இதோ வருது அதோ வருது
என்று ரசிகர்களுக்கு தண்ணி காட்டி கொண்டிருந்த மாங்காத்தா பாடல்கள் அடுத்த மாதம்
10ம் தேதி வெளிவர இருக்கிறது ... ஏற்கனவே வெளிவந்த விளையாடு மாங்காத்தா பாடல் ஹிட் அடித்து விட்டதால் அஜீத் ரசிகர்கள் மத்தியில் இந்த ஆல்பத்திற்க்கு பெரிய எதிர்பார்ப்பு உருவாகி இருப்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை ....இதுவரை பல தேதிகளை சொல்லி
பாடல்கள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்க வைத்து
கடைசியில் ஏமாற்றியதை போல , இம்முறை
நடக்காது காரணம் இது சோனி BMG கம்பெனியால் உறுதிசெய்யபட்ட தேதி ,
அவர்கள்தான் இதை அறிவித்து இருக்கிறார்கள் , எனவே இந்த முறை அஜீத்
ரசிகர்கள் தாராளமாய் எதிர்பார்க்கலாம் …
ஏன் தாமதம்?
பாடல்கள்
வெளியிடுவதில் தாமதம் ஆனவுடன் யுவன் ஷங்கர் ராஜாவுக்கு பேசிய சம்பளம் தரபடவில்லை , அதனால் அவர் பாடல்களை கம்போசிங்க் செய்யாமல் இழுத்தடித்து கொண்டிருக்கிறார் என்று ஒரு வதந்தி பரவியது ,,, ஆனால் யுவன் இந்த படத்தின் பாடல்களை ஒரு மாதத்திற்க்கு முன்னரே முடித்து
விட்டார் , மேலும் தான்
நினைத்தபடியே பாடல்கள் நன்றாக வந்திருப்பதால் தான் வேண்டிக்கொண்டபடி திருப்பதி
சென்று முடி காணிக்கை செலுத்தியிருக்கிறார்... எனவே அவர் இழுத்தடிக்கிறார் என்பது
சுத்த பொய் .... இதன் உண்மையான காரணம் அவர் கம்போஸ் செய்திருந்த ட்யூன்களில் ஒன்றை
மாற்றி தருமாறு படத்தின் இயக்குனரும் சோனி கம்பெனியும்
கேட்டிருக்கிறார்கள்.... அதனால் அந்த ட்யூன்ஐ முழுவதும் ஆரம்பத்தில்
இருந்து மாற்றி அமைத்திருக்கிறார் அவர் ...
படம் முழுவதும் முடிவடைந்த நிலையில் ஒரு பாடலை மாற்றுவது என்பது கொஞ்சம் இல்லை அதிகம் நேரம்
விழுங்கும் வேலை என்பதால்தான் ஆடியோ ரிலீஸ் ஆவதில் தாமதம் ஆகி
விட்டதாம் ... இல்லை என்றால் பாடல்கள் இந்நேரம் வெளியாகி இருக்கும் ... நமக்கு எப்ப ரிலீஸ் ஆகுதுங்கறது முக்கியம் இல்லை , ஆனா எப்படி ரிலீஸ் ஆகுதுங்கிரதுதான் முக்கியம்
, அதனால் அஜீத் ரசிகர்கள்
ஆரம்பத்தில் வெங்கட் பிரபுவை அவரின் ஃபேஸ்புக்கில் காய்ச்சி எடுத்தாலும் , அதன் பின்னர் புரிந்து
கொண்டு அமைதியாகி விட்டனர் ...
பாடல்கள் எப்படி வந்திருக்காம்?
10ஆம் தேதி வெளிவர இருக்கும்
ஆல்பத்தில் மொத்தம் 8 பாடல்கள்
, அதில் ஒன்று ஏற்கனவே வெளியாகி
அஜீத் ரசிகர்களிடம் மட்டுமில்லாமல் எல்லா இடங்களிலும் பட்டயை கிளப்பி
கொண்டிருக்கும் விளையாடு மாங்காத்தா பாடல் ... இந்த பாடலை தவிர்த்து படத்தில்
இரண்டு மெலோடி பாடல்கள் உண்டு .... யுவன் படம் என்றால் ரீ மிக்ஸ் இல்லாமலா? யுவன் இந்த படத்தில் எடுத்து கையாண்டு
இருக்கும் தன் தந்தையின் பாடல் 90களில் வந்து பட்டி தொட்டி
எல்லாம் ஹிட் அடித்த சொர்க்கமே என்றாலும் பாடல் ..
இதில்தான் யுவனும் அவர் தந்தையும் முதன் முதலாக இணைந்து பாடி இருக்கிறார்களாம்....
இன்னொரு பாடல் வெங்கட் பிரபு படங்களில் வழக்கமாக
வரும் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து ஜாலியாக பாடும் வெஸ்டர்ன் கலந்த குத்து பாடல்
... அந்த பாடலின் தொடக்க வரி “மச்சி
ஓபன் தி பாட்டில்”
படம் எப்பொழுது
ரிலீஸ்?
பாடல்களை போல படம்
வெளியாவதற்க்கு முன்னரும் பல வதந்திகள்... இதற்க்கு முழு பொறுப்பு வெங்கட்
ஸார்தான்... படம் ஆரம்பிக்கும் பொழுது 2011 மே 1 படம்
கண்டிப்பாக அஜீத் பிறந்தநாள் பரிசாக
வெளிவரும் என்று சொல்லியிருந்தார்...
அவரால் மே 1 ஆம் தேதி பாடல்களை கூட வெளியிட முடியவில்லை... பின்னர் ஒவ்வொரு மாதமாக தள்ளி தள்ளி போயி ஒரு கட்டத்தில் யோவ் வெங்கட்டு .. சொன்ன தேதியில படம் ரிலீஸ் ஆகாம போச்சுன்னு வச்சிக்கோ , நாங்க எல்லாம் மாங்காத்தாவ மறந்திட்டு பில்லா 2 பக்கம் போயிடுவோம் என்று அஜீத் ரசிகர்கள் எல்லாரும் வெங்கட் பிரபுவை மிரட்டும் நிலமை ஆகி விட்டது .... இப்பொழுது இறுதியாக அடுத்த மாதம்
(ஆகஸ்ட்) இறுதி வாரத்தில் அல்லது செப்டெம்பர் 3 ஆம் தேதி படம் கண்டிப்பாக வெளிவரும் என்று வெங்கட் சொல்லியிருக்கிறார்
இதற்கிடையில் தயாநிதி அழகிரி தயாரிப்பில் படம் வெளிவருவதால் , அம்மாவின் ஆட்சி நடக்கும்
பொழுது அவர் படத்தை வெளியிடுவது ரிஸ்க் என்று பயந்து யாரும் படத்தை வாங்க
முன்வரவில்லை என்று ஒரு வதந்தி பரவியது .... முன்பு கலைஞரின் காலையும் இப்பொழுது
அம்மாவின் காலையும் நக்கி கொண்டு அலையும்
ஒரு நாதாரி கும்பல்தான் இந்த வதந்தியை பரப்பி இருக்கிறது ...
ஆனால் உண்மை அதுவல்ல ... படத்தின் வெளிமாநில உரிமையும் , வெளிநாட்டு
உரிமையும் அதிக விலைக்கு போயிருக்கிறது .... இதனால் படத்தின் தமிழக
உரிமையை வாங்க ஒரு பெரிய போட்டியே நடந்து
கொண்டிருக்கிறதாம் .... தற்போதைய நிலவரப்படி
ஜெமினி ஃபிலிம் சர்க்யூட் மிக அதிக விலை கொடுத்து படத்தை வாங்கி வெளியிட இருப்பதாக
தெரிகிறது ... மேலும்
படத்திற்க்கு சில நாதாரிகளால் எந்தவிதமான தொந்தரவும் வந்துவிடாமல் இருக்க தலயை
ஒருமுறை அம்மாவை சந்தித்து விட்டு வந்து விடுமாறு பலரும்
வற்புறுத்தி இருக்கிறார்கள் , ஆனால் என் சுயநலத்திர்க்காக முதல்வரை பார்க்க விரும்பவில்லை என்று ஸ்ட்ரிக்டாக சொல்லிவிட்டார்
தமிழ் சினிமாவின் ஜெண்டில்மேன் ...
தயாரிப்பாளர் யார்? இயக்குனர் யார்? என்று
பார்த்து பார்த்து வாங்குவதற்க்கு
இது சாதாரண படம் கிடையாது.... தல படம்....
அதனால் படத்தை யாரும் வாங்க தயங்குகிறார்கள் என்பதை குழந்தைகூட
நம்பாது ...மேலும் இந்த படம் oceans eleven படத்தின் தழுவல் என்றொரு
வதந்தியும் பரவிவருகிறது ... அப்படி இருந்தால் சந்தோசமே ... அந்த படம் சென்ற வாரம்தான்
பார்த்தேன் ... George Clooney கதாபாத்திரத்தில்
அஜீத்
வந்தால் செம கெத்தாக இருக்கும் ....இப்பொழுதுதான் ஆட்டையை போட்டு படம் எடுப்பது ஒரு ஃபேஷன் ஆகிவிட்டதே....
நாலு பேருக்கு நல்லதுனா தப்பு பண்றதுல தப்பே இல்லை...
எது எப்படியோ ஆகஸ்ட் 10ல்
தல
ரசிகர்கள் சொல்ல போகும் மந்திரம் “
மச்சி ஓபன் தி பாட்டில்” ... படம்
பட்டைய கிளப்புனா தினம் தினம் “மச்சி
ஓபன் தி பாட்டில்”தான்
(மேல இருக்கிற பாட்டீல் எங்களுக்கு , வயித்தெரிச்சல் பார்ட்டிகளுக்கு டானிக் பாட்டில் தனி )