இப்படி ஒரு தலைப்பு போதாதா , விடலை பசங்களை தியேட்டருக்கு இழுத்து வர? காதலுக்காக உயிரையும் விடுறவன் , அப்பன் காசு ஒரு 1௦௦ ரூபாய் கொடுக்கமாட்டானா? டைட்டில் எபெக்ட் தியேட்டரில் நன்றாக எதிரொலித்தது... அரங்கம் முழுவதும் இளசுகள் மட்டுமே. அவர்கள் எதிபார்ப்பு எல்லாம் ஒரு கலகலப்பான அதே சமயம் நெஞ்சை கசக்கி பிழியும் காதலை சொல்லும் வழக்கமான கல்லூரி காதல் கதைதான் .. கரண்ட் கட்ல வெறுத்து போயி பேசாம பக்கத்து தியேட்டரில் ஓடும் விஜய் படத்தையாவது பார்த்து தொலைக்கலாம் என்று வேண்டா வெறுப்பாக சினிமாவுக்கு போகும்பொழுது அங்க அந்த விஜய் படத்தை தூக்கி விட்டு வேறு ஒரு நல்ல படம் போட்டிருந்தால் எப்படி இருக்கும்? அப்படி ஒரு எதிர்பாராத இன்ப அனுபவத்தை கொடுத்திருக்கிறது இந்த படம்.
ஒரு லவ் சப்ஜெக்ட்ல அப்படி என்ன பெருசா சொல்லாததை சொல்லிவிட போகிறார்கள் என்று அவநம்பிக்கையோடுதான் படம் பார்க்க சென்றிருந்தேன், ஆனால் இது வழக்கமான நாக்கை அறுக்கும் , காதலிக்காக தன கிட்னியை விற்கும் காதல் இல்லை என்பதை அமலா பாலின் அறிமுக காட்சியிலேயே உணர்த்திவிடுகிறார் இயக்குனர். உன்னாலே உன்னாலேயில் ஜீவா காட்ட முயன்று தோற்ற இருபத்தி ஒன்றாம் நூன்றாண்டின் ஒரிஜினல் காதல் கதையை அசால்டாக கையாண்டு இருக்கிறார்கள் இதில்.. இந்த படத்தின் ஒரு காட்சியிலாவது அமலாபால் உங்கள் காதலியையும் , சித்தார்த் உங்கள் காதலனையும் ஞாபகபடுத்தா விட்டால் flames போடாமலே சொல்லி விடலாம் உங்கள் காதல் ரொம்ப வீக் என்று..
படத்தின் மிகப்பெரிய பலம் வசனம்தான். அமலாபாலும் சித்தார்த்தும் சண்டை போடும் காட்சிகளில் வரும் வசனங்களில் அதை எழுதியவரின் அனுபவம் நமக்கு தெரிகிறது ... பாவம் அந்த மனுஷன் எத்தனை பொண்ணுங்ககிட்ட இப்படி மொக்கை வாங்குனாரோ.. நாடி நரம்பு ரத்தம் சதை இப்படி எல்லாவற்றிலும் காதல் வெறி ஊறி போன ஒரு மனுசனாலத்தான் இப்படி வசனம் எழுத முடியும். உன்னாலே உன்னாலேவில் வரும் டைனிங் டேபிள் காட்சிக்கு பிறகு காதலை யதார்த்தமாக பிரதிபலிக்கும் வசனங்கள் இந்த படத்தில்தான் கைகூடி வந்திருக்கிறது..
இந்த படத்தில் ஹீரோ ஹீரோயின் பின்னால் நாய் போல அலையவில்லை , ஹீரோயின் எனக்கு குடும்பம்தான் முக்கியம் கருமாந்திரம் பிடிச்ச இந்த காதல் இல்லை என்று டையலாக் பேசவில்லை , நீதான் எனக்கு உயிர் மத்ததெல்லாம் வெறும் ம** என்று ஹீரோ எதையாவது தியாகம் செய்து ஹீரோயின் மனதில் இடம்பிடிக்கவில்லை , கடைசியில் ஹீரோ ஹீரோயின் இருவரில் ஒருவர் சாகவும் இல்லை ... மேலே கூறிய இந்த பல இல்லைகள்தான் படத்தின் இன்னொரு பிளஸ்
காதல் எந்த வயதிலும் வரலாம் , காதல் எத்துனை முறை வேண்டுமானாலும் எத்தனை பேர் மேல் வேண்டுமானாலும் வரலாம் , காதல் ஒருவர் மீதே பல முறை வரலாம், ஆனால் என்னதான் தலைகீழா நின்னு சுறா படம் பார்த்தாலும் உன் தலையில் எழுதவில்லை என்றால் காதல் கடைசி வரைக்கும் உனக்கு வாய்க்காது இப்படி காதலின் ஒவ்வொரு விதிகளுக்கும் ஒவ்வொரு கிளை கதைகள் படத்தில் உண்டு... அப்படி வரும் கிளைகதைகளில் அமலாபாலின் அப்பா அம்மாவுக்கு நடுவே நடக்கும் கதை மெயின் கதையை விட ரொமான்டிக்காக இருக்கிறது. அதுவும் வளையோசை கலகலவென கவிதைகள் படிக்கிது பாடலும் , அந்த லவ் லெட்டரும் செம...
பாடல்கள் , இசை , ஒளிப்பதிவு என்று எல்லாமுமே ஓகே ரகம்.. ரொமாண்டிக் காட்சிகளில் பின்னணியில் வயலின் வாசிப்பதை இளையராஜாவே நிறுத்திவிட்டார் , தமன் எப்பொழுது நிறுத்த போகிறாரோ தெரியவில்லை. பாடல்களுக்கு இசை அமைப்பதற்கு முன்னால் அவர் விண்ணை தாண்டி வருவாயாவை ஒரு முறை பார்த்திருந்திருக்கலாம்.. ஆனால் அமலாபால் வரும் காட்சிகளில் மட்டும் அவர் மனசு அமலாபால் அமலாபால்னு சொல்லி இருக்கும்போல அதுக்கு மட்டும் கொஞ்சம் உழைப்பு அதிகம் ..
அமலாபால் சொல்லிகொள்ளும் அளவுக்கு ஒன்றும் இல்லை (நடிப்பை சொன்னேன் ) , அப்படி ஒன்றும் அழகாகவும் எனக்கு தெரியவில்லை , கவர்ச்சியான நம்மை சுண்டி இழுக்கும் எந்த அம்சமும் இல்லை ... இவரை விட சில காட்சிகளில் மட்டும் வரும் SS மியூசிக் பூஜா நம்மை கிறங்கடிக்கிறார்.
தமிழ் சினிமாவின் சிம்பு தனுஸ்களை விட சித்தார்த்துக்கு திறமை அதிகம் என்பதை அவர் இதுவரைக்கும் நடித்த படங்களில் இருந்தே தெரிந்துகொள்ளலாம். இந்த படம் இதற்க்கு மிக சிறந்த உதாரணமாக அமைந்திருக்கிறது.. தமிழில் அவரின் முதல் வெற்றி படம் இதுதான் , இதை போன்ற அவருக்கு ஏற்ற கதைகளை தெரிவு செய்து நடித்தால் தமிழிலும் அவர் பட்டைய கிளப்பலாம் , நமக்கும் சிம்பு தனுஷ்களிடம் இருந்து விடுதலை கிடைக்கும்.
இந்த படம் கண்டிப்பாக கல்யாணம் ஆன , ஆகாத , காதலிக்கிற காதலிக்காத , காதலிச்ச, காதலில் கவுந்த , காதலை கவுத்த எல்லாருமே பார்க்கலாம்...
8 comments:
மிக அருமையான விமர்சனம். யதார்த்தமான உங்க உரை நடை எனக்கு பிடிக்கும்.
படத்தின் இசை தமன் என்று நினைக்கிறன். ஜி.வி.பிரகாஷ் அல்ல. திருத்தி கொள்ளவும்.
tanx for ur info... i will change it ... and tanx for ur encouragement,,
//இந்த படத்தின் ஒரு காட்சியிலாவது அமலாபால் உங்கள் காதலியையும் , சித்தார்த் உங்கள் காதலனையும் ஞாபகபடுத்தா விட்டால் flames போடாமலே சொல்லி விடலாம் உங்கள் காதல் ரொம்ப வீக் என்று.//உண்மை உண்மை எப்படி கண்டுபிடிச்சீங்க !
படத்தைப்போல உங்கள் விமர்சனமும் சூப்பர்.
@Prem S
// எப்படி கண்டு"பிடிச்சீங்க" !
வலை வீசி பிடிச்சேனுங்கோ
விமர்சனம் நடுநிலை. இன்று படம் பார்த்தேன். நீங்கள் சொன்னதெல்லாம் உண்மை. காதல் அனுபவம் இல்லை என்றாலும் ரசிக்கும் வண்ணமே இருந்தது. பூஜாவையும் சேர்த்துதான்..;)
//கரண்ட் கட்ல வெறுத்து போயி பேசாம பக்கத்து தியேட்டரில் ஓடும் விஜய் படத்தையாவது பார்த்து தொலைக்கலாம் என்று வேண்டா வெறுப்பாக சினிமாவுக்கு போகும்பொழுது அங்க அந்த விஜய் படத்தை தூக்கி விட்டு வேறு ஒரு நல்ல படம் போட்டிருந்தால் எப்படி இருக்கும்? // எப்படி தல இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க.. என்னமோ போங்க.. கலககுறீங்க... நமக்கு தான் இப்படி எல்லாம் எழுத வரமாட்டேங்குது.
பார்க்க வேண்டிய படம். உங்களது படிக்க வேண்டிய விமர்சனம். நன்று.
Post a Comment