வழக்கமாக தல படங்கள் வெளியானால் சில்வண்டு நடிகரின் ரசிகர்கள்தான் வயித்தெரிச்சலில் ஏதாவது உளறுவார்கள் , சைக்கிளில் போகிறவன் காரில் போகிறவனை பார்த்து வயித்தெரிச்சலில் திட்டும் தமிழனின் பொது புத்தியை போன்றதுதான் இதுவும் ஆனால் இம்முறை சில அதிதீவிர ரஜினி ரசிகர்களும் (கவனிக்க "சில") காண்டாகி இருப்பதை இணையத்தில் காணமுடிகிறது.. பொதுவாக ரஜினி ரசிகர்கள் நான்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று வேறு நடிகன் யாராவது சொன்னால்தான் அவர்மேல் காண்டாவர்கள் , ஆனால் இம்முறை அப்படி எதுவும் இல்லாமலே அஜித் மீது காண்டாவதை பார்க்கும் பொது ஒரு அஜித் ரசிகனாக சந்தோசமாகவே இருக்கிறது , சென்ற தலைமுறையில் ஒரு படத்தை தனியாளாக சுமந்து வெற்றிபெற வைக்கும் திறமை ரஜினிக்கு மட்டுமே கைகூடியிருந்தது , இதோ இந்த பில்லா ௨ வின் மூலம் ரஜினிக்கு பிறகு அந்த வரிசையில் அட்டகாசமாக அமருகிறார் தல... இப்படி சொல்வதால் நான் அஜித்தை அடுத்த சூப்பர் ஸ்டார் என்று சொல்லவரவில்லை , அடுத்தவரின் பட்டத்துக்கு ஆசைபடும் அல்லக்கைகள் கிடையாது நாங்கள் , தமிழ் சினிமா ராஜ்யத்தில் எங்கள் தலைக்கு என்றே ஒரு தனி சிம்மாசனம் தயாராகிவிட்டது அதில் கூடிய சீக்கிரம் எங்கள் தலையை அமர வைப்போம்...
படத்தில் தலையை பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டும் என்றால் மரண மாஸ் , இதுவரைக்கும் தலையை இவ்வளவு மாஸாக நாங்கள் திரையில் பார்த்ததில்லை , என்னடா மங்காத்தாவுக்கும் இப்படிதானே சொன்னான் என்று என்னை தொடர்ந்து வாசிக்கும் நண்பர்கள் நினைக்கலாம் , அதுதான் தல .... பில்லா ௨ பார்த்தவர்களுக்கு நான் சொல்வது புரியும்.. மன்காத்தாவில் அஜித்தின் ஸ்டைலை உயர்த்தி காட்டிய சிகரெட் இதில் இல்லை , இருந்தும் அதை விட அதிக மாஸ் , அதிக ஸ்டைல் என்று தன் உடல் மொழியை மட்டுமே வைத்து பின்னியிருக்கிறார்... அஜித்தை "தலை"யாக காட்டாமல் பில்லாவாக முழுவதுமாக உருமாற்றிய விதத்தில் சக்கிரியை எவ்வளவு வேண்டுமானாலும் பாராட்டலாம். இந்த விசயத்தில் சக்கிரிக்கு பெருமளவில் உதவியிருப்பவர் வசனம் எழுதிய ரா. முருகன்தான்... தல பேசும் ஒவ்வொரு வசனமும் நச்... படத்தை பல இடங்களில் தூக்கி நிறுத்தியிருப்பது இவரின் வசனங்கள்தான்... அடுத்து குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயங்கள் ஒளிப்பதிவும் , சண்டை காட்சிகளும்தான்.. பில்லாவின் ஒவ்வொரு காலகட்ட வாழ்க்கைக்கும் ஒவ்வொரு கலர் டோன் பயன்படுத்தியிருப்பது கேங்க்ஸ்டர் படத்துக்குரிய பீலிங்கை நமக்கு பக்காவாக உருவாக்கி தருகிறது... இந்த வருடம் சிறந்த ஒளிபதிவுக்கு என்று தரப்படும் விருதுகளில் இவர் பெயர் மிஸ் ஆனால் அது அந்த விருதுக்குத்தான் அசிங்கம் .... சிறந்த ஆக்சன் காட்சிகள் என்று பார்த்தால் படத்தின் மொத்த காட்சிகளையும் சொல்லலாம் , டிமிட்ரியாக வரும் வில்லனின் அறிமுக காட்சி ஒரு பானை சோற்றில் ஒரு சோறு பதம்.. படத்தின் அடுத்த பலம் யுவனின் பின்னணி இசை , அதவும் இடைவேளை முடிந்து அடுத்த ஒரு அரைமணி நேரத்துக்கு யுவனின் ராஜ்ஜியம்தான் ... ஏற்கனவே பில்லாவில் போட்ட அதே தீம்தான் , ஆனால் சோக காட்சிகளில் ஒரு மாதிரி ஒலிக்கிறது , சண்டை காட்சிகளில் ஒரு மாதிரி ஒலிக்கிறது ,அஜித்தை மாஸாக காட்டும் காட்சிகளில் வேறு மாதிரி ஒலிக்கிறது .... மேலே சொன்ன நான்கு விசயங்களும் இந்த பில்லா 2 பில்லா 2007 ஐ அனாசியமாக தூக்கி சாப்பிட்ட இடங்கள்... ஆனால் அந்த பில்லாவை ஒப்பிடும்போது இந்த பில்லா சறுக்கிய இடங்களும் உண்டு , அதில் முதலாவது ஹீரோயின் ... ஓமனக்குட்டி படத்துக்கு எந்தவகையிலும் உபயோகப்படவில்லை , அடுத்து இரண்டாம் பாதி,, அந்த பில்லாவின் இரண்டாம் பாதியில் இருந்த விறுவிறுப்பு இந்த படத்தில் கம்மியே , அதேபோல திரைக்கதையும் சில இடங்களில் தடுமாறியிருக்கிறது... ஆனால் இதையெல்லாம் மறக்கடித்திருப்பது தல+யுவன்+ராஜசேகர்+ சண்டை பயிற்சியாளர்களின் அசுரத்தனமான உழைப்பு.. இவர்களின் அத்துணை உழைப்பையும் ஒற்றையாளாக காப்பாற்றி இருக்கிறார் பில்லாவாகவே உருமாறி வாழ்ந்து காட்டியிருக்கும் தல.
ஒரு இயக்குனராக சக்ரி வெற்றி பெற்றிருந்தாலும் ஒரு திரைகதையாசிரியராக சறுக்கியிருக்கிறார் , முதல் பாதியில் இருந்த வேகமும் விறுவிறுப்பும் இரண்டாம் பத்தியில் கொஞ்சம் கம்மிதான் , அதை மட்டும் சரி பண்ணியிருந்தால் இந்த பில்லா தமிழ் சினிமா உலகில் ஒரு புதிய சரித்திரம் படைத்திருப்பான் அஜித்தின் ஆக்ரோசமான நடிப்பில் வாலி , வரலாறு , பில்லா , மங்காத்தா போன்று சரித்திரம் படைத்திருக்க வேண்டிய இந்த பில்லா 2 , திரைக்கதை ஆசிரியர்களின் கவனக்குறைவால் அமர்க்களம் , தீனா , சிட்டிசன், வில்லன் , அட்டகாசம் வரிசையில் அமரவேண்டியதாகி விட்டது...
டிஸ்கி: இந்த படத்தை விமர்ச்சிக்கும் சில்வண்டின் ரசிக கண்மணிகளே , இந்த படத்தில் ஏதாவது ஒரு காட்சியில் அஜித்தை மறந்து விட்டு அதற்க்கு பதிலாக உங்கள் அணிலை அந்த இடத்தில் கற்பனை செய்து பாருங்கள் , நீங்களே உங்கள் வாயை மட்டும் இல்லை சகலத்தையும் பொத்திக்கொண்டு ஓடிவிடுவீர்கள்
9 comments:
oru kuppai padam
boss kuppaikku artham theriyuma. first stomach burning guy came. innum neraiya ethirparkiren
நண்பா...........சூப்பர் விமர்சனம்...
தல வாழ்க...தல ராஜா வாழ்க...
அந்த டயலாக் ஒன்னு போதும் " டேய் என் வாழ்க்கைல ஒவ்வொரு நாளும்..." அந்த மாடுலேஷன், பவர், வாய்ஸ் , மத்த பயலெல்லாம் பாத்துட்டு தூக்குல தொங்கணும். படம் sooooooper ., ஊளை சத்தம் அதிகமா கேட்டா தல அடி பின்றார்னு அர்த்தம்.
இதற்கு வரும் எதிர்மறை விமர்சனங்கள் எல்லாமே எப்போட கொஞ்சம் அசருவான் ஏறி மிதிக்கலாம் என்ற ரீதியில் வரும் வயிற்றெரிச்சல் விமர்சனமே
"நாலுபேருக்கு நல்லது நடக்கும் னா நாம எது பண்ணாலும் தப்பே இல்ல "என நல்லவனா வாழ இவன் வேலு பாய் இல்ல, "நாம வாழனுன்னா எத்தன பேர வேணுன்னாலும் கொல்லலாம் " என்று வாழும் பில்லா. கொலைகள் ஓவர் தான்.டான் இன் வாழ்க்கையில் சந்தானம் காமெடியையும்,குத்து பாட்டையும்,செண்டிமெண்ட் முடிச்சுக்களையும் எதிர் பார்க்கலாமா? முனியாண்டி விலாசில் வெண்பொங்கல்,சாம்பார் வடையை கேட்பது வீண். யுவன் முதல் பார்ட் இல் தீம் ம்யுசிக் கை மட்டும் ஆங்காங்கே போட்டு ஒப்பேத்தி இருந்தார், ஆனால் இதில் ஒரு அகதி சர்வதேச கடத்தல் மன்னனாகும் வரை அவன் வாழ்வில் ஒவ்வொரு நொடியும் அவன் போக்கிலே நம்மையும் போகுமாறு தனது இசையால் அழைத்து சென்றிருக்கிறார். நிச்சயம் பாராட்டப்பட வேண்டிய இசை, அஜித்,சக்கரி,ராஜசேகர்,முருகன் ஆகியோருக்கு வாழ்த்துக்கள் .ஓரளவு !? சர்வதேச தரத்தில் ஒரு தமிழ் படம்.
பாஸ் உங்கள் பதிவுக்கு அப்புறம் தான் கவனிச்சேன், சில ரஜினி புராண ப்ளாக்குகள் கூட வாரி இருந்தன, வொய் திஸ் வயிறு வலி? சரி தல க்காக விட்டுருவோம். எனக்கு வாலிக்கு அப்புறம் பிடித்த படம் என்றால் பில்லா 2 வைத்தான் சொல்வேன்.சக்ரி தல ரசிகர்களுக்கு போட்ட பிரியாணி,
மதுரையில் இப்போ வரை ஹவுஸ் புல்லாக த்தான் போகிறது.கலக்டர் ரெயிட் பண்ணும் அளவுக்கும், அசிஸ்டன்ட் கமிஷனர் நேரில் வந்து லத்தி சார்ஜ் பண்ணுமளவு maaaaaaaaaaas ஓபனிங்.
சூப்பர் பதிவு நண்பா. படத்தை கண்டிப்பா கொண்டாடலாம். நல்லா தான் இருக்கு. பகிர்வுக்கு நன்றி.
நல்ல விமர்சனம்
நன்றி,
http://www.ezedcal. com (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம். பயன்படுத்தி பயன்பெறுங்கள்)
Post a Comment