நாம் எவ்வளவு அராஜகம் செய்தால் என்ன ,, காசு கொடுத்தால் இவர்கள் யோசிக்காமல் குத்துவார்கள் ....
மக்களுக்கு நல்லது செய்ய நம்மை தேர்ந்தெடுத்தால் நம் குடும்பத்திர்க்கு மட்டும் நல்லது செய்வோம் , எவன் என்ன செய்ய போகிறான் , காசை வீசி எறிந்தால் நம் காலில் விழ போகிறான் ....
நான்தான் தமிழகம் எனக்கு அடிவருடுபவனே தமிழன் , என்னை எதிர்த்தால் அவன் இல்லாமல் போவான் ... எலும்புக்கு வாலாட்டும் நாயை போல நான் போடும் பணத்திர்க்கு வாலாட்டும் இந்த மக்கள் இருக்கும் வரை நான்தான் தமிழக சர்வாதிகாரி
நாங்கள் காட்டுவதுதான் படம் , நாங்கள் போடுவதுதான் செய்தி , நாங்கள் எதை காட்டினாலும் அதை நம்புவான் இந்த தமிழன் ... நாங்கள் ஒருவனை குடிகாரன் என்று குதர்க்கமாக காட்டினால் அதை அப்படியே நம்பும் மூளை இல்லாதவனே தமிழன் ...
தமிழனை மயக்க நல்லது செய்ய தேவை இல்லை , சினிமா கவர்ச்சி போதும் , படித்த பட்டதாரிகளையோ இல்லை அனுபவமிக்க அரசியல்வாதிகளையோ பேச சொன்னால் இந்த தமிழன் கேட்க மாட்டான் , அவனுக்கு கவர்சிக்கு குஷ்பூவும் , கெட்ட வார்த்தைக்கு வடிவேலுவும் போதும் , இவர்கள் பேச்சில் மயங்கி அந்த மயக்கம் தெளியாமலேயே ஓட்டை நமக்குதான் குத்துவான்..
இப்படி எங்களை ஏதோ புத்தியில்லாத நாய்களை போல எண்ணிதானே எப்படி எல்லாம் ஓட்டு கேட்க கூடாதோ அப்படியெல்லாம் ஓட்டு கேட்டு வந்தீர்கள் ..
கேரளாவிற்க்கு அடுத்து அதிகம் படித்த மக்களை கொண்டு இருக்கும் தமிழனாகிய எங்களை எவ்வளவு கேவலமாக நினத்திருந்தால் குஷ்பூவையும் , வடிவேளையும் அனுப்பி எங்களை உங்களுக்கு ஓட்டு போட சொல்லியிருப்பீர்கள் ... அவர்களுக்கு கூடிய கூட்டத்தை பார்த்ததும் மக்கள் இன்னும் மாக்களாய்தான் இருக்கிறோம் என்று சந்தோசபட்டு வெற்றிகளிப்பில் மிதந்திருப்பீர்கள் ... இப்பொழுது தெரிந்திருக்கும் கூடிய கூட்டம் சும்மா பொழுதை போக்குவதற்க்குதான் என்று... பொழுதுபோக்கிற்க்கும் அரசியலுக்கும் வித்தியாசம் தெரியாதவன் இல்லை இந்த தமிழன் ...
நாங்கள் சாரை சாரையாய் அணிவகுத்து வந்து ஓட்டு போட்டதும் கொடுத்த காசுக்கு மேல கூவுராங்களே கொய்யாலே என்று உங்கள் மனம் குதூகளித்திர்க்கும் .. ஆனால் கூட்டமாய் வந்தது வாங்கிய காசுக்கு கூவ இல்லை , எங்களை புத்தியில்லாதவர்களாய் நினைத்திருக்கும் உங்களுக்கு பாடம் கற்பிக்கத்தான் என்று இப்பொழுது புரிந்திருக்கும் ...
எத்தனை நாளுக்குத்தான் குட்ட குட்ட குனிந்து கொண்டு இருப்போம் , இதோ நிமிர்ந்து விட்டோம் ... தமிழன் காசுக்காக சோரம் போகும் ஈன கூட்டம் இல்லை என்று நிரூபித்து விட்டோம் ....
இந்த தேர்தல் தோத்தவர்களுக்கு மட்டும் இல்லை ஜெயித்தவர்களுக்கும் ஒரு பாடம்தான் ... நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்று தமிழன் கொடுத்த வெற்றி இல்லை இது , அவர்கள் ஜெயித்திட கூடாது என்பதற்காய் உங்களுக்கு நாங்கள் கொடுத்த வெற்றி ... நீங்களாவது தமிழனை ஏமாளி என்று எண்ணி முன்பு போலவே இஷ்டம் போல ஆடி ,பிற்காலத்தில் நீங்களும் ஏமாறாமல் இருங்கள்...
நாங்கள் முழித்து கொண்டோம் ... நீங்களும் முழித்து கொள்ளுங்கள் ...
பணபலம் , மீடியா பலம் , ரௌடியிசம் , சினிமா கவர்ச்சி என்று எல்லாம் இருந்தும் ஏமாறாமல் தன்னை ஏமாற்றியவர்களை விரட்டி அடித்த தமிழனை பார்க்கும் போது ஊழல் அற்ற நல்லாட்சி புரியும் அரசாங்கத்தை அவன் உருவாக்கும் காலம் வெகு தூரத்தில் இல்லை என்ற நம்பிக்கை துளிர்க்கிறது ...
பணத்திர்க்கு விலை போகும் ஈன கூட்டம் இல்லை நாங்கள் என்று இந்த தேர்தலின் மூலம் உலகத்திர்க்கு உரக்க சொல்லி இருக்கும் தமிழனுக்கு ஒரு ராயல் சல்யூட்
15 comments:
//இந்த தேர்தல் தோத்தவர்களுக்கு மட்டும் இல்லை ஜெயித்தவர்களுக்கும் ஒரு பாடம்தான் ... நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்று தமிழன் கொடுத்த வெற்றி இல்லை இது , அவர்கள் ஜெயித்திட கூடாது என்பதற்காய் உங்களுக்கு நாங்கள் கொடுத்த வெற்றி //
அட்ரா சக்க அட்ரா சக்க அட்ரா சக்க அட்ராராராராரா சக்க!!!
ஜி u r correct...
tis is gud lesson for all Politician
---------------
மக்களுக்கு நல்லது செய்ய நம்மை தேர்ந்தெடுத்தால் நம் குடும்பத்திர்க்கு மட்டும் நல்லது செய்வோம் , எவன் என்ன செய்ய போகிறான் , காசை வீசி எறிந்தால் நம் காலில் விழ போகிறான்
/// மக்கள் நலம் மக்கள் நலம் என்றே சொல்லுவர் தன் மக்கள் நலம் ஒன்றே தான்மனதில் கொள்ளுவார்..
நாங்கள் காட்டுவதுதான் படம் , நாங்கள் போடுவதுதான் செய்தி , நாங்கள் எதை காட்டினாலும் அதை நம்புவான் இந்த தமிழன் ... நாங்கள் ஒருவனை குடிகாரன் என்று குதர்க்கமாக காட்டினால் அதை அப்படியே நம்பும் மூளை இல்லாதவனே தமிழன் ..
///// கொக்கென்று நினைத்தாய கொங்கன வா?
இந்த தேர்தல் தோத்தவர்களுக்கு மட்டும் இல்லை ஜெயித்தவர்களுக்கும் ஒரு பாடம்தான் ... நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்று தமிழன் கொடுத்த வெற்றி இல்லை இது , அவர்கள் ஜெயித்திட கூடாது என்பதற்காய் உங்களுக்கு நாங்கள் கொடுத்த வெற்றி ... நீங்களாவது தமிழனை ஏமாளி என்று எண்ணி முன்பு போலவே இஷ்டம் போல ஆடி ,பிற்காலத்தில் நீங்களும் ஏமாறாமல் இருங்கள்...
நாங்கள் முழித்து கொண்டோம் ... நீங்களும் முழித்து கொள்ளுங்கள் ...
/// அருமை நண்பரே
தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா
இதுதான் மக்களின் மவுன புரட்சி....
மிக நன்றாய் சொன்னீர்கள் ராஜா. இந்த முறை அமைச்சர்கள் கூட கடும் தடுமாற்றம்தான். ஆடிய ஆட்டம் கொஞ்சமா? கரண்ட் இல்லாத சமயங்களில் (முக்கால்வாசி நேரம் இருக்காது) கடிக்கும் ஒவ்வொரு கொசு கூட திமுகவை திட்ட வைத்துவிட்டது. சரியான சவுக்கடிதான்.
இந்த பதிவில் உங்களின் கோபம் கூடுதலாக தெரிகிறதே! ஆனால் நியாயமான கோபம்தான்.
இவனுக ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா?
இவனுக சொன்னததையும் செய்ததையும் மறக்க முடியுமா?
"
கூட்டம் கூட்டமாய் வந்து வோட்டு போட்டதே கொடுத்த காசினால் தான்.
கிராம மக்களுக்கு எதுவும் தெரியாது.ஸ்பெக்ட்ரம் அவர்களுக்கு புரியாது.வோட்டுக்கு காசு கொடுத்து சரிக்கட்டி விடுவோம்
மக்கள் மேம்பாட்டிற்காகத் தான் ஒரு லட்சம் கோடி கடன்.
போலி மருந்து: அது போலியல்ல. காலாவதியான மருந்து தான்.ஆபத்தில்லை- கருணா
காய் பருப்பு விலை அதிகரித்துள்ளது: அரிசி ஒரு ரூபாய் தானே
நீரா ராடியா,கனிமொழி டேப் :இரு பெண்கள் பேசிக் கொள்வதில் என்ன தவறு- கருணா
தறிகெட்டு ஓடுகிறது தேர்தல் கமிசன்
கண்கள் பணித்தது ,இதயம் இனித்தது
மின்வெட்டுக்கு காரணம் ஐந்து வருடங்களுக்கு முன் ஆட்சி செய்த அதிமுக ஆட்சி
மின்வெட்டு:தொழில், தொழிற்சாலை கூடியதாலேயே மின்வெட்டு
தினகரன் சம்பவம்: நிருபர் கேள்வி # நீ தான்டா கொலைகாரன்-கருணா
விலைவாசி உயர்வு: பர்மா பஜாரில் போய் பாரு
விலைவாசி: வாங்கும் சக்தி உயர்ந்துள்ளது
வெங்காய விலை: பெரியாரிடம் கேளு
இது ஹை லைட்..
ராசா தாழ்த்தப்பட்டவர்.
"
புத்தி கொஞ்சமாவது இருக்கிறவன் தோல்விய முன்னயே உணர்ந்திருப்பான். காசும், அதிகாரமும் இருக்கிற அகம்பாவத்துல ஆடுன ஆட்டம் கொஞ்சமா நஞ்சமா?
On another note....
http://twitpic.com/4xch1c
ஏன் மச்சி, பொத்துனாப்ல போய் ஆசி வாங்கிட்டு வர்றதுங்கறது இது தானோ? ;)
ஆனால், ஒரு விஷயம் மச்சி. அதிமுக ஜெயிக்கும் என்று தெரிந்திருந்தாலும்,இந்த முறையும் காசுக்கு ஆசைப்பட்டு வோட்டு போட்டுவிடுவார்களோ இந்த மக்கள் என்ற எண்ணம் இருக்கவே செய்தது.
தமிழன் யார் என்று நிரூபித்து விட்டார்கள். மரண அடி...
தமிழனுக்கு ஒரு ராயல் சல்யூட் .அதோடு தேர்தல் கமிஷனுக்கு ஒரு ஓ ..போடுவோம் .
//இந்த தேர்தல் தோத்தவர்களுக்கு மட்டும் இல்லை ஜெயித்தவர்களுக்கும் ஒரு பாடம்தான் ... நீங்கள் ஜெயிக்க வேண்டும் என்று தமிழன் கொடுத்த வெற்றி இல்லை இது , அவர்கள் ஜெயித்திட கூடாது என்பதற்காய் உங்களுக்கு நாங்கள் கொடுத்த வெற்றி ////
சரியாகச் சொன்னீர்கள்.
Good one Dear.
Thanks for writing such article.
உங்களின் ‘தலைப்புக்கேற்ற’ பதிவுக்கும், ஒரு ராயல் சல்யூட்!
இலவசங்களை கொடுத்து ஆட்சியை தக்க வைத்து கொள்ளலாம் என்று மூனா கானா மனப்பால் குடித்தார்.
ஆனால் மக்கள் தெளிவாக கொடுத்தது என்னவோ கள்ளிப்பால் தான்.
கலியுகத்தில் ஒரு திருதராஷ்டிரன்(ர்)?
Wonderful
well said.
Post a Comment