Followers

Copyright

QRCode

Monday, September 5, 2011

என் ஆசானுக்கு நன்றிகள் - ஆசிரியர் தின சிறப்பு பதிவு




அனைவருக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள் , அனைவருக்கும் வாழ்த்து சொல்ல இது தீபாவளியா? இல்லை பொங்களா? இல்லை atleast காதலர் தினமா? என்று நீங்கள் சந்தேகபடலாம் , ஒவ்வொரு மனிதனின் வெற்றிக்கு பின்னாடியும் ஒரு பெண் இருக்கிறாலோ இல்லையோ? ஏதோ ஒரு விதத்தில் ஒரு ஆசிரியர் கண்டிப்பாக இருப்பார்... எனவே இதுவும் எல்லோராலும் கண்டிப்பாக கொண்டாடப்பட வேண்டிய ஒரு தினம்தான் ஆனால் ஏனோ இது ஆசிரியர்கள் மட்டுமே கொண்டாட வேண்டும் என்று ஒரு சின்ன வட்டத்திர்க்குல் சிக்கி விட்டது .... அன்னையர் தினம் , ஃபாதர்ஸ டே என்று எந்த டே வந்தாலும் எனக்கு எல்லா நண்பர்களிடம் இருந்தும் குறைந்தது இருபது எஸ்‌எம்‌எஸ்கள் வந்து குவிந்து விடும் , ஆனால் இன்று மிக சொற்பமான எண்ணிக்கையிலேயே அதுவும் என்னுடன் பணிபுரியும் சில ஆசிரியர்கள் மட்டுமே அனுப்பி இருந்தனர்... சரி விடுங்கள் இந்த நாகரீக உலகத்தில் ஒதுக்கபட்டால்தானே அது நல்ல விஷயம் ...

ஒரு காலத்தில் நம் நாட்டில் மிக சிறந்த மற்றும்  மதிப்பிற்குரிய பணி என்றாள் அது ஆசிரியர் பணிதான் , காரணம் அதற்க்குதான் நல்ல சம்பளம் வந்து கொண்டு இருந்தது அந்த காலகட்டத்தில் , ஆனால் இன்று நிலமையே வேறு , ஆசிரியர் பையன் மக்கு என்ற நிலை மாறி மக்கு பசங்கதான் ஆசிரியராக வர வேண்டும் என்ற நிலமை உருவாகி விட்டது ... காரணம் அதே சம்பளம்தான் , அதுவும் இன்ஜினியரிங் கல்லூரிகளில் நிலமை படு மோசம் , ஒருத்தன்  BE முடித்துவிட்டு ஒரு பன்னாட்டு கம்பெனியில் பணி கிடைத்து சென்று விட்டான் என்றாள் எடுத்தவுடனே மாதம் 50 ஆயிரம் , 60 ஆயிரம் என்று சம்பளம் வாங்கி விடுவான் , ஆனால் அதே மாணவன் அடுத்து ME இரண்டு வருடம் படித்து , பிறகு கல்லூரியில் ஆசிரியராக பணிபுரிய தொடங்குகிறான் என்று வைத்து கொண்டால் அவன் அதே 60 ஆயிரம் சம்பளம் வாங்க குறைந்தது பத்து வருடங்கள் ஆகும் , நிலமை இப்படி இருக்க யார்தான் விரும்பி ஆசிரியர் பணிக்கு வருவார்கள்,

சரி சம்பளம்தான் கம்மியாக இருக்கிறது , வேலை பளு அதிகம் இல்லாமல் மன நிம்மதியாக இருக்கலாம் என்று நினைத்தால் அதுவும் நடக்காது , காரணம் நீங்கள் ஆசிரியர் வேலைக்கு வந்து விட்டால் நீங்கள் விரும்பியபடி உங்களால் வாழ முடியாது... இன்றைய இளைஞர்களுக்கு என்ன என்ன சுதந்திரம் இருக்கிறதோ அது எல்லாமும் ஆசிரியர் பணியில் சேர்ந்தவுடன் எங்களை விட்டு சென்று விடும் , காதல் திருமணம் செய்ததால் நீயெல்லாம் எப்படி மாணவர்களுக்கு முன்னுதாரணமாய் இருப்பாய் என்று சொல்லி வேலையை விட்டு  தூக்கபட்ட பல ஆசிரியர்களை நான் பார்த்திருக்கிறேன்... எனக்கு ஒன்றாம் வகுப்பு எடுத்த ஸ்டெல்லா டீச்சர் முதல், இங்கு சென்ற வருடம் வரை என்னுடன் ஒன்றாக வேலை பார்த்த என் நண்பன் காஜா மைதீன் வரை இதற்க்கு பல உதாரணங்கள்.....

அடுத்து இன்றைய மாணவர் சமூதாயம் , ஒரு காலத்தில் ஆசிரியர்கள் என்றாள் மாணவர்களிடம் பயம் இருந்தது , அடுத்து அந்த பயம் போய் கொஞ்சம் மரியாதை இருந்தது , ஆனால் இன்றைய மாணவ சமூதாயம் பெரும்பாலும் ஆசிரியர்களை மதிப்பதே இல்லை , இப்பொழுதெல்லாம் நாங்கள்தான் அவர்களை பார்த்து பயப்பட வேண்டி இருக்கிறது , காரணம் நாம் கொஞ்சம் ஸ்ட்ரிக்டா நடந்து கொண்டோம் என்றாலும்  ஃபேஸ்புக் , கூகிள் பஸ் , ட்விட்டர் என்று எங்களை ஊடு கட்டி அடிப்பார்கள், அப்படிபட்ட ஊடு கட்டுதலில் அடிக்கபடும் கமெண்ட்களை சம்பந்தபட்ட ஆசிரியர் பார்க்க நேர்ந்தால் அவரின் நிலமை அவ்வளவுதான்...

ஆனால் இதை எல்லாம் மீறி நான் எப்பொழுதும் பெருமையாக சொல்லி கொள்ளுவேன் நான் ஒரு ஆசிரியன் என்று , எப்பொழுது தெரியுமா? பல ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் படித்த ஒரு மாணவன் அவனுடைய கல்யாண விஷயத்தை என்னிடம் ஃபோன் செய்து கூறினான் , ஸார் எங்க அப்பா , அம்மா முடிவு செய்தவுடன் என் சார்பா நான் இன்னும் யாருக்கும் சொல்லவில்லை ஸார் , முதல் முதலா நான் உங்ககிட்ட தான் சொல்லுறேன் என்று அவன் கூறிய பொழுது பெருமையாக இருந்தது .. காரணம் அந்த பையன் கல்லூரியில் படித்த பொழுது மோசமான குடும்ப சூழ்நிலைகளால் விரக்தி அடைந்து இருந்த சமயம் , நான் அவனுக்கு வகுப்பு எடுக்கும் போது வகுப்பில் பொதுவாக பேசிய ஒரு சில விசயங்களால் என் மேல் ஒரு ஈர்ப்பு வந்து , என்னிடம் வந்து அழுதான் , அதன் பின்னர் அவனுக்கு பல சமயங்களில் ஒரு வழிகாட்டியாய் இருந்து , படிப்பு  விஷயத்தில் அவனுக்கு நிறைய உதவிகள் செய்தேன் .. அவனும் நல்ல படியாக படித்து முடித்து சென்றான் , கடைசியாக ஸார் நீங்க இல்லை என்றாள் நான் கண்டிப்பாக படித்தே இருக்க மாட்டேன் ஸார் என்று சொல்லிவிட்டு சென்றான் ... இதோ இன்று மூன்று வருடங்கள் ஆகியும் அதே மாரியாதையுடன் அவன் பேசிய பொழுது சந்தோஷமாக இருந்தது ... இப்படி ஒவ்வொரு  ஆசிரியரும் ஏதாவது ஒருவகையில் ஒரு மாணவனின் வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்து இருப்பார்கள் , அந்த மானவர்கள்தான் நாங்கள் சம்பாதித்த விலைமதிக்க முடியாத பொக்கிசங்கள்...


அப்படி என் வாழ்க்கையில் திருப்புமுனையாக இருந்த ஒரு ஆசிரியருக்கு நன்றி செலுத்தவே இந்த பதிவு... அவர் நான்  முதுகலை படித்த கல்லூரியின் துறை தலைவர்... இளங்கலை படித்து முடித்து அங்கு ஆடிய ஆட்டத்தால் குறைவான மதிப்பெண்களே பெற்று , வேலைக்கு செல்ல முடியாமல் இளங்கலை பயிலும் முடிவுக்கு வந்திருந்த சமயம் அது.... BE படிக்கும்போதாவது அடுத்து வாழ்க்கையில் என்ன செய்ய போகிறோமோ என்னும் பயம் இருக்கும் , ஆனால் ME படித்த பொழுது எப்படியும் ஏதாவது ஒரு வேலைக்கு சென்று விடலாம் என்னும் நம்பிக்கை இருந்தது , இதனால் கல்லூரியில் படிப்பை விட ஆடிய ஆட்டம்தான் அதிகம், கல்லூரிக்கு சென்ற முதல் வாரத்திலேயே என்னை போலவே யோசிக்கும் ஒரு பெண்ணின் நட்பு கிடைத்தது , அதன் பிறகு கல்லூரி வாழ்க்கை ஒரே மஜாவாகி போனது ... நான் படித்த கல்லூரி ஒழுக்கத்திர்க்கு பெயர் போன கல்லூரி , அங்கு காதல் என்றாலே மரண தண்டனைதான் , உடனே கல்லூரியை விட்டு தூக்கி விடுவார்கள் , இருந்தாலும் காதலுக்கு மூளை கிடையாதே நான் அதை பற்றியெல்லாம் யோசிக்காமல் காதல் வானில் சிறகடித்து பறந்து திரிந்தேன் , ஒரு நாள் மாலை வேளையில் நானும் , அவளும் தனியாக எங்கள் வகுப்பறையில் அமர்ந்து பேசி கொண்டு இருந்தோம் , அதை எங்கள் ஆசிரியர் ஒருவர் பார்த்து விட்டு எங்கள் HODயிடம் போட்டு கொடுத்து விட , அடுத்த நாள் enquiry HOD அறையில் , 


உள்ளே சென்றவுடன் வாங்க ராஜா வந்து உக்காருங்க என்று தனக்கு எதிரில் ஒரு சேரில் உக்கார சொன்னார்... நான்  வெட்டுவதற்க்கு முன்னாள் மாலை போட்டு மரியாதை செய்யபடும் ஆட்டை போலவே உணர்ந்தேன், ஆனால் அவரோ தம்பி காதல் செய்றதுங்கிரது உன்னோட உரிமை , நான் தப்பு சொல்லமாட்டேன் , ஆனால் படிப்புக்கு உன்னோட காதல் தடையாக இருந்து விடாமல் பார்த்துக்கொள் , நம்முடைய கல்லூரிக்கு என்று சில விதிமுறைகள் உண்டு , உன்னோட காதலை கல்லூரிக்கு வெளியில் வளர்த்து கொள் , ஆனால் படிப்பையும் விட்டு விடாதே , நீ வாழ்க்கையிலும் ஜெயிக்க வேண்டும் , உன் காதலிலும் ஜெயிக்க வேண்டும் , என்னுடைய மாணவர்கள் இரண்டு பேர் வாழ்க்கையில் ஜெயித்து புரிதலோடு இணைகிறார்கள் என்றாள் எனக்கு சந்தோசமே , ஆனால் கல்லூரிக்கு உள்ளே இதை நான் அனுமதிக்க முடியாது , மற்றபடி உன் காதல் ஜெயிக்க என் வாழ்துக்கள் என்று பேசி முடித்தார் ... என் வாழ்க்கையில் முதல் முறையாக இப்படி பேசும் ஒரு ஆசிரியரை நான் பார்க்கிறேன் , அப்பொழுது தான் தீர்க்கமான முடிவு எடுத்தேன்  நாம் காதலிலும் ஜெயிக்க வேண்டும் வாழ்க்கையிலும் ஜெயிக்க வேண்டும் என்று...

அதன் பின்னர் எனக்கு அவரின் மேல் பெரிய மரியாதை ஏற்பட்டாலும் , மாணவ சமூதாயத்துக்கே உரிய இவர் ரொம்ப நல்லவரா இருக்காருடா , நாம என்ன தப்பு பண்ணுனாலும் கண்டுக்க மாட்டாருடா என்ற  மன நிலையில்தான் இருந்தேன் , அதன் பின்னர் துணிந்து தவறு செய்ய ஆரம்பித்தேன்... அதை எல்லாம் அவர் கவனித்து கொண்டிருந்தாலும் எதுவும் செய்யவில்லை ...

சரியாக அடுத்த செமெஸ்டெர் , ஒரு நாள் கணினி ஆய்வகத்தில் அமர்ந்து ப்ராஜக்ட் வேளையில் ஈடுபட்டு கொண்டிருந்தோம் , அப்பொழுது என் நண்பன் ஒருவன் மாமியுடன் சல்லாபம் என்னும் ஒரு கில்மா கதையை டவுன் லோட் செய்து படித்து கொண்டிருந்தான் , என்னை கூப்பிட்டு மச்சி இங்க பாருடா இவனுங்க firewall  லச்சனத்தை என்று அவன் ஃபயர்வாலை பிரேக் செய்து அதை  டவுண்லோட் செய்த விதத்தை எனக்கு செய்து காட்டினான் , ஆனால் அந்த ஆய்வகத்தின் technician நாங்கள் படித்து கொண்டிருந்த கில்மா கதையை பார்த்து விட்டு எங்கள் HOD யிடம் போட்டு கொடுத்து விட , மீண்டும் இன்னொரு அசிங்கமான காரணத்திற்காய் அவரிடம் enquiry , அதற்க்கு இரண்டு நாட்கள் முன்னால்தான் ECE டிபார்ட்மெண்ட்டில் இரண்டு மாணவர்கள் இதே காரணத்திர்க்காய் டிஸ்மிஸ் செய்யபட்டு இருந்தார்கள் , எங்களுக்கு ஆதி முதல் அந்தம் வரை எல்லாமும் நடுங்கி கொண்டு இருந்தது , ஆனால் அவரோ இம்முறையும் கொஞ்சம் கூட கோபமேபடாமல் அவர் வாழ்க்கையில் நடந்த ஒரு விஷயத்தை கூறினார் , 

அவர் ஆசிரியர் பணிக்கு சேர்ந்த புதிதில் ஒரு திரையரங்கில் ஆங்கில கில்மா படம் பார்க்க சென்றிருக்கிறார் ,அப்பொழுது இடைவேளையில் அவருடைய மாணவன் ஒருவன் முன்வரிசையில் அமர்ந்து இருந்தவன்,இவரை பார்த்து ஸார் குட் ஈவினிங் ஸார் என்று வணக்கம் வைத்திருக்கிறான் , குற்ற உணர்ச்சியில் அன்றிலிருந்து  கில்மா படம் தியேட்டருக்கு சென்று பார்ப்பதை தவிர்த்து விட்டேன்  என்று கூறினார் , personal lifeல நாம எவ்வளவு அயோக்கியனாகவும் இருக்கலாம் , ஆனால் அது நம்முடைய professional lifeல கொஞ்சம் கூட reflect ஆகிவிட கூடாது என்னும் மிக முக்கியமான ஒரு விஷயத்தை அவர் கொஞ்சம் கூட ஈகோ இல்லாமல் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த ஒரு விசயத்தின் மூலம் எங்களுக்கு உணர்த்தினார் , இவ்வளவு வெளிபடையாக பேசும் ஒரு ஆசிரியரை நான் அன்றுதான் முதல் முறையாக சந்தித்தேன்...


அதன் பிறகு என்னுடைய ஃபைனல் செமெஸ்டெர் ப்ராஜக்ட்டுக்கு அவர்தான் கைட் ... வேறு ஒருவர் என்றாள் இப்படி ஒருவனுக்கு நாம் ஏன் நேரத்தை ஒதுக்கி சொல்லிக்கொடுக்க வேண்டும் என்று என்னை ஒதுக்கி இருப்பார்கள் , ஆனால் அவரோ பல நாட்கள் இரவு ஒன்பது மணிவரை என்னுடன் இருந்து எனக்கு ஹெல்ப் செய்தார் , ஆரம்பத்தில் நான் ஒழுங்காக செய்தாலும் போக போக சோம்பேறிதனத்தால் வேலை எதுவும் செய்யாமல் ஒப்பேத்த ஆரம்பித்தேன் , ஆனால் அவரோ கொஞ்சம் கூட கோபபடாமல் வாரம் ஒருமுறை என்னை கூப்பிட்டு , ஸ்டேட்டஸ் தெரிந்து கொண்டு , கொடுத்த வேலையை முடிக்கவில்லை என்றாலும் அடுத்த வாரத்திர்க்குள் முடித்து விடு  என்று சிரித்து கொண்டே சொல்லுவார் , ஒரு கட்டத்தில் எனக்குள் ஒரு ஆர்வம் வந்துவிட கடகடவென வேலை பார்த்து ரிசல்ட் கொண்டு வந்துவிட்டேன் , எனக்கே ஆச்சரியம் , கடைசியில் ப்ராஜக்ட் டெமோவில் 600 க்கு 595 மதிப்பெண்கள் கொடுத்து என்னை டிஸ்டிங்ஷனில் பாஸ் செய்ய வைத்தார்... அதுவரை நம்ம படிச்ச படிப்புக்கு ஏதாவது ஒரு சின்ன கல்லூரியில் வேலை பார்த்து காலத்தை ஒட்டி விடலாம் என்னும் எண்ணத்தில் இருந்த என்னுள் நாமும் நல்ல கல்லூரிக்கு சென்று வேலை பார்க்க முடியும் என்னும் நம்பிக்கை வந்தது ... நான் படித்த கல்லூரிக்கே என் resume அனுப்பி வைத்தேன் , என்னுடைய நண்பர்கள் அனைவரும் கேலி செய்தாலும் எனக்குள் ஒரு நம்பிக்கை இருந்தது ...

சரியாக ஒருவாரத்தில் HOD எனக்கு ஃபோன் செய்து தம்பி உனக்கு இன்டர்வியூ கார்ட் அனுப்பி இருக்கோம் , அடுத்த வாரம் இன்டர்வியூ வந்து அட்டென்ட் பண்ணு என்று கூற என்னால் நம்ப முடியவில்லை , இரண்டு வருடங்களுக்கு முன்னாலேயே ஃபுல் ஸ்டாப் வைக்கப்பட வேண்டிய என் கல்லூரி வாழ்க்கைக்கு ஒரு கமா போட்டு விட்டார் என் HOD , இன்டர்வியூவில் அவரும் , பிரின்சிபாலும் கல்லூரி கரஸ்பாண்டென்டும் அமர்ந்து இருந்தனர் , என்னை ஒரு கிளாஸ் எடுக்க சொன்னார்கள் , எனக்கோ கை கால்கள் எல்லாம் நடுங்குகிறது , வாய் உளறுகிறது , கையில் மார்க்கர் பிடித்து போர்ட்டில் எழுத முடியவில்லை , ஒரு நிமிடம் கூட கிளாஸ் எடுக்கவில்லை , correspondent நிறுத்த சொல்லிவிட்டார் , அவர் HOD யை பார்த்து உங்க ஸ்டூடண்ட்டா என்று கேட்க அவரும் ஆமாம் என்று சொல்ல , என்னை வெளியே சென்று வெயிட் செய்ய சொன்னார்கள் , எனக்கோ கொஞ்சம் கூட நம்பிக்கை இல்லை , சிறிது நேரத்தில் வெளியே வந்த HOD நல்ல வேளை  தம்பி , அவர் என்கிட்ட உன்னை பற்றி கேட்டார் , நான் பையன் ரொம்ப டாலெண்ட்டான பையன் என்று சொன்ன பின்னாடிதான்  சரி என்று job ஆர்டரில் கையெழுத்து போட்டார் , நீ நாளைக்கு வந்து ஜாயிண்ட் பண்ணிக்கிடலாம் என்று சொல்லி விட்டு என் நன்றியை கூட எதிர்பார்க்காமல் சென்று விட்டார் ... கமா போட்டு தொடரபட்ட என் கல்லூரி வாழ்க்கையின் கடைசியில் ஆச்சரிய குறி .... ஆமாம் என்னுடன் படித்த எல்லா மாணவர்களுக்கும் நான் அங்கு வேலைக்கு சேர்ந்தது பெரிய ஆச்சரியம்தான்...

 நான் கல்லூரிக்கு சென்று படித்த அந்த இரண்டு ஆண்டுகளில் அவர் மூலமாய் எனக்கு நிறைய மாற்றங்கள் , வேறு யாராவது அந்த பதவியில் இருந்து இருந்தால் நான் இப்பொழுது என்ன செய்து கொண்டிருந்திருப்பேன் என்பதை நினைத்து கூட பார்க்க முடியவில்லை  , நான் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த சந்தோஷமான  வாழ்க்கைக்கு முழு காரணமும் நீங்கள்தான் ... ஆசிரியர் தினம் அன்று இந்த பதிவின் மூலமாய் உங்களுக்கு நன்றி சொல்லி நான் பட்ட கடனில் கொஞ்சமேனும் கழித்து கொள்கிறேன் ஸார் .... 








  

13 comments:

Rajesh kumar said...

நெகிழ்ச்சியான விஷயம் நண்பா.. இன்னிக்கு காலைலதான் என் HOD சார், அப்புறம் எனக்கு நான்கு வருடங்களும் ஏதாவது ஒரு பாடமாவது எடுத்த சிவகுமார் சார் இரண்டுபேருக்கும் வாழ்த்துக்கள் அனுப்பினேன். ஏதோ ஒரு மனதிருப்தி.

பாலா said...

ஆசிரியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.

Rathna said...

உங்கள் அனுபவத்தை தமிழில் எழுதி முடிக்க மிகவும் சிரமம் அடைந்தீர்களோ, நிறைய எழுத்துப் பிழைகள் இருந்தாலும் சொல்ல நினைத்தவற்றை சொல்லி முடித்துவிட்டீர்கள், எனக்கு ஒரு சின்ன சந்தேகம், உங்கள் பெற்றோர் பற்றி உங்கள் வாத்தியார் தெரிந்து வைத்திருப்பாரோ என்னவோ (அல்லாது யாரேனும் உங்கள் உறவினர்)இது எனது யுகம் மட்டுமே.

Karthikeyan said...

கட்டுரை ரொம்ப நெகிழ்ச்சியாக இருந்தது. உண்மை எப்பொழுதும் இப்படித்தான் இருக்கும். உங்கள் எண்ணங்களை என்னால் உணர முடிந்தது. ஏன் எனில் நானும் ஒரு வருடம் கோவையில் ஆசிரியராக இருந்ததால். கண்டிப்புக்கு பேர் போன ஜிடி நாயுடு பயிலரங்கத்தில் ஆட்டோமொபைல் வாத்தியாராக இருந்த போது எனக்கும் இதே போன்ற உணர்வு இருந்தது. இப்பொழுது வாழ்க்கை பாதை மாறிவிட்டாலும் ஆசிரியராக இருந்து போது இருந்த தொழில் திருப்தி இப்பொழுது இல்லை.

காதலித்தவரையா கரம் பிடித்தீர்கள்? அது பற்றி சொல்லவில்லையே?

"ராஜா" said...

//காதலித்தவரையா கரம் பிடித்தீர்கள்? அது பற்றி சொல்லவில்லையே?

இல்லை ஸார் .. அது பெரிய கதை , அதை என் பிளாக்கில் தொடர்கதையாவே போடலாம் (பயப்படாதீங்க அப்படி எல்லாம் மொக்கை போட்டுட மாட்டேன்)

இது என் மனைவிக்கும் தெரியும் என்பதால்தான் தைரியமாக எழுதி இருக்கிறேன் ...


நீங்களும் (முன்னாள்) ஆசிரியர் என்பதை அறிந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி ...

"ராஜா" said...

// உங்கள் பெற்றோர் பற்றி உங்கள் வாத்தியார் தெரிந்து வைத்திருப்பாரோ என்னவோ (அல்லாது யாரேனும் உங்கள் உறவினர்)இது எனது யுகம் மட்டுமே.


அதான் இல்லை , அவரின் இயல்பே அப்படித்தான் .. எங்கள் கல்லூரியில் படித்த/ படிக்கும் எல்லா மானவர்களுக்கும் இது தெரியும் ...

"ராஜா" said...

// ஆசிரியனாக இருப்பதில் பெருமை கொள்கிறேன்.


நானும்தான்

"ராஜா" said...

// நெகிழ்ச்சியான விஷயம் நண்பா.. இன்னிக்கு காலைலதான் என் HOD சார், அப்புறம் எனக்கு நான்கு வருடங்களும் ஏதாவது ஒரு பாடமாவது எடுத்த சிவகுமார் சார் இரண்டுபேருக்கும் வாழ்த்துக்கள் அனுப்பினேன். ஏதோ ஒரு மனதிருப்தி.


உண்மை நண்பா .. இந்த பதிவிர்க்கு என்னுடைய மற்றய பதிவுகளுக்கு கிடைக்கும் வரவேற்பு கூட இல்லை , ஆனாலும் இந்த பதிவுதான் நான் எழுதியதிலேயே நெகிழ்ச்சியான பதிவு ... ஏதோ ஒரு சந்தோஷம் இதை படிக்கும் போதெல்லாம் ...

சங்கர் said...

அருமை.

Karthikeyan said...

Hits முக்கியமில்லை நண்பா.. கருத்துக்கள்தான் முக்கியம். நிறைய பேர் படித்துவிட்டு பின்னூட்டங்கள் இடுவது இல்லை. அதனால் தொடர்ந்து எழுதுங்கள். சமயங்களில் உங்கள் பதிவுகளின் காரம் கண்ணை கசக்க வைக்கிறது. அதை கொஞ்சம் குறைக்கலாமே... ப்ளீஸ் (உதாரணம்: எதிர்வாந்தி)

"ராஜா" said...

Sir antha pathivai pola (ethir vanthi)innoru murai kandippaka nadakkathu. Ajith mel irukkum oru pasaththil athu nadanthu vittathu. Athai ezhuthum pothu ungalai pondra readers gnabakam vanthathu , irunthum i can't control myself. Ajith fan inside alwayz win on such situations. Kuraiththu kolkiren sir.Sir antha pathivai pola (ethir vanthi)innoru murai kandippaka nadakkathu. Ajith mel irukkum oru pasaththil athu nadanthu vittathu. Athai ezhuthum pothu ungalai pondra readers gnabakam vanthathu , irunthum i can't control myself. Ajith fan inside alwayz win on such situations. Kuraiththu kolkiren sir.

Karthikeyan said...

Thanks for your consideration Raja.. Keep posting good articles.. We are always with you..

Unknown said...

ஆசிரியர்கள் இப்படித்தான் அன்பு மிக்கவராக இருக்கவேண்டும் உங்கள்ஆசிரியருக்கும் அனைத்துஆசிரியர்களுக்கும் ஆசிரியர்தினநல்வாழ்த்துக்கள் நன்றி

LinkWithin

Related Posts with Thumbnails