Followers

Copyright

QRCode

Tuesday, November 15, 2011

பொண்டாட்டி ஊருக்கு போயிட்டாப்பா (ஒரு டாஸ்மாக் பதிவு)இந்த உலகத்தில் மட்டும் இல்லை இந்த அண்டவீதியிலேயே  வேற எங்கெங்க  எல்லாம் மனித இனம் இருக்கோ அங்க எல்லாம் வாழ்ந்துக்கிட்டு இருக்கிற  பாவப்பட்ட ஆம்பளைகளுக்கு (அதாங்க கல்யாணம் பண்ணுண ஜீவன்கள்) கிடைக்க கூடிய அதிகபடியான சந்தோஷம் அவன் மனைவி தனியா அவங்க அம்மா வீட்டுக்கு போறதுதான்... இந்த சந்தோஷம் அடிக்கடி கிடைக்கணும்கிறதுக்காகவே  அவனோட மாமனாருக்கோ மாமியாருக்கோ வருஷம் முழுக்க நெஞ்சு வலி வரணும்னு வேண்டிக்கிற பாவப்பட்ட பல ஜீவன்கள்  இப்பவும் வீட்டுக்கு வீடு வாழ்ந்துக்கிட்டுதான் இருக்கு .... என்  நண்பன் ஒருத்தன் இருக்கான் , அவனுக்கு கல்யாணம் ஆகி ஒரு வருஷம்தான் ஆகுது ... கல்யாணதுக்கு முன்னாடி எல்லாம் தினமும் சரக்கடிச்சிட்டு வீட்டுக்கு போறவன் , இப்ப வாரத்துக்கு ஒருக்கா கூட சரக்கு அடிக்கமுடியாமல் ரொம்ப திண்டாடுறான்  ... காரணம்  ஒருதடவை சரக்கு அடிச்சா ஒரு வாரத்துக்கு மேட்டர் கிடையாதுன்னு அவன் பொண்டாட்டி போட்ட புது ரூல்  ... ஒரு கையில சரக்கையும் , இன்னொரு கையில மலையாள பிட்டு பட சிடியையும் காட்டி   ரெண்டுல ஏதாவது ஒண்ணுதான் கிடைக்கும்னு சொன்னா , மலையாள பிட்டுக்கே முன்னுரிமை கொடுக்கும் வீக்கான சமூகம்  இந்த   ஆண் சமூகம்  ... கல்யாணத்திற்க்கு பிறகு சரக்கும் பிட்டும் சேர்ந்து கிடைப்பது மிக அபூர்வம் ... சரக்கடித்து கொண்டே பிட்டு பார்க்கும் பாக்கியம் கிடைத்தவர்கள் எல்லாம் அவர்கள் மனைவிக்கு அவர்கள் வாழும் தெரு முனையில் சிலையே வைக்கலாம் ... கண்ணகி போல அவர்களும் அபூர்வ பிறவிகள்தான்...

போர் அடித்தால் பீர் அடிக்கும் மற தமிழர்கள் நாம்.... நாடே மழை தண்ணியில் மிதந்த போதெல்லாம் மக்களை காக்க என்ன செய்யலாம் என்று கூடி ஆலோசிக்காமல் , டாஸ்மாக்கில் தண்ணி விற்பனை குறைந்து விட்டால் , உடனே அமைச்சரவையை கூட்டி ஊருக்கு ஊர் உயர் ரக மதுக்கடைகளை திறக்கும் குடியரசு நம் அரசு... இப்படி பட்ட ஒரு சமூகத்தில் வாழும் ஒருவன் சரக்கு அடிக்க வழியில்லாமல் அவதிபடுவது என்பது காதலர் தினத்தன்று மெரினா பீச்சில் காதலி இல்லாமல் தனியாக சுற்றுவதை போல கொடுமையானது  ...  இன்று திருமணம் ஆன பல ஆண்கள் இந்த கொடுமையை தாங்கிக்கொண்டுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்... கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காத கலைஞரை போல டாஸ்மாக்கை பார்க்கும் போதெல்லாம் எங்கள் மனம் கனக்கிறது , இதயம் வலிக்கிறது... சச்சினுக்கு நூறாவது சதம் எப்படியோ அப்படித்தான் எங்களுக்கு சரக்கும் எவ்வளவு முயன்றும் எட்டாக்கனியாகவே மாறிவிட்டது...
இப்படி வாழ்வின் பெரும் சுகத்தை இழந்து விட்டு அடிமைகளாய் வாழும் எங்களுக்கு கிடைக்கும் தற்காலிக விடுதலைதான் பொண்டாட்டி ஊருக்கு போவது ... பக்கத்து ஊரில் பெண் எடுத்தவர்களுக்கு இந்த அதிர்ஷ்டம் அடிக்கடி கிடைக்கும் ஆனால் நீண்ட நேரம் நீடிக்காது தேமுதிகா வின் வெற்றியை போல , காலையில் போகும் மனைவி மாலையில் திரும்பி விடுவாள்... ஆனால் என்னை போன்ற தொலைதூரத்தில் பெண் எடுத்தவர்களுக்கு இந்த அதிர்ஷ்டம் எப்பொழுதாவதுதான் அடிக்கும் , ஆனால் ஒருமுறை கிடைத்துவிட்டால் குறைந்தது மூன்று நாலாவது நீடிக்கும்... அதுவும் ஒரே நேரத்தில் நம் மனைவியும் நம் நண்பனின் மனைவியும் அவரவர் அம்மா வீட்டுக்கு செல்லும் அதிசயம் எல்லாம் நம் வாழ்க்கையில் ஒரு மாமாங்கத்துக்கு ஒருமுறைதான் நிகழும்... இதோ இப்பொழுது என் வாழ்க்கையில் அந்த அதிசயம் நடந்து விட்டது ... என் பொண்டாட்டி ஊருக்கு போயிட்டா...

திரும்பவும் இந்த வாய்ப்பு ரெண்டு மூணு வருசத்துக்கு அப்பறம்தான் கிடைக்கும்.. மூன்றே நாளில் மூன்று வருடத்திற்கான வாழ்க்கையை வாழும் சூத்திரம் கல்யாணம் ஆன ஆண்களுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்  .. இந்த மூன்று நாளில் எந்த பெரிய மனுசனும் மண்டைய போடாம இருக்கணும் ... இல்லைனா டாஸ்மாக்க மூடிருவாணுக... அப்படி எதுவும் அசம்பாவிதம் நடக்கக்கூடாதுன்னு போதை தருமரை (அதாம்பா நம்ம கேப்டன் விசயகாந்து) வேண்டிக்கிட்டு டாஸ்மாக்குக்கு கெளம்புறேன்  பாஸ்...
கடைசியா  நம்ம முதல்வருக்கு டாஸ்மாக்குள அதிரடியா விற்பனையை அதிகரிக்க ஒரு நல்ல ஐடியா ... யானையயெல்லாம் முதுமலை காட்டுக்கு கட்டாய ஓய்வுக்கு அனுப்பிவச்ச மாதிரி எல்லா பொண்டாட்டிகளையும் ஒரு நாலு நாளைக்கு கட்டாய ஓய்வுன்னு சொல்லி அவங்க அவங்க அம்மா வீட்டுக்கு அனுப்பி வச்சிடுங்க .. ஒரே கல்லுல ரெண்டு மாங்கா அடிக்கலாம் ...  டாஸ்மாக்குள கூட்டமும் கூடும் , இந்த ஆண் சமூகமே உங்களை தெய்வமாக போற்றி வணங்கும்... சாகுற வரைக்கும் நீங்கதான் தமிழக முதல்வர் ...  8 comments:

மோகன் குமார் said...

:)))

Anonymous said...

Data Entry வேலைகள் பணம் செலுத்தாமல் இலவசமாக கிடைக்கிறது !

http://bestaffiliatejobs.blogspot.com/2011/07/earn-money-online-by-data-entry-jobs.html

ஜீ... said...

//போதை தருமரை (அதாம்பா நம்ம கேப்டன் விசயகாந்து) வேண்டிக்கிட்டு டாஸ்மாக்குக்கு கெளம்புறேன் பாஸ்...//

Super! :-)

Tirupurvalu said...

Good article.Anypavichu elithi erukinga.U forgot 1 matter if v went any party and came in late night next day wife's dance + kids questions

Philosophy Prabhakaran said...

பதிவு நல்லா இருக்கு... ஆனா வெளியூர்க்காரன் பதிவை கொஞ்சம் தூசு தட்டி ஜிகினா வேலை காமிச்சா மாதிரி இருக்கு... பாத்து சூதானமா எழுதுங்க அப்பு...

"ராஜா" said...

mokankumar , ji

tanx for ur comments

tirupurvalu

boss enakku ippathan kalyanam nadanthathu ... athanala kuzhanthaikal patriya anupavam enakku innum illai

pp,

ulloor, veliyoor , velinaadu yen sevvai kirakaththula irukkira ella kalyanamana aankalum santhikkira oru ulaka piratchanai ithu... 7am arivu padam mokkai, tamilanai yematri kasu pudunga paakkuranukannu neenga ezhuthurathukku munnadiye rendu moonu peru ezhuthittanga.. appadinaa neenga antha pathiva copy adichcheengannu sollalaamaa? ponga boss nanga soothanamaththan pathivu ezhuthurom , neenga konjam paaththu soothanama comment podungappu ...

anyway tanx for ur comment....

Karthikeyan said...

//போர் அடித்தால் பீர் அடிக்கும் மற தமிழர்கள் நாம்//

//கனிமொழிக்கு ஜாமீன் கிடைக்காத கலைஞரை போல டாஸ்மாக்கை பார்க்கும் போதெல்லாம் எங்கள் மனம் கனக்கிறது //

எப்புடி ராஜா இதெல்லாம்? விஜயகாந்த் மாதிரி உக்காந்து யோசிப்பீக்களோ? கலக்கல்.. சரக்குல இல்ல பதிவுல..

வீட்டம்மா ஊருக்கு போய்ட்டா உங்களை எல்லாம் கைல பிடிக்க முடியாது போல.. என்ஜாய்

"ராஜா" said...

நன்றி சார் ...

//வீட்டம்மா ஊருக்கு போய்ட்டா உங்களை எல்லாம் கைல பிடிக்க முடியாது போல.. என்ஜாய்

அப்படியெல்லாம் இல்லை .. வீட்டம்மா இல்லைனா ஒரு ரெண்டு நாள் ஜாலியா டைம் பாஸ் ஆகும் .. மூணாவது நாள் காத்து போன டயர்கணக்கா மனசு புஸ்ஸ்ஸ்ஸ் ஆகிடும் ... ஆனா மொத ரெண்டு நாள் போன் பண்ணாம மூணாவது நாள் புருஷன்காரன் ஆசை ஆசையா போன் பண்றப்ப எதிர் முனையில இந்த அம்மணிகள் பண்ணுற அலப்பறை இருக்கே ... அதுபத்தி தனியாவே ஒரு பதிவு போடலாம் ...

LinkWithin

Related Posts with Thumbnails