கடந்த இரண்டு
வாரங்களாக கொஞ்சம் அதிகப்படியாக ஆணிகள் புடுங்க
வேண்டியிருந்ததாலும் அதில் சில ஆணிகளை மீண்டும் புடிங்கிய இடத்திலேயே
அறைய வேண்டியது வந்ததாலும் பதிவுலகம் பக்கம் அதிகம் தலைக்காட்ட முடியவில்லை, அதனால் கடந்த இரு வாரங்களில் நான் தவற விட்ட
சில பதிவுலக தருணங்களின்/விசயங்களின் தொகுப்பே இந்த பதிவு...
மயக்கம் என்ன?
இதுவரை விளிம்பு நிலை
மனிதர்களின் கொண்டாட்டமான வாழ்க்கையை பாலா போன்ற சில இயக்குனர்கள் திரையில்
விழித்திருந்தாலும் முதல் முறையாக செல்வாதான் மேல்தட்டு மனிதர்களின் விளிம்பு நிலை
வாழ்க்கையை இந்த படத்தில் காட்டியிருக்கிறார்... செல்வராகவனின் சிறந்த படைப்பு
என்று இதை சொல்லமுடியாவிட்டாலும் இதுவரை அவர் தந்த படங்களில் சிறந்த படம் என்று
தைரியமாக கூறுவேன் .. இப்படி சொல்ல காரணம் வருங்காலங்களில் செல்வா இதைவிட சிறந்த
படங்களை தருவார் என்ற என்னுடைய நம்பிக்கைதான் ... தமிழ் சினிமாக்களில் யதார்த்த படைப்புகள் என்று சொல்லபட்ட பல படங்கள் உண்மையில் இயல்பை விட்டு
வெகுதூரம் விலகியே இருந்திருக்கின்றன... ஆனால் நான் கண்ட தமிழ் சினிமாக்களில் பல காட்சிகளில் யதார்த்ததின் அருகே நம்மை
கூட்டி சென்ற படம் இதுதான்... ஏதோ நாமே கார்த்திக் ஸ்வாமிநாதனின் வாழ்க்கையை அவன் பின்னாலயே சென்று படம் பிடித்ததை போன்ற ஒரு கதையோட்டமே படத்தின் பெரிய பலம் , ஆனால் வணிகரீதியாக படத்திற்கு அதுவே
மிகப்பெரிய பலவீனமும் கூட... ஆடுகளம் படத்திற்கு தான் விருது வாங்கிய பாவத்தை
மயக்கம் என்ன மூலம் சரிகட்டியிருக்கிறார் தனுஷ்... படம் முடிந்து வீட்டிற்க்கு
செல்லும் கேப்பில் ஒரு தம் அடித்து விட்டு செல்லும் நோய் எனக்கு பல வருடங்களாக உண்டு, ஆனால் இந்த படம் முடிந்ததும் என் மனைவிக்கு பிடிக்காத புகையை ருசிக்க என் மனம் இடம்கொடுக்கவில்லை... எந்த ஒரு படமும்
அதிகபட்சம் இரண்டு மணிநேரம்தான் நம் மனதில் ஒரு பாதிப்பை உண்டு பண்ணும்... அந்த இரண்டு மணிநேரத்தில் அது நம்மை எப்படி யோசிக்கவைக்கிறது
என்பதில்தான் இயக்குனரின் வெற்றி இருக்கிறது... அந்த வகையில் செல்வா ரிச்சா
பாத்திரத்தை திறமையாக கையாண்டு வெற்றி கண்டிருக்கிறார் என்றே சொல்லவேண்டும்...
மயக்கம் என்ன கண்டிப்பாக திருமணம் ஆன/ஆக போகிற எல்லா பெண்களும் பார்த்தே தீர
வேண்டிய படம்...
Y this kolaveri?
தமிழ்நாட்டில்
மட்டும் இல்லை , இந்தியா
முழுவதும் , உலகம் முழுவதும் ஏன்
செவ்வாய் கிரகத்தில்கூட இந்த பாடல் பயங்கர ஹிட்டாம்... மைக்கேல் ஜாக்சன் கூட
சொர்க்கத்தில் பாசதலைவனுக்கு பாராட்டு விழாவில் இந்த
பாடலுக்குதான் ஆட்டம் போட்டு கொண்டிருக்கிறாராம்...
ஆனால் எங்க ஊர் பக்கம் யாருக்கும் இதைப்பற்றி
தெரியவே இல்லை... ஏதோ தினதந்திக்காரன் ஒரு பெட்டி செய்தி போட்டதால் அதை படித்த சிலருக்கு மட்டும் இப்படி ஒரு பாடல்
வந்திருக்கிறது என்று தெரியும்... ஆனால் அவர்களும் இந்த பாடலை கேட்டது
இல்லையாம்... பிறகு எப்படி அதை ஹிட் பாடல் என்று அறிவித்தார்கள் என்று எனக்கு
ஒன்றும் புரியவில்லை, சரி எதையும்
கேட்காமல் ஒரு முடிவுக்கு வரக்கூடாதே என்று யூ ட்யூப்பில் அந்த பாடலை கேட்டேன் சாரி கண்டேன்... முதல் முறை கேட்டபொழுது
எனக்கு கொஞ்சம் கூட பிடிக்கவே இல்லை , சரி தனுஷ் எழுதிய
பாடல் அவரை மாதிரி பாக்க பாக்கதான் நமக்கு பிடிக்கும் போல என்று எண்ணி குறைந்தது பத்து
தடவையாவது பார்த்திருப்பேன் , தனுஷ் மாதிரியே எத்தனை தடவை
பார்த்தாலும் பிடிக்கவே இல்லை... கண்டிப்பாக அந்த பாடல் கொஞ்சம் கூட வொர்த்
கிடையாது பாஸ்.. பிறகு எப்படி பிரபலமடைந்தது
... ரொம்ப சிம்பிள் பாஸ் ,
விளம்பரம் ...
முன்பெல்லாம் தென் தமிழகத்தை மட்டும் எடுத்து கொண்டால் மதுரையில் ரஜினி படங்கள் நான்கு
திரையரங்கிலும் , கமல் ,
அஜீத் விஜய் படங்கள் மூன்று திரையரங்கிலும் மற்ற நடிகர்களின் படங்கள் இரண்டு திரையரங்கிலும் எடுக்கபடும்... படம் நன்றாக இருந்தால் மட்டுமே
அடுத்தடுத்து மக்கள் பார்க்க வருவார்கள் வசூலை அள்ளமுடியும் .. ஆனால் சன் நெட்வொர்க்
எப்பொழுது சினிமா வியாபாரத்தில் இறங்கியதோ அன்றில் இருந்து எந்த திரைப்படம் என்றாலும் அதிக அரங்குகளில் இறக்கபடுகின்றன... அவர்கள் டிவியில் நொடிக்கொரு
முறை விளம்பரம் ஒளிபரப்பி ஜனங்கள் மத்தியில் ஒரு எதிர்பார்ப்பை உருவாக்கி அனைவரையும் முதல் இரண்டு நாட்களிலேயே படத்தை பார்க்க வைத்து ஓரளவு வசூலை தேத்தி விடுகின்றனர்... எந்திரனில் ஆரம்பிக்கப்பட்ட
இந்த சந்தைபடுத்தும் முறை ரா ஒன்னில் உச்சத்தை தொட்டது... இப்படி அதிக திரையரங்குகளில் படத்தை போட்டு
அதிகபடியான விளம்பரங்கள் மூலம் அதிக எதிர்பார்ப்பை உருவாக்கியிராவிட்டால் ரா ஒன் என்னும் மொக்கை படத்தால் 180 கோடி வசூலித்திருக்க முடியாது... ஷாருக்கின் முந்தைய பெரிய
பிளாக் பஸ்டர் படங்களே 2 வருடங்கள் தொடர்ந்து ஓடினாலும்
இவ்வளவு வசூலித்திருக்க வாய்ப்பில்லை... இந்த வியாபார முறை எவ்வளவு பெரிய ஹிட் என்பதை ரா ஒன் மூலம் புரிந்துகொள்ளலாம்...
இப்பொழுது எல்லா ஹீரோக்களும் இதே வியாபார முறையை பின்பற்ற
ஆரம்பித்து விட்டனர்... அதன் நீட்சிதான் இந்த y this kolaveri பாடலும் அது பிரபலமாக்கபட்ட விதமும்... இதற்க்கு முன்னர்
பட்டிதொட்டிகளில் எல்லாம் பட்டைய கிளப்பிய
ஜெமினியின் ஓ போடு , காதலில் விழுந்தேன் நாக்கு முக்கா போல இந்த பாடல் தானாக ஹிட் ஆகவில்லை , படத்தை பற்றிய எதிர்பார்ப்பை உருவாக்கவே ஹிட் ஆக்கபட்டிருக்கிறது என்று எண்ணுகிறேன்... படம் வெளிவரும் பொது
இந்த பாடல் படத்தின் பிரதான விளம்பரமாக சந்தைபடுத்தபடும்.. நாமும் வழக்கம் போல பாடலை
மனதில் வைத்து படத்திற்கு சென்று , பின்னர் புலம்ப வேண்டியதுதான்...
இம்சை அரசன் படத்தில்
ஒரு வசனம் வரும் விளம்பரபடுத்தினால் நம் மக்கள் மாட்டு மூத்திரத்தை கூட இளநீர் என்று நம்பி வாங்கி குடிப்பார்கள் என்று... 7 ஆம் அறிவுக்கு போடப்படும்
சில விளம்பரங்களையும் , இந்த y this kolaiveriயையும் பார்க்கும் போது அப்படிதான் தோணுகிறது?
கனிமொழிஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ....
ஐய்யா சாமீகளா? அக்கா ஜாமீன்லதான் வந்திருக்கு அதுக்கே இப்படியா? நாளைக்கே அக்கா வழக்குல இருந்து விடுதலை ஆகிடுச்சினா
இவனுங்க எப்படியெல்லாம் பேனர் வப்பாங்கன்னு நெனச்சாலே கண்ணகட்டுது....
மகாகவி
கொஞ்ச நாளா இவரு ஏதோ சூனியம்
வச்சது மாதிரிதான் பேசிக்கிட்டு இருக்காரு... அவரோட புஸ்தக வெளியீடு நடக்க போற தேதி நெருங்க நெருங்க அவருக்கு வச்ச சூனியமும் நல்லா
உக்கிரமா வேலைய காட்டுது போல... இல்லைனா சிம்புவை மகாகவி பாரதிக்கு
இணையா எழுதுவாரா? இங்க போயி படிங்க மக்களே அந்தகாமெடிய... இவரு சின்ன வயசுல நினைத்த வரிகளை சிம்பு இப்ப பாடியதால் சிம்பு மகாகவியாம்...
என்ன சொல்ல வராருன்னு புரியுதா மக்களே.. அவரு சின்ன வயசுலையே மகாகவி ஆகிட்டாராம்... பாரதிக்கு நேர்ந்த அசிங்கம்....
3 comments:
பாஸ்,
கொல வெறி
பற்றிய உங்கள் கருத்து சரியே.... மயக்கமென்ன இன்னும் நான் பார்க்க வில்லை.
தல யை பற்றி வலை தளங்களில் வந்த செய்திகளையெல்லாம் சேகரித்து ஒரு லிங்க் கொடுத்தால் நன்றாக இருக்கும். சமீபத்தில் வந்த புதிய தலைமுறை டி.வி. பேட்டி பற்றிய ஒரு எழுத்தாளரின் கட்டுரை, விஜயகாந்த் பட(கண்ணு பட போகுதய்யா) உதவி இயக்குனரின் அஜித்துடனான அனுபவம் இதெல்லாம் பாதுகாக்கப்பட வேண்டியவை, படித்து ரசிக்கப்படவேண்டியவை. எனக்கு அதற்க்கான ஆசை இருக்கிறது,ஆனால் இது பற்றிய பரீட்சியம் இல்லாததால் முடியவில்லை. உங்களால் செய்ய முடியுமென நினைக்கிறேன்.
@ vivek kayamozhi
நன்றி தல ... நல்ல ஐடியா .. கண்டிப்பாக செய்கிறேன் ...
உங்களுக்கு ஏன் தனுஷ் மேல கொலவெறி? நானும் பாட்டை கேட்டேன். மப்புல பாடுனதுமாதிரி இருக்கு.. எல்லாத்துக்கும் ஒரு விளம்பரம் தேவைப்படுது இல்ல..
நம்ம சைடும் ஆணி ஜாஸ்தி ஆய்டுச்சு.. சீக்கிரம் புடுங்கிட்டுவரேன்..
Post a Comment