இந்த பொங்கலை சந்தோஷமாக கொண்டாட காவலன் படம் பார்க்க வேண்டும் என்று நானும் என் நண்பர்களும் காலையிலேயே கிளம்பி சென்றோம் ... தியேட்டர் சென்ற பின்னர்தான் தெரிந்தது படம் இன்று வெளிவரவில்லை என்று ... கொஞ்சம் ஏமாற்றம்தான் சரி கிளம்பி வந்ததுக்கு ஆடுகளம் பார்த்து விட்டு செல்லாம் என்று வண்டியை அந்த தியேட்டர் பக்கம் திருப்பினோம் .. போகும் வழியிலேயே டிராபிக் போலீஸ் பிடித்து கொண்டார்கள் , மூன்று பேர் சென்றோம் வண்டியில் ... அவர்களிடம் தண்டமாக அம்பது ரூபாய் அழ வேண்டி வந்தது , என்னடா இப்படி வெட்டி செலவு வருதே சகுனம் சரி இல்லையே என்று அப்பொழுதே சுதாரித்திருந்தால் முன்னூறு ரூபாயும் மூன்று மணி நேரமும் தப்பி இருந்திருக்கும்... என்ன பண்ண விதி வலியது ...
படம் முழுவதும் எனக்கு தோன்றிய ஒரு விஷயம் வெற்றிமாறன் இன்னமும் பொல்லாதவன் பாதிப்பில் இருந்து வெளியே வரவில்லை என்பது .. சேம் ட்ரீட்மெண்ட் .... பாதி படம் இருட்டிலேயே எடுத்திருக்கிறார்கள் பார்க்கும் நமக்குதான் கண்ணை கட்டிக்கொண்டு வருகிறது ... படத்தின் மெயின் மேட்டரே சேவல் சண்டைதான் ... சேவல் சண்டையில் கொடி காட்டி பறக்கும் கோஷ்டி பேட்டைக்காரன் கோஷ்டி அதன் தலைவர் பேட்டைக்காரன் வயது அறுபது ... அவர் கோஷ்டியில் முக்கியமான இருவர் தனுஷ், கிஷோர் .. சேவல் சண்டையில் இவர்களை அடிக்க அந்த பகுதியில் யாருமே இல்லை... சேவல் சண்டையில் அவர்களின் ஒரே எதிரி அந்த பகுதியில் இன்ஸ்பெக்டர் வேலை பார்க்கும் ஒருவன் .. இந்த இரண்டு கோஷ்டியில் யார் பெரியவன் என்பதை நிரூபிக்க ஒரு சேவல் சண்டை போட்டிக்கு ஏற்பாடு பண்ணுகிறார்கள் ... அதில் தனுஷ் பேட்டைக்காரன் பேச்சை கேட்காமல் தன் சேவலை போட்டியில் இறக்கி இன்ஸ்பெக்டர் சேவலை வீழ்த்தி விடுகிறார் ... இதனால் ஓவர் டேயில் அவருக்கு மவுசு ஏறி விடுகிறது ... எங்கே தனுஷ் வளர்ந்து விட்டால் தன்னை யாரும் மதிக்காமல் போய் விடுவார்களோ என்று பயப்படும் பெரியவர் கூட இருந்தே தனுஷுக்கு குழி பறிப்பதே கதை ... அந்த குழியில் யார் விழுந்தார் யார் மண்ணை போட்டு மூடினார் என்பதே கதை ...
படத்தில் இடையில் ஒரு காதல் கதை வேறு வருகிறது ஏன் எதற்க்கு என்று தெரியாமலே .... படத்தின் உட்சபட்ச அறுவையே அந்த காதல்தான் ... கோழி திருட போகும் வீட்டில் அவளை தனுஷ் முதலில் பார்க்கிறார் .. பார்த்தவுடன் காதல் ... அவளும் இரண்டாவது சந்திப்பிலேயே தன் வீட்டுக்கு திருட வந்த ஒருவனை தானும் காதலிக்கிறேன் என்று நாடு ரோட்டில் வைத்து கூறுகிறாள்... அதை கேட்டு பயங்கர சந்தோசத்தில் யத்தே யாத்தே என்று நாடு ரோட்டில் ஆடிக்கொண்டே வீடு வரை போய் செருகிறார் தனுஷ் அடுத்த காட்சியிலேயே வேறு ஒருவனிடம் இருந்து தப்பிக்கவே அவ்வாறு கூறியதாக சொல்லுகிறாள் உடனே நம்மாளுக்கு கோபம் வர கெட்ட வார்த்தையில் அவளை திட்டி விடுகிறார் நெக்ஸ்ட் என்ன வழக்கமாய் எல்லா ஹீரோக்களும் பண்ணுவதை போல சரக்கடித்து பீலிங்க்ஸ் விடுகிறார் ... ஆனால்\அடுத்த காட்சியிலேயே ஏன் எதற்க்கு என்று தெரியாமலேயே அவளுக்கு தனுஷ் மேல் காதல் வந்து விடுகிறது.... நண்பர்களுடன் சரக்கடிக்கும் தனுஷை பார்த்து இப்படி சந்தோஷமாக எப்பொழுதுமே நான் இருந்ததில்லை என்று சோகமாகிறார் ...எங்கே தனுஷுடன் அவரும் சேர்ந்து சரக்கடிக்க ஆரம்பித்து விடுவாரோ என்று பார்க்கும் எனக்கு பயமாக இருந்தது .. அடுத்து இரவு முழுவதும் இருவரும் ஒன்றாக ஊர் சுற்றுகிறார்கள் ... ஆனால் அவள் வீட்டில் இருவரையும் நண்பர்கள்தான் என்று நம்புகிறார்கள் .. அட போங்கையா .... இந்த காதலுக்காக அவள் கடைசியில் கையையெல்லாம் வேறு கிழித்து கொள்கிறாள் ...
ஹீரோ வில்லனிடம் அடி வாங்கி வாயில் இருந்து ரத்தம் ரத்தமாக கக்கி கிட்டத்தட்ட சாகும் நிலைக்கு வந்து விட்டு திடீரென வீரம் வந்து ரெண்டே அடியில் வில்லனை சாய்பதை போலத்தான் இதுவரை தமிழ் சினிமாக்களில் நாம் பார்த்திருப்போம் .. ஆனால் இங்கேதான் வெற்றிமாறன் பயங்கரமாக யோசித்து ஒரு வித்தியாசத்தை புகுத்தி இருக்கிறார் ... இந்த படத்தில் ஹீரோவின் சேவல் வில்லனின் சேவளிடம் கால்மணி நேரம் கதற கதற அடி வாங்கி மயக்கம் போடும் நிலைக்கு வந்து திடீரென்று ஏன் எப்படி என்று தெரியாமலேயே வீறு கொண்டு எழுந்து ரெண்டே ரெண்டு தடவை தன் அலகால் கொத்தி வில்லன் சேவலை கொன்று விடுகிறது ... சேவ குஞ்சி எல்லாம் ஹீரோயிசம் பண்ணுதேடா என்று சந்தானம் பாணியில் தியேட்டரில் ஒரு கமெண்ட் வந்தது ...
படத்தில் நடிப்பில் படையை கிளப்பி இருப்பவர் பேட்டைக்காரனாய் வரும் அந்த பெரியவர்தான் ... வெயிலில் பரத் அப்பாவாக வருவாறே அவர்தான் என்று எண்ணுகிறேன் .. பெயர் தெரியவில்லை ... போலீஸ் ஸ்டேஷனில் அடி வாங்கி நிற்க்கும் போது அவமானத்தில் அவர் உடல் நடுங்கும் காட்சி ஒன்று போதும் அவரை பாராட்ட ...
அண்ணன் தம்பி போல பழகும் இருவருக்கு இடையே ஒரே காட்சியில் திடீரென ஈகோ பிரச்சனை வந்து எதிரும் புதிருமாக பிரிகிறார்கள் .. அந்த காட்சிதான் படத்தின் மிக முக்கியமான இடமே .. கிட்டத்தட்ட கிழக்கு சீமையிலே படத்தில் வரும் அந்த கோயில் திருவிழா காட்சியை போன்ற ஒன்று இது .. எவ்வளவு கவனமாக எடுத்திர்க்க வேண்டிய காட்சி ..ஆனால் அதை காட்சிபடுத்துதலில் பாரதி ராஜா காட்டிய அழுத்தம் வெற்றிமாரனிடம் இல்லை ... அதர்க்கு அடுத்து வரும் காட்சிகளில் நம்மால் ஒன்றி போய் பார்க்க முடியாமல் போவதார்க்கு காரணம் அந்த காட்சியில் அவர் செய்திருக்கும் பிழைதான் ...
தனுஷ் , புதுப்பேட்டை யாரடி மோகினி குட்டி இப்படி படத்துக்கு படம் எப்படி வித்தியாசமே காட்டாமல் நடித்திருப்பாரோ அப்படியே இந்த படத்திலும் ... பேச்சில் காட்டும் அதிமேதாவிதானத்தை கொஞ்சம் நடிப்பிலும் காட்டலாம் அவர் ... இந்த படத்தில் தனுஷ் பேசி இருக்கும் மதுரை தமிழுக்கும் புதுபேட்டையில் அவர் பேசி இருக்கும் சேரி தமிழுக்கும் ஏதாவது இரண்டு வித்தியாசம் கண்டுபிடிப்பவர்களை அடுத்த செம்மொழி மாநாட்டில் முனைவர் பட்டம் கொடுத்து கவுரவிக்கலாம்...
ஹீரோயின் புதுமுகமாம்.. நடிப்புதான் வரவில்லை பரவாயில்லை பார்க்க அழகாவாது இருந்திருந்தால் கொஞ்சம் சந்தோசபட்டு இருக்கலாம் ...
யாத்தே யாத்தே பாடலும் அதை படமாக்கி இருந்த விதமும் சூப்பர் ... பின்னணியில் இந்த படத்திலும் தன் மாமா பெயரை கெடுத்திருக்கிறார் பிரகாஷ் ...
சுப்ரமணியபுரம் பருத்திவீரன் போல ஒரு படம் எடுக்க ஆசைபட்டதில் தப்பில்லை ஆனால் திரைக்கதையிலும் காட்சி அமைப்புகளிலும் கொஞ்சம் உழைப்பை கொட்டி இருக்கலாம் ...குறிப்பாக இரண்டாம் பாதியில் தேவை இல்லாமல் இழுத்து கொண்டே போகிறார்கள் ...
மொத்தத்தில் இந்த ஆடுகளத்தில் வெற்றிமாறன் டீம் ஆடியிருக்கும் ஆட்டம் கொஞ்சம் சொதப்பலான ஆட்டம் ...
14 comments:
காவலன் விமர்சனம் எதிர்பார்தேன்.
படுவா தப்பிச்சுடானுங்க நாளைக்கு வருதா பாப்போம்.
இனம் மறந்து இயல் மறந்து
இருப்பின் நிலைமறந்து
பொருள் ஈட்டும் போதையிலே
தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
நினைவூட்டும் தாயகத் திருநாள்
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்!
// நண்பர்களுடன் சரக்கடிக்கும் தனுஷை பார்த்து இப்படி சந்தோஷமாக எப்பொழுதுமே நான் இருந்ததில்லை என்று சோகமாகிறார் ...எங்கே தனுஷுடன் அவரும் சேர்ந்து சரக்கடிக்க ஆரம்பித்து விடுவாரோ என்று பார்க்கும் எனக்கு பயமாக இருந்தது //
பின்னிட்டீங்க... சரளமான எழுத்து நடை... நான் படிக்கும் முதல் நெகடிவ் விமர்சனம்... ஆனாலும் படிக்கும்போது நீங்கள் சொல்வது சரிதான் என்றே தோன்றுகிறது...
அவ்வளவு கேவலாமாவா இருக்கு!?
பொங்கல் நல் வாழ்த்துக்கள்... தோழரே...
பொங்கல் திருநாள் …. வயது வந்தோருக்கு மட்டும் தானுங்க…. 18+
// ராஜகோபால் said...
காவலன் விமர்சனம் எதிர்பார்தேன்.
படுவா தப்பிச்சுடானுங்க நாளைக்கு வருதா பாப்போம்
இன்னைக்க்கு இருக்கு வேட்ட...
// உலவு.காம் (தமிழர்களின் தளம் வலைபூக்களின் களம் - ulavu.com) said...
இனம் மறந்து இயல் மறந்து
இருப்பின் நிலைமறந்து
பொருள் ஈட்டும் போதையிலே
தமிழின் தரம் மறந்த தமிழனுக்கு
நினைவூட்டும் தாயகத் திருநாள்
உழவர் திருநாள் வாழ்த்துக்கள்
நன்றி ... உங்களுக்கும் என்னுடய இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
// Philosophy Prabhakaran said...
// நண்பர்களுடன் சரக்கடிக்கும் தனுஷை பார்த்து இப்படி சந்தோஷமாக எப்பொழுதுமே நான் இருந்ததில்லை என்று சோகமாகிறார் ...எங்கே தனுஷுடன் அவரும் சேர்ந்து சரக்கடிக்க ஆரம்பித்து விடுவாரோ என்று பார்க்கும் எனக்கு பயமாக இருந்தது
பின்னிட்டீங்க... சரளமான எழுத்து நடை... நான் படிக்கும் முதல் நெகடிவ் விமர்சனம்... ஆனாலும் படிக்கும்போது நீங்கள் சொல்வது சரிதான் என்றே தோன்றுகிறது..//
படம் பார்க்கும் போது எனக்கு தோன்றிய விசயங்கள் இவை ... பாராட்டுக்கு நன்றி தல...
//விக்கி உலகம் said...
அவ்வளவு கேவலாமாவா இருக்கு!//
ரொம்ப மோசம் இல்லை ... கமெர்சியலாகவும் இல்லாமல் யதார்த்தமாகவும் இல்லாமல் ரெண்டுக்கும் இடையில் தொங்கி கொண்டு இருக்கிறது படம் ...
// தமிழ்ப் பையன் said...
பொங்கல் நல் வாழ்த்துக்கள்... தோழரே...
நன்றி ... உங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துக்கள்
viruviruppaga pogirathu vimarsanam.
HAPPY PONGAL
//நண்பர்களுடன் சரக்கடிக்கும் தனுஷை பார்த்து இப்படி சந்தோஷமாக எப்பொழுதுமே நான் இருந்ததில்லை என்று சோகமாகிறார் ...எங்கே தனுஷுடன் அவரும் சேர்ந்து சரக்கடிக்க ஆரம்பித்து விடுவாரோ என்று பார்க்கும் எனக்கு பயமாக இருந்தது//
ஹாஹா...
பதிவுலகம் பாசிடிவாக பேசினாலும்,நண்பர்கள் எல்லோரும் சொல்லுவது மொக்கை என்று தான்.அதிலும்,குறிப்பாக ரெண்டாவது பாதி.பார்க்கலாம். :)
நல்ல விமர்சனம் வழக்கம் போல..
இனிய பொங்கல் வாழ்த்துக்கள் நண்பா..
//மொத்தத்தில் இந்த ஆடுகளத்தில் வெற்றிமாறன் டீம் ஆடியிருக்கும் ஆட்டம் கொஞ்சம் சொதப்பலான ஆட்டம் //
'கொஞ்சம் சொதப்பலான ஆட்டம்' -அதனால்
கொஞசம் படம் பார்க்கலாம். உங்கள்
கருத்தின்படி, உங்கள் கோணம் ஓரளவு
சரியென்றே படுகின்றது. விறுவிறுப்பாய்
விமர்சனம்.
* பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே!
Post a Comment