Followers

Copyright

QRCode

Saturday, January 29, 2011

அன்றும் இன்றும் : காவலன் எனக்கு புடிச்சிருக்கு : சில முரண்பாடுகள்

 "தரை மேல் பிறக்க வைத்தாய்  
  எங்களை தண்ணீரில் பிழைக்க  வைத்தாய் "



கவிஞர் வாலியின் வார்த்தைகள் தினம் தினம் நிஜமாகி கொண்டு இருக்கிறது இந்து மகா சமுத்திரத்தில் ... கையாலாகாத கடற்படை , அரசியல் வேசிதனம் செய்யும் மாநில கட்சிகள் , சிங்களவனுக்கு ஜால்ரா தட்டும் முதுகு வளைந்த மத்திய அரசு இப்படி எல்லாரும் சேர்ந்து தமிழ்  மீனவர்களை தினம் தினம் சாகடித்து கொண்டிருக்கிறார்கள் ..... சேரன் தேசிய கீதம் படத்தில் காட்டியதை போல இவர்களை எல்லாம் மாறுவேசத்தில் கடலில் மீன் பிடிக்க அனுப்ப வேண்டியதுதான் , சிங்கள படையின் கையில் மாட்டினால் என்னவாகும் என்று அவர்களுக்கு அப்பொழுதாவது புரியட்டும் .... தன்னோட மகனுக்கு அமைச்சர் பதவி வாங்கி தர தள்ளு வண்டியில உக்காந்துகிட்டே டெல்லி வரைக்கும் போயிட்டு வந்த நம் இன தமிழ் தலைவர் , இதற்க்கு வீட்டுல இருந்துகிட்டே பிரதமருக்கு தந்தி அடிச்சிக்கிட்டு இருக்காரு.... யாராவது அவருக்கு இமெயில் எப்படி அனுப்புறதுண்ணு சொல்லி கொடுங்கப்பா,  தந்தி அனுப்பக்கூட கொஞ்சம் கஷ்டபடணும் , வயசான காலத்துல உக்காந்த எடத்துல இருந்தே ஈசியா மெயில் அனுப்பட்டும் ...பாவம் நமக்காக உழச்சி உழச்சி முட்டி தேஞ்சி உக்காந்து இருக்காரு அவர எதுக்கு கஷ்டபடுத்திக்கிட்டு...

எனக்கு ஒரு டவுட் ... ஒருவேளை நீரா ராடியா மேட்டர்ல சிபிஐ கனிய கைது பண்ணுனா அப்பவும் நம் தமிழ் இன தலைவர் சோனியாவுக்கு தந்தி அனுப்பிக்கிட்டுதான் இருப்பாரா? 


 
நேற்று  நண்பன் ஒருவன் வேலை கிடைத்ததுக்கு ட்ரீட் கொடுத்தான் .. அப்படியே படத்திர்க்கும் அழைத்து சென்றான் ... என்னுடன் இருந்த அனைவரும் கோரஷாக சொன்ன ஒரே ஒரு விஷயம்  "தயவு செய்து காவலன் மட்டும் வேண்டாம்"  ...அதனால் ஆடுகளம் படம் மதுரை மதி திரை அரங்கில் இரண்டாவது முறையாக பார்க்க நேர்ந்தது ...யாத்தே யாத்தே பாடலில் திரையரங்கமே அதிர்ந்தது ... அதுவும் தனுஷ் கைலியை தலையில் போர்த்து கொண்டு ஆடும் போது ஒட்டு மொத்த தியேட்டரும் விசில் அடிக்கிறது .. எனக்கு முன்வரிசையில் அமர்ந்திருந்த ஒரு பெண்மணி பக்கத்தில் தன் கணவர் இருக்கிறார் என்பதை கூட மறந்து அந்த நடனம் வரும்போதெல்லாம் கத்தி கொண்டே இருந்தார் ... பாடல் கன்பர்ம் மாஸ் ஹிட் , அதைவிட பெரிய ஹிட் தனுஷின் நடனம் ... இரண்டாவது தடவை பார்த்தாலும் முதல் பாதி போரடிக்காமல் சென்றது ... காரணம் ஜி.வி.பிரகாஷ் ... அதுவும் அடுத்தடுத்து வரும் ஒத்த கண்ணால , யாத்தே யாத்தே பாடல்கள் படத்திர்க்கு பெரிய பிளஸ்... தனுஷ் ஆடும்போதெல்லாம் தியேட்டர் முழுவதும் விசில் சத்தம் .... தனுஸிர்க்கு ரசிகர் வட்டம் பெருகி கொண்டே போகிறது என்று தோன்றுகிறது .. .. ஆனால் இரண்டாம் பாதியில் நான் எவ்வளவோ முயற்சி செய்தும் தூங்காமல் இருக்க முடியவில்லை ... வெற்றிமாறன் இன்னும் விறுவிறுப்பாக யோசித்து இருக்கலாம் ... 


 
இருந்தாலும் தொடர்ந்து மூன்றாவது முறையாக விஜையை தோற்கடித்து இருக்கிறார் தனுஷ் ... வாழ்த்துக்கள் தனுஷ் ...

முரண்பாடுகள் : 

கணக்கு பாடத்துல ஒரு கான்செப்ட் இருக்கும் நேர்மாறல் எதிர்மாறால் என்று ...இரண்டு விசயங்களுக்கு இடையே இருக்கும் தொடர்பை குறிக்க இது பயன்படும் ... ரெண்டுமே அதிகமாகிக்கிட்டே இருந்தா அது நேர்மாறல் , ஒண்ணு கூடி ஒண்ணு குறைந்தால் அது எதிர்மாறால் ... கணக்குல நேர்மாராலும் இருக்கு எதிர்மாராலும் இருக்கு ... 

அதே மாதிரி நம்ம வாழ்க்கையிலும் சில எதிர்மாறால் விசயங்கள் இருக்கு , 


இருபது  வருசத்துக்கு முன்னாடி , நாம எல்லாம் நம்ம தாத்தா பாட்டி கூட கூட்டு குடும்பமா வாழ்ந்துக்கிட்டு இருந்தோம் ... அப்ப ஒவ்வொரு குடும்பத்திலேயும் குறைந்தது இருபது பேராவது இருப்பாங்க... ஆன தாத்தா கட்டி வச்சிருந்த வீட்ட பாத்தா ரெண்டு மச்சி ரூம் , ஒரு அடுப்பாங்கடை , முன்னாடி ஒரு திண்ணை இவ்வளவுதான் இருக்கும்... இட நெருக்கடி அதிகமா இருந்தாலும் ஆட்கள் நெரஞ்சி வீடே திருவிழா மாதிரி எப்பவும் கலகலண்ணு இருக்கும்... அன்னைக்கு  வீடு சிறுசு , குடும்பம் பெருசு ... 

இப்ப ஒவ்வொரு குடும்பமும் தனிதனியா குடித்தனம் போயி , ஒவ்வொருத்தரும் ரெண்டு மாடி வச்சி , பத்து ரூம் , நாலு பாத்ரூம் , ரெண்டு  கிச்சன் இப்படி பெரிய வீடு கட்டி வாழ்ந்துக்கிட்டு இருக்கோம் .. ஆனா எந்த வீட்டிலேயேம் நாலு பேரை தாண்டி ஆட்கள் கிடையாது .. டிவி சத்தம் தவிர வேற எந்த சத்தமும் வீட்டுல கேக்காது ...   இன்னைக்கு வீடு பெருசு , குடும்பம் சிறுசு .... (அப்ப கலைஞர் குடும்பம்? அங்க மனச தவிர எல்லாமே பெருசு)


அன்னைக்கு யாரும் பள்ளி படிப்பை தாண்டுனது கிடையாது .. ஆனா எல்லாரும் நூறு வயசை தாண்டி ஆரோக்கியமா இருந்தாங்க ... அன்னைக்கு படிப்பு  கம்மி , அறிவு அதிகம் ...

 
இன்னைக்கு எல்லாரும் கையில ரெண்டு மூணு டிகிரியோட அலையிறோம் .. ஆனா அம்பத தாண்டவே தகதினித்தோம் போடுறோம் ... இன்னைக்கு படிப்பு  அதிகம் , அறிவு கம்மி 

(எங்கப்பா நிறையா படிடா .. நல்லா அறிவு வளரும்னு சொன்னாரு .. நானும் நிறைய படிச்சி ரெண்டு மூணு டிகிரி வாங்குனேன் .. அறிவு வளர்ந்ததா இல்லையாண்ணு தெரியல .. இருபத்தி அஞ்சு வயசுக்கு மேல எந்த உடல் உழைப்பும் இல்லாம தொப்பை நிறையா வளர்ந்துருச்சி..).




அன்னைக்கு எங்க தாத்தாவுக்கு செவ்வாய் கிரகத்துல தண்ணி இருக்கா இல்லையாண்ணு தெரியாது? ஆனா பக்கத்து வீட்டுல தினமும் அவன் வீட்டு குழாயில கார்பரேசன் தண்ணி பிடிக்கிற அளவுக்கு அவன்கூட பழக்கம் இருந்துச்சி ... அன்னைக்கு உலகம் பெருசு , ஆனா மனிதனுக்கு மனிதன் இடைவெளி சிறுசு ...

இன்னைக்கு சூரிய குடும்பத்தையும் தாண்டி அங்கிட்டு என்ன இருக்குன்னு எனக்கு கொஞ்சம் கொஞ்சம் தெரியும் , ஆனால் எங்க பக்கத்து வீட்டுல இருக்கிறவன் பேர் என்னன்னு எனக்கு இன்னமும் தெரியாது ...இன்னைக்கு உலகம் சிறுசு , ஆனா மனிதனுக்கு மனிதன் இடைவெளி பெருசு ...



கடைசியில் நான் ஒரு உண்மையை ஒத்து கொள்ளபோகிறேன் ... எனக்கு காவலன் மிகவும் பிடித்திருந்தது .... முதலில் போஸ்டரை பார்த்த பொழுது இது கண்டிப்பாக எப்பொழுதும் போல சாதாரணமான சரக்காகத்தான் இருக்கும் என்று நினைத்தேன் ... அப்படி ஒன்றும் பெரிய ஈர்ப்பு அதன் போஸ்டர்களில் இல்லை .. ஆனால் காசு கொடுத்து அதை  அனுபவித்த பொழுதுதான் , அதில் இருக்கும் புதுமையை உணர்ந்தேன் ... நான் பொய்  சொல்லவில்லை உண்மையிலேயே காவலன் கொடுத்த காசுக்கு நல்ல சந்தோசத்தை தரும் .. ஆனால் என்ன இதை குடும்பமாக அனுபவிக்க முடியாது ..அப்புறம் எல்லாரும் திரும்ப திரும்ப கேட்டு நச்சரிக்க ஆரம்பித்து விடுவார்கள் .. நான் முதல் தடவை என் நண்பனை  கூட்டிக்கொண்டு சென்றேன் ... அவனுக்கு மிகவும் பிடித்து விட , இதுவரை ஐந்து முறைக்கும் மேல் காவலனுக்கு தண்ட செலவு செய்ய வேண்டியதாகி விட்டது .. அதனால் நீங்கள் மட்டும் தனியே செல்லுங்க... எத்துணை முறை வேண்டுமானாலும் ஆசை தீர சந்தோஷமாக அனுபவிக்கலாம் ... இதோ உங்களுக்காய் பிரத்யோகமாக நான் அனுபவித்த அந்த காவலனில் இருந்து ஒரு ஸ்டில் ...  

                                                                 ....
                                                                
                
                                                                 ....


                                                                 ....







                                                                 ....






                                                                 ....





                                                              ............








(ஊருக்குள்ள இந்த காவலனோட பேரை கெடுக்க இன்னொரு காவலன் வந்திருக்காராம் ... அவரை மட்டும் ஓசியாக்கூட பாத்திராதீங்க .. அப்பறம் அந்த கொடுமையை  மறக்க இந்த காவலனை லார்ஜ் லார்ஜா உள்ள தள்ள வேண்டி இருக்கும் ஜாக்கிரதை)

5 comments:

ராஜகோபால் said...

காவலன் கலக்கல் என்ன விலை.

"ராஜா" said...

இது ஒரிஜினல் காவலன் .. அதனால விலை கொஞ்சம் ஜாஸ்தி ...

பாலா said...

அன்றும் இன்றும் முரண்பாடு சூப்பர்.
அன்று பணமும் இல்லை நோயும் இல்லை. இன்று பணமும் நிறைய இருக்கிறது. நோயும் இருக்கிறது.

இந்த காவலன் எந்த தேட்டர்லா ஓடுது?

வினோ said...

காவலனை தேடி பிடிக்கிறேன்...

"ராஜா" said...

@ வினோ

கேடச்சா எனக்கும் கொஞ்சம் அனுப்பி வையுங்க ..

@ பாலா

கவேர்ன்மெண்ட் தியேட்டர் பெயர் டாஸ்மாக்

LinkWithin

Related Posts with Thumbnails