை  நதிகளையும்   இணைத்து வீணாய்  போகும்  தண்ணீரை   விவயசாயத்திர்க்கும் , மின்சாரம் தயாரிப்பதற்கும் பயன்படுத்தி கொள்ளலாம் , இதன் மூலம் யாருக்கும் எந்த ஆபத்தும் இல்லை ,  மேலாக   எங்கள் தண்ணீர் பஞ்சம் தீரும் உங்களுக்கு அபரிமிதமாக மின்சாரம் கிடைக்கும்.. அதை விட்டு விட்டு  இப்படி   ஒரு  ஆபத்தை   எங்கள்  தலையில் கட்டி அதில் கொஞ்சமே கொஞ்சம் மின்சாரத்தை  மட்டும்  கொடுத்து மீதி முழுவதையும்   டெல்லிக்கு எடுத்து செல்லும் உங்கள் தந்திரத்தை நாங்கள் எப்படி  ஆதரிக்க   முடியும்...

இதில் அணு உலைகள் பாதுகாப்பானது என்று பொய் பிரச்சாரம் வேறு ... ஒரு சாதாரண ரசாயன ஆலையவே  காசு   வாங்கிகொண்டு பாதுக்காப்பாக  நடத்தாத  நீங்கள் எப்படி அணு உலையை பாதுக்காப்பாக  நடத்துவீர்கள் என்று நாங்கள் நம்புவது ? அணு உலைகள் பாதுக்காப்பானது  என்று முழங்கும்   வட  இந்திய மீடியாக்களும் அரசியல்வாதிகளும் முதலில் டெல்லிக்கு அருகிலும் மும்பைக்கு  அருகிலும் அணு உலைகளை  பாதுகாப்பாக  நடத்தி விட்டு பிறகு கூடங்குளத்துக்கு   வரட்டும்  அனுமதிக்கலாம் ... இதில் சில அறிவு  ஜீவிகள்  கூடங்குளம் மிகவும்  பாதுகாப்பான  இடம்  அங்கு பூகம்பம்  வருவதற்கு  வாய்ப்பே  இல்லை என்று கணித்து  சொல்லியிருக்கிறார்களாம்... நாளைக்கு மழை வருமா வராதா என்றே  கணிக்க முடியாத நிலையில்தான் நாம் இன்று இருக்கிறோம் , இதில் பூகம்பத்தையும் சுனாமியையும் மட்டும் சரியாக  கணித்து  விட முடியுமா? எதிர்காலத்தில் நமக்கும் சீனாவுக்கும் போர் மூள்வதற்கு ஏகப்பட்ட வாய்புகள் இருக்கும் நிலையில் , அப்படி ஒன்று நடந்தால் சீனாக்காரன் இலங்கை வழியாக நமக்கு வைக்கும் முதல் ஆப்பு கூடங்குலமாகத்தான்  இருக்கும்... நாளை  இவற்றில் ஏதாவது ஒன்று நடந்து பெரிய ஆபத்து நேர்ந்தால் அதனால் பாதிக்கப்பட  போகும் பல்லாயிரக்காணக்கான  தமிழனில் என் சந்ததியாரும் இருப்பார்கள் என்ற பயம்தான் என்னை இந்த பதிவு  எழுத  தூண்டியது  ... அப்படி ஏதாவது ஒன்று நடந்தால் அரசாங்கமும் மீடியாக்களும் அதிகபட்சம்  இரங்கலை மட்டும் தெரிவித்து அடுத்த வேலையை பார்க்க போய் விடும் , ஏன் போபாலில்  நடந்ததை போல காசுக்காக நம் மக்களை கூட்டிகூட கொடுக்கும் ... ஆனால் அழியபோவது நாம்தானே... மனித தவறுகளும் , இயற்க்கை அழிவுகளையும் யாராலும் தடுக்க முடியாது என்பதால் வரும் முன்னரே காப்பதுதானே சிறந்தது...    

1 comment:

Karthikeyan said...

குஜராத்தில் மோடி சூரிய மின்சாரத்தை தயாரித்து நாட்டுக்கே முன்னோடியாக இருக்கிறாரே.. அதை கட்டுரையில் விட்டுட்டீங்களே நண்பா.. நம்ம ஊரில்தான் மழை குறைந்து வெயில் அதிகமாக இருக்கிறதே.. இந்த சூரிய மின் திட்டத்திற்கு நம் ஊர் நல்ல இடம் தானே.. சுற்றுப்புற சூழல் பிரச்சினையும் கிடையாதே.. எல்லாரும் பணம் திண்ண நாம் சாகணுமா...

LinkWithin

Related Posts with Thumbnails