Followers

Copyright

QRCode

Sunday, January 16, 2011

காவலன்- கண்ணா ரெண்டு லட்டு திங்க ஆசையா?


கண்ணா லட்டு திங்க ஆசையா? கண்ணா ரெண்டாவது லட்டு திங்க ஆசையா? இந்த விளம்பரம் பாத்திருக்கீங்களா? இதுதான் காவலன் படத்தின் ஒன் லைன் ... நம்ம டாக்குடர் அவர்கள் எப்படி போனில் பேசி இரண்டு பிகர்களை லவட்டுகிறார் என்பதே இந்த காவலன் என்னும் அற்புத காவியத்தின் கதை ...


தம்பிக்கு எந்த ஊரு என்று ஆரபிக்கும் கதை ஏகன் ரூட்டில் பயணித்து திடீரென்று காலமெல்லாம் காதல் வாழ்க என்று திசை மாறி ஆங்காங்கே பத்ரி  பூவெல்லாம் உன் வாசம் என்று கலந்து கட்டி கடைசியில் அஞ்சறைக்குள்ள வண்டியாக முடிந்திருக்கிறது இந்த காவலன் ...

விஜய் பஞ்ச் வசனம்  ஓவர் பில்ட் ஆஃப் என்று எதுவும் பண்ணவில்லை .. இதற்காக அவர்கள் ரசிகர்கள் வருத்தபட்டார்களோ இல்லையோ  நல்ல எஞ்சாய்மெண்ட் மிஸ் ஆன வருத்தம் எனக்கு நிறைய ... முதல் பாதியில் எனக்கு நிறைய காட்சிகளில் ஏகன் படம் ஞாபகம் வந்தது ... குறிப்பாக அந்த பேஸ்கட் பால் கிரவுண்ட் சண்டை ... இதே போன்ற ஒரு சிட்சுவேஷனில் தான் அந்த படத்திலும் அதே லொகேஷனில் அதே லைட்டிங்கில் ஒரு சண்டை வரும் ... வில்லுவில் அஜித்தின் மெகா ஹிட் பில்லாவை இமிடேட் பண்ணுனார் சரி   இதில் அஜித்தின் சராசரி படத்தைக்கூட இமிடேட் பண்ணவேண்டுமா? அஜித் என்ன செய்தாலும் அதே போல் தானும் செய்து பார்த்து விட வேண்டும் என்ற விஜய்யின் ஆசைக்கு காரணம் என்னவோ?

அசின் அழுது கொண்டே இருக்கிறார் ... மேக் அப் கரைந்து கண்ணீரோடு சேர்ந்து ஓடுகிறது  அதனால் சில இடங்களில் அசிங்கமாக தெரிகிறார் ... விஜய் மேல் என் எதர்க்கு என்று தெரியாமலே காதல் கொள்கிறார் .. அதை சொல்வதர்க்கு எத்தனையோ வாய்ப்புகள் வந்தும் சொல்லாமல் போகிறார் ... அதர்க்கு காரணம் கிளைமேக்ஸ் பார்க்கும்போதுதான் எனக்கு தெரிந்தது .. இப்படி ஒரு மகா உன்னதமான  கற்பனைக்கு எட்டாத கிளைமேக்ஸ் வைக்க வேண்டும் என்ற ஒரே ஒரு காரணத்திர்க்காக இயக்குனர் அசினை தன் காதலை சொல்லவே விடவில்லை .என்று .. வாழ்க அவர் கற்பனை வளம்... ஸார் இப்படியே வித்தியாசமாக யோசித்து பல உன்னத திரைக்காவியங்களை படைக்க என்னுடய மனமார்ந்த வாழ்த்துக்கள்.....

ராஜ்கிரண் அசினுக்கு அப்பாவா இல்லை மாமாவா தெரியவில்லை ... எந்த அப்பனும் தன் மகளுடன் (மகள்களுடன்) அதே வயசு பையனை  (படத்தில் விஜையை அப்படிதான் காட்டுகிறார்கள்) தங்க வைக்க மாட்டார்கள் .. இவர் அனுமதிக்கிறார் .. அதனால்தான் எனக்கு இந்த சந்தேகம் ....
விஜையும் நோகாமல் முதல் லட்டாக அசினின் சித்தி பெண்ணையும்  இரண்டாவது லட்டாக அசினையும்  ஆட்டையை போடுகிறார்... இப்படி ஏதாவது ஒரு பாடிகாட் வேலை இருந்தால் யாராவது என்னை அணுகவும் ... சம்பளம் தேவை இல்லை சாப்பாடு மட்டும் போட்டா போதும் ....

படம் முழுவதும் ஏகப்பட்ட லாஜிக் ஓட்டைகள் .. அதே எல்லாம் நான் இங்கே எழுதிக்கொண்டு இருந்தால் எனக்கு நேரம் பத்தாது ... மிக பெரிய ஓட்டை தினமும் நேரில் கேட்கும் ஒரு பெண்ணின் குரலை போனில் கண்டுபிடிக்க முடியாமல் போவது ... அசின் முதலில் தன் தோழியிடம் குரல் மாற்றி பேசி காட்டுகிறார் .. அவளும் சூப்பர்டி கண்டே பிடிக்க முடியாதுடி என்று சொல்கிறாள் ... உடனே நாமும் நம்பிவிட வேண்டுமாம் ... அதன் பின் அசின் எந்த காட்சியிலும் குரலை மாற்றி பேசியதை போல காட்டவில்லை .... அட போங்கையா ...

படத்தின் பெரிய ஆறுதல் நீ படிச்சி யூனிவர்சிட்டி ரேங்க் வாங்குனாத்தான் நான் உங்கிட்ட பேசுவேன் என்று அசின் விஜய் யிடம் சொன்னவுடன்  நான் பயந்ததை போல விஜய் யூனிவர்சிட்டி ரேங்க் வாங்கி அதை மேடையில் கண்ணீருடன் தன் காதலிக்கு சமர்பிப்பதை போல காட்டி நம் நெஞ்சை கழுவாமல் இருந்தது   .. நல்ல வேலைடா சாமீ ...

 பாடல்கள் ரொம்ப சுமார் .. அதை எடுத்த விதம் அதைவிட சுமார் ... சண்டைக்காட்சிகள் தேவையே இல்லை .. முதல் பாதியில் ஒவ்வொரு பாட்டு முடிந்தவுடனும் ஒரு சண்டை வருகிறது ... இந்த ஸ்டைலை தெலுங்குக்காரன் கைவிட்டே நாப்பது வருஷம் ஆகிவிட்டது .... மலையாள சித்திக் இப்பொழுதுதான் செய்துபார்க்கிறார் ...

 முதல்பாதியில் ஓரளவிர்க்கு நன்றாக போகும் படம் இரண்டாம் பாதியில் அசின் விஜையின் ஃபோன் கடலையை மட்டுமே கடைசி வரை காட்டி நம்மை நூறு முறை கொட்டாவி விட வைக்கிறது ... சில காட்சிகளை சீரியலை ரசிக்கும் பெண்கள் ரசிப்பார்கள் என்று நினைக்கிறேன் ....

காவலன் உங்களுக்கு சீரியல் பார்க்கும் பழக்கம் இருந்தால் ஒரு முறை இந்த சீரியலை பார்க்கலாம் ...

  


18 comments:

Unknown said...

agan also a copy of hindi movie Main Hoon Na

Yoganathan.N said...

//an also a copy of hindi movie Main Hoon Na //
Yes, we don't deny that. Infact, we made an official announcement on remaking it on movie pooja itself. ;)
That too, the screenplay was totally different from the original. And most importantly, Ajith didn't 'copy' SRK's mannerismas.
If you want to know how one copies original version's hero's mannerisms including his dressing style and 'jatti, please do watch Pokkiri and it's original Telugu version.

"ராஜா" said...

2 கார்த்திக்

நீங்கள் விஜய் ரசிகர் என்றாள் ரீமேக் பற்றி நான் உங்களுக்கு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை

யோகா bro
Well said

Anonymous said...

Hi There,

I think u r a fan of AJITH that made u to write this sort of jealous review for this film.

I think you are totally got jealous about the film after watching it.

Never mind, when its come to writing review for a film be a neutral person since there are people will like your review.

Best regards,
Nilla

"ராஜா" said...

இதை போன்ற கமெண்ட்களை இந்த விமர்சனம் எழுதும் போதே எதிர்பார்த்தேன் ... என்னுடய ஆடுகளம் விமர்சனம் பாருங்கள் அதிலும் இப்படிதான் வாரி இருப்பேன் .. படம் பார்க்கும் போது நான் என்ன உணர்கிறேனோ அதைத்தான் எழுதுவேன் ... நான் இரண்டு விமர்சனங்களிலும் எழுதிய விசயங்கள் உண்மைதான் என்பதை படம் பார்த்தால் உங்களுக்கு தெரியும் ...

அப்பறம் பொறாமை அது இதுண்ணு ஏதேதோ சொல்லுறீங்க ... படம் பாத்துடீங்களா? சொல்லுங்க என்ன இருக்கு இந்த படத்துல இரண்டாம் பாதியில் ... இயக்குனரை நினைத்து பொறாமைபடும் அளவுக்கு...

ILLUMINATI said...

//கடைசியில் அஞ்சறைக்குள்ள வண்டியாக முடிந்திருக்கிறது இந்த காவலன் ...//

// அப்பனும் தன் மகளுடன் (மகள்களுடன்) அதே வயசு பையனை (படத்தில் விஜையை அப்படிதான் காட்டுகிறார்கள்) //

ஹாஹா..

//I think you are totally got jealous about the film after watching it.//

அதெல்லாம் விட இது டாப்பு. :)

ராஜகோபால் said...

நான் மிகவும் வருத்த படுகிரேன் காவலன் தப்பிச்சுடும் போல இருக்கு.

இன்னும் படம் பாக்கள ஆடி அடங்கியதும் பார்க்கலாமுன்னு இருக்கேன்.

சரி அடுத்து என்ன டாக்டர பத்தி நியூஸ் போடலாம்

"ராஜா" said...

// I think you are totally got jealous about the film after watching it.//

அதெல்லாம் விட இது டாப்பு. :)//

நன்றி நண்பா ... அவங்க டாக்குடர் ரசிகையா இருப்பாங்க அதான் கொஞ்சம் பொங்கிட்டாங்க...

"ராஜா" said...

// ராஜகோபால் said...
நான் மிகவும் வருத்த படுகிரேன் காவலன் தப்பிச்சுடும் போல இருக்கு.//

ஆமா தல ... நமக்கு சுரா அளவுக்கு பெரிய வேட்டை எல்லாம் இந்த படத்துல இல்லை ... எல்லாரும் ஓட்டுனத பாத்து டாக்குடறு பயந்துட்டாறு போல .... விடுங்க அதான் வேலாயிதம் வருதில்ல ... அதுல டாக்குடர back to the form வருவாறு ...

//சரி அடுத்து என்ன டாக்டர பத்தி நியூஸ் போடலாம்//

அதான் டாக்குடறு தம்பி திருச்சி மாநாடு நடத்த போவுதுள்ள ... அப்ப பாத்துக்கலாம்


//இன்னும் படம் பாக்கள ஆடி அடங்கியதும் பார்க்கலாமுன்னு இருக்கேன். //

அப்ப இன்னும் ரெண்டு நாளுல பாத்துருவீங்க...

கவி அழகன் said...

காவலனுக்கு நல்ல விளம்பரம் கொடுதிருகிங்க கட்டாயம் போய் பாக்கணும்

"ராஜா" said...

//காவலனுக்கு நல்ல விளம்பரம் கொடுதிருகிங்க கட்டாயம் போய் பாக்கணும்

அவனுங்கதான் விளம்பரமே போட மாட்டேங்கிராணுக .... நாமளாவது பண்ணுவோமே ....

பாலா said...

தலைவரே இடைவேளைக்கு அப்புறம் கொஞ்ச நேரத்துலயே கிளைமாக்ஸை யூகித்து விட்டேன். அதனால் சுத்தமாக சுவாரசியம் போய் விட்டது

கலையன்பன் said...

விமரிசனம் ரசிக்கும்படி உள்ளது; கருத்துரைகள்
அதைவிட ரசிக்கும்படி உள்ளன.

Jayadev Das said...

வண்டி போன ரூட்டு ரொம்ப லாங்கா இருக்கும் போல இருக்கே! //தம்பிக்கு எந்த ஊரு என்று ஆரம்பிக்கும் கதை ......அஞ்சறைக்குள்ள வண்டியாக முடிந்திருக்கிறது// ஆஹா... ஒரே டிக்கட்ல இத்தனை படம் பாத்தா திருப்தியா! பரவாயில்லையே! //விஜய் பஞ்ச் வசனம் ஓவர் பில்ட் ஆஃப் என்று எதுவும் பண்ணவில்லை ..// எந்திரன் ரஜினியை பாத்து நாமும் பண்ணலாமேன்னு டாக்குட்டரு நினைச்சிருப்பாரோ! //ராஜ்கிரண் அசினுக்கு அப்பாவா இல்லை மாமாவா தெரியவில்லை ...// சூப்பரப்பு! //இப்படி ஏதாவது ஒரு பாடிகாட் வேலை இருந்தால் யாராவது என்னை அணுகவும் ... சம்பளம் தேவை இல்லை சாப்பாடு மட்டும் போட்டா போதும் ....//ஹா...ஹா...ஹா.... மொத்தத்தில் காவலன் படம் எப்படியிருக்கோ, உங்க விமர்சனம் டாப்பு, இதற்காகவாவது டாக்குடரை பாராட்ட வேண்டும். [அதுசரி, விழுந்து கிடந்த டாக்குடரு இந்தப் படத்து மூலமா நிமிர்ந்துட்டாரு, நிமிர்ந்து உட்கார்ந்துட்டாரு, எழுந்துட்டாருன்னு அவரோட ரசிகர்கள் ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்களே நிஜமா? அப்படின்னா இன்னும் பத்து படங்களுக்கு நடிச்சு சமூக சேவை செய்யத்தான் போறாரா? நமக்கெல்லாம் விடிவே கிடையாதா?

"ராஜா" said...

// தலைவரே இடைவேளைக்கு அப்புறம் கொஞ்ச நேரத்துலயே கிளைமாக்ஸை யூகித்து விட்டேன். அதனால் சுத்தமாக சுவாரசியம் போய் விட்டது //

பாவம் .... நான் உங்களை சொல்லவில்லை ...

"ராஜா" said...

//விமரிசனம் ரசிக்கும்படி உள்ளது; கருத்துரைகள்
அதைவிட ரசிக்கும்படி உள்ளன//

டாக்குடர பத்தி எழுதினாலே அப்படித்தான் ...

"ராஜா" said...

// அதுசரி, விழுந்து கிடந்த டாக்குடரு இந்தப் படத்து மூலமா நிமிர்ந்துட்டாரு, நிமிர்ந்து உட்கார்ந்துட்டாரு, எழுந்துட்டாருன்னு அவரோட ரசிகர்கள் ஊளையிட்டுக் கொண்டிருக்கிறார்களே நிஜமா? அப்படின்னா இன்னும் பத்து படங்களுக்கு நடிச்சு சமூக சேவை செய்யத்தான் போறாரா? நமக்கெல்லாம் விடிவே கிடையாதா?//

விஜய் அப்படி எல்லாம் நம்மை கைவிடமாட்டார் ... காவலன் அந்த அளவுக்கு வொர்த் இல்ல ...

அவர் ரசிகர்கள் வேட்டைக்காரனுக்கும் இப்படித்தான் எழுதி கொண்டு இருந்தார்கள் ...

FARHAN said...

டாக்டரு படம் பாக்கலாமா முடியாதா?

LinkWithin

Related Posts with Thumbnails