Followers

Copyright

QRCode

Friday, February 4, 2011

டவுட் கார்னெர்- சில செய்திகளும், என் சந்தேககங்களும்




கருணாநிதி : ஒருவரை சிபிஐ கைது செய்வதை மட்டும் வைத்து அவரை குற்றவாளி என்று சொல்லிவிட முடியாது

டவுட்டு : அடுத்து என்ன சொல்ல போறீங்கண்ணு தெரியும் .. ஒருவரை நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பு கொடுத்ததாலேயே அவர் குற்றவாளி என்று ஒத்து கொள்ள முடியாது அப்படிதான சொல்ல போறீங்க ... விட்டா ஒருவர் அரசாங்க பணத்தை திருடியதாலேயே அவரை ஊழல்வாதி என்று சொல்லமுடியாதுண்ணு சொல்லுவீங்க போல ...


விஜய் : அன்று மோகன்தாஸ் என்னும் மனிதனை ரயிலில் இருந்து தள்ளி விட்டார்கள் .... அந்த பிளாட்பாரத்தில் நம் நாட்டுக்கு காந்தி என்னும் மகான் கிடைத்தார் ... இன்று என் காவலன் படம் வெளிவர தடை செய்கிறார்கள் .. நாளை ?

டவுட்டு : கருப்பா இருந்தா நீ காந்தி ஆகிடுவியா? தென்ஆபிரிக்காவுள அவர  டிரைன்இருந்து தள்ளி விட்டா அவர் மகான் ஆனாறு ... உன்னை  அப்படி தள்ளிவிட்டா பிளாட்பார்ம்பிச்சைதான் எடுக்கணும் ...  யோவ் உன் ரசிகர்களை உசுப்பேத்தி அரசியல்ல இறங்கி காசு பாக்கணும்னா , சின்ன எம்ஜிஆர் கறுப்பு எம்ஜிஆர் மாதிரி நீயும் கரடி எம்ஜிஆர்  அப்படின்னு சொல்லி ஓட்டு பிச்சை எடு , ஓட்டு விழலையா மறுபடியும் சங்கவிய கூப்பிட்டு போயி சோப்பு போடு ... அத விட்டுட்டு காந்திய பத்தியெல்லாம் பேசாத... பாவம் அந்த மனுஷன் அவர ஏன் அசிங்கபடுத்திக்கிட்டு ... மக்களே இந்த  மாதிரி ஆளுங்க இப்படி பேசுரதை தடுத்து நிறுத்த ஏதாவது பண்ணுங்களேன்  ...

 


இவங்க ரெண்டு பெரும் ஒண்ணா ?




ராமதாஸ் : தமிழ் நாடு முன்னேற வேண்டும் என்றாள் நான் முதல்வர் ஆனால்தான் உண்டு ...

டவுட்டு : முதல்வர் ஆகணும்னா குறைந்தது 130 தொகுதிளையாவது வெற்றி பெற்றிருக்க வேண்டும் ... அப்படினா 130 தொகுதிளையாவது போட்டி போட 130 வேட்பாளர்கள் வேண்டும் .. அவ்வளவு ஆட்கள் உங்க கட்சியில இருக்காங்களா ஐயா?


எடியூரப்பா : குற்றம் நிரூபிக்க பட்டால் அரசியலில் இருந்து விலக தயார்

டவுட்டு : நல்ல விஷயம் ... பில்லி சூனியம் வச்சா இப்படியெல்லாம் பேச தோணுமா .. அப்படினா இவருக்கு பில்லி சூனியம் வச்ச புண்ணியவாங்களை தமிழ் நாட்டுக்கு கூப்பிட்டு வாங்கப்பா ... குற்றம் நிரூபிக்க பட்டால் கூட அவர் குற்றவாளியாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை அப்படின்னு உளறிக்கிட்டு இருக்கிற நெறைய பேருக்கு பில்லி சூனியம் வைக்க வேண்டி இருக்கு ...


கருணாநிதி : பணக்காரர்கள் மட்டுமே பயன்படுத்திய செல்போன் சேவையை இன்று ஏழை எளிய மக்களும் பயன்படுத்த உதவியதர்க்காக சிறை சென்ற ராசாவை பாராட்டுகிறேன்

டவுட்டு : அதான பணக்காரணுக மட்டும் பயன்படுத்துற சேவையா இருந்தா கனெக்ஷன் கம்மியாதான் இருக்கும் அதுல லச்சக்கணக்குலதான் ஊழல் பண்ண முடியும் ...  நாட்டுல எல்லாரும் பயன்படுத்துற மாதிரி கோடிக்கணக்குல கனெக்ஷன் கொண்டுவந்தாத்தான 1.76 லட்சம் கோடிக்கு உலகமகா ஊழல் பண்ண  முடியும் ... இதர்க்காக உதவிய ராசாவை தலைவர் பாராட்டுவதில் தவரே இல்லை ...


மன்மோகன் : அருணாசலம் இந்திய மாநிலமே ... சீனா அதை தன் வரைபடத்தில் இணைப்பதால் மட்டுமே அது சீனாவுக்கு சொந்தம் என்று ஆகிவிடாது


டவுட்டு : அதான சீன அரசே வரைபடத்துல இணைத்தால் மட்டும் போதுமா? அப்படின்னு இவரு கேக்குரத பாத்துமா உங்களுக்கு புரியலை ... இவருகிட்ட கேட்டு இத்தாலி அம்மையாரின் சுவிஸ் பாங்க் அக்கவுண்ட் நம்பர் வாங்கி ஒரு 1000 கோடி அமெரிக்க டாலரை அதுல போடுங்க ... அருணாசல பிரதேசம் உங்களுக்கு பட்டா எழுதிவைக்கபடும் ...

வீரமணி : அன்று கோவலனுக்கு நடந்தது இன்று ராசாவிர்க்கு நடந்துள்ளது...

டவுட்டு : கோவலனுக்கு பிரச்சனை மாதவியால  வந்தது .. இவருக்கு பிரச்சனை எந்த பெண்ணால வந்ததுண்ணு ஊருக்கே தெரியும் ... அப்ப அவங்கள மாதவிண்ணு சொல்லுறீங்களா? (நான் நீரா ராடியாவ சொன்னேன்) ... (அப்பாடா வீட்டுக்கு ஆட்டோ வராது)

நவரச நாயகன் கார்த்திக் : அம்மா முதல்வராவதர்க்கு என் உயிரையும் கொடுப்பேன் ...

டவுட்டு :  நீ உயிர எல்லாம் கொடுக்கவேணாம் , பிரச்சாரதுக்கு மட்டும் வராம இருந்தா போதும்னு அம்மா சொன்னாங்கலாமே உண்மையா? அது சரி அம்மா கடத்துனா அம்மாவுக்கு ஆதரவா பேசுவீங்க , இந்த தடவ அழகிரி கடத்துனா என்னா பண்ணுவீங்க?

நமீதா : சூரியாவோடு நடிக்க ஆசைதான் ஆனால் உயரம்தான் இடிக்கிறது ...

டவுட்டு : இது உள்குத்தா இல்லை வெளிக்குத்தாண்ணு தெரியல .. ஆனா உலகமகா குத்துடா சாமி... அந்த குள்ளனோட எல்லாம் நடிக்க முடியாதுண்ணு எவ்வளவு நாசூக்கா சொல்லுது அக்கா ... கலைஞர் கைபட்டா (ஆசீர்வாதம் பண்ணங்க) நமீதா கூட நக்கலா பேச ஆரம்பிக்கிது  ...

எக்ஸ்ட்ரா :



எது எதுலதான் ஊழல் பண்றதுண்ணு ஒரு விவஸ்தை இல்லையா? படிக்கிற பிள்ளைக சாப்பிடுர சத்துணவு எந்த நாதாரியோ ஊழல் பண்ண போயி  , சாப்பாடு  கிடைக்காம பள்ளிக்கூடத்து பிள்ளைக  பக்கத்துல இருக்கிற கோவில் அன்னதானத்துல வாங்கி சாப்பிடுர காட்சிதான் மேல இருக்கிற படம் ....  இப்படி இவங்க சாப்பாட்ட ஆட்டைய போட்டு உடம்ப வளக்குறதுக்கு பேசாம விஜய் ஆரம்பிக்க போர கட்சியில எம்எல்ஏ சீட்டு வாங்கி தேர்தலுல போட்டி போடலாம் (கேரளாவுக்கு அடிமாடாய் போய்டலாம்னு சொல்லி சொல்லி எனக்கே போர் அடிக்கிது அதான் மாத்திக்கிட்டேன்)

12 comments:

Unknown said...

கருணாநிதி : கைது செய்ததினால் ஒருவன் குற்றவாளி ஆக முடியாது. அதற்க்கு ஏகப்பட்ட முன் உதாரணம் இருக்கு. நானே எத்தனை கோடிக்கு ஊழல் பண்ணியிருக்கேன் நான் கைதாகவில்லையே அதற்க்காக என்னை நல்லவன் என்று யாரும் சொல்லவில்லையே. எதையுமே ப்ளான் பண்ணி செய்யணும் இல்லேனா இப்படிதான்.

Anonymous said...

.. விட்டா ஒருவர் அரசாங்க பணத்தை திருடியதாலேயே அவரை ஊழல்வாதி என்று சொல்லமுடியாதுண்ணு சொல்லுவீங்க போல //செம நெத்தியடி...திருந்தவே மாட்டானுக..வாய் மட்டும் இல்லைனா இவனையெல்லாம் நாய் தூக்கிட்டு போயிரும்

தமிழ்மகன் said...

நச்சுன்னு ஒரு நல்ல பதிவு.
சூப்பர்.

தமிழ் 007 said...

பதிவை படித்தவுடன் உங்களை நிச்சயம் பாராட்ட வேண்டும் என்று தோன்றும் அளவுக்கு நல்ல பதிவு.(சிந்திக்கவும் வைத்தது)

"ராஜா" said...

@ கே. ஆர்.விஜயன்
// எதையுமே ப்ளான் பண்ணி செய்யணும் இல்லேனா இப்படிதான்

ராசா வேஷம் களஞ்சி போச்சி டும் டும் டும்

"ராஜா" said...

@தமிழ்மகன்

உங்க பேர் நல்லா இருக்குங்க ...

"ராஜா" said...

@ ஆர்.கே.சதீஷ்குமார்

தமிழ்நாடே அவரு பின்னாடி இருக்குன்னு நெனப்பு ...

"ராஜா" said...

@ தமிழ் 007

நன்றி தமிழ் ...

கலையன்பன் said...

டவுட்டு முடிஞ்சிப் போச்சா?
டவுட்டு இன்னும் இருக்கா?
#டவுட்டு.

Selvakumar said...

ராஜா சூப்பர். தருதல எப்போ தன்னை காந்தியோட ஒப்பிட்டு பேட்டி கொடுத்தான் :ஷாக்: ????? இந்த கொடுமை நடந்தும் காங்கிரஸ் சும்மா பாத்துகிட்டு இருக்கா... படத்தை ரிலீஸ் பண்ணுறதை தடுத்ததை (????) அப்படியே ரேசிசத்தோட ஒப்பிடுறானே..

கார்த்திக், நமீதா ஜோக் சூப்பார்.

"ராஜா" said...

@ கலையன்பன்

எனக்கே அந்த டவுட் இருக்கு ...

@ selvakumar

//இந்த கொடுமை நடந்தும் காங்கிரஸ் சும்மா பாத்துகிட்டு இருக்கா..

அவங்க ஏதோ காமெடி பீசு உளறுதுண்ணு நெனச்சி சும்மா விட்டுருப்பானுக...

ILLUMINATI said...

//
மன்மோகன் : அருணாசலம் இந்திய மாநிலமே ... சீனா அதை தன் வரைபடத்தில் இணைப்பதால் மட்டுமே அது சீனாவுக்கு சொந்தம் என்று ஆகிவிடாது //

இது ஒரு தமாசு பீசு.தட்டிக் கேட்க வக்கில்லாம தடவிக்கிட்டு இருக்குது.(யாரை என்றெல்லாம் நக்கலாக கேக்கப்படாது). :)

LinkWithin

Related Posts with Thumbnails