(இது என்னுடைய 200 ஆவது பதிவு ... என்னுடைய வலைப்பூவில் கதைகள் எழுத வேண்டும் என்பது என்னுடைய
நீண்ட நாள் ஆசை... அதை இந்த 200 ஆவது பதிவில்
நிறைவேற்றிவிட வேண்டும் என்ற முனைப்பில் எழுதிய கதை இது .. ஆனால் எழுத ஆரம்பித்தவுடன்
கதை இழுத்து கொண்டே போக இதை ஒரு மினி தொடர்கதையாக மாற்றி விடலாம் என்று முடிவு செய்தேன் ... நான் இதற்க்கு
முன்னர் கதைகள் எழுதியதில்லை , இதுதான் என் கன்னி முயற்சி... எனவே இது எவ்வளவு மொக்கையாக இருந்தாலும் கொஞ்சம் பொறுத்துக்கொள்ளவும்.. )
ஊரே தேர்தல் ஜூரத்தில்
இருந்தது , இந்த முறை யார் ஊராட்சி
தலைவர் தேர்தலில் வெற்றி பெருவார்கள் என்பதுதான் இப்போதைக்கு அந்த ஊரில் எல்லாருக்கும்
இருக்கும் ஒரே எதிர்பார்ப்பு.. வழக்கம் போல இம்முறையும் சத்தியனுக்கும் , பாலமுருகனுக்குமே போட்டி.. தற்போதைய தலைவர் சத்தியன் இம்முறையும் வெற்றி
பெற்று விட்டால் அடுத்த முறை இது தலித்
தொகுதி ஆகிவிடும் . போட்டியே இல்லாமல் அடுத்த முறையும் அவரே வந்து விடலாம். எனவே ஏதாவது களவாணிதனம் செய்தாவது வென்று விட வேண்டும்
என்று முனைப்புடன் செயல்பட்டது அவர் கோஷ்டி... பல ஜாதிக்காரர்கள் வாழ்ந்து கொண்டிருக்கும்
ஒரு ஊரை தொடர்ந்து மூன்று முறை ஒரே சாதிக்காரன் ஆளுவதா? விடக்கூடாது , இம்முறை அவனை தோற்கடித்து நம் சாதிபலத்தை காட்டியே ஆகவேண்டும் என்ற முனைப்புடன்
எதிர்க்கோஷ்டியும் சூறாவளியாய் சுழன்று கொண்டிருந்தது...
சமத்துவபுரத்துக்கு சிறந்த
உதாரணம் அந்த ஊர்... தெற்குபுறம் தலித்துகளும் , நடுவில் தேவர்களும் , அவர்களை அடுத்து பிள்ளைகளும் , கடைசியாக வடக்கில் நாடார்களும் சரி சமமாக வாழும் ஊர் அது...
நடு நடுவே நாயக்கர்களும் , செட்டிமார்களும்
கணிசமான தொகையில் இருக்கிறார்கள்... அரசியல் கூட்டணியை போல ஊரில் எப்போதும் ஒரு ஜாதி கூட்டணி இருக்கும் .. ஆனால் அரசியவாதிகளை
போல இல்லாமல் இது நிரந்தர கூட்டணி
...காலம்காலமாய் ஊரில் இருக்கும்
நாடார் பள்ளிக்கூடத்தில் தலித் மாணவர்களும் , பிள்ளைமார் பள்ளிக்கூடத்தில் தேவர் ஜாதி மாணவர்களும் மட்டுமே படிப்பார்கள்... 60களின் ஆரம்பத்தில் காமராஜருக்கும் , தேவருக்கும் அரசியலில் நடந்த மோதலே இங்கு இந்த ஜாதி கூட்டணி உருவாக காரணம் ... பிள்ளைகளின் படிப்பிலேயே இப்படி என்றாள் ஆட்சி என்றாள் விட்டுவிடுவார்களா? சத்தியனுக்கு
அவர் ஜாதி ஓட்டும் , நாடார் ஓட்டும் அப்படியே கிடைத்து விடும் , பாலமுருகனுக்கோ தேவர் ஓட்டும் , பிள்ளை ஓட்டும் கிடைத்து விடும்...
இருவருமே சரிசமமாக இருப்பதினால் எப்பொழுதும் தேர்தல் களம் சூடாகவே இருக்கும்... 1200 தலப்பாகட்டு இருக்கும்
ஊரில் சென்ற முறைகூட சத்தியனால் வெறும்
ஆறு ஓட்டு வித்தியாசத்தில்தான் வெற்றி பெற முடிந்தது...
அதனால் ஒவ்வொரு ஓட்டும் நமக்கு முக்கியம் மச்சி
என்ற கொள்கையோடு இம்முறை இரண்டு கோஷ்டிகளும் ஓட்டு வேட்டையில்
தீவிரமாக இறங்கி இருந்தன...
சுசி அந்த ஊருக்கு அருகில் இருக்கும் ஒரு காட்டன் மில்லில் வேலை பார்க்கும் இளைஞன்... 8 ஆம் வகுப்பு படிக்கும்போதே கூட படிக்கும் பெண்ணை ஒருதலையாக காதல் செய்து
படிப்பில் கவனம் செலுத்தாமல் கப் வாங்கி , இதுக்கு மேல தாங்காது என்று அவன் அப்பாவால் மில் வேலைக்கு சேர்த்துவிட பட்டவன்... அவன் தீவிரமாக காதல் செய்து கொண்டிருந்த சமயத்தில் , இளையதளபதி விஜய் காதலுக்கு மரியாதை தந்ததால் , அவர் பால் ஈர்க்கபட்டு
அவரின் தீவிர ரசிகனானவன்... அவனுக்கு படிப்புதான் ஏறவில்லையே தவிர மற்ற விஷயங்களில்
பையன் படுகெட்டி ... அந்த ஊரில் இருக்கும் கிரிக்கெட் அணியில் அவன்தான் அதிரடி பேட்ஸ்மேன், தவிர கிணத்தில் நீச்சல் அடிப்பதில் ஆள் கில்லி... எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீருக்குள் மூச்சை அடக்கி கிடப்பான்... கபடியில் அவனை அமுக்கி பிடிக்க சுற்றுவட்டாரத்தில் ஆளே கிடையாது... இப்படி
அவனுக்குள் இருக்கும் பல திறமைகளால் அவனுக்கு ஊரில் ஒரு ரசிகர் கூட்டமே உருவாகி இருந்தது... தலைவன் எவ்வழியோ
, தொண்டனும் அவ்வழியே என்பது போல் அவர்கள் அனைவருமே விஜயின் ரசிகர்களாக இவனால் உருமாற்றபட்டார்கள்...
அப்படி உருமாற்றபட்டவர்களில்
ஒருவன் சுரேஷ்... இவன் சுசிக்கு அப்படியே
நேர் எதிர், கபடி கிரிக்கெட் என்று
எல்லா போட்டிகளிலும் உப்புக்குசப்பாணியாகவே இருப்பான்... ஆனால் படிப்பில் பயங்கர கெட்டி , பத்தாம் வகுப்பு தேர்வில் 2000 ஆம் ஆண்டில் அவன் எடுத்த 454
மதிப்பெண்களை இதுவரை அந்த ஊரில் யாராலும் முறியடிக்க
முடியவில்லை... எனவே அவன் சார்ந்த ஜாதி பசங்களுக்கு
அவன் ஒருவிதத்தில் கவுரவ சின்னம்...அவனுக்கு பங்காளி பசங்களும் அதிகம், இவர்கள்
அனைவருக்கும் இவன்தான் தலைவன்.. ஆனால் சுரேஷோ சுசியை தன்
தலைவனாக ஏற்று கொண்டு விஜயின் தீவிர
ரசிகனாக ஊருக்குள் உலவிகொண்டிருந்தான் அவன் நண்பன் ஜோஸெப்புடன் வாலி என்னும் படம் பார்க்கும்
வரை...
(தொடரும்)
5 comments:
200வது பதிவுக்கு வாழ்த்துக்கள் பாஸ்..உங்கள் முதல் முயற்சிக்கும் வாழ்த்துக்கள்
முதலில் 200வது பதிவுக்கு வாழ்த்துக்களை பெற்றுக்கொள்ளுங்கள். எங்கள் ஊரில்தான் ஓட்டு சதவிகிதம் அதிகம். படிச்சவங்க இருக்குற கன்யாகுமரிதான் கம்மி.
kathikeyan @ rajh
tanx .. yarume story pathi pesa solla mattenkireenga.. unmaiyileye mokkaiyaa irukko?
கதையே இப்பதானே ஆரம்பிக்கிறது.. ட்விஸ்ட் வந்ததுக்கு அப்புறம் பாருங்க எங்க கமென்ட்ஸ் எல்லாம்.. ட்விஸ்ட் இருக்குல்ல??!
// ட்விஸ்ட் இருக்குல்ல??
இனிமேதான் யோசிக்கணும் ... ஹி ஹி
Post a Comment