Followers

Copyright

QRCode

Monday, September 3, 2012

சூப்பர் ஸ்டாரே ஏன் இந்த கொலைவெறி?

நம்ம சூப்பர் ஸ்டாருக்கு காமராஜர் , அண்ணா மேல அப்படி என்ன கடுப்புன்னு தெரியவில்லை , அவர்களை நம்ம கருணாவுடனும் ஜெயாவுடனும் சேர்த்து வைத்து பேசி அவர்கள் டவுசரை அவுத்திருக்கிறார், காமராஜர் அண்ணாவை போல இவர்கள் இருவருமே சாகா வரம் பெற்றவர்களாம் , சூப்பர் ஸ்டார் அவர்களே உங்களுக்கு காமாராஜரை பற்றி ஏதாவது தெரியுமா? இல்லை சும்மா அவரை பற்றி ஒன்றும் தெரியாமலே அடித்து விடுகிறீர்களா? எதற்கு கேட்கிறேன் என்றால் காமராஜரை பற்றி கொஞ்சமே கொஞ்சமேனும் தெரிந்தவர்கள்  கூட அவரை இப்படி ஜெயா , கருணாவுடன் ஒப்பிடும் மடத்தனத்தை செய்யமாட்டார்கள்... சாக்கடையை போய் யாராவது சந்தானம் என்பார்களா? சூப்பர் ஸ்டாரின் பேச்சு அப்படிதான் இருக்கிறது , உங்களுக்கு கருணா ஒரு "நண்பர் " அவரை அவ்வப்பொழுது குஷி படுத்திக்கொண்டு இருக்க வேண்டும்  , ஜெயா இப்பொழுது அதிகாரத்தில் இருப்பதால் அவரின் ஆதரவு உங்களுக்கு வேண்டும் , இவை இரண்டும் வேண்டும் என்றால் நேரடியாக மற்ற அரசியல் சினிமா ஒட்டுண்ணிகள் போல அவர்கள் புகழை மட்டும் பாடிவிட்டு செல்ல வேண்டியதுதானே , அப்படி செய்தால் உங்களுக்கும் உங்கள் ரசிகர்களுக்கும் இருக்கும் அல்லது இருப்பதாக நீங்களும் உங்கள் ரசிகர்களும் மட்டும் சொல்லிகொண்டிருக்கும் கெத்து உங்களை விட்டு போய்விடுமோ? அதற்காக நீங்கள் யதார்த்தமாக பேசுகிறேன் , எந்த பக்கமும் சாயாமல் பேசுகிறேன் என்று நினைத்து கொண்டு இரண்டு பேருக்கும் மறைமுகமாக சொம்படிப்பதர்க்கு ஏன் அந்த பெருந்தலைவர்களை அசிங்கபடுத்த வேண்டும்... இப்படியெல்லாம் பேசினால் உங்கள் ரசிகர்கள் வேண்டுமானால் தங்கள் மனசாட்சியை கழட்டி வைத்து விட்டு உங்களை நேர்மையின் சின்னமாக உயர்த்தி பிடிக்கலாம் , ஆனால்  சாதாரண தமிழன் உங்களை என்ன சொல்கிறான் தெரியுமா? வேண்டாம் அதை இங்கே சொன்னால் என்னையும் என் குடும்பத்தையும் கெட்ட வார்த்தைகளில் திட்ட ஒரே கும்பலே களம் இறங்கும் அபாயம் இருக்கிறது..

ரஜினி ரசிகர்களே ரஜினி சினிமாவில் ஒரு வசூல் சக்கரவர்த்திதான் , தென்னிந்தியாவிலே , ஏன் இந்தியாவிலேயே ஏன் ஆசியாவிலேயே அவர் அளவுக்கு ரசிகர்கள் பட்டாளம் யாருக்கும் கிடையாது , இனிமேலும் யாருக்கும் வராது , இதெல்லாம் உண்மைதான் நான் மறுக்கவில்லை , ஆனால் இவை எல்லாம் சினிமாவில்தான் , சினிமாவுக்கு வெளியே  குறிப்பாக அரசியலில் அவர் பெரிய பூஜ்யம் , உண்மையான நேர்மையாளன் எவனும் கருணாவையும் ஜெயாவையும் ஒரு வார்த்தை கூட பாராட்ட மாட்டான் , அவனின் நேர்மை அவனை அதை செய்ய விடாது , ஆனால் ரஜினியால் அவர்களை காமராஜராக கூட பார்க்க முடிகிறது , இதுதான் நேர்மையா? இதற்க்கு பெயர் இயலாமை , இதை இயலாமை என்றுகூட நீங்கள் ஒத்து கொள்ளவேண்டாம் ஆனால் நேர்மை என்று மட்டும் வாய் கூசாமல் சொல்லாதீர்கள... 

இந்த விசயத்தில் ரஜினி , அவர் ரசிகர்கள் செய்த தவறை விட நம் ஊடகங்கள் செய்த தவறுதான் மிக பெரிய தவறு ... சினிமா போதைக்கு ஒரு இனம் அடிமையாக இருந்தால் அங்கெ உண்மையான தலைவர்களுக்கு என்ன மதிப்பு இருக்கும் என்பதற்கு நம் தமிழகம் ஒரு மோசமான பெரிய உதாரணம்... ரஜினி இப்படி பேசியதை போல வேறு யாராவது வீரமணியோ , திருமாவோ இப்படி பேசியிருந்தால் இந்நேரம் செய்தி ஊடகங்கள் அவர்களை நாரடித்திருக்கும் , ஆனால் ரஜினி இப்படி பேசியபொழுது ஜெயா இருக்கும் மேடையில் கருணாவை உயர்த்தி பேசி நட்புக்கு பெருமை சேர்த்த ரஜினி , ஆட்சியாளர்களுக்கு பயப்பாடாத ரஜினி என்று ரஜினியை ஹீரோவாக்கி செய்தி போடுகிறார்கள். இதுவரைக்கும் எந்த ஊடகமும் ரஜினியை எதிர்த்து ஒரு கேலி சித்திரம்கூட வரையவில்லை... ரஜினியை பற்றி தவறாக எழுதி ஒரு ஊடகம் தமிழகத்தில் பிழைக்க முடியுமா என்று ரஜினி ரசிகர்கள் மார்தட்டி கொள்ளலாம்... பாவம் காமராஜர் , அவர்  இப்படி கடைசி வரை தமிழனுக்காக பாடுபட்டு அவனின் கல்வி கண்ணை திறந்து வைத்ததற்கு பதிலாக , ஏதாவது ஒரு மசாலா இயக்குனரின் படத்தில் நடித்து ஸ்டைலாக சிகரெட்டை தூக்கி போட்டு பிடித்திருந்தால் கடைசிவரைக்கும் கொடீஸ்வரானாக வாழ்ந்திருக்கலாம் அது மட்டும் இல்லாமல் உங்களை யாராவது இப்படி அசிங்கபடுத்தியிருந்தால் ஒட்டுமொத்த தமிழகமும் கொந்தளித்திருக்கும் , ஊடகங்களும் அப்படி பேசியவனை அவன் சாகும் வரைக்கும் ஏதோ தேச துரோக குற்றம் புரிந்தவனை போலவே திட்டி எழுதிகொண்டிருப்பார்கள்... எனவே தப்பு அனைத்தும் காமராஜர் பேரில்தான் என்பதால் இந்த விசயத்தில் நம்மை நாமே சுலபமாக மன்னித்து கொள்ளலாம்...


10 comments:

"ராஜா" said...

இந்த பதிவு யாருக்கேனும் பிடித்திருந்தால் தயவு செய்து தமிழ் மனத்தில் இணைத்து விடவும் ,

vasan said...

ஒரு த‌மிழ‌னின், ஏன் ஒரு ம‌னித‌னின் உண்மைக் குரலாய் உங்க‌ளின் ப‌திவு.
க‌ருண‌நிதி எப்ப‌டி ஒரு விஞ்ஞாண‌பூர்வ‌மான ஊழ‌ல்வாதியோ, அதே போன்ற விஞ்ஞாணபூர்வ‌மான வேஷதாரி. தான் பெரிய‌ ரிஷி போன்ற‌ பிம்ப‌த்துக்குள் இருந்து கொண்டே "அரசிக‌ர்"க‌ளை வெறியேற்றும் மார்ட‌ன் மேன் (அதாவ‌து...நித்தியான‌ந்தா மாதிரி)
'காம‌ராஜ‌ர்' பெய‌ரை உச்ச‌ரிக்க‌க்கூட‌ இவ‌ருக்கு எள்ளவும் த‌குதியில்லை.

vairamani said...

நூற்றுக்கு நூறு உண்மை தமிழனின் சினிமா மோகம் வெறி அழ்ந்த்தால் தான் முன்னேருவான்

Nagarajan said...

கலைஞர்,ஜெயலலிதா, இவர்கள் புகழும் நிலைத்திருக்கும் என்று தானே சொன்னார். அவர்களை நல்லவர்கள் என்று சொல்லவில்லையே. நாம் என்ன சொன்னாலும் அவர்களுக்கும் புகழ் இருக்கிறது தானே

"ராஜா" said...

புகழ் இருக்கிறது இல்லை என்பது இங்கே பிரசனை இல்லை ... காமராஜாரை போல இவர்களும் புகழ் பெற்றவர்கள் என்று சொன்னதுதான் பிரச்சனை ... காமராஜர் என்ற சொல்லை பயன்படுத்தாமல் இருந்திருந்தால் யாரும் ஒன்றும் சொல்ல போவதில்லை

Jayadev Das said...

நீங்களும் அண்ணாவை காமராஜரோடு சேத்துப் பேசி கேவலப் படுத்திபுட்டீங்க. கர்மவீரர் மக்களுக்காக வாழ்ந்தவர், அண்ணா அப்படி என்னதான் கிளிச்சாறுன்னு யார் யாரையோ கேட்கிறேன் ஒருத்தரும் பதில் சொல்ல மாட்டேங்கிறாங்க. தனக்குன்னு சொத்து சேர்க்கலைன்னு சொல்றாங்க, ஆனா மாநிலத்துக்கு என்ன செய்தார்? கருணாநிதி, எம்ஜிஆர், ஜெயலலிதா மாதிரி பெருச்சாலிங்க உள்ளே நுழைய காரணமாயிருந்தார். பானுமதி கூட கும்மாளம் போட்டுட்டு, மூக்குல பொடிய சொருகிட்டு அவரு பூட்டாரு, இப்ப சாவறது நாமதானே?

"ராஜா" said...

நண்பர் ஜெயதேவ் எனக்கும் அண்ணா மேலே நல்ல அபிப்ராயம் எதுவும் கிடையாது ... காரணம் நீங்கள் சொல்லியதுதான் நாட்டுக்கு என்ன செய்தார் என்ற சந்தேகம் எனக்கும் உண்டு .... ஆனால் காமராஜரை மட்டும் எழுதினால் என்னை குறிப்பிட்ட சாதிக்காரன் அதனால்தான் சாதி பற்றில் பொங்கி விட்டான் (காமராஜர் அந்த ஒரு ஜாதிக்காக மட்டும் உழைக்கவில்லை என்றாலும் கூட )இங்கு இருக்கும் சில விஷக்கிருமிகள் இப்படியெல்லாம் சொல்லி பதிவை திசைதிருப்பும் அபாயம் இருப்பதால் பேருக்கு ஊருகாயாய் அண்ணாவை பயன்படுத்தி கொண்டேன்

Karthikeyan said...

ஒரே ஏரியாவுல குடியிருக்காங்க ராஜா.. வீட்டுப்பக்கம் ஆட்டோ வராம இருக்கணும்னா இந்த மாதிரி பேசினாத்தான் ஆச்சு. காமராஜர் மாதிரி நல்லவங்க கூட எல்லாம் இவங்களை கம்பேர் பண்ணக்கூடாது. தமிழனுங்க செஞ்ச ஒரே புண்ணியம் காமராசர் மாதிரி ஒரு நல்லவர் நம்ம நாட்டை ஆண்டதுதான். நல்ல காரமான தேவையான பதிவுதான்..

vivek kayamozhi said...

இந்த லூசு இப்படித்தான் , இதுக்கு ஒரு எழவும் தெரியாது, ஆனால் கூமுட்ட ரசிகனுங்க விசிலடிப்பத நம்பி தன்னையும் ஒரு ஆளா நெனச்சுக்கிட்டு கருத்து சொல்ல ஆரம்பித்துவிடும். இதோட உளறல்களுக்கு சாம்பிள்: "தமிழ்நாட்ட ஆண்டவனாலும் காப்பாத்தமுடியாது, 2 . ஜெ தைரிய லச்சுமி, எதிரிகள் நண்பர்களோடு இருக்கிறார்கள்???!!! ( அது எப்படி ) , எடியூரப்பா....பிறகு கர்நாடகாவில் குசேலனுக்காக மன்னிப்பு, என்.ட்டி ஆரை கல்யாணத்துக்காக பெரியாருடன் (ஆந்திராவில் ) ஒப்பிட்டது, நாடு நிலைமை சரியில்ல, மாற்றம் வரணும்-- இந்த எலக்சனில் ( பிறகு ஏன் அரண்மனை விதூசகன் மாதிரி கருணாநிதி கூடவே இருந்தது???) இப்போ காமராசர் உளறல்.... விடுங்க பாஸ். சரக்கு நேத்து மாறியிருக்கும், இருந்தாலும் உங்க சவுக்கடிக்கு ஒரு சபாஷ். நண்பர் ஜெயதேவ் சொன்னது போல் அண்ணாவை சேர்க்க வேண்டியதில்லை. யாருக்கும் (சாதி விமரிசனம்) பயப்படாமல் தெளிவாகவே இருங்கள். குலைக்கவரும் நாய் கடிக்காது. முடிவாக ஒன்று - இந்த கருத்து யாரையும் சென்றடையவே இல்லை. உளவுத்துறை அளவுக்கெல்லாம் இந்த ஆள் ஒர்த் இல்ல. இந்த ஆளை விட நம்ம " டுமிக்கோள் " காந்த் எவ்வளவோ மேல். அட்லீஸ்ட் எதிகட்சி தலைவராகிவிட்டார்.

Easy (EZ) Editorial Calendar said...

எல்லாம் அரசியல் படுத்தும் பாடு!

நன்றி,
மலர்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)

LinkWithin

Related Posts with Thumbnails