Followers

Copyright

QRCode

Thursday, January 13, 2011

காவலன் பிரிவியூ - கவுண்டர் ஸ்பெஷல்

( இந்த பதிவில் வரும் சம்பவங்கள் முழுக்க முழுக்க கற்பனையே ... யாரையும் குறிப்பிடுவன அல்ல ... மீறி அப்படி யாராவது இருந்தால் கோபபடாமல் ஜாலியா எடுத்துக்கொங்கங்கோ)


காவலன் படம் விரைவில் வெளிவர போகிறது , நம்ம இளையதளபதி எப்படியாவது படத்தை ஓட வைக்க வேண்டும் என்று பசுமாடெல்லாம் தானம் பண்ணுனாறு  தயாரிப்பாளர் காசுல .... அடுத்து கண்டிப்பா அதே தயாரிப்பாளர் காசுல தமிழ் திரை உலகில் இருக்கிற எல்லா நடிகர்களுக்கும் , நடிகைகளுக்கும் , டெக்னீசியன்சுக்கும் ஒரு பிரிவியூ ஷோ நடத்துவாரு  ... அத பாத்திட்டு தியேட்டர விட்டு வெளிய வந்துகிட்டு இருக்கிற நடிகர்கள்கிட்ட நம்ம கவுண்டர் அண்ணன் பேட்டி எடுத்தா எப்படி இருக்கும் ..... ஸ்டார்ட் ம்யூசிக்முதலில் நம்ம சூப்பர் ஸ்டார்

கவுண்டர் : ஸார் என்ன ஸார் படம் முடிய இன்னும் அரைமணி இருக்கு அதுக்குள்ள எழுந்திருச்சி வந்துடீங்க?

ரஜினி : முடியல ஸார்... நான் கலைஞர் ஐய்யாவோட பெண் சிங்கம் பாத்துருக்கேன் , என் பொண்ணு எடுத்த கோவா பாத்திருக்கேன் ஆனா இப்படி ஒரு படம் பாத்ததில்ல ஸார்... உள்ள இருந்தா செந்திருவனோண்ணு பயமா இருந்திச்சு வந்துட்டேன்

கவுண்டர் : பயந்துட்டீங்களா அப்படி என்ன ஸார் இருக்கு படத்துல பயமுறுத்திர  மாதிரி...  கொரில்லாவா?

ரஜினி : அதெல்லாம் விட பயங்கரமா ஒண்ணு இருக்கு ஸார் .. பஞ்ச் டையலாக் பேசியே கொல்லுது... ஒரு சீன்ல அத குளோஸ் அப்புல காட்டுராணுக பாருங்க  பேய நேர்ல  பாத்தமாதிரி அவ்வளவு பயங்கரமா இருக்கு ...

கவுண்டர் : அப்படி எது ஸார் இந்த படத்துல இருக்கு ... ஏதும் கிராபிக்ஸ் பண்ணி இருக்காணுகலா? கொஞ்சம் அது யாருண்ணு காட்டுங்க பாப்போம் ...

ரஜினி பக்கத்தில் இருக்கும் இந்த போஸ்டரை காட்டுகிறார்   கவுண்டர் : ஐயய்யோ .. காட்டு பண்ணி ... இதெல்லாமா இந்த படத்துல நடிச்சிருக்கு ... காமெடி படம்னு சொன்னாணுக ... இது திகில் படமா இருக்கும் போலயே


அடுத்து கமல் வருகிறார்

கவுண்டர்  : எண்ணன்னே நல்லா  பாத்து ரசிச்சீங்களா?

கமல் : ஹி.. ஹி... பக்கத்துல கௌதமி இருந்தாங்க , அதனால எனக்கு முன்னாடி உக்காந்து இருந்த  அசின அடிக்கடி பாத்து ஜொள்ளு விட முடியல ...

கவுண்டர் : (மனதுக்குள்) (படவா ராஸ்கல் நான் படத்த ரசிச்சியாண்ணு கேட்டா என்ன பதில் சொல்றாங்க பாரு)இப்ப என்ன அடுத்து கே .எஸ். ரவிக்குமார கூப்பிட்டு வேண்டாம்டா வம்புண்ணு  ஒரு படம் எடுத்து அசின புக் பண்ணி ஆப்ரிக்கா,  அண்டார்டிக்காண்ணு எங்கயாது கூப்பிட்டு போயி நல்லா என்ஜாய் பண்ண வேண்டியதுதான...

கமல் : நல்ல ஐடியா நேத்துதான் HBO ல ஒரு படம் பாத்தேன் அண்டார்டிக்காவுல நடக்குற கதை , உடனே என் பெயரை போட்டு படத்த ஆரம்பிச்சிட வேண்டியதுதான் .... (கே எஸ் உடன் போனில் பிஸி ஆகி விடுகிறார்)

கவுண்டர்(கடுப்பாகி)  : ஹலோ இவ்வளவு நேரம் ஒரு படம் பாத்தீங்களே , அத பத்தி சொல்லுங்க ...

கமல் : படமா? யோவ் என் பக்கத்துல கௌதமி இப்படி உக்காந்து இருக்கும்போது 


அவள விட்டுட்டு படம் பாக்க நான் என்ன கேனையானா?

கவுண்டர் : அடேங்கப்பா... நீ ஆனா வூன்னா எல்லா நிகழ்ச்சிக்கும் ஏன் இந்த குட்டியோட  வரேண்ணு இப்பதான புரியுது ... என்ஜாய் ....மனசுக்குள் (கருமாந்திரம் புடிச்சவணுக எப்படியெல்லாம் பிளான் பண்ணுராணுக பாருயா? இனிமே எவனாவது இந்த டுபாக்கூர் சுரா  மண்டையன் நடிச்ச படத்த பாக்க கூப்பிட்டா இதே ஐடியாவ   ஃபாலோ பண்ணி படத்த பாக்காம எஸ்கேப் ஆகிட வேண்டியதுதான் )


அடுத்து நம்ம தீவிர விஜய் ரசிகர் ஒருவர் வருகிறார்


கவுண்டர் : வாங்க தம்பி .. நல்ல இருக்கீங்களா? இன்னமும் எப்படி உங்களாள இந்த ஆளு படத்துக்கு முதல் நாளே நம்பி வர முடியிது...

ரசிகர் : ஸார் எங்க தளபதி யாருண்ணு நெணச்சீங்க.... அவர் அழகிய தமிழ் மகன் ஸார் ... அவர் படம் ஓடல அப்படின்னு சொல்றதெல்லாம் பொய் ஸார் ....  தளபதி எங்க  தல எடுத்திடுவாரோண்ணு சில விசமிகள் பண்ணுற பொய் பிரசாரம் ... நான் கேட்ட வரைக்கும் மவுத் டாக் ஓகேதான்...

கவுண்டர் : அது எப்படி தம்பி படமே இன்னும் வெளிய வரல.. அதுக்குள்ள மவுத் டாக் பத்தி எல்லாம் பேசுர .... சரி படத்துல ஏதாவது தேறுமா...

ரசிகர் : ஸார் அந்த பட்டாம்பூச்சி பாட்டுல 00:48 செகண்ட்ல இருந்து 01:23 செகண்ட் வரைக்கும் வர்ற டான்ஸ் பாருங்க ஸார் ... நாங்க எல்லாம் தளபதிய ஏன் ரசிக்கிறோம்னு தெரியும் ...


கவுண்டர் : அப்ப மூணு மணிநேர படத்துல அந்த முப்பது செகண்ட் மட்டும்தான் நல்லா இருக்கும்னு நீயே ஒத்துக்கிற... ஆடடடா எவ்ளோ நல்ல மனசு உங்களுக்கு...

ரசிகர் : ஸார் நீங்க என்ன வேணா சொல்லுங்க படம் கேரளாவுள பெரிய ஹிட்..... யுட்யூப்ல வீடியோ காட்டவா?


கவுண்டர் : கொஞ்சம் பொறு  தம்பி இன்னும் ஒரு வாரத்துல படமே யுட்யூப்ல வந்திடும் நான் அத பாத்துக்கிறேன் ...

ரசிகர் : யுஎஸ்ல இருக்கிற என் ஃப்ரெண்ட் நேத்து நைட்டே படம் பாத்துடானாம் ... படம் நல்லா இருக்குடா, நீ இன்னும் பாக்கலையா? இந்நேரம் இது எங்க தல படமா மட்டும் இருந்ததுனா  நான் தியேட்டர விட்டு வெளியில வரவே மாட்டேண்ணு  சொன்னான் ... அவன் தல ரசிகன் ... அவனே சொல்லிட்டான் படம் ஹிட்டுதான் ஸார்...

கவுண்டர் : அவன் பாவம் தூக்கமும் கெட்டு காசும் வீணா போன கடுப்புல உன்னை பழிவாங்க அப்படி சொல்லிருப்பான் ... ஒவ்வொரு படத்துக்கும் அதையும் நம்பி நீ ஏமாறுரையே ... இன்னமுமா உங்க தளபதிய நீ நம்புர...

ரசிகர் : ஸார் சத்யம்ல வர்ற வெள்ளிக்கிழமை வரைக்கும் டிக்கெட் புல்லாம் ....

கவுண்டர் : அட்ராசக்க அட்ராசக்க .. நீ அந்த டுபாக்கூர் சுரா மண்டையனோட ரசிகன்கிறத நிரூபிச்சிடடா... உங்க ஆளு  படம் வெள்ளிக்கிழமைக்கு அப்புறம்தான் ரிலீஸ் ஆகுது ...  நீ புல்லா இருக்குன்னு நெட்ல பாத்த படம் பலான இங்கிலீஷ் படம் ... இந்த படத்துக்கு வர்ற கூட்டத்த பாத்துட்டு தியேட்டர் ஒனர் உங்க படத்த எடுக்கவா வேணாமாண்ணு யோசிக்கிறானாம்...  

ரசிகர் : நீங்க என்ன சொன்னாலும் நான் மாற மாட்டேன் .. வாழ்க இளைய தளபதி .. வளர்க அவர் புகழ்...

கவுண்டர் : இனி பேசி பிரயோசனம் இல்லை ... உன் மூஞ்சில முழிச்சா காலங்காத்தால கக்கூஸ் கூட ஒழுங்கா போகாது ... ஓடி போய்டு இனிமே இந்த ஏரியா பக்கம் வந்த இந்த குரங்க விட்டு கடிக்க விட்டுடுவேன் .......


அடடடடடா ...  நம்ம மூட கெடுத்துட்டானே  .... சீக்கிரம் இந்த காந்த கண்ணழகிய கூப்பிட்டு போய்  பூ மிதிச்சாதான் டென்ஷன் குறையும் ....
காந்த கண்ணழகி நாம பூ மிதிக்க போவோமா?


22 comments:

ராஜகோபால் said...

காந்த கண்ணழகி படம் சூப்பர்.

கவுண்டர் வாழ்க

Thirumalai Kandasami said...

unmaiyave intha padam nalla irukku,,puch dialogue ellam kanom,,


All comments based on Trailer,
http://enathupayanangal.blogspot.com

"ராஜா" said...

// ராஜகோபால் said...
காந்த கண்ணழகி படம் சூப்பர்.

கவுண்டர் வாழ்க


உங்களுக்கு மினிஸ்ட்ரில ஒரு எடம் பாக்குறேன் ... அப்பறமா நீங்களும் காந்தக்கண்ணழகியோட பூமிதிக்க வரலாம்

"ராஜா" said...

unmaiyave intha padam nalla irukku,,puch dialogue ellam kanom,,


All comments based on Trailer,
http://enathupayanangal.blogspot.com


அவரு பன்ச் பேசலனேனாலும் நீங்க விட மாட்டீங்க போல

கவிதை காதலன் said...

இந்தப்பதிவு எழுதியதற்காக காவலன் மட்டும் இல்ல.. வேலாயுதம் படத்துக்கும் உமக்குத்தான்யா ஃபர்ஸ்ட் டிக்கெட்.. கண்டினியுவா 4 ஷோவும் பார்க்கணும்..

ஆர்.கே.சதீஷ்குமார் said...

செம கலக்கலா இருக்கே

ஆர்.கே.சதீஷ்குமார் said...

இந்த தடவையும் விஜய் தோத்துட்டா ஒரு பாட்டுக்கு குத்தாட்டம் போட வேண்டியதுதான்

ஆர்.கே.சதீஷ்குமார் said...

கவுண்டர் என்றுமே சூப்பர் ஸ்டார்

Ajith said...

too mch...

கலையன்பன் said...

வரிக்கு வரி சிரிப்புதான்...
பொங்கலுக்கு இந்த ஒரு படம் மட்டும்தானா?
அடுத்த கலாய்ப்பு எந்த படம்?

Philosophy Prabhakaran said...

ஒருத்தர விட்டு வைக்கல போல... நகைச்சுவைன்னு சொல்லிட்டு இந்த ஆட்டம் ஆடுறீங்களே... ரசித்துப் படித்தேன்...

THOPPITHOPPI said...

ஹஹாஹா

Yoganathan.N said...

//யுஎஸ்ல இருக்கிற என் ஃப்ரெண்ட் நேத்து நைட்டே படம் பாத்துடானாம் ... படம் நல்லா இருக்குடா, நீ இன்னும் பாக்கலையா? இந்நேரம் இது எங்க தல படமா மட்டும் இருந்ததுனா நான் தியேட்டர விட்டு வெளியில வரவே மாட்டேண்ணு சொன்னான் ... அவன் தல ரசிகன் ... அவனே சொல்லிட்டான் படம் ஹிட்டுதான் ஸார்...//


உண்மையிலே, இந்த வசனத்தை இதற்கு முன்பு எங்கோ படித்திருக்கிறேன்.

Btw, நம்ம பக்கம் வந்துட்டு போங்க. நீங்க கேட்டத எப்பவோ எழுதியாச்சு. :)

vignesh said...

nonsense he is also a humanbeing just imagine urself as him u wont write like this "இந்த பதிவில் வரும் சம்பவங்கள் முழுக்க முழுக்க கற்பனையே" lines are fake just u used dis to show people dat u r a gud person & inorder make others laugh u hav posted dis. I hate dis totally

"ராஜா" said...

@ கவிதை காதலன்

படத்த பத்தி எழுதுன எனக்கே மரண தண்டனைனா படத்துல நடிச்க அவருக்கு என்ன தண்டனை கொடுப்பீங்க?

"ராஜா" said...

@ சதீஷ் குமார்

காவலன் கைகொடுக்கட்டும்

"ராஜா" said...

@ ajith

காவலன் வெளி வர வாழ்த்துக்கள்

"ராஜா" said...

@ கலையன்பன்

போட்டாச்சு .. ஆடுகளம்

"ராஜா" said...

@ philosophy pirabakaran

நன்றி

@ thoppi thoppi

உங்களுக்கும் நன்றி

"ராஜா" said...

@ philosophy pirabakaran

நன்றி

@ thoppi thoppi

உங்களுக்கும் நன்றி

"ராஜா" said...

@ yokanathan N

வந்துடுறேன் ....

"ராஜா" said...

@ Vignesh

விஜய் ஒரு அருமையான நடிகர் ... அவர்தம் தந்தை ஒரு சிறந்த இயக்குனர் ... அதைவிட சிறந்த மனிதர் ... விஜய் அவர்களின் படங்கள் தமிழ் சினிமாவிர்க்கு கிடைத்த பொக்கிசங்கள் ...


காவலனும் இந்த வரிசையில் இடம்பிடிக்கும் ... போதுமா ஸார் இப்ப நான் நல்லவனா? இல்லையா ?

LinkWithin

Related Posts with Thumbnails