Followers

Copyright

QRCode

Friday, December 24, 2010

மன்மதன் அம்பு - என்னாச்சு கமல்?

மன்மதன் அம்பு




மன்னாரு மதன் அம்புஜஸ்ரீ இந்த மூன்று பேருக்குள்  நடக்கும் கண்ணாமூச்சி ஆட்டமே படம் ... பொதுவாக கமல் படங்கள் ஒன்று ஹெய்ராம் மகாநதி போல ரொம்ப சீரியஸாக இருக்கும் இல்லை காதலா காதலா , பஞ்சதந்திரம் போல முழுக்க முழுக்க காமெடியாக இருக்கும் ... இந்த படம் கடவுள் பாதி மிருகம் பாதி போல சீரியஸ் பாதி காமெடி பாதி கலந்து வந்திருக்கிறது ...


படத்தின் கதை ரொம்ப சிம்பிள் .. திரிஷாவால் கமல் தன் மனைவியை இழக்கிறார் .. கமலால் த்ரிஷா தன் காதலன் மாதவனை விட்டு பிரிக்கிறார் .. கடைசியில் இருவரும் இணைகிறார்கள் ... இதுதான் கதை ... முதல் பாதியில் திரைக்கதையில் பட்டைய கிளப்பிய கமல் இரண்டாம் பாதியில் காமெடியில் ஒளிந்து  கொள்ளுகிறார் ... இரண்டுமே தனித்தனியாக நன்றாக வந்திருக்கிறது ... ஆனால் மொத்தமாக ஒரு படமாக பார்க்கும் போது ரொம்ப இடிக்கிறது...


கமல் the show stealer” , அளப்பரையாய் அறிமுகம் ஆகும் முதல்  காட்சியில் இருந்து கடைசியில் திரிஷாவை கட்டி பிடிக்கும் கிளைமாக்ஸ்  காட்சி வரைக்கும் பின்னி பெடல் எடுத்திருக்கிறார் ... நடிப்பிலும் , காமெடியிலும் ... அதுவும் மாதவன் அவரை ஏமாற்றிய பின்னர் போனில் திரிஷாவை பற்றி பொய் சொல்ல ஆரம்பிக்கும் காட்சியில் அவரின் பாடி லாங்குவேஜ் பிரமாதம் ... தியேட்டரில் விசில் பறக்கிறது ... சில காட்சிகளில் அவரின் நடிப்பு தேவை இல்லாமல் திணிக்கபட்ட்டது போல தனியாக தெரிவதை தவிர்த்திருக்கலாம் . மற்றபடி கமல் அவர் ரசிகர்களை ஏமாற்றவில்லை ...

த்ரிஷா, அம்மணிக்கு படத்தில் அருமையான கேரக்டர் .. எனக்கும் நடிக்க தெரியும் என்று நிரூபித்து இருக்கிறார் பல இடங்களில் .. மாதவனுடன் காருக்குள் சண்டை போடும்  இடம் டாப் கிளாஸ் ... நெஞ்சில் குத்தி இருக்கும் டாட்டூஸ் தெரிய வேண்டும் என்பதற்க்காகவே படம் முழுவதும் கவர்ச்சியான உடையிலேயே வருகிறார் .. டாட்டூஸை கண்டுபிடித்த மகாராசன் யாரோ? எங்கிருந்தாலும் வாழ்க ...


மாதவன் , படத்தில் டம்மி பீஷாக வருகிறார் .. தண்ணி அடித்து விட்டு கமலுடனும் திரிஷாவுடனும் போனில் பேசுவதோடு அவர் வேலை முடிந்து விடுகிறது ... அவர் கதாபாத்திரம்தான் அப்படி டம்மியாக்க பட்டு இருக்கிறது ஆனால் நடிப்பில் வெளுத்து வாங்கி இருக்கிறார் ... ஆனால் ரன் படத்தில் நடித்த மாதவ்ன் இந்த படத்தை பார்த்தால் தூக்கில் தொங்குவதை தவிர வேறு வழி இல்லை ..  எப்படி இருந்த நீங்க இப்படி ஆகிட்டீங்க?

படத்தில் நடிப்பில் கமலை அப்பப்ப ஓவர்டேக் பண்ணும் இன்னொருவர்  சங்கீதா ... தன் மகன் தூங்கி விட்டானா இல்லையா என்பதை அவர் கண்டுபிடிக்கும் டிரிக் சூப்பர்.... அவர் பேசும் வசனங்கள் ஷார்ப் ... ரொம்ப இயல்பாக நடித்திருக்கிறார் ...



படத்தில் ஒளிப்பதிவு அருமை .. புதியவராம் நம்ம முடியவில்லை ... கொடைக்கானல் மலை காட்சிகளும் , கப்பல் காட்சிகளும் கண்ணுக்கு குளிர்ச்சி ... கமலுக்கு முகத்தில் முதுமை எட்டி பார்ப்பதை இவர் பல காட்சிகளில் தன் கேமரா கோணங்களால் நம் பார்வையில் இருந்து மறைத்திருக்கிறார் ... the best work of this film  …



படத்தில் குறிப்பிட்டு சொல்ல வேண்டியது அந்த பிளாஷ்பேக்கில்      வரும் பாடல் ... அதை படமாக்கி இருக்கும் விதம் அருமை .. கமலின் மனைவி சாவதில் ஆரம்பிக்கும் பாடல் கமல் அவரை முதன் முதலாய் பார்க்கும் அந்த நொடியோடு முடிகிறது .... கமலின் சிறந்த பாடல்களில் இது கண்டிப்பாக இடம் பெரும்

வசனம் பக்கா ... போய் படத்தில் பாருங்கள் ... சிரிக்கவும் வைக்கிறது .. சிந்திக்கவும் வைக்கிறது ... அதே போல காமெடி காட்சிகள் மிகவும் அருமையாக வந்திருக்கிறது ... மாதவன் ஒவ்வொரு முறையும் குடித்து விட்டு அடிக்கும் லூட்டிகள் வயிறு குழுங்க சிரிக்க வைக்கிறது ... அதுவும் கடைசி அரைமணி நேர படம் அக்மார்க் கமல் கே.எஸ்.கூட்டணி காமெடி கதம்பம் ...


ஆனால் படத்தின் பெரிய குறையே கதைதான் ... கிளைமாக்ஸில் கதை அந்த நதியில் ஓட்டை விழுந்த படகு போல மொத்தமாக மூழ்கி விடுகிறது ... இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தி இருக்கலாம் ... கமலின் மற்ற காமெடி படங்களில் இருக்கும் ஏதோ ஒன்று இதில் குறைகிறது .. அது படத்தின் அடிநாதமாக வரும் கதை கரு .. பஞ்சதந்திரத்தில் தன் நண்பர்களுக்காக பழிகளை தாங்கி கொள்ளும் கமல் , கடைசியில் சிம்ரன் ஆஸ்பத்திரியில் இருக்கும் போது தன்னை தப்பாக பேசும் அந்த நண்பர்களின் குடும்பத்தாருடன் அவர் பேசும் காட்சி ... அதுவரை படத்தில் வந்த  காமெடி ட்ரீட்மெண்டை  தாண்டி நம் மனதில் ஒரு சின்ன வலியை உண்டு பண்ணும் ... அதே போல பம்மல் கே சம்பந்தம் படத்தின் கடைசி அரைமணி நேரம் சிம்ரனால் ஏமாற்றபட்ட கமலின் மேல் நமக்கு பரிதாபம் வரும் ... ஆனால் இதை போன்ற மனதை தொடும் எந்த விஷயமும் படத்தின் கதையில்  இல்லை .. மும்பை எக்ஸ்பிரஸ் படம் பெரும் தோல்வியை சந்தித்ததிர்க்கும் காரணம் இதுதான் ... ஆனால் மன்மதன் அம்பு அந்த அளவிர்க்கு பெரிய தோல்வியை சாந்திக்காது என்றாலும் கமலின் சறுக்கிய படங்களில் இடம் பெற வாய்ப்பு நிறையவே உண்டு ...  



மொத்தத்தில் கமல் என்னை போன்ற அவர் ரசிகர்களை இந்த படத்தில் கொஞ்சம் ஏமாற்றி விட்டார் ... நடிகனாக என்னை பிரமிக்க வைத்த கமல் இந்த படத்தில் திரைக்கதை ஆசிரியராக கொஞ்சம் சறுக்கியே இருக்கிறார் ...

மன்மதன் அம்பு : முனை மழுங்கிவிட்டது...



டிஸ்க்கி : தியேட்டர் இடைவேளையில் இரண்டு பேர் பேசி கொண்டு இருந்தார்கள் காலையில காய்கறி வாங்கிட்டு மெத்துக்கு போவான் .. சாயாங்காலம் திரும்பி வீட்டுக்கு போவான் ... இத வச்சி ஒரு படம் எடுக்க இவராள மட்டும்தான் முடியும்   அந்த இன்னொருவர் ஆனா அதுளையும் ஒரு மெசேஜ் இருந்ததுல ... பொறுமையா பாக்கணும்யா ... நல்லா இருக்கும்

அந்த இருவர் முண்டா பனியனும் பட்டாபட்டி தெரிய கைலியை தூக்கி கட்டி கொண்டு வாயில் பீடியை வலித்து கொண்டு இருந்த சுமை தூக்கும் தொழிலாளிகள் ... எம்ஜிஆர் ராலும் , சிவாஜியாலும் , ரஜினியாலும் ஒரு காலத்தில் கமலாலும் மசாலா உருண்டைகள் வலுக்கட்டாயமாக திணிக்கபட்டு சினிமா என்றாலே மசாலாதான் என்று புத்தியில் திணிக்கபட்ட கோடானுகோடி சாதாரண தமிழனின் பிரதிநிதிகள் அவர்கள் ... அவர்களின் இந்த பேச்சை கேட்ட போது கமல் கொஞ்சம் கொஞ்சமாக தன் முயற்சியில் வெற்றி பெற்று கொண்டிருக்கிறார் என்றே தோன்றுகிறது ...




7 comments:

வினோ said...

ராஜா விமர்சனம் சரி, சொல்லுங்க
பார்க்கலாமா வேண்டாமா?

"ராஜா" said...

If u like his comedy films, u can enjoy tis film vino

அருண் said...

விமர்சனம் அருமை,அதை விட அருமை டிஸ்கி.சந்தோஷமான சமாச்சாரம்.வளர்க ரசிப்புத்தன்மை.

கலையன்பன் said...

படம் சுமார்தான் என்றாலும் நகைச்சுவைக்காகப் பார்க்கலாம்
என்று சொல்கிறீர்கள். அப்ப பார்த்துடுவோம்.

கலையன்பன் said...

நான் பதியவனாயிருந்தாலும்
தங்கள் இதயத்தில் எனக்கு ஓர் இடமும்
என் வலைப்பூவிற்கு தங்கள் வலைப்பூவில்
ஓர் இடமும் தந்து எனக்கு ஆதரவு
அளித்துக் கொண்டிருக்கும்
ராஜா- உங்களுக்கு எனது நன்றிகள்!

சதீஸ் கண்ணன் said...

டிஸ்கி அருமை

Yoganathan.N said...

படத்துல 'நாலடியார்' ஆரம்ப காட்சிகளில் வருவாராமே...
அந்த ஒரு காரணத்தினாலேயே இப்படத்தை புறகணிக்கிறேன்.
கமலுக்கும் மாதவனுக்கும் வாழ்த்துகள். :)

LinkWithin

Related Posts with Thumbnails