Followers

Copyright

QRCode

Monday, January 10, 2011

அசிங்கபட்ட கங்குலி , சந்தோஷ நிட்டினி ( வாழ்க BCCI , வளர்க அதன் புகழ்)

நாடெங்கும் கிரிக்கெட் ஜூரம் பற்றி எரிய ஆரம்பிச்சாச்சி ... நானும்  கிரிக்கெட் பற்றி பதிவு போட்டு ரொம்ப நாள் ஆச்சி .... இப்பதான் ஐபிஎல் ஏலம் முடிஞ்சதாம் , பசங்க சொன்னாணுக , அண்ணே நம்ம தானை தலைவன் , கொல்கத்தா சிங்கம் கங்குலி அவர்களை யாருமே ஏலத்தில் எடுக்கவில்லை என்று , மனசுக்குள்ள பிளஷ்பேக் ஒட்டி பாத்தேன் ,  பத்து டையரும் பஞ்சராக்கி கெடக்க , டெண்டுல்கர்கிற  ஒத்த டையர வச்சி ஓடிக்கிட்டு இருந்த இந்தியன் டீம , தன்னோட முதல் டெஸ்ட் மேச்லயே லார்ட்ஸ்  அரங்கத்தில் அந்த நாட்டிற்க்கு எதிராகவே சதம் அடித்து தோற்க  வேண்டிய ஆட்டத்தை வெற்றி பெற வைத்து அணிக்குள் சிங்கம் போல் நுழைந்தவர் (ரஜினி பட அறிமுக காட்சி போல இருந்தது அவரின் வருகை ) , சரியான கூட்டணி கிடைக்காமல் தனியாக போராடிகொண்டு இருந்த சச்சினுக்கு சிறந்த கம்பெனியாக இருந்தவர்... சச்சினே அப்பொழுது பேட்டிகளில் கூறுவார் கங்குலி வந்த பின்னர் தன்னுடய சுமை பாதி குறைந்து விட்டது , பதட்டம் இல்லாமல் விளையாட முடிந்தது என்று



தன்னுடய போராடும் குணத்தினால் கூடிய விரைவிலேயே அணியின் தலைவனாகவும் உயர்ந்தார் ... அதர்க்கு பிறகுதான் ஐசியுவில் மரண படுக்கையில் இருந்த இந்திய அணி வெற்றிகளை அதிரடியாக குவிக்க தொடங்கியது , அதர்க்கு முக்கிய காரணம் இவரின் வழிநடத்தலும் , பல புதுமுகங்களை அவர்களின் திறமையின் மேல் நம்பிக்கை வைத்து அறிமுகபடுத்தியதும் , அவர்களை  திறமையாக பயன்படுத்துயதும்.. அவரின் வழிநடத்துதலில் இந்திய ரசிகர்களின் கனவான  உலககோப்பையின் மிக அருகில் அதாவது இறுதி போட்டி வரை முன்னேறியது .... அது ஒரு தலைவனாக கங்குலி அணிக்கு , அதன் ரசிகர்களுக்கு தேடி தந்த பெருமை ...

இப்படி தலைவனாக அவர் செய்த சாதனைகளை விட  ஒரு துடுப்பாட்டக்காரனாகவும் பத்து வீச்சாளராகவும்  அவர் செய்த சாதனைகள் அதிகம், டெஸ்ட் ஆட்டத்தில் முதல் போட்டியில் சதம் , அதுவும் லர்ட்ஸ் மைதானத்தில் , இந்த சாதனையை செய்த முதல் இந்தியர் அவர்தான் , முதல் ஆட்டத்தில் அந்த மைதானத்தில் அதிக ஓட்டங்கள் குவித்த வீரரும் அவர்தான்(133)...

1997 சகாரா கோப்பை அவருக்கு மிக பெரிய பெயரை பெற்று தந்தது .. ஐந்து ஆட்டங்களில் தொடர்ந்து நான்கு ஆட்டங்களை இந்தியா வென்றது ... அந்த நான்கு ஆட்டங்களிலும் அவர்தான் man of the match …. அதில் ஒரு ஆட்டத்தில் அவர் 16 ஓட்டங்களை மட்டுமே விட்டு கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை சாய்த்திருந்தார்... அவரை சிறந்த பந்து வீச்சாளராகவும் அறிய செய்த போட்டி அது...


டெண்டுல்கரும் இவரும் இணையாக  8277 ஓட்டங்களை குவித்துள்ளனர்  ... இது ஒரு உலக சாதனை (first biggest partnership runs )... டெண்டுல்கருடன் மட்டும் இல்லை டிராவிட்டுடனும் இணைந்து இதுவரை 4363 ஓட்டங்களை குவித்துள்ளார்... இது ஐந்தாவது  பெரிய partnership சாதனை ஆகும் ...

1999 உலக கோப்பையில் இவரும் டிராவிட்டும் இணைந்து 318 ஓட்டங்களை எடுத்திருக்கிறார்கள் , இது ஒரு உலக கோப்பை சாதனை , வேறு எந்த உலக கோப்பை போட்டிகளிலும் எந்த இணையும் இதைவிட அதிக ரன் எடுக்கவில்லை ...

சச்சினுக்கு பிறகு ஒரு நாள் ஆட்டங்களில் 10,000 ஓட்டங்களை கடந்த ஒரே இந்திய வீரர் இவர் மட்டுமே ... உலக அளவில் ஐந்தாவது ஆளாக இந்த சாதனையை செய்துள்ளார்...

புகழ் பெற்ற விஸ்டன் புஸ்தகம் வெளியிட்ட  கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த வீரர்கள் வரிசையில் ஆறாவது இடம் இவருக்கு ... இவருக்கு முன்னாள் இருக்கும் ஒரே ஒரு இந்திய வீரர் சச்சின் மட்டுமே ...


சச்சினுக்கு அடுத்து ஒருநாள் போட்டிகளில் அதிக சதம் அடித்துள்ள இந்திய வீரர் இவர் மட்டுமே (22 சதங்கள்),

இன்னும் அடுக்கிக்கொண்டே போகலாம் அவரின் சாதனை பட்டியலை ... சச்சின் என்று ஒருவரை நீக்கி விட்டு பார்த்தால் இந்திய அணியில் அதிக சாதனைகளின் சொந்தக்காரர் இவர்தான் ... இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மிக சிறந்த இரண்டாவது வீரர் என்று அவரை கூறலாம் ... ஆனால் அவரை வழி அனுப்பி வைத்த விதம் மிக கொடுமையானது .... அவர் வளர்த்து விட்ட ஆட்களே அவரை அணியை விட்டு துரத்தினார்கள் .. ஆனால் அவர் தளர்ந்துவிடவில்லை ... 2008ம் ஆண்டு நீண்ட இடைவேளைக்கு பின்னர் அணியில் இடம் பிடித்தார் ... எதிரணி தென்னாப்பிரிக்கா... அணிக்கு திரும்பிய முதல் போட்டியிலேயே சதம் ... அவரை குறை சொன்னவர்களுக்கு எல்லாம் சரியான பதிலடி கொடுத்தார் .. ஆனால் அதன் பிறகும் ஏன்? எதற்க்கு? என்று சொல்லபடாமலேயே அணியை விட்டு தூக்கி எறியபட்டார்... அதன் பிறகு நல்ல பார்மில் இருந்தும் அணிக்குள் இருந்த சில அரசியல் காரணங்களுக்காய் அவருக்கு அணியில் இடம் கிடைக்கவே இல்லை .. பொறுத்து பொறுத்து பார்த்த அவர் வேறு வழி இல்லாமல் ஓய்வு முடிவை எடுத்தார் ... ஆனால் அவர் ஓய்வை இந்திய அணி நிர்வாகம் கண்டுகொள்ளவே இல்லை ஏதோ நான்கு ஆட்டம் ஆடிவிட்டு ஓய்வு பெற்ற ஒரு நாளாம்தர வீரனை போல அவரை விடை கொடுத்து அனுப்பியது இந்தியா... அது என்னை போன்ற அவரின் ரசிகர்களுக்கு பெரிய வேதனை ... ( இவர் ஸ்ரீலங்காவிற்க்கோ இல்லை பாகிஸ்தான் அணியிலோ இடம்பெற்று இவ்வளவு சாதனைகளை செய்திருந்தால் அவர்தான் அந்நாட்டின் சிறந்த வீரானாய் இருந்திருப்பார் .... அதற்குரிய மரியாதையும் அவருக்கு இருந்திருக்கும் .... இந்திய அணிக்காக விளையாடி சாதனை படைத்ததுதான் அவர் செய்த பெரிய தவறு ... )


இன்று அதைவிட பெரிய அசிங்கத்தை அவருக்கு கொடுத்து விட்டது நம் அணி ... IPL போட்டிகளில் அவரை குறைந்தபட்ச ஏல தொகை கொடுத்து எடுக்கக்கூட எந்த அணியும் முன்வரவில்லை ... இதில் அவரின் தவறும் இருக்கிறது ஏன்றாலும் , பணம் என்ற விசயத்தின் முன்னால் ஒரு சிறந்த வீரன் , அணிக்காக அதிகம் உழைத்த ஒருவன் அவமானபடுத்த பட்டு விட்டான் என்றே எடுத்து கொள்ள தோன்றுகிறது... இதுதான் அவரின் சாதனைகளுக்கு நம் அணி தரும் மரியாதையா? அவர் அணிக்காக செய்த விசயங்களை மறந்துவிட்டு காசுக்காக அவரை அவமானபடுத்தி விட்டீர்களே ...இதை அவர் எப்படி எடுத்துக்கொண்டாரோ இல்லையோ எனக்கு தெரியவில்லை , ஆனால் அவர் அணிக்காக ஒவ்வொருமுறை நன்றாக ஆடிய பொழுதெல்லாம் பெருமையாகவும் சந்தோசமாகவும் பார்த்து கொண்டு இருந்த ஒவ்வொரு இந்திய ரசிகனும் கண்டிப்பா வருத்தபடுவான் ...   நீங்கள் நினைத்திருந்தாள் அவரை ஏதாவது ஒரு அணியில் இடம்பெற செய்து இருந்திருக்கலாம் ... இன்று அவரால் பெரிய லாபம் உங்களுக்கு இல்லை என்றாலும் அவரின் பழைய சாதனைகளுக்கு மரியாதை கொடுக்கும் விதமாகவாது இதை நீங்கள் செய்து இருக்கலாம் ... அவரை விட உங்களுக்கு அந்த ஐந்து கோடி பணம்தானே பெரியதாக தெரிகிறது ... விளையாட்டை பணம் காய்க்கும் மரமாக நீங்கள் மாற்றி விட்டீர்கள் , ஆனால் ரசிகர்கள் நாங்கள் அப்படி இல்லை ... அது எங்களை பொறுத்தவரை நாட்டின் கவுரவம் ... அதில் இந்தியாவை தலை நிமிர செய்த அனைவருமே நம் நாட்டின் பெருமையான சின்னங்களே... காசுக்காக அவர்களை அவமானபடுத்தாதீர்கள் ....


கடைசியாக  கங்குலிக்கு ரசிகனாக ஒரு விண்ணப்பம் , தல தயவு செய்து ஒதுங்கி விடுங்கள் .. உங்கள் மேல் தவறே  கிடையாது .. சென்ற IPL போட்டிகளில் நீங்கள் நன்றாகவே விளையாடி இருந்தீர்கள் ... (14 ஆட்டங்கள் 493 ரன்) ... உங்களை விட குறைந்த ரன் குவித்தவர்கள் எல்லாம் பல கோடிகளுக்கு  எடுக்கபட நல்ல பார்மில் இருந்தும் நீங்கள் ஒதுக்கபடுகிறீர்கள்..... இதற்க்கு மேலும் நீங்கள் காயப்பட  வேண்டாம் .... கிரிக்கெட்டை உண்மையாக நேசிக்கும் எங்களால் இதை ஜீரணிக்க முடியவில்லை ... 

கடைசியாக பிசிசிஐக்கு , உலக அளவில் பெரிய பணக்கார அணி நீங்கள்தானாம் ... வாழ்த்துக்கள் இன்னும் நிறைய பணம் சம்பாதிக்க ... ஆனால் உங்களுக்கு ஒரு சின்ன வேண்டுகோள் தயவு செய்து பணதிர்க்காக கிரிக்கெட் என்ற விளையாட்டுக்கு இருக்கும் மரியாதையை  அழித்து விடாதீர்கள் ...


சந்தோஷ நீடினீ
நேற்று தென் ஆபிரிக்கா அணி நிர்வாகம் நீட்டினிக்கு கொடுத்த மரியாதையை பார்த்த பொழுது சந்தோஷமாக இருந்தது ... நான் நேற்று நெட்டில் ஆன்லைன் ஸ்ட்ரீமிங்கில் அந்த போட்டியை பார்த்தேன் ... அதனால் தென் ஆபிரிக்க நாட்டு ஒளிபரப்பில் காண வாய்ப்பு கிடைத்தது ... போட்டி முழுவதும் அவர்கள் ஒளிபரப்பிய விளம்பரங்களை நாம் விரல் விட்டு எண்ணி விடலாம்... விளம்பரங்கள் மிகவும் குறைவாக ஒளிபரப்பபட்டன ... ஆனால் நம் நாட்டு ஒளிபரப்பில் பார்க்கும் போது ஏதோ விளம்பர கம்பெனிகள் அவர்கள் விளம்பரங்கள் ஒளிபரப்பிய நேரம் போக மீதி நேரத்தில் போனால் போகிறது என்று போட்டியை ஒளிபரப்பியது போல இருந்தது ... போட்டியை ரசிக்கும் மனநிலையை இழந்து  ஏதோ விளம்பர சந்தைக்குள் என்னை வலுக்கட்டாயமாக இழுப்பதை போன்று எனக்கு தோன்றும் ...

nitini விடை பெரும் பொழுது மிக சந்தோஷமாக இருந்தார் ... அங்கே பணத்தை விட கிரிக்கெட்டுக்கு அதிக மரியாதை கொடுக்கிறார்கள் .. அதனால்தான் அவர்களால் சந்தோஷமாக விடை பெற முடிகிறது .. ஆனால் இங்கே விளையாட்டை விட பணத்திர்க்குதானே அதிக மரியாதை ... உன்னால் லாபம் இல்லை என்றாள் நீ எவ்வளவு பெரிய ஆளா இருந்தாலும் உனக்கு மரியாதை கிடையாது என்று கங்குலி விஷயத்தில் மறைமுகமாக  சொல்லி இருக்கிறார்கள் ...வாழ்க BCCI , வளர்க அதன்  புகழ்     



41 comments:

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஹலோ..,

ஐ.பி.எல் என்பது சினிமா கம்பெனி. தாங்கள் எடுக்கும் படம் ரசிகர்களிடம் எடுபட வேண்டும் என்று நினைப்பார்கள். அதே நேரத்தில் தங்கள் பிராஜக்ட் சிறப்பாக அமைய தங்களுக்கு தோதான, தங்களுக்கு வளைந்து கொடுக்கக்கூடிய ஆட்களை மட்டுமே தேர்ந்தெடுப்பார்கள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

அலிபாபாவும் 40திருடர்களும் என்றொருபடம் 40களின் பின்பகுதியில் எம்.ஜி.ஆர் நடித்து வந்தபடம். அப்போது அவர் வளர்ந்து வரும் நடிகர். மாடர்ன் தியேட்டர்ஸ் பெரிய கம்பெனி. ஆனால் அந்த படத்திற்குப் பிறகு அந்த கம்பெனி எம்.ஜி.ஆரை வைத்து படம் எடுக்கவில்லை. அவர்கள் எடுத்த பல வீர சாகஸப் படங்களுக்கு அப்போதைய திறமைவாய்ந்த வீர சாகச நடிகரான எம்.ஜி.ஆரே பொறுத்தமாக இருந்திருப்பார். ஆனால் அவர்கள் எம்.ஜி.ஆர் பக்கமே போகவில்லை. அது பற்றிய கதைகள் உங்களுக்குத் தெரியுமா?

"ராஜா" said...

// ஐ.பி.எல் என்பது சினிமா கம்பெனி. தாங்கள் எடுக்கும் படம் ரசிகர்களிடம் எடுபட வேண்டும் என்று நினைப்பார்கள். அதே நேரத்தில் தங்கள் பிராஜக்ட் சிறப்பாக அமைய தங்களுக்கு தோதான, தங்களுக்கு வளைந்து கொடுக்கக்கூடிய ஆட்களை மட்டுமே தேர்ந்தெடுப்பார்கள்


இருக்கட்டும் . அதுவும் கிரிக்கெட் இல்லையா? அதன் ரிஷி மூலம் நம்ம பிசிசிஐ தானே ....... இர்பான் பதானைஎட்டு கோடி கொடுத்து எடுக்கும் அணிகள் கங்குலியை எடுக்காமல் இருப்பதன் காரணம் எனக்கு புரியவில்லை ... உலக அளவில் இது அவருக்கு அசிங்கம்தானே ... அவருக்கு அசிங்கம் என்றாள் அது இந்தியா கிரிக்கெட்டுக்கும்தான் ...

"ராஜா" said...

// அவர்கள் எடுத்த பல வீர சாகஸப் படங்களுக்கு அப்போதைய திறமைவாய்ந்த வீர சாகச நடிகரான எம்.ஜி.ஆரே பொறுத்தமாக இருந்திருப்பார். ஆனால் அவர்கள் எம்.ஜி.ஆர் பக்கமே போகவில்லை. அது பற்றிய கதைகள் உங்களுக்குத் தெரியுமா?


அது பிசினஸ் ,,, கிரிக்கெட்டை வெறும் பிசினஸ் ஆக என்னால் நினைக்க முடியவில்லை ...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

// கிரிக்கெட்டை வெறும் பிசினஸ் ஆக என்னால் நினைக்க முடியவில்லை ...
//


ஐ.பி.எல் என்பது முழுக்க முழுக்க பிஸினஸ் தல

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஐரோப்பிய கால்பந்து போல வீரர்களை அவர்கள் விருப்பப்படி ஒப்பந்தம் செய்து கொண்டால் கூட பரவாயில்லை. ஏலம் போடுவது என்பது கேவலத்திலும் கேவலம். ஆனால் வீரர்கள் அதை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

காலைல 2.30 மணிக்கு பின்னூட்டத்திற்கு பதில் எழுதிக் கொண்டிருக்கும் ராஜா வாழ்க

"ராஜா" said...

// ஐ.பி.எல் என்பது முழுக்க முழுக்க பிஸினஸ் தல

உண்மைதான் ஆனால் அதனால் இந்திய அணியின் சிறந்த கேப்டனின் மானம் கப்பலேரி விட்டதே... அதுதான் வருத்தம் தரும் விஷயம் ...இந்த விஷயத்தில் BCCI கொஞ்சம் அக்கறை செலுத்தி இருக்கலாம் என்று எண்ணுகிறேன் ...

//ஐரோப்பிய கால்பந்து போல வீரர்களை அவர்கள் விருப்பப்படி ஒப்பந்தம் செய்து கொண்டால் கூட பரவாயில்லை. ஏலம் போடுவது என்பது கேவலத்திலும் கேவலம். ஆனால் வீரர்கள் அதை ஏற்றுக் கொண்டுவிட்டார்கள்

ஏலம் போட்டால்தானே பணம் நிறைய கிடைக்கும் ... BCCI அணிகளை ஏலத்தில் விடும் போது, அணிகள் வீரர்களை ஏலத்தில் எடுப்பதை நாம் ஒன்றும் குறைகூற முடியாது ... பாவம் வீரர்கள் , இன்று அதிக விலைக்கு விற்கபட்டவர்கள் கூட எதிர்காலத்தில் கங்குலியின் நிலமையை சந்திக்கலாம்...

போகிற போக்கை பார்த்தால் கிரிக்கெட்டும் விபசாரம் போல ஆகி விடும் போல இருக்கிறதே .. உடலில் தெம்பு இருக்கும் வரை காசு .. இல்லை என்றாள் யாரும் சீண்ட மாட்டோம் ...

"ராஜா" said...

// காலைல 2.30 மணிக்கு பின்னூட்டத்திற்கு பதில் எழுதிக் கொண்டிருக்கும் ராஜா வாழ்க

பாஸ் இங்க சாயந்திரம் மணி நாலு ...நான் இந்தியாவில இருக்கேன்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அதனால் இந்திய அணியின் சிறந்த கேப்டனின் மானம் கப்பலேரி விட்டதே..//

பல முறை இந்திய அணிக் கேப்டன்களின் மானத்தை அந்த அமைப்பு கப்பலேற்றி இருக்கிறது

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//பாஸ் இங்க சாயந்திரம் மணி நாலு ...நான் இந்தியாவில இருக்கேன்
2:41 AM, January 10, 2011 //

அதைக்கூட 2.41க்கு சொல்லி இருக்கீங்களே..,

"ராஜா" said...

// பல முறை இந்திய அணிக் கேப்டன்களின் மானத்தை அந்த அமைப்பு கப்பலேற்றி இருக்கிறது

உண்மைதான் .. உலக கோப்பை வாங்கி தந்த கபிலையே தேம்பி தேம்பி அழ வைத்திருக்கிறதே .. ஆனால் இந்த முறை அடி கொஞ்சம் அதிகம்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//போகிற போக்கை பார்த்தால் கிரிக்கெட்டும் விபசாரம் போல ஆகி விடும் போல இருக்கிறதே ..//

ஐ.பி.எல்ல்லைப் பொறுத்த வரை முதலாளியின் மனத்திற்கு பிடித்தாற்போல நடந்து கொண்டால் நல்ல காசு

"ராஜா" said...

//அதைக்கூட 2.41க்கு சொல்லி இருக்கீங்களே..,

technical problem ... கூகில்காரன் தப்பு நண்பரே ...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

ஸ்ரீகாந்த நீக்கப் பட்ட கதை

அதைவிட கொடுமையானது

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//technical problem ... கூகில்காரன் தப்பு நண்பரே ...//

உங்கள் செட்டிங்கில் சரிசெய்யுங்கள் சரியாகிவிடும்

"ராஜா" said...

// ஐ.பி.எல்ல்லைப் பொறுத்த வரை முதலாளியின் மனத்திற்கு பிடித்தாற்போல நடந்து கொண்டால் நல்ல காசு

உண்மைதான் ராணுவ வீரர்கள் போல கம்பீரமா இருக்க வேண்டிய பிலயேர்ஸ் இப்ப கம்பெனி கூர்கா மாதிரி ஸலாம் போட வேண்டியதா போச்சி ...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

பழைய முதலாளியிடம் இருப்பவர்களை விட மீண்டும் ஏலத்திற்கு வந்தவர்களுக்கு அதிகக் காசு.

SUREஷ்(பழனியிலிருந்து) said...

// இப்ப கம்பெனி கூர்கா மாதிரி ஸலாம் போட வேண்டியதா போச்சி ...
4:18 PM, January 10, 2011 //

கம்பெனி கவர்ச்சி நடிகைபோல ஆட்டம் போட வேண்டும். எல்லா ஆட்டத்தின்போதும் ரசிகர்கள் சீட்டின் முனைக்கு வரவேண்டும்

"ராஜா" said...

// ஸ்ரீகாந்த நீக்கப் பட்ட கதை


இந்த விஷயம் எனக்கு தெரியாது நண்பரே ...

// உங்கள் செட்டிங்கில் சரிசெய்யுங்கள் சரியாகிவிடும்

மாத்தியாச்சி.. நன்றி தல

//பழைய முதலாளியிடம் இருப்பவர்களை விட மீண்டும் ஏலத்திற்கு வந்தவர்களுக்கு அதிகக் காசு

ஆமாம் தோனிக்கு வெறும் ஆறு .. மாறிய கம்பீருக்கு 12...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

சீக்கிரம் விக்கெட் விழுந்தால் ஆட்டம் சீக்கிரம் முடிந்து விடும். அதை முதலாளி விரும்பமாட்டார்

SUREஷ்(பழனியிலிருந்து) said...

மேலே சொன்ன கமெண்ட் கவர்ச்சி ஆட்டம் போடுபவர்களுக்கும் பொருந்தும்

"ராஜா" said...

// கம்பெனி கவர்ச்சி நடிகைபோல ஆட்டம் போட வேண்டும். எல்லா ஆட்டத்தின்போதும் ரசிகர்கள் சீட்டின் முனைக்கு வரவேண்டும்

அதுக்குதான் சியர்ஸ் கேர்ள்ஸ் இருக்காங்களே .. அதுபோக கத்ரினா , தீபிகாண்ணு ப்ரொஃபஷனல் கவர்ச்சி நடிகைகளும் அப்பப வருவாங்க ... நைட் பார்ட்டி நடக்கும் .. அங்கையும் ஏலம் நடக்கும் ஆனா அது வேற விசயதுக்கு ... ரெண்டே வருசத்துல மோடி வித்தை ஏதும் காட்டாம 600 கோடி குவுச்சிருக்காருன்னா சும்மாவா

"ராஜா" said...

// அதை முதலாளி விரும்பமாட்டார்

அப்ப வேலைவெட்டியெல்லாம் விட்டு மாட்ச் பாக்குற நம்மள குஷிபடுத்த விளையாடலையா? நான்தான் இவ்வளவு நாளா ஏமாந்துடனா?

"ராஜா" said...

சரி நண்பரே ... வருகைக்கும் கருதுக்கும் நன்றி ... நான் கிளம்ப வேண்டிய நேரம் வந்து விட்டது ... அடிக்கடி ஏரியா பக்கம் வாங்க ...

SUREஷ்(பழனியிலிருந்து) said...

//அதை//

முழுப்படம் ஓட வேண்டும். அப்போதுதான் நிறைய விளம்பரம் கிடைக்கும். சீக்கிரம் முடிந்துவிட்டால் பிட்டுப் படம்போல ஆகிவிடும் என்பதால் ஒவ்வொரு ஆட்டமும் ஒரு கிளைமாக்ஸோடுதான் போகும். துரித முடிவு என்பது இருக்காது

கவி அழகன் said...

சரியா சொன்னா அண்ணாத்த

எஸ்.கே said...

அது ஏனோ இந்தியாவில் மட்டுமே இப்படி பணத்தை விட விளையாட்டு வீரர்களுக்கு மதிப்பு குறைவுதான்!

கலையன்பன் said...

கங்குலி அவர்களின் சாதனைப் பாட்டியலின் நீளம்-
அதை நீங்கள் தொகுத்து வழங்கிய விதம், பிரமிக்க
வைக்கின்றது. ஆனால், கிரிக்கெட் என்பது தற்போது
வியாபாரமாய் மாறி, கிரிக்'கெட்டு' போனது
அனைவரும் அறிந்ததே! அதன் எடுத்துக்காட்டுதான்,
இந்த ஏலத்தில் தல அவர்கள் ஏலம் எடுக்கப்படாத
செயல்.
ஆனால், கங்குலி அவர்களின் சாதனையை நாம்
என்றும் போற்றிடுவோம்.

பன்னிக்குட்டி ராம்சாமி said...

கங்குலி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் முகம், இது ரசிகர்களுக்குக் கிடைத்த செருப்படி....!

டக்கால்டி said...

திமிர், விடாப்பிடியான பிடிவாதம் இவை அனைத்தையும் ஒரு அணியின் வெற்றிக்கு கேடயமாக அணித்து கொண்ட ஒரு போராளி சௌரவ் கங்குலி... காசுக்கு தான் மதிப்பு இருக்கு, மனுஷனுக்கு எங்க இருக்கு?

Unknown said...

கிரிகெட்டுல நான் ஒரு ஞான சூன்யம் ...

"ராஜா" said...

// சரியா சொன்னா அண்ணாத்த

தேங்க்ஸ் அண்ணாத்த

"ராஜா" said...

//கங்குலி அவர்களின் சாதனைப் பாட்டியலின் நீளம்-
அதை நீங்கள் தொகுத்து வழங்கிய விதம், பிரமிக்க
வைக்கின்றது. ஆனால், கிரிக்கெட் என்பது தற்போது
வியாபாரமாய் மாறி, கிரிக்'கெட்டு' போனது
அனைவரும் அறிந்ததே! அதன் எடுத்துக்காட்டுதான்,
இந்த ஏலத்தில் தல அவர்கள் ஏலம் எடுக்கப்படாத
செயல்.
ஆனால், கங்குலி அவர்களின் சாதனையை நாம்
என்றும் போற்றிடுவோம்.

உண்மைதான் ,, நண்பரே ... போற்றவில்லை என்றாலும் அவமானபடுத்தாமல் இருந்தால் போதும்

"ராஜா" said...

@ பன்னிக்குட்டி ராம்சாமி

//கங்குலி, இந்திய கிரிக்கெட் ரசிகர்களின் முகம், இது ரசிகர்களுக்குக் கிடைத்த செருப்படி....!

இதே பீலிங்க்ஸ்தான் எனக்கும் ... அவர் நன்றாக விளையாடும்போது பெருமைபட்ட நம்மை போன்ற ரசிகனுக்கு கிடைத்த செருப்படிதான் இது

"ராஜா" said...

// டக்கால்டி said...

திமிர், விடாப்பிடியான பிடிவாதம் இவை அனைத்தையும் ஒரு அணியின் வெற்றிக்கு கேடயமாக அணித்து கொண்ட ஒரு போராளி சௌரவ் கங்குலி... காசுக்கு தான் மதிப்பு இருக்கு, மனுஷனுக்கு எங்க இருக்கு?

உண்மைதான் அவர் பல நேரங்களில் ஒரு போராளிக்கு ஒப்பாக விளையாடி இருக்கிறார் அணியின் வெற்றிக்காக ... லார்ட்சில் அவர் பணியனை கலற்றி வீசியதில் தெரிந்தது அந்த போராளியின் திமிர் மற்றும் பிடிவாத குணம் ... நன்றி நண்பரே

"ராஜா" said...

// கே.ஆர்.பி.செந்தில் said...

கிரிகெட்டுல நான் ஒரு ஞான சூன்யம் ...


அதுவும் ஒருவகையில் நல்லதுதான்... வருகைக்கு நன்றி நண்பரே

R.Bhagyaraj said...

ganguly is great indian cricket player

"ராஜா" said...

// ganguly is great indian cricket player

மறுக்கமுடியாத உண்மை

அஞ்சா சிங்கம் said...

திமிர் மற்றும் பிடிவாத குணம் ......///

இந்த குணம் தான் அவர் வளர்ச்சிக்கும் ..'

தற்போதய வீழ்ச்சிக்கும் காரணம் என்று நினைக்கிறன் .......

அஞ்சா சிங்கம் said...

திமிர் மற்றும் பிடிவாத குணம் ......///

இந்த குணம் தான் அவர் வளர்ச்சிக்கும் ..'

தற்போதய வீழ்ச்சிக்கும் காரணம் என்று நினைக்கிறன் .......

LinkWithin

Related Posts with Thumbnails