Followers

Copyright

QRCode

Tuesday, November 8, 2011

ஏழரை அறிவும் உலகநாயகன் கமலும்

ஏழரை அறிவு 



இந்த படத்தில் ஒரு வசனம் வரும் .. தமிழ் தமிழன்னு  கூத்தடிக்கிறது இப்ப ஒரு பேஷன் ஆகி  விட்டது என்று ... இதைத்தான்  நமக்கு நாமே ஆப்பு வைக்கிறதுன்னு சொல்றது .... தமிழுணர்வு என்று சொல்லி அரசியலிலும் , கல்வியிலும் காசு பார்த்துகொண்டிருந்தவர்கள் இப்போழ்து சினிமாவிலும் ஆரம்பித்துவிட்டார்கள் ... நீங்கள் உண்மையிலேயே தமிழை தமிழர்களை வாழவைக்க பெருமைபடவைக்க படம் எடுக்க வேண்டும் என்று ஆசைபட்டால்  ஐம்பெரும் காப்பியங்கள் என்று சொல்லப்படும் சிலப்பதிகாரம் , சீவகசிந்தாமணி போன்ற பழைய காப்பியங்களை இன்றைய டெக்னாலஜி உதவியுடன் பிரமாண்டமாக படம் எடுத்து பழைய தமிழனின் படைப்பு திறமையை இன்றைய உலகம் அறிய காட்டியிருக்கலாமே .... இல்லை போதிதர்மனை உலகம் அறிய செய்ய வேண்டும் என்றால் அவரை பற்றியாவது முழுமையாக காட்டியிருந்திருக்கலாம்... அதைவிட்டு விட்டு கடைசியில் படத்தின்  நாயகன் வில்லனை புரட்டி புரட்டி எடுக்க வேண்டும் என்ற ஒரே  காரணத்திற்க்காக மட்டும் போதிதர்மனை ஏதோ ஒரு லேகியம் தயாரிக்கும் சித்த வைத்தியனை போல , கண்கட்டி வித்தை காட்டும் மேஜிக்காரனை போல முதல் பாதியில் அரைகுறையாக காட்டியிருக்கிறார்கள். கண்டிப்பாக போதிதர்மனுக்காக படம் எடுக்கவில்லை இவர்கள் படத்திற்கு போதிதர்மனை பயன்படுத்தியிருக்கிறார்கள்.... ஆனால் அவர்கள் ஆசைப்பட்டது  ஓரளவு நிறைவேறிவிட்டது என்றுதான் படம் பார்க்கும் போது தோன்றியது .... முதல் பாதி மொக்கையாக செல்லும் படம் போதிதர்மன் புண்ணியத்தில் இரண்டாம் பாதியில் சூடு பிடிக்கிறது ... சில பல லாஜிக் சொதப்பல்கள் இருந்தாலும் விறுவிறு திரைக்கதைக்காக ரசிக்கலாம்...


படத்தில் குறிப்பிடப்படவேண்டிய விசயங்கள் அந்த சீன வில்லனும் சுருதி ஹாசனும் தான் .... சுருதி பேர் சொல்லும் பிள்ளையாக நடிப்பில் ஜொலிக்கிறார் ... சில காட்சிகளில் ரொம்ப அழகாக இருக்கிறார் ... பாடல்களில் நன்றாக நடனம் ஆடுகிறார் .. மொத்தத்தில் ஒரு குட்டி லேடி கமலாக தமிழில் தன் ஆட்டத்தை ஆரம்பித்திருக்கிறார் ... கண்டிப்பாக அவர் அப்பாவுக்கு இன்னும் பெருமை சேர்க்கமுடியாமல் போனாலும் அவர் பேரை கடைசி வரை கெடுக்க மாட்டார் என்று நம்பலாம்... 



கமல் ' A Universal Hero '


சென்ற வாரம் கேரளாவின் புனலூரில்  ஒரு மதுபான விடுதியில் நானும் என் நண்பனும் அமர்ந்து மது அருந்திகொண்டிருந்தோம் ... அப்பொழுது இரண்டு மலையாளிகள் எங்கள் அருகில் உக்கார்ந்து தண்ணி அடித்து கொண்டிருந்தார்கள்  ... அவர்களிடம் மெல்லமாக பேச்சு கொடுக்க ஆரம்பித்தேன் .... புனலூரில் என்ன என்ன ஸ்பெஷல் என்று ஆரம்பித்த பேச்சு மெல்ல மெல்ல கம்னியுசம் பக்கம் திரும்பி கடைசியில் சினிமாவில் முடிந்தது ... அவர்களிடம் நம்ம ஊர் ஹீரோக்கள் பற்றி கேட்டேன் ...  ரஜினியையும் "விசை"யையும் வசூல் மன்னர்கள் என்று சொன்னார்கள் ... அஜித் பற்றி கேட்டேன் சிடிசன் , வரலாறு , இப்பொழுது மங்காத்தா என்று அவருடைய ஹிட் படங்கள் கேரளா ஹீரோக்களின் படங்களை விட அதிகம் வசூல் ஆகியதை சொன்னார்கள் ... ஆனால் விசை படங்கள் என்றால் நகர்ப்புறங்களில் நல்ல வசூல் இருக்குமாம் ... கடைசியாக மமூட்டியும் மோகன்லாலும் நடிக்கும் கேரள மண்ணில் அவர்கள் யாரை சிறந்த நடிகனாக பார்க்கிறார்கள் என்று தெரிந்து கொள்ள உங்கள் ஊரில் யார் நடிப்பை எல்லாரும் ரசித்து பார்ப்பார்கள் என்று கேட்டேன் ... அவர்கள் சற்றும் தாமதியாமல் எங்க ஊரில் மட்டும் இல்லை ஒட்டுமொத்த இந்தியாவிலும் கமலை போன்ற சிறந்த நடிகன் யாருமே இல்லை என்று பெருமையாக சொன்னார்கள் ... அதுவரை ரஜினியை சூப்பர் ஸ்டார் என்றோ , விசையை தளபதி என்றோ , அஜித்தை தல என்றோ பட்டங்களை வைத்து அழைக்காதவர்கள் , கமலை வார்த்தைக்கு வார்த்தை உலகநாயகன் என்றுதான்  அழைத்தார்கள் ... கமலஹாசன் ஆரம்பகாலத்தில் கேரள மண்ணில் நடித்தது எங்களுக்கெல்லாம் பெருமையான விஷயம் என்றும் கூறினார்கள் ... எனக்கு பயங்கர ஆச்சரியமாக இருந்தது நம்மிடம்  யாராவது வந்து உனக்கு பிடித்த நடிகன் யார் என்று கேட்டால் கண்டிப்பாக மம்முட்டியவோ இல்லை மோகன்லாலையோ சொல்லமாட்டோம்  ... தமிழன் என்ற இகோவில் ஏதாவது ஒரு தமிழ் நடிகனின் பெயரைத்தான் சொல்லுவோம் , ஆனால் ஒரு கேரளாகாரன்  ஒட்டுமொத்த இந்தியாவிலும் கமலை போல சிறந்த நடிகன் இல்லை என்று பெருமையாக கூறினான் ... அடுத்த மொழிகாரனையும் தன நடிப்பால் கட்டிபோட்ட கமல் உண்மையிலேயே உலகநாயகன்தான் ... 



எங்கள் ஊரில் கமல் ரசிகர்கள் மிக அதிகம் .. தெனாலி படம் பார்க்கும்போது கமல் அவருடைய அம்மாவை பற்றி ஒரு வசனம் பேசுவார் ... திரையரங்கில் இருந்த  ஒட்டுமொத்த ரசிகனும் எழுந்து நின்று கைதட்டினார்கள் ... நான்  எழுத்து சுவாரஷ்யத்திர்க்காக இதை சொல்லவில்லை ..... உண்மையிலேயே தியேட்டரில் இருந்த அனைவருமே எழுந்து நின்று கைதட்டினார்கள் ... தனக்கு பிடித்த ஹீரோ பஞ்ச் வசனம் பேசும் போது ரத்தம் சூடாகி விசில் அடுக்கும் ரசிகனையே அதுவரை பார்த்து பழகிய எனக்கு அது ஒரு புது அனுபவமாக இருந்தது ... அன்று முதல் இன்று வரை கமல் படங்கள் வந்தால் அதை முதல் நாளே பார்த்து ரசிக்கும் அவரின்  கோடிக்கணக்கான  ரசிகர்களில்  நானும் ஒருவன்... மன்மதன் அம்புவில் சொதப்பியிருந்தாலும் , விஸ்வரூபம் மூலம் மீண்டும் நடிப்பில் விஸ்வரூபம் எடுக்க  அவர் பிறந்த நாளில் வாழ்த்துவோம்...


4 comments:

Philosophy Prabhakaran said...

கமல் பற்றிய செய்தி ரசிக்கும்படி இருந்தது...

Philosophy Prabhakaran said...

ஏழாம் அறிவு - கேட்டு கேட்டு புளிச்சிடுச்சு...

K.s.s.Rajh said...

சரியாகச்சொன்னீர்கள் பாஸ் கமல் உண்மையில் உலக நாயகன் தான் இங்கே எங்கள் நாட்டில் கூட கமல் என்றால் தனி ஓரு பற்று இருக்கின்றது....நானும் கமல் படம் என்றால் உடனே பார்த்துவிடுவேன்

Karthikeyan said...

கட்டுரை அருமை. சரக்கடிக்க கேரளா வரை சென்றீர்களா..! சும்மா தமாசுக்கு கேட்டேன்.

ஊரில் நல்ல மழையா?

LinkWithin

Related Posts with Thumbnails