பிரபல பதிவர் ஒருவர் திறந்த மார்பையும் , வெளிறிய இடைகளையும் பார்பதற்காக
ஆசையாசையாக வந்த ஆண்களை சிலுக்கு செருப்பால் அடித்திருக்கிறாள் என்று இந்த படத்தை பற்றி எழுதியிருந்தார்... உண்மைதான் செருப்பில் கொஞ்சம் சாணியையும் கரைத்து
அடித்திருக்கிறார்கள்... நானும் வித்யா பாலனை உரித்துக்காட்டியிருப்பார்கள் என்ற
ஆசையில்தான் படம் பார்க்க சென்றிருந்தேன்... அதனால் எனக்கும் அந்த செருப்படி பலமாக
விழுந்தது... நான் வசிக்கும் தெருவில் பரமு என்ற பெயரில் ஒரு அக்கா இருந்தாள்...
பெண்ணாக பிறந்திருந்தாலும் ஆண்களுக்கான அத்துணை பழக்க வழக்கங்களும் அவளுக்கும்
உண்டு... பீடி குடிப்பாள் , தண்ணி அடித்து விட்டு தெருவில்
சலம்புவாள்... எங்கள் ஊருக்கே கஞ்சா சப்ளை அவள்தான்... கிட்டதட்ட எங்கள் தெருவில் ஒரு பொம்பளை ரவுடியாகத்தான் அவள் வலம் வந்தாள்... ஆனால் எந்த ஆணையும் தன்னை நெருங்க விட மாட்டாள். அவளுக்கு ஆண்கள் என்றாலே ஏதோ ஒருவித இளக்காரம்
... அருகில் இருக்கும் ஒரு
மில்லில் கூலி வேலை செய்து வந்தாள் ... தன்னுடைய உடல் பசிக்கு அந்த மில்லில் வேலை
செய்யும் அப்பாவி சிறுவர்களை பயன்படுத்தி கொள்வாள்... அந்த சிறுவர்களிடம் மட்டும் அவள் மிகவும் பாசமாக இருப்பாள்... அவள்
வீட்டுக்கு எப்பொழுது வேண்டுமானாலும் செல்லும் உரிமை அவர்களுக்கு மட்டுமே உண்டு ... அவள் சம்பாதிக்கும் பணத்தையும் பெரும்பாலும் இவர்களுக்கே செலவளிப்பாள்... சமூகம் பெண்களுக்கு என்று விதித்திருந்த எந்த கட்டுப்பாட்டுக்ககுள்லும் சிக்காமல் வாழ்ந்து வந்தாள் ... விதி அவள் வாழ்க்கையில் காதல் ரூபத்தில் விளையாடியது... அதே தெருவை சேர்ந்த ஒருவனுடன்
அவளுக்கு எப்படியோ ஒரு ஈர்ப்பு ஏற்பட்டு , அவனுடன் ஊரை விட்டே ஓடிவிட்டாள்..
அவள்
உடல் வனைப்பை போலவே அவளை பற்றிய எங்களின் நினைவுகளும் கொஞ்சம் கொஞ்சமாக காலத்தில் கரைந்து விட்டிருந்தது
நீண்ட நாட்களுக்கு பின்னர் கையில் ஒரு குழந்தையோடு
அவள் ஊருக்கு வரும் வரை , இந்த முறை அவளிடம் நிறைய மாற்றங்கள் அவளிடம்
இருந்த ஆண்மைதனம் முற்றிலும் அழிந்துவிட்டிருந்தது , சண்டை சேவலாயாய் திமிறியிருந்த
அவள் உடல் , நனைந்த கோழியாய் ஓடிங்கிவிட்டிருந்தது. பிறகுதான் தெரிந்தது
கையில் ஒரு குழந்தையை கொடுத்துவிட்டு அவன் ஓடிவிட குழந்தையையும் தன்னையும் காப்பாற்றி
கொள்ள வேறு வழியில்லாமல் தன் உடலை அடமானம் வைத்து பிழைத்து கொண்டிருக்கிறாள் என்று... முன்பு அவளை
கண்டாலே பயந்து ஓடிய எங்கள் தெரு ஆண்களில் பலர் அவள் ஊரில் தங்கியிருந்த அந்த ஒரு வாரத்தில் அவளை ஆசைதீர அனுபவித்தார்கள்... ஒருவாரத்தில் அவள் சொல்லாமல்
கொள்ளாமல் ஊரை காலி செய்து ஓடிவிட்டாள். எங்கள் தெரு பெண்கள்தான் ஐந்தாயிரமோ , பத்தாயிரமோ கொடுத்து அவளை விரட்டிவிட்டனர் என்று பிறகு கேள்விபட்டேன்...
கரைகளை உடைத்து பாயும் காட்டாற்றின் பயணம் போலத்தான் இப்படிபட்டவர்களின் வாழ்க்கையும்... விதிகளை மீறும் ஆண்கள் என்றாலும் சரி பெண்கள் என்றாலும் சரி அவர்கள் வாழ்க்கை
முழுமையடைய இந்த சமூகம் விடுவதில்லை... இந்த படத்திலும் அப்படிபட்ட பெண்களின் வாழ்க்கையைதான்
செல்லுலாய்டில் பதிவு செய்திருக்கிறார்கள். சினிமா என்றாலே வியாபாரம் என்று ஆகிவிட்ட
இந்த காலகட்டத்தில் அந்த பெண்ணை ஒரு நடிகையாக காட்டினால் மட்டுமே வெகுஜன மக்களுக்கு ஒரு
சிறந்த எண்டர்டெயின்மெண்டாக அது அமையும்... ஒரே கல்லில் இரண்டு மாங்காய் குறிபார்த்து
இரண்டையும் கச்சிதமாக அடித்திருக்கிறார்கள்.
இந்த படத்தில் ஒரு வசனம் வரும் நீ ஒருத்தி
இல்லாட்டி ஒரு பெண்ணால இப்படியும் வாழ முடியும் என்று தெரியாமல் போயிருந்திருக்கும்
என்று.. அந்த வசனம் 80களின் சினிமா ரசிகனுக்கு சிலுக்கையும் , என்னை போன்றவர்களுக்கு பரமுவையும் , இன்னும் வேறு சிலரையும் ஞாபகபடுத்தி செல்லும் என்பதால் இதை சில்க்
சிமிதாவின் கதை என்று சொல்லுவதை விட சமூகத்தால் தோற்கடிக்கபட்ட பெண்களின் கதை என்று
சொல்லுவது பொருத்தமாக இருக்கும்...
கொசுறு:
வேலாயுதம் பற்றிய என்னுடைய பதிவில், முதல் பாதியில் விஜயும் அவர் தங்கையும் சேர்ந்து
போடும் மொக்கைகளை என்னால்
காமெடி என்று ஏற்று கொள்ள முடியவில்லை என்று எழுதியிருந்தேன் , ஆனால் சிலர் என்னை பின்னூட்டத்தில் மானாவாரியாக திட்டியிருந்தார்கள் , இப்பவும் சொல்கிறேன் அந்த மொக்கைகளை என்னால் காமெடி என்று
சத்தியமாக ஏற்றுக்கொள்ளமுடியவில்லை , வேண்டுமென்றால் காமெடி என்றால் என்ன
என்பதை நீங்கள் அறிந்து கொள்ள உங்களுக்கு போராளி படத்தின் முதல் பாதியை
பரிந்துரைக்கிறேன், சந்தானம் இல்லாமலே படம் பார்க்கும்
எல்லாரையும் இடைவிடாமல் சிரிக்க வைத்திருக்கிறார் சமுத்திரகனி... வேலாயுதமே ஹிட்
என்கிறார்கள் , அப்படி பார்த்தால் போராளி சூப்பர்
ஹிட்தான்...
2 comments:
http://tasmacdreams.blogspot.com/2011/12/blog-post.html
உண்மையான விமர்சனம் ... கஞ்சா கருப்பு , சூரி இருவரையும் வைத்து சமுத்திரகனி காமெடியை கொடுத்த விதம் அருமை ... போராளி விமர்சனத்திற்கு இங்கே சொடுக்கவும் போராளி - புதிய போர் பழைய களம் ...http://pesalamblogalam.blogspot.com/2011/12/blog-post.html
Post a Comment