Followers

Copyright

QRCode

Tuesday, January 11, 2011

கரும்பு -காவலன் - சிறுத்தை : பொங்கல் ஸ்பெஷல்

“  இனிப்பு நான்கெழுத்து
 இனிப்புக்கு பெயர் போன கரும்பு நான்கெழுத்து
 கரும்பு நிறையும் பொங்கல் நான்கெழுத்து
 பொங்கலுக்கு வெளிவரும் காவலன் நான்கெழுத்து
 காவலனுடன் போட்டி போதும் சிறுத்தை நான்கெழுத்து
 இவை எல்லாம் சிறக்க   சொல்லும் வாழ்த்து நான்கெழுத்து
 அந்த வாழ்த்தை சொல்லும் “rajaவும் நான்கெழுத்து   

அப்பாடா இனிப்பு முதல் வாழ்த்து வரை எல்லாம் நான்கு எழுத்துலயே சொல்லியாச்சி ... எல்லாரும் பாத்துக்கோ பாத்துக்கோ ....கவிதை எழுதிருக்கேன்.... கவிதை எழுதி இருக்கேன்... நானும் பிரபல பதிவர்தான் ... (என்னது ஒத்துக்க மாட்டீங்களா? என்னங்க மூண வச்சி கவிதை சொல்லி ஒருத்தர் முதலமைச்சர் ஆகிட்டாறு ... நாள வச்சி கவிதை சொன்ன நான் பிரபல பதிவர் கூட ஆக முடியாதா?)

எல்லாருக்கும் இனிப்பான பொங்கல் வாழ்த்துக்கள் ...


பொங்கல் என்றாலே எல்லாருக்கும் ஞாபகம் வருவது கரும்புதான் .... பொங்கல் அன்னைக்கு  நீங்க சாப்பிடுற கரும்பு எங்க இருந்து வருதுண்ணு உங்களுக்கு தெரியுமா? யாராவது கரும்பு தோட்டத்தை அடிக்கடி பாத்திருக்கீங்களா? (கொஞ்சம் யோசிச்சி பாருங்க கண்டிப்பா பாத்திருக்க மாட்டீங்க) நம்ம மாநிலத்துல கரும்பு சாகுபடி ரொம்ப ரொம்ப கம்மி ... தமிழ்நாட்டுல கரும்பு உற்பத்தினா முதல் இடம் மதுரை அருகே இருக்கும் மேலூர்தான் ... மேலூர் கரும்புக்கு அவ்வளவு கிராக்கி இருக்கும் கரும்பு சந்தையில் .. அதற்க்கு அடுத்த இடம் எங்க ஊரு கரும்புதான் ... சந்தையில அதன் பெயர் அருப்புக்கோட்டை கரும்பு ஆனா அது விலையிர இடம் எங்கள் கிராமம்  புலியூரான்”….



மேலூர் கரும்பை விட எங்கள்  ஊரில் விலையும் கரும்பு அதிக சுவை உடையதாய் இருக்கும் காரணம் எங்கள்  ஊர் நிலத்தடி நீர் ... தூத்துக்குடி  விருதுநகர் ராமநாதபுரம் மாவட்டங்களில் கரும்பு சாகுபடி செய்யும் ஒரே ஒரு இடம் எங்கள் ஊர் மட்டுமே ... கிட்டத்தட்ட 500  ஏக்கர் நிலத்தில் வருடா வருடம் கரும்பு சாகுபடி செய்யபடும் ... ஒரு ஏக்கருக்கு 300 முதல் 500 கட்டு  கரும்பு விளையும் ... (கரும்பை எப்பொழுதும் கட்டு கட்டாகத்தான் விற்பனை செய்வார்கள்) ஒரு கட்டு என்பது பதினாறு கரும்புகள் ... நீங்களே கணக்கு செய்து கொள்ளுங்கள் எவ்வளவு கரும்பு எங்கள் ஊரில் மட்டும் விளைகிறது  என்று... இந்த பொங்கலுக்கு நீங்கள் சுவைக்க போகும் கரும்பு எங்கள் மண்ணில் விளைந்த கரும்பாக இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது ...

  (எங்கள் ஊர் புகைப்படம் ... பின்னால் இருப்ப்து நான் படித்த ஆரம்ப பள்ளி)

கரும்பு சாகுபடி என்பது சாதாரணமான விஷயம் கிடையாது .. தமிழில் ஒரு பழமொழி உண்டு கெட்டிக்காரன் கரும்பு எட்டு மாசம் என்று , அதன் அர்த்தம் புத்திசாலிதானமா விவசாயம் பண்ணினாலே  கரும்பு முழுவதும் விளைந்து அறுவடை செய்ய எட்டு மாதங்கள் ஆகும் என்பதே ... நீங்கள் பெரும்பாலும் பார்க்கும் விளைநிலங்களில் கம்பு , சோளம் , கடலை , சூரியகாந்தி பூ , நெல் இப்படி ஏதாவது பண பயிர்கள்தான் போட்டு இருப்பார்கள் .. காரணம் இவைகளில் வருடத்திர்க்கு மூன்று முதல் நான்கு போகம் விளைச்சல் எடுக்கலாம் ... ஆனால் கரும்பு போட்டால் வருடத்திர்க்கு ஒரே ஒரே அருவடைதான் .. அது விளைந்து முடிக்கவே பத்து மாதங்கள் ஆகும் ... பிறகு இரண்டு மாதம் மண்ணை காய போட வேண்டும் ... இப்படி வருடத்திர்க்கு ஒரு முறை மட்டுமே அறுவடை செய்து பணம் பார்க்க முடியும் இதில் ... மேலும் இதற்க்கு தினமும் தண்ணீர் பாய்ச்ச வேண்டும் .. வானம் பார்த்த பூமிகளில் இது முடியாது ... நீங்கள் சொந்தமாக மோட்டார் பம்ப் வைத்திருக்க வேண்டும் ... அப்படி இருந்தால் மட்டுமே அமோக விளைச்சலை அடைய முடியும் ... இதனாலேயே பெரும்பாலானோர் கரும்பு விவசாயத்தில் இறங்குவதில்லை .. ஆனால் எங்கள் ஊரில் பொங்கலுக்கு பொங்கல் அமோக கரும்பு அறுவடை நடக்கும் ... இன்றும் நடந்து கொண்டுதான் இருக்கிறது ... வருடம் வருடம் பொங்கல் வந்தால் இதை கொஞ்சம் பெருமையாக நினைத்து கொள்வேன் ...

(கரும்பு சாகுபடியில் அதிக லாபம் பார்ப்பது எங்கள் ஊர் விவசாயிகளை விட கூட வரும் இடைதரகர்கள்தான்... அரசே இதை நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று வருடா வருடம் சொல்லி பார்க்கிறார்கள் ... செவிடன் காதுல ஊதுன சங்கு மாதிரி பயனே இல்ல ...)


காவலன் , ஆடுகளம் சிறுத்தை:

இந்த பொங்கலுக்கு தமிழ் சினிமாவில் சூடு கொஞ்சம் கம்மிதான் ... பெரிய நடிகரின் படம் என்று பார்த்தால் அது விஜையின் காவலன் மட்டுமே ... அதற்க்கு போட்டியாக எந்த பெரிய நடிகரின் படமும் இல்லை குறிப்பாக தல படம் ... கார்த்தியின் சிறுத்தையும் , தனுஷின் ஆடுகளமும் எந்த அளவுக்கு தளபதிக்கு போட்டி கொடுக்கும் என்று தெரியவில்லை ... இந்த தடவை முதல் ஒருவாரம் காவலனுக்கு நல்ல வேட்டைதான் ... தனியாளாக வசூல் வேட்டை நடத்துவார் தளபதி ...

காவலன்


இந்த படம் பெரிய அளவில் எதிர்பார்பில் இல்லை , இது படத்துக்கு நல்லதா? கெட்டதா? தெரியவில்லை.... பாடல்கள் சுமார் ரகம்... டிரைலரும் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு இல்லை... வடிவேலுவின் நகைசுவை கைகொடுத்தாள் படம் ஹிட் ஆக வாய்ப்பு இருக்கிறது... போட்டி இல்லை என்பதால் படத்துக்கு  ஓபெனிங்க் அமோகமாக இருக்கும் ...பட விளம்பரங்களில்  விஜய் முகத்தில் தெரியும் சோகம் காவலனால் நீங்குமா? இல்லை கூடுமா? பொருத்திருந்து பார்ப்போம்..  முதல் காட்சி நண்பர்களுடன் போக வேண்டும் என்று திட்டம் போட்டு இருக்கிறேன் , தளபதி கண்டிப்பாக என்னை ஏமாற்ற மாட்டார் என்ற நம்பிக்கையில்@!!**&#


ஆடுகளம்


பொல்லாதவன் வெற்றிமாரனின் அடுத்த படைப்பு , இது மட்டும்தான் படத்திற்க்கு எதிர்பார்ப்பு தரும் ஒரே விஷயம் ... தனுஷின் சமீபத்திய தொடர் தோல்விகளில் இருந்து மீண்டு வர அவர் நம்பி இருக்கும் ஒரே ஒரு படம் இதுதான் ... ஆனால் பத்து படம் நடித்து விட்டு அவர் மேடைகளில் பேசும் ஓவர் பேச்சு கொஞ்சம் அதிகம்தான் ... இதனாலேயே எனக்கு அவரை பிடிக்காது ... பாடல்கள் நன்றாக வந்திருக்கிறது, இது படத்திற்க்கு பெரிய பலம்... பார்ப்போம் பொல்லாதவன் வெற்றி ராசி இதிலும் தனுசுக்கு  கை கொடுக்கிறதா என்று .. வெற்றிமாறனுக்காக கண்டிப்பாக இந்த படம் பார்ப்பேன் ...

சிறுத்தை


நண்பர் பாலா இந்த படத்தின் டிரைலரை பார்த்து விட்டு சல்மான் கானின் தபாங்க் போல இருக்கிறது என்று பயங்கர பில்டப்புடன் கூறினார் .. நானும் தேடி பிடித்து டிரைலரை பார்த்தேன் ... என்ன சொல்ல தாபாங்கின் ஸ்பூஃப்   போல இருந்தது ... அதுவும் கார்த்தி பேசும் வசனம்.. அது  கெத்து வசனம்தான் ஆனால்  அதை அவர் பேசுவதுதான் காமெடியாக தெரிந்தது ... ராக்கெட் ராஜா கண்டிப்பாக இன்னொரு பருத்தி வீரனாகத்தான் இருக்கும் என்று பட்சி சொல்கிறது ... யாராவது பார்த்து விட்டு நல்லா இருக்கு என்று சொன்னால் பார்ப்பேன் ...


இதை எல்லாம் விட பெரிய சுனாமி ஒன்று பொங்கல் அன்று நம்மை தாக்க வருகிறது  .. அது நம்ம தமிழ் தாத்தா டாக்டர் கலைஞர் அவர்களின் கூரிய  வசனத்தில், மக்ஸிம் கார்க்கி அவர்களின் நாவலை காப்பி  அடித்து கதை எழுதி , தென்னகத்து அர்னால்ட் அண்ணன் பா.விஜய் அவர்களின் நடிப்பில் வெளிவர இருக்கும் இளைஞன்... இவரின் ஞாபகங்கள் படத்தை பார்த்த பொழுது போட்டியே இல்லாமல் ஆட்டம் போட்டு கொண்டு இருக்கும் அண்ணன் சாம் ஆண்டர்சன் அவர்களுக்கு இவர்தான் சரியான போட்டியாக இருப்பார் என்று தோன்றியது .. இதை இந்த படம் நிரூபிக்கும் என்று நம்புகிறேன் ...


(டிஸ்கி : பொங்களன்று சுட சுட காவலன் பட விமர்சனம் இந்த தளத்தில் கிடைக்கும் ,எனவே பலகீனமான இதயம் உடையவர்கள் பொங்கல் அன்று இந்த ரத்த பூமிக்கு வராமல் குச்சி மிட்டாயும் குருவி ரொட்டியும் சாப்பிட வேறு கடைக்கு செல்லுமாறு கேட்டு கொள்ளபடுகிறார்கள் )

13 comments:

ராஜகோபால் said...

நானும் எதிர்பார்கிரேன் இந்த பொங்கலை., காவலன் புகழ் பாட

சேலம் தேவா said...

பொங்கல் வாழ்த்துகள் பிரபல பதிவரே..!! :-))

"ராஜா" said...

// ராஜகோபால் said...
நானும் எதிர்பார்கிரேன் இந்த பொங்கலை., காவலன் புகழ் பாட


நமக்கு நல்ல வேட்டை இருக்கு
தல ... மாட்டுச்சினா உடம்பு உமக்கு தல எனக்கு , பின்றோம்

"ராஜா" said...

// சேலம் தேவா said...
பொங்கல் வாழ்த்துகள் பிரபல பதிவரே..!! :-))


நானும் பிரபலம் ஆகிட்டேனா? அப்ப
அடுத்து ஆணாதிக்கத்த பத்தி ஒரு பதிவு போட்டுற வேண்டிதான் ...

பொங்கல் வாழ்த்துக்கள் நண்பரே

பனித்துளி சங்கர் said...

ஆஹா புதுமையான முறையில் எதார்த்த புகைப்படங்களுடன் கூடிய ஒரு அழகிய அனுபவம் இந்தப் பதிவு வாழ்த்துக்கள் .

வினோ said...

படங்கள் பார்த்துட்டு சொல்லுங்க ராஜா..

"ராஜா" said...

// ஆஹா புதுமையான முறையில் எதார்த்த புகைப்படங்களுடன் கூடிய ஒரு அழகிய அனுபவம் இந்தப் பதிவு வாழ்த்துக்கள்

வாழுத்துக்கு நன்றி நண்பரே ,,

"ராஜா" said...

// படங்கள் பார்த்துட்டு சொல்லுங்க ராஜா..

பாத்துட்டு சொல்லுறேன் வினோ .. காவலனை நினைத்தால்தான் பயமாக இருக்கிறது மூன்று மணி நேரம் பார்க்க வேண்டுமே ...

கவி அழகன் said...

நல்லா இருக்கு

மழைக்காகிதம் said...

விஜையின் காவலன்

"ராஜா" said...

சுராவை விட மட்டும்

"ராஜா" said...

// யாதவன் said...
நல்லா இருக்கு

நன்றி

"ராஜா" said...

//Raja said...
விஜையின் காவலன்

வாங்க ராஜா ...

LinkWithin

Related Posts with Thumbnails