Followers

Copyright

QRCode

Friday, October 28, 2011

வேலாயுதம் - ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்கே


முதலில் பத்து வருடங்களுக்கு முன்னாள் வந்த ஒரு தெலுங்கு  படத்தை இப்பொழுது தமிழில் எடுத்து தமிழனின் ரசனையை கேவலபடுத்தியதர்க்காக இயக்குனருக்கு ரசிகர்கள் சார்பில் கண்டனங்கள் .... ஷங்கர் 1990 இல் இருந்து 2004 வரை கசக்கி பிழிந்து சாறு எடுத்த ஒரு கதையை, அவரே இனி இது உதவாது  என்று 8 வருடங்களுக்கு முன்னரே தூக்கி  குப்பையில் போட்ட கதையை மீண்டும் தோண்டி  எடுத்திருக்கிறார்கள் .... குப்பையை தோண்டினால் வைரமா வரபோகிறது குப்பைதான் வந்திருக்கிறது .... கேப்டன் முதல் சியான் வரை பலரும் செய்த மக்களை காப்பாற்றும் சூப்பர் ஹீரோ வேலையை கொஞ்சம் கூட அச்சு பிசகாமல் இந்த படத்தின் ஹீரோவும் செய்கிறார் ... ஆனால்மக்களை ரசிக்க வைக்க  எட்டு வருடங்களுக்கு முன்னரே அந்நியனில் இதே மக்களை காப்பாற்றும் சூப்பர் ஹீரோ கதைக்கு multiple personality என்று ஒரு புத்தம் புது ஊறுகாய் தேவைப்பட்டது ஷங்கருக்கு  .... ஆனால் இவர்கள் டி ஆர்  காலத்து தங்கச்சி சென்டிமென்ட்டை தூசி தட்டி ஊறுகாய் ஆக்கியிருக்கிறார்கள் ... பாஸ் இந்த ஊசி போன ஊறுகாயை எத்தனை நாளைக்குதான் நாங்க சாப்பிடுறது ...

இந்த படத்தின் ஆக பெரிய பலவீனம் என்னவென்றால் கதை திரைகதை காட்சியமைப்புகள் , பாடல்கள் , என்று எதிலுமே புதுசாக எதுவும்  கிடையாது எல்லாமுமே யூகிக்க கூடியது என்பதுதான்... முதல் பாதியில் ஹீரோவும் அவர் தங்கையும் காமெடி பண்ணுகிறோம் என்று சொல்லி மொக்கை போடுவார்கள்.. தியேட்டரில்  இருந்த ஹீரோவின்  ரசிகர்களை தவிர வேறு யாரும் சிரிக்கவில்லை ... அந்த காமெடிக்கு  சிரித்து கொண்டிருந்த ஒரு  ரசிகனை அவருடைய நண்பர்களே ஏதோ வேற்று கிரக வாசியை பார்ப்பது போல பார்த்தார்கள் ... முதல்  பாதியில் கொஞ்சமேனும் ரசிக்க வைத்த விஷயம் சந்தானம் வரும்   சில காட்சிகள்  ... அதை தவிர்த்து பெரியதாக ஒன்றும் இல்லை  ...

இரண்டாம் பாதிதான் படத்தின் மிக பெரிய மொக்கை ....வழக்கம் போல மக்களை காப்பாற்றுகிறேன்  என்று படம் பார்க்கும் நம்மை சாகடிக்கிறார் ஹீரோ....  கொஞ்சம்கூட சுவாரஸ்யமே இல்லாத காட்சியமைப்புகள் , லாஜிக்கே  இல்லாத திரைகதை , ஏற்கனவே ஷங்கர் படங்களில் கேட்டு கேட்டு புளித்துப்போன வசனங்கள் , மொக்கையான கிளைமாக்ஸ் என்று பொறுமையை அளவுக்கு மீறி சோதித்து அனுப்புகிறார்கள் ... இந்த படம் ஒரு பத்து வருடங்களுக்கு முன் வந்திருந்தால் ரசித்திருக்கலாம் .... இன்றைய காலகட்டத்தில் இதை போன்ற படங்கள் கண்டிப்பாக பார்பவர்களுக்கு கடுப்பைதான் வரவழைக்கும் ...  வேலாயுதமும் அதைதான் செய்கிறது  ....

ஜெனிலியா , ஹன்சிகா , சரண்யா மோகன் என்று எல்லாருமே வீணடிக்கபட்டிருக்கிறார்கள்  ... மொத்தத்தில் என்னை பொறுத்தவரை வேலாயுதம் மழுங்கி போன பழைய ஆயுதம்  ... 


(இந்த படத்தை பற்றி எழுதம் போது  ஏதோ கே டிவி யில் பார்த்த பழைய படத்தை பற்றி எழுதுவது போல ஒரு பீல் வருவதால் இதற்க்கு மேல் எதுவும் எழுத பிடிக்கவில்லை... இந்த படத்தையும் நல்லா இருக்கு என்று சொல்லும் இந்த பட ஹீரோவின்  ரசிகர்களை பார்க்கும் போது அவர்கள் எவ்வளவு காய்ந்து போய் இருக்கிறார்கள் என்பது அப்பட்டமாக தெரிகிறது ... இனிமேலாவது அவர்களின் ஆஸ்தான நடிகர் இதை உணர்ந்து நல்ல படங்கள் கொடுத்தால் அவருக்கும் அவர் ரசிகர்களுக்கும்  நல்லது ... இல்லை எனக்கு சினிமாவே  வேண்டாம் நான் முதலமைச்சர் ஆக போகிறேன் என்று அரசியலில் இறங்கி விட்டால்  தமிழ் சினிமாவுக்கே நல்லது)




29 comments:

Shanmugam Rajamanickam said...

//இல்லை எனக்கு சினிமாவே வேண்டாம் நான் முதலமைச்சர் ஆக போகிறேன் என்று அரசியலில் இறங்கி விட்டால் தமிழ் சினிமாவுக்கே நல்லது//

இந்த ஜோக் சூப்பர், ஆனா விஜயை தாக்கி தான் எழுதனும்னு ஒரு முடிவோட உக்கந்திருக்கீங்க என்பது இந்த இடுகையை படிக்கும் போது தெரிகிறது.

"ராஜா" said...

பாஸ் எனக்கு அவர் மேல எல்லாம் காண்டு இல்லை .... இந்த படத்து மேலதான் செம காண்டு ....

Shanmugam Rajamanickam said...

ஓகே.. பாஸ்.....

Unknown said...

ஹிஹி உங்க காவலன்,வேலாயுதம் விமர்சனம் பார்க்கும் போது நீங்க எந்த வரைட்டி ஆள் என்பது புரிகிறது...
பிடிக்காவிடில் விலத்தி இருங்கள்.ஏன் உங்களுக்கு தேவை இல்லாத சிரமம்!

"ராஜா" said...

வாங்கன்னா .....நாங்க பாக்ககூடதுன்னு நெனச்சாலும் உங்களை போன்ற விஜய் ரசிகர்கள் விடமாட்டேன்றீன்களே ... படம் சூப்பர் ஹிட்டுன்னு ஒரு பயபுள்ளை (நண்பன்னு சொல்லிக்கிட்டு அலையுற துரோகி ) என்கிட்டே சொல்லித்தான் நான் போனேன் .. அவன் மட்டும் என் கையில கெடைக்கட்டும் உங்க கம்மெண்ட காட்டி அவனை தொரத்தி தொரத்தி அடிக்கணும்

Akash said...

@ ராஜா
சூப்பர்....நல்லா எழுதி இருக்குறீங்க....எனக்கு விஜய் ஐ விட விஜய் ரசிகர்களை நினைச்சால் தான் சரியான சிரிப்பு வருது....மொக்கை படத்தை கூட ரசிச்சு பார்கிர்றன்களே

தமிழ்வாசி பிரகாஷ் said...

ஐயோ, ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்ங்

மதுரை சரவணன் said...

palaya saatham.... theepavalikku edupadaathu.. vaalththukkal

அகல்விளக்கு said...

படம் சூர மொக்கை...

K.s.s.Rajh said...

அந்நியன் படத்தை பல இடங்களில் ஞாபகப்படுத்து கின்றது குறிப்பாக..அந்த வேலாதம் மக்கள் முன் தோன்றுவார் என்ற சீன்...அப்படியே அந்நியன் சீனை ஞாபகப்படுத்துகின்றது...

டிலீப் said...

சார் காமெடியே இல்ல அது மொக்கை என்டு சொல்லற முதல் ஆள் நீங்களா தான் இருப்பிங்க...
உங்களுக்கு காமெடி சென்ஸ் கம்மி என்டு நினைக்கிறன்.
உங்கட இந்த பதிவு ஒரு பக்கசார்பாகவே இருக்குது.

தப்பா எழுதனும் என்டு முடிவு பண்ணிடிங்க சோ எப்பிடி நல்லதா எழுத வரும்

"ராஜா" said...

அனைவருக்கும் நன்றி ..

திலிப் அப்பஇதுக்கு பேருதான் காமெடியா? இங்க பாருடா இவ்வளவு நாளா எனக்கு இது தெரியாம போச்சே .... சரி பாஸ் அடுத்து டிவியில பாத்தா இதை பாத்து சிரிச்சி சிரிச்சி பழகிகிடுறேன் ... தெளியவச்சதுக்கு நன்றி பாஸ்

"ராஜா" said...

//தப்பா எழுதனும் என்டு முடிவு பண்ணிடிங்க சோ எப்பிடி நல்லதா எழுத வரும்

அதான் பாஸ் அதேதான் .. கேவலமாத்தான் படம் எடுக்கணும் முடிவு பண்ணி xerox ராஜா படம் எடுக்கும்போது நான் எவ்வளவுதான் ட்ரை பண்ணுனாலும் நல்லவிதமா எழுதவே முடியாது பாஸ் ...

"ராஜா" said...

அய்யா விசை ரசிகர்களே ... படம் உண்மையிலேயே மொக்கை படந்தான்பா.. சத்தியமா சொல்லுறேன் நான் எவ்வளவோ ட்ரை பண்ணுனேன் இந்த படத்தை பார்த்திட்டு உங்க தளபதியை பாராட்டி ரெண்டு வரி எழுதிபுடலாம்னு ... ம்ம்ம்ம் அதுக்கு வாய்ப்பே இல்லாம பண்ணிடானுகப்பா... இந்த படத்துல வேற எவனாவது நடிச்சிருந்தா கெட்ட கெட்ட வார்த்தையில திட்டு எழுதிருப்பேன் ... உங்க ஆளுன்கிரதுனாலத்தான் அவர் பேரை கூட எழுதாம டிசெண்டா எழுதிருக்கேன் ... திரும்ப திரும்ப வந்து நீ தப்பா எழுதணும்னே எழுதிருக்க , நீ விசையை ஓட்டனும்னே எழுதிருக்கன்னு சொல்லிக்கிட்டு இருந்தா அடுத்து இதே படத்துக்கு கொலைவெறி விமர்சனம் எழுதிடுவேன் ... ஆமா சொல்லிபுட்டேன் ...

GANESH said...

Sir you wrong.Velaytham is good commercial film and comedy is superb.I think your relative is MR.Narasimarao :)

Karthikeyan said...

எப்படியும் விமர்சனத்தில் கொத்து புரோட்டா போட்டு விடுவீர்கள் என தெரியும். வேலாயுதம் பாக்கலாம்னு போனேன் ஆனா 150 ரூபாய் டிக்கெட்க்கு கேட்டார்கள். கண்டிப்பாக வொர்த் இல்லைனு தெரியும். ரெண்டு நாளில் 50 ரூபாய்க்கு வந்துடும். அப்ப பாத்துக்கலாம். ரா ஒன் பார்த்தாச்சு... சின்ன புள்ளைங்களுக்கான நார்னியா டைப் படம்ங்க அது..

கார்க்கிபவா said...

//இந்த படத்து மேலதான் செம காண்டு ....//

உங்க‌ பிளாக‌ ரெகுல‌ரா ப‌டிக்கிர‌வ‌ங்க‌ளுக்கு தெரியாதா? விஜ‌ய் லேபிள‌ ப‌டிச்சாலே புரியுமே :))

ச‌கா,
ப‌ட‌ம் உங்க‌ளுக்கு பிடிக்க‌ல‌. சிம்பிள். இதுல‌ த‌ப்பா ஒண்ணுமேயில்லை. என‌க்கு ம‌ங்காத்தா பிடிக்க‌ல‌. அத‌ நான் எழுதின‌ப்ப பொங்கோ பொங்குன்னு பொங்க‌னீங்க‌. கேட்டா, எல்லோரும் ந‌ல்லா இருக்குன்னு சொன்ன‌தா சொன்னிங்க‌. இப்போ sify, behindwoods, Hindu, TOI, tamilcinema, ந்னு எல்லா விம‌ர்ச‌ன‌த்திலும் ப‌ட‌ம் ந‌ல்லா இருக்குன்னு சொல்லி இருக்காங்க‌. தீபாவ‌ளி ரேஸூல‌ வேலாயுத‌ம் தான் ஹிட்ன்னு சொல்றாங்க‌. அதுக்காக‌ உங்க‌ளுக்கு பிடிக்க‌ணும்ன்னு அவ‌சிய‌மில்லை.

ம‌ங்காத்தா செம‌ க‌லெக்ஷ‌ன். நான் ம‌றுக்க‌வே இல்லை. ஆனா என‌க்கு பிடிக்க‌ல‌ன்னு சொன்ன‌ப்ப‌ எதுக்கு அவ்ளோ பொங்க‌ல்? இப்போ நீங்க‌ என்ன‌ செஞ்சு வ‌ச்சிருக்கிங்க‌??? :)))

"ராஜா" said...

//ம‌ங்காத்தா பிடிக்க‌ல‌. அத‌ நான் எழுதின‌ப்ப பொங்கோ பொங்குன்னு பொங்க‌னீங்க‌.

வணக்கம் சகா .. நல்லா இருக்கீங்களா? நான் இதை கண்டிப்பாக எதிர்பார்த்தேன் , ஆனால் நீங்கள் மாங்காத்தா படம் நல்லா இல்லை என்று மட்டும் சொல்லி இருந்தால் நான் அந்த அளவுக்கு பொங்கியிருக்க மாட்டேன் , ஆனால் அதில் நீங்கள் அஜீத்தையும் , அவர் ரசிகர்களையும் சேர்த்து அநாகரீகமாக நக்கல் விட்டிருந்தீர்கள் , அதான் பொங்க வேண்டி இருந்தது... அதான் நான் இந்த பதிவில் ரொம்ப சேஃப் ஆக விஜய் பற்றி பொதுவாக எதுவும் சொல்லவில்லை , முழுக்க முழுக்க படத்தை பற்றி மட்டுமே எழுதியுள்ளேன்... படத்தின் கலெக்ஷன் பற்றியோ , விஜய் ரசிகர்கள் வாயில் பாம்பு விடுவேன் என்றோ அனாவசியமாக நக்கல் விடவில்லை...

"ராஜா" said...

அப்பறம் சகா, அந்த பதிவில் பொங்கல் கொஞ்சம் அதிகமாகவே போயி விட்டது.. அப்பொழுது ஏதோ ஒரு ஈகோவில் மன்னிப்பு கேட்கவில்லை ... இப்ப கேக்குறேன் அதில் வந்த சில வார்த்தைகளுக்கு சாரி சகா...

//எப்படியும் விமர்சனத்தில் கொத்து புரோட்டா போட்டு விடுவீர்கள் என தெரியும்.

ஸார் நீங்களுமா? ரா - ஒன் உங்களுக்கு பிடித்திருந்ததா?

ஜீவன்பென்னி said...

Velayuthathukku Mangatha evvalova better. Oru Mani nerathulaye theatera vittu veliya vanthuten. Enna thirupachi erkanave parthuten la.

கார்க்கிபவா said...

ச‌கா, அதே ப‌திவுல‌ எவ்ளோ பேரு என்ன‌ திட்டினாங்க‌. யாருக்கும் ப‌தில் சொல்ல‌ல‌. பேச‌ல‌. வேலாயுத‌ம் வ‌ந்தா ப‌திவு வரும்னு தெரியும். உட‌மே ப‌ட‌ம் ந‌ல்லா இருக்காதுன்னு தெரியுமான்னு கேட்காதீங்க‌..ஹிஹிஹி..

அஜித், விஜ‌யை ரொம்ப‌ விரும்பி பார்க்கிற‌வ‌ங்க‌ளுக்கு இன்னொரு ஆள் ப‌ட‌ம் பிடிக்கிற‌து ரொம்ப‌ க‌ஷ்ட‌ம்.. இதான் உண்மை.

அப்புற‌ம், ஆர‌ம்ப‌த்துல‌ விஜ‌ய் லேபிளில் நீங்க‌ க‌லாய்ச்சுதுல‌ 10% கூட‌ நான் செய்ய‌ல‌. அப‌ப்வும் உங்க‌ளுட‌ன் நான் ந‌ல்ல‌ ந‌ட்பில் தான் இருந்தேன் என்ப‌தை குறிப்பிடும் அதே வேளையில்.. உஸ்ஸ்ஸ்..சோடா ப்ளீஸ் :)

"ராஜா" said...

//ஆர‌ம்ப‌த்துல‌ விஜ‌ய் லேபிளில் நீங்க‌ க‌லாய்ச்சுதுல‌ 10% கூட‌ நான் செய்ய‌ல‌

சகா அப்படி பாத்தா , நான் இந்த பிளாக் ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி அஜித் பத்தி நீங்க கலாய்ச்சதுல பாதிகூட நான் இதுவரைக்கும் கலாய்க்கவில்லை என்பதும் உண்மை ...

// உங்க‌ளுட‌ன் நான் ந‌ல்ல‌ ந‌ட்பில் தான் இருந்தேன் என்ப‌தை குறிப்பிடும் அதே வேளையில்.. உஸ்ஸ்ஸ்..சோடா ப்ளீஸ் :)

சகா நிறைய பேசலாம் எழுதலாம் ஆனால் நீங்களே சொல்லிவிட்டீர்கள் அஜீத் விஜய் ரசிகனுக்கு வேறு யாரையும் பிடிக்காது என்று அதனால் எழுதினாலும் வீண்தான்... அடுத்து பில்லா 2 வரும்போது நீங்கள் படத்தை பற்றி எண்ணவேண்டுமானாலும் எழுதிக்கொளுங்கள் ஆனால் ரசிகன் வாயில பாம்பு விடுவேன் , தலையை அவன் இவன் என்று ஏக வசனத்தில் பேசுவது என்பன போன்று எங்களை(அஜீத் ரசிகர்களை ) குறி வைக்கும் வாசகங்கள் இல்லாமல் இருந்தால் நாங்களும் நட்புக்கு மரியாதை கொடுத்து அமைதி காப்போம்/

Karthikeyan said...

ரா ஒன் ரொம்ப பிடிச்சிருந்ததுன்னு சொல்லமாட்டேன். முதல் முறையா ஒரு இந்தி டப்பிங் படம் பார்த்ததில் அலைவரிசை அமையவில்லை என நினைக்கிறேன். நீங்களெல்லாம் இந்தி தெரிந்தவர்கள் என்பதாலும் இந்தி படங்கள் பார்ப்பவர்கள் என்பதாலும் உங்களை கவர்ந்திருக்கும் என நினைக்கிறேன். எழாம் அறிவு பார்த்தாச்சு. அவசியம் இல்லாத பாடல்களினால் தொய்வு. ஒரு முறை பார்க்கலாம். அடுத்து .. டாக்டர் படம்.

"ராஜா" said...

//எழாம் அறிவு பார்த்தாச்சு. அவசியம் இல்லாத பாடல்களினால் தொய்வு. ஒரு முறை பார்க்கலாம்.

நான் இன்னும் பார்க்கவில்லை ஸார் ... உங்களை போலவே இன்னும் சில நண்பர்களும் பார்க்கலாம் என்று சொல்லுகிறார்கள் , அதனால் நாளை சென்று பார்க்கவேண்டும்... முதலில் நான் ஏழாம் அறிவுக்குதான் செல்லலாம் என்று நினைத்தேன் , ஆனால் டிக்கெட் விலை அநியாயத்திர்க்கு 150 என்று சொல்லியதால் வேலாயுதம் செல்ல வேண்டியதாகி விட்டது முதல் முறையாக என் சொந்த காசில் விஜய் படம்... நீங்கள் சொல்லியதை போலவே வேறு வழியில்லாமல் வேலாயுத்ததால் குத்து வாங்க நேர்ந்து விட்டது ...

rajamelaiyur said...

இன்று என் வலையில்

விஜய் , சூர்யா , அஜித் - Face book இல் படும்பாடு

N.H. Narasimma Prasad said...

நான் இருக்கிற ஊர்ல சினிமா திரையரங்கமே இல்ல. அதனால எந்த படத்தையும் பாக்க முடியாது. இன்னும் ரெண்டு மாசத்துல சென்னை வந்த பிறகு தான் பார்க்கணும்.

கும்மாச்சி said...

இந்த படம் மரண மொக்கை என்பதில் சந்தேகமில்லை. என் அருகில் இருந்த விசை ரசிகர்களே ஒரு கட்டத்தில் வெறுத்து தம் அடிக்க வெளியே போய் விட்டார்கள்.

"ராஜா" said...

//நான் இருக்கிற ஊர்ல சினிமா திரையரங்கமே இல்ல. அதனால எந்த படத்தையும் பாக்க முடியாது.

அப்படி என்ன ஊர் அது .... நல்ல ஊரா இருக்கே ...

"ராஜா" said...

//இந்த படம் மரண மொக்கை என்பதில் சந்தேகமில்லை. என் அருகில் இருந்த விசை ரசிகர்களே ஒரு கட்டத்தில் வெறுத்து தம் அடிக்க வெளியே போய் விட்டார்கள்.

பாஸ் அவர்கள் எவ்வளவு அடித்தாலும் தாங்கும் இதயங்கள் ... அவர்களே நொறுங்கி விட்டார்களா? தளபதி உஷார் மக்கா உஷார் ...

LinkWithin

Related Posts with Thumbnails