ஆமா இவரு பெரிய மணிரத்தினம் இருபத்தினாலு மணிநேரமும் சினிமாவ பத்தியே யோசிச்சிக்கிட்டு சினிமாவிலேயே வாழ்ந்துக்கிட்டு இருக்காரு நானும் சினிமாவும் அப்படின்னு கட்டுரை எழுத வந்துட்டாறு என்று நீங்கள் திட்டுவது புரியிது ... சினிமாவுக்கும் எனக்கும் நேரடியான தொடர்புகள் எதுவும் இல்லை என்றாலும் சினிமாவை வாழ வைக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களில் நானும் ஒருவன் என்ற முறையில் இந்த வருடம் நான் பார்த்த சினிமாக்களை பற்றி ஒரு சின்ன பார்வைதான் இந்த பதிவு ...
அதுக்கு முன்னாடி நீங்க இந்த வருஷம் எந்த அளவுக்கு விழிப்புணர்வோடு இருந்திருக்கீங்கண்ணு டெஸ்ட் பண்ண ஒரு சின்ன க்விஸ் ... ரெண்டே ரெண்டு கேள்விதான் ... நீங்க நல்லவரா , ரொம்ப ரொம்ப நல்லவரா இல்ல கெட்டவராண்ணு நான் சொல்லுறேன்.. ஆனா ஒண்ணு பிட் அடிக்காம எக்ஸாம் எழுதனும் , அப்பதான் என்னால கரெக்டா சொல்ல முடியும் ...
கேள்விக்கு போகலாமா?\
கேள்வி 1 :
பாஸ் என்கிற பாஸ்கரன் படத்தில் ஷகீலா ஆண்டி நடித்த கதாபாத்திரத்தின் பெயர் என்ன?
a) பரிமளா
b) சியாமளா
c) விமலா
கேள்வி 2
நித்தி ரஞ்சி விடியோவில் ரஞ்சி அணிந்திருந்த செருப்பின் நிறம் என்ன?
a) கறுப்பு
b) வெள்ளை
c) செறுப்பே அணியவில்லை
மேல இருக்கிற ரெண்டு கேள்விக்கும் பதில் கண்டுபிடிச்சாசா வெயிட் வெயிட் அவசரபடக்கூடாது முடிவை நான் பதிவோட கடைசியில சொல்லுறேன் ... அதுவரைக்கும் இந்த மொக்கையை கொஞ்சம் படிங்க
2010இல் நான் ரசித்த சிறந்த ஐந்து படங்கள் :
2010ல நான் மொத்தம் 32 படம் தியேட்டர்ல போய் பாத்திருக்கேன் ... இதுல நான் மிகவும் ரசித்த ஐந்து படங்கள் அதே வரிசையில் ( இது என்னுடய பார்வையில் மட்டுமே )
- களவாணி – இந்த வருசத்தின் மிக சிறந்த பொழுதுபோக்கு படம் இதுதான்
- பாஸ் என்கிற பாஸ்கரன் – சென்டிமெண்ட் ஹீரோயிசம் என்று எந்த தலைவலியும் இல்லாமல் முழுக்க முழுக்க சிரிக்க வைத்த படம்
- மைனா – எந்த இடத்திலும் போர் அடிக்காத திரைக்கதை
- எந்திரன் – ரஜினியின் வில்லத்தனம்
- ஆயிரத்தில் ஒருவன் – விறுவிறுப்பான முதல்பாதி மட்டும்
சென்ற வருடம் நான் அதிகமுறை தியேட்டரில் பார்த்த படம் அசல் , மொத்தம் ஐந்து முறை . முதல் இரண்டு தடவை தலைக்காக மட்டும் .. அடுத்த இரண்டு தடவை தலைக்காக மட்டும் கடைசி ஒருமுறையும் தலைக்காக மட்டும் .... (படம் எங்கள் ஊரில் இருபது நாட்கள் மட்டுமே ஓடியது என்பது குறிப்பிடதக்கது)
அதற்க்கு அடுத்து நான் இரண்டு முறை பார்த்த படம் களவாணி .. எந்திரன் டிக்கெட் விலை அதிகமாக இருந்ததால் ஒரு முறையோடு நிறுத்தி கொண்டேன் ... இல்லை என்றால் குறைந்தது இரண்டு முறையாவது பார்த்திருப்பேன் ...
தியேட்டரில் சென்று பார்க்க முடியாமல் தவற விட்ட நல்ல படம் நான் மகான் அல்ல
தியேட்டரில் சென்று பார்க்காமல் தப்பிய மொக்கை படங்கள் ஆறுமுகம் , தம்பிக்கு இந்த ஊரு , தீராத விளையாட்டு பிள்ளை, கோவா , காதல் சொல்ல வந்தேன்
மூன்று மணிநேரம் தியேட்டரில் கதற கதற அடிவாங்கிய படங்கள்
- சுறா – உயிர் பொழச்சது தமன்னா புண்ணியம்
- பையா – பாட்டு மட்டும் இல்லைனா படம் வடக்குபட்டி ராமசாமி காசு ஊதான்...
- தில்லாலங்கடி – வடிவேலு மட்டும் இல்லைனா இந்த படம் ஜெயம் ரவியின் கேரீயரில் மிகப்பெரிய ஊத்தாக அமைந்திருக்கும்
- மதராசபட்டினம் – டைட்டானிக்க ஏற்கனவே நான் பத்து தடவைக்கு மேல பாத்துட்டேன் அதனால இந்த படம் பாக்கும் போது பயங்கர தலைவலி ...
- குட்டி – இப்படி ஒரு கதைய ரீமேக் பண்ணுற தைரியம் தனுசுக்கு மட்டும்தான் வரும் .. வளர்ந்த இடம் அப்படி ... நான் இண்டர்வெல் விட்டதும் எழுந்திருச்சி வெளிய வந்த ஒரே படம் இதுதான் ...
- மாத்தியோசி – தயாரிப்பாளர் அவ்வளவு காச எங்கையில கொடுத்திருந்தாக்கூட இதவிட நல்ல படம் எடுத்து கொடுத்திருப்பேன் .. அந்த அளவுக்கு மட்டமான படம்
சென்ற வருடம் வந்த படங்களில் நான் ரசித்த இரண்டு பாடல்கள்
- காதல் அணுக்கள் – எந்திரன்
ஷங்கர் சொல்லியதை போலவே ரொம்பவே பிரீஷியான பாடல். இதில் ரஜினி ஒரு சிவப்பு கலர் டி ஷர்ட் போட்டு நடந்து வரும் சீன் செம மாஸ் ...
- இதுவரை – கோவா
யுவன் சங்கர் ராஜாவின் தி பெஸ்ட் பாடல் இது ... காதலர்களுக்கான உண்மையான பாடல் இது ...
விஷுவலில் என்னை கவர்ந்த பாடல் விண்ணைத்தாண்டி வருவாயாவில் வரும் மன்னிப்பாயா பாடல் , அந்த ஆற்றங்கரை வீடும் , இரவில் ஒளிரும் மின் விளக்குகளும் , பவுர்ணமி இரவில் படகு சவாரியும் அதைவிட பட்டு சேலையில் தேவதை போல பளபளக்கும் திரிஷாவும் (திரிஷா இப்ப எல்லாம் ரொம்ப அழகாய்கிட்டே போறாங்க என்ன ரகசியம்னே தெரியல) என ஒட்டுமொத்தமாக என் மனதை மொத்தமாக அள்ளிய பாடல் இது ...
வருஷம் முடியபோகுது ஆளாளுக்கு விருது குடுக்க ஆரம்பிச்சிடுவாணுக, இதோ என்னுடய பங்குக்கு நானும் இவங்களுக்கெல்லாம் விருது கொடுக்க போறேன்
- “அஞ்சா நெஞ்சன்” விருது – சக்தி சிதம்பரம் (பெருந்தலைகள் எல்லாம் கவுக்க பாக்குற , வரிசையா மண்ண கவ்விக்கிட்டு இருக்கிற தளபதி நடிச்ச காவலன் படத்த தைரியமா காசு கொடுத்து வாங்கி இப்ப படத்த ரிலீஸ் பண்ண போராடுற தைரியத்துக்காக )
- “நினைத்ததை முடிப்பவன்” விருது – ரஜினிகாந்த் (ஐஸ்வர்யா ராயுடன் நடித்தே ஆக வேண்டும் என்ற தன் ஆசையை நிறைவேற்றி கொண்டதால் )
- “வெள்ளி விழா நாயகன்” விருது – “இளையதளபதி டாக்டர் விஜய் (அவர் நடித்த ஜோஸ் ஆளுக்காஸ் விளம்பரம் நூற்றி அம்பது நாட்களை தாண்டி இன்னமும் திரையரங்குகளில் தூக்கபடாமல் ஓடிக்கொண்டிருப்பதால்)
- “நான் உண்மையிலேயே ஏழைங்கோ” விருது – கருணாநிதி (அவர் காட்டிய சொத்து கணக்கு விபரத்திற்க்காக )
- “நானும் ரௌடிதான்” விருது – ஜாக்குவார் தங்கம் (அஜித் ரஜினிக்கு எதிராக வாய்சவாடல் விட்டதால் )
- “எவ்வளவு அடிச்சாலும் தாங்குவான் ” விருது- விக்ரம் (கந்தசாமி , ராவணன் என்று அடி மேல் அடி வாங்கியதால் )
கொஞ்சம் சீரியஸ் விருதுகள்
கண்டிப்பா சிறந்த நடிகன் அப்படின்னு இந்த வருசத்துல சொல்லணும்னா நந்தலாலாவில் வந்த அந்த சின்ன பையானத்தான் நான் சொல்லுவேன் ... மிகைபடுத்தபடாத நடிப்பை அவனிடம் இருந்த வாங்கிய மிஷ்கினை பாராட்டலாம்...
அதே மாதிரி சிறந்த இயக்குனர்னா அது என்னை பொறுத்தவரை களவாணி இயக்கிய சற்குணம்தான் ... நான் கொஞ்சம் கூட சலிப்படையாம இந்த வருடம் பார்த்த ஒரே ஒரு திரைபடத்தை அவர் இயக்கியதால் அவரை நான் சொல்லுவதே முறை ... இவரின் அடுத்த படத்தை ஆவலுடன் எதிர்பாக்கிறேன் .. சொதப்பாமல் இருந்தால் சரி...
சிறந்த இசை என்றாள் ஏஆர். ரகுமான் அவர்கள்தான் .. வழக்கம் போல இந்த வருசமும் இசை அமைத்த எல்லா பாடல்களும் ஹிட் ... அப்ப அவரைதான சொல்ல வேண்டும் சிறந்த இசையமைப்பாளர் என்று ...
சிறந்த காமெடினா அது பாஸ் என்கிற பாஸ்கரன் படத்துல சந்தானம் பண்ணுனதுதான் ....
இந்த வருடம் பதிவுலகில் நான் அதிகம் காண்டாகிய ஒரு விஷயம் சில அதிமேதாவிகள் எழுதும் சினிமா விமர்சனங்கள்தான் ...
சினிமா விமர்சசனம் எழுதும் பதிவர்களே , நீங்க காசு கொடுத்து பாக்குற சினிமாவ விமர்சனம் பண்ண உங்களுக்கு முழு உரிமையும் இருக்கு ,, ஆனா சில பேர் சினிமா விமர்சனம் எழுதுரேங்கிர பேருள கொஞ்சம் அதிகமாகவே அந்த படத்தை டெமேஜ் பண்ணி எழுதுராங்களோண்ணு தோணுது ... ஒரு படத்த விமர்சனம் பண்ணும் போது படத்துல இருக்கிற குறைகளை சொல்லலாம் தப்பே இல்ல ஆனால் இவனேல்லாம் ஒரு இயக்குனரா ? நீயெல்லாம் எதுக்கு நடிக்கிற ... என்று வரம்பு மீறி எழுதுவதெல்லாம் ரொம்ப ஓவர் ... சிறந்த விமர்சனம் அந்த படங்களின் நிறை குறைகளை அலசுவதுதான் என்று நான் எண்ணுகிறேன் ... அதை விட்டு விட்டு உங்கள் அதிமேதாவிதனத்தை அதில் காட்டுவதை தவிர்க்கலாமே ... ஒரு பேச்சுக்கு நீங்க எழுதிக்கிட்டு இருக்கிற பிளாக்க யாராவது இப்படி ரொம்ப மோசமா விமர்சனம் செஞ்சா உங்களுக்கு எவ்வளவு கோபம் வரும்? சந்தானம் பாணியில சொல்லணும்னா ஓசியில அஞ்சுபைசா செலவில்லாம பதிவு எழுதிர நமக்கே இவ்வளவு அடப்பு இருந்ததுனா , கோடி கோடியா செலவு பண்ணி படம் எடுக்கிற அவனுகளுக்கு எவ்வளவு இருக்கும் ... நான் எல்லா படங்களையும் நல்லாவிதமா எழுத வேண்டும் என்றெல்லாம் சொல்லவில்லை .. படம் பற்றிய உண்மையை அப்படியே எழுதலாம் தப்பில்லை ஆனால் நாலு பேரு அதிகமா உங்க பதிவை படிக்க வேண்டும் என்பதற்காக வரம்பு மீறி விமர்சனம் செய்வதை தவிர்க்கலாமே ... (அதே சமயம் சினிமாவை தவறாக பயன்படுத்த நினைக்கும் சிலரை ஓட ஓட அடிக்கலாம் தப்பே இல்லை ...)
இந்த வருடம் சோகமயமான வருஷமா அமைந்தது நம்ம இளைய தளபதி ரசிகர்களுக்குதான், சுரா என்று ஒரே ஒரு படம்தான் தளபதிக்கு , அதுவும் மரண அடி வாங்கி விட்டது ... அதுகூட பரவா இல்லை , அடுத்து அவர் எடுத்து முடித்து ஒரு படம் பல மாதங்களாய் ரிலீஸ் ஆக தியேட்டர் கிடைக்காமல் பெட்டியில் உறங்கி கொண்டு இருக்கிறது ... அவர் ரசிகர்கள் நிதிகள் எல்லாம் சேர்ந்து விஜய்க்கு எதிராக சதி பண்ணுகிறார்கள் என்று கலாநிதியையும் , உதயநிதியையும் குறை சொல்லி கொண்டிருக்கிறார்கள் ... ஒரு காலத்தில் இதே நிதிகளை பயன்படுத்தி அஜித் படங்களுக்கு எதிராக விஜையின் அப்பா சதி பண்ணி கொண்டிருக்கிறார் என்று அவர் ரசிகர்கள் கூறியபோது தளபதியின் ரசிகர்கள் ஒரு பாடலை பாடி காட்டுவார்கள் ... இன்று அவர்கள் சொல்லிக்கொண்டு இருக்கும் இந்த குற்றசாட்டுக்கும் அதே பாடல்தான் பதில் ...
“யாரோட உயர்வையும் யாராலும்
தடுக்க முடியாதுடா
கெடுக்க முடியாதுடா”
என்ன பண்ண விஜய் ...”வினை விதைத்தவன் வினை அறுப்பாண்ணு” பெரியவங்க சும்மாவா சொல்லி இருக்காங்க...
சரி சரி நாம கேள்வி பதில் மேட்டருக்கு வருவோம் ... சரியான பதில்கள் பரிமளா , செறுப்பே அணியவில்லை .. ரெண்டு கேள்விக்கும் பிட்டு கிட்டு அடிக்காம சரியா பதில் சொன்னவங்க உண்மையிலேயே ரொம்ப ரொம்ப நல்லவங்களாத்தான் இருப்பீங்க ... பின்ன ரஞ்சி நித்தி விடியோவில பார்த்து மகிழ எவ்வளவோ குஜால் மேட்டர்கள் இருக்கும்போது ரஞ்சிதா போட்டிருந்த செருப்ப பாத்தவங்க உண்மையிலேயே நல்லவங்களாத்தான் இருப்பீங்க .. ஆனா இன்னும் கொஞ்சம் நீங்க வளரனும் பாஸ் ... உலகம் எங்கையோ போய்கிட்டு இருக்கு பாஸ் ... இப்படி அப்பாவியா இருந்தீங்கன்னா பயபுள்ளைக ஏமாத்திடுவாணுக ...
தீயா வேல பாக்கணும் பாஸ் ...
அட்வான்ஸ் கிறிஸ்துமஸ் மற்றும் நியூ இயர் வாழ்த்துக்கள்
17 comments:
//யாரோட உயர்வையும் யாராலும்
தடுக்க முடியாதுடா
கெடுக்க முடியாதுடா”
என்ன பண்ண விஜய் ...”வினை விதைத்தவன் வினை அறுப்பாண்ணு”//
இந்த பொழப்புக்கு Dr.விஜய் கேரளாவுக்கு அடிமாடா போலாம்
//இந்த பொழப்புக்கு Dr.விஜய் கேரளாவுக்கு அடிமாடா போலாம்
அவரு அந்த அளவுக்குக்கூட சரிபட்டு வர மாட்டாறு ...
// மதராசபட்டினம் – டைட்டானிக்க ஏற்கனவே நான் பத்து தடவைக்கு மேல பாத்துட்டேன் அதனால இந்த படம் பாக்கும் போது பயங்கர தலைவலி ... //
எனக்கும் அதே பீலிங் தான்... ஆனா நிறைய பேர் நல்லபடம் னு சொல்றாங்க...
மதராசபட்டணம் அவ்வளவு மோசமான படமாக எனக்கு தெரியவில்லை. அந்த வெள்ளக்கார பாப்பா என்னமா இருக்கு. அது சரி நீங்க விருதகிரி பாக்கலாயா?
வாழ்க்கை ஒரு வட்டம்னு அவர் சொன்னது அவருக்கும் சேர்த்துதான்னு இப்ப புரிஞ்சிருக்கும். இருந்தாலும் அவரை பார்த்தால் கவலையாகத்தான் இருக்கும். அவர் ஒண்ணும் அஜீத் அல்ல மீண்டும் மீண்டும் எழுவதற்கு. யாராவது தூக்கி விடுங்கப்பா...
@ பாலா
//அது சரி நீங்க விருதகிரி பாக்கலாயா?
அந்த மாதிரி ரிஸ்க்கெல்லாம் எடுக்கல தல
//அவர் ஒண்ணும் அஜீத் அல்ல மீண்டும் மீண்டும் எழுவதற்கு. யாராவது தூக்கி விடுங்கப்பா...
திரும்பவும் சங்கவியையும் சுவாதியையும் கூப்பிட வேண்டியதுதான் ...
// மதராசபட்டணம் அவ்வளவு மோசமான படமாக எனக்கு தெரியவில்லை. அந்த வெள்ளக்கார பாப்பா என்னமா இருக்கு
அந்த பாப்பாதான் மூனுமணிநேரம் என்ன தியேட்டர்ல உக்கார வச்சது ...
படம் ஏதோ செயர்க்கையாவே(எல்லாம் வலிந்து திணித்தது போல ) நகர்வது போல் இருந்தது எனக்கு .. அதான் ரசிக்க முடியவில்லை
@ philosopy prabakaran
// எனக்கும் அதே பீலிங் தான்... ஆனா நிறைய பேர் நல்லபடம் னு சொல்றாங்க...
பீரியட் படம்னு சொல்லி செட்டு போட்டு எடுத்தாலே எல்லாருக்கும் பிடிச்சிடும் போல ... அப்படி சொல்ல்ரவாங்க எல்லாம் எமி அக்காவுக்காக சொல்லி இருந்திருப்பாங்க ...
மூன்று மணிநேரம் தியேட்டரில் கதற கதற அடிவாங்கிய படங்கள் பட்டியலில் பையா மதராசப்பட்டினம் இணைத்தது கண்டிக்கத்தக்கது.
என்ன ரசனையையா உங்களுக்கு!
டுபாக்கூர் விருதுகள் தேர்வு சுப்பர்.
ஜாலியா இயல்பா எழுதிருக்கிங்க..
பையா படம் நல்லா தான் இருந்துச்சு ..
மதராசப்பட்டினம் இன்னும் பார்கல..
களவாணி நிறையா தடவ பார்த்தேன்..
Merry x-mas and happy new year.
@ கார்த்தி
பையா - யுவனின் இசை இல்லை என்றால் நீங்கள் இந்த பின்னூட்டம் எழுதி இருக்க மாட்டீர்கள் ... பாடல்களை மட்டும் பார்க்க ss ம்யூசிக் போதாதா .. bw கார்த்தி திரையில அடிச்ச ஒவ்வொரு அடியும் என் மூஞ்சியில விலுந்த மாதிரியே இருந்தது எனக்கு ...
மதராசபட்டினம் - ஏழை ஹீரோவும் பணக்கார ஹீரோயினும் காதலிக்கிற மாதிரி எடுத்த ஆயிரத்து நூறாவது படம் அது .. கதை சுதந்திர போராட்ட காலத்துல நடக்கிற மாதிரி எடுத்தா மட்டும் ரசிச்சிர முடியுமா? அதே கதையில் வந்த படம்தான் களவாணி ... ஆனால் ரசிக்க முடிந்தது ... கதையை நாம் மனதில் உக்கார வைப்பதில்தான் படத்தின் வெற்றியே .. மதராசபட்டினத்தில் என்னால் கடைசி வரை படத்தோடு லயிக்கவே முடியவில்லை
@ vinoth koutham
நன்றி தல .. ரொம்ப நாள் கழித்து வந்திருக்கிறீர்கள் ... கல்யாண வாழ்க்கை நலமாக செல்கிறதா?
மறுபடியும் ஒரு தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். நேரம் கிடைக்கும்போது எழுதுங்கள்
@ இந்த பதிவு நல்லாத்தான் இருக்கு.. இருந்தாலும்... உங்களுக்கு அஜித் பிடிக்கும் என்கிற காரணத்தினால்.. விஜய் ய.. damage பண்ணாதிங்க.. அஜித் கூட வரிசையா மொக்க படம் தான் கொடுக்குறாரு...
//சென்ற வருடம் நான் அதிகமுறை தியேட்டரில் பார்த்த படம் அசல் , மொத்தம் ஐந்து முறை//
என்னதான் தல ரசிகரா இருந்தாலும் ரொம்ப தில்லுங்கோ...
@bala
tanx 4 call me thala. I will surely write.
@jevabalan
tanx 4 ur appreciation friend. And the reason y i damage vj is not he is the competitor of thala. If i were not thala fan, still i damage vijay. As 4 me likes ajith and dislikes vj r 2 seperate things.
I Saw asal 5 times, but i never feel the film is bore. I like both onscreen and offscreen ajith so much. Thats my taste, what to do?
எழுத்துல நல்ல ப்ஃளோ இருக்கு. தல க்காக தலையையே கொடுப்போங்கிற குழந்தைதானமும் இருக்கு. நாலு கதையை படிச்சு, நாலு படத்தை பார்த்தா தானே மணிரத்தினமாக முடியும். பின்ன...
//எழுத்துல நல்ல ப்ஃளோ இருக்கு.
நன்றி நண்பரே....
//தல க்காக தலையையே கொடுப்போங்கிற குழந்தைதானமும் இருக்கு.
இதற்க்கும் ஒரு நன்றி...
Post a Comment