Followers

Copyright

QRCode

Saturday, December 18, 2010

ஈசன்- திரை பார்வை




மிகவும் சாதாரண பழி வாங்கும் கதை ஆனால் அதை எடுத்த விதத்தில் மீண்டும் ஒருமுறை ஜெயித்திருக்கிறார் சசிகுமார் .. இந்த படத்தை நான் முதல்நாளே பார்க்க காரணம் இது சுப்ரமணியபுரம் எடுத்த இயக்குனரின் படம் என்பதால்தான் ...  அந்த படம் போன்று இதிலும்  ஏதாவது ஒரு ஷாக்கிங் ட்ரீட்மெண்ட் இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் எல்லாம் படத்திர்க்கு செல்லவில்லை , அது ஒருவகையில் தமிழ் சினிமாவில் உட்சபட்ச படைப்பு அதை போன்ற ஒருபடத்தை சசிகுமாரால்கூட இன்னொரு முறை தர முடியாது என்பது எனக்கு நன்றாக புரிந்திருந்ததால் நான் அந்த எதிர்பார்பில் செல்லவில்லை ... ஆனால் ஏதாவது ஒருவகையில் வித்தியாசமான ஒரு உணர்வை இந்த படம் தரும் என்ற நம்பிக்கை இருந்தது .. அதனால்தான் ஒரு நல்ல படைப்பை எதிர்பார்த்து சென்றேன் .. இந்த முறை சசிகுமார் பிரமிக்கவைக்கவில்லை என்றாலும் ஏமாற்றவில்லை ...

1980 களில் வாழ்ந்த கீழ்தட்டு கிராம இளைங்கர்களின்  வாழ்வையும் ,அவர்களை சீரழித்த கீழ்மட்ட அரசியலையும் சுப்ரமணியபுரத்தில் காட்டிய சசி இந்த முறை எடுத்திருப்பது 2010இல் சென்னை போன்ற ஒரு மெட்ரோபாலிட்டன் நகரத்தில் வாழும் இளைங்கற்களை, அவர்களின் கலாச்சாரத்தை , கோடிகள் புழங்கும் மேல்மட்ட அரசியலை பற்றி ...

ஒரு பெரிய அரசியல்வாதியின் மகன் மற்றும் அவனின் நண்பர்கள் செய்யும் தவறினால் பாதிக்கப்படும் ஒரு குடும்பத்தின் கதை ...   வைபவ் தமிழ்நாட்டின் மிகப்பெரிய சக்தி என்று தன்னை அடையாளபடுத்தி இருக்கும் ஒரு பெரிய அரசியல்வாதியின் பையன் ... அவருக்கு மூன்று நெருங்கிய நண்பர்கள் ... அவர்களின் பொழுதுபோக்கே பப்புகளில் தண்ணி அடிப்பது பெண்களுடன் படுக்கையை பகிர்வது ... வைபவிர்க்கு ஒரு பெண்ணின் மேல் காதல் வருகிறது ... அவள் விஜய் மல்லையா போன்ற ஒரு பெரிய பிசினஸ்மெனின் ஒரே மகள்... அவர் இந்த கல்யாணதிர்க்கு சம்மதிக்க மறுக்கிறார் ... வைபவின் தந்தை எப்படியாவது மகனுக்கு அவளை கல்யாணம் பண்ணி சொத்துக்களை எல்லாம் சுருட்ட வேண்டும் என்று அந்த பெண்ணிடம் நல்லவர் போல நடித்து அவளை தற்கொலைக்கு முயற்ச்சி செய்ய வைத்து அவள் அப்பாவின் மனதை மாற்றி கல்யாணத்திர்க்கு சம்மதிக்க வைக்கிறார் ... இந்நிலையில் வைபவை யாரோ கடத்தி கொண்டு போயி விடுகிறார்கள் ... அது யார்? வைபவ் என்ன ஆனார் என்பதே மீதி கதை ...  

 கதாநாயகன் என்று ஒருவர்  இல்லாமல் வந்திருக்கும் தமிழ் படம்... ஆனால் ஈசன் என்ற பெயரில் ஒரு கதாபாத்திரம் படத்தில் இருக்கிறார் ... படத்தின் மிக பெரிய பலமும் இந்த கதாபாத்திரமே .... அந்த கதாபாத்திரத்தை பற்றி சொன்னால் படம் பார்க்கும் உங்களுக்கு சுவாரஷ்யம் போய்  விடும் .. எனவே படத்தில் பார்த்து கொள்ளுங்கள் ...

 
சமுத்திரக்கனி சங்கையா என்னும் போலீஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கிறார் ... படம் முழுவதும் இவர் வருகிறார் ஆனால் இவரை கதாநாயகன் என்று சொல்ல முடியாது ... இவர் கதாபாத்திரம் கொஞ்சம் குழப்பமான வகையில் இருக்கிறது படத்தில் ... ஒரு காட்சியில் அரசியல்வாதிகளை மிரட்டுகிறார் ஆனால் அடுத்த காட்சியிலேயே தன் மேலதிகாரி அறிவுரை வழங்கியதும் அடங்கிபோகிறார்... இன்னும் கொஞ்சம் மெருகேற்றி இருக்கலாம்... ஆனால் நடிப்பில் குறை சொல்லமுடியாத அளவுக்கு நன்றாகவே செய்திருக்கிறார் .....

 வைபவ் முதல் பாதி படம் இவரை சுற்றியே செல்கிறது ஆனால் இரண்டாம் பாதியில் கொஞ்சநேரம் மட்டுமே வருகிறார் ...

நாடோடிகள் அபிநயா இரண்டாம் பாதியில் வருகிறார் ... வழக்கமாக தமிழ் சினிமாவில் பழிவாங்கும் கதை என்றால் ஒரு பிளாஷ்பேக் இருக்கும் அல்லவா அப்படி ஒரு பிளாஷ்பேக்கில்தான் அம்மணி வருகிறார் ... பாலியல் பலாத்காரம் செய்யபட்ட ஒரு பெண்ணின் உடல் வலிகளை அற்புதமாக வெளிபடுத்தி இருக்கிறார் நடிப்பில் ... welldone ….

படம் முழுவதும் காட்சி அமைப்புகளில் சின்ன சின்ன சுவாரஷ்யங்களை கொடுத்து கொண்டே இருக்கிறார் இயக்குனர் ... தொழிலதிபர் தன் மகள் ஒரு அரசியல்வாதியின் பையனை காதலிக்கிறாள் என்று தெரிந்ததும் வைபவை தன் கஷ்டடியில் கொண்டுவந்து அந்த அரசியல்வாதியை மிரட்டுவது , அடுத்த காட்சியிலேயே அந்த பெண்ணை அரசியல்வாதி தன்னுடய வீட்டுக்கு  அழைத்து வர வைத்து அந்த தொழில் அதிபரை மிரட்டும் காட்சி ஒரு உதாரணம்... இதை போல அட போட வைக்கிற பல காட்சிகள் படம் முழுவதும் இருப்பதுதான் படத்தின் பெரிய பிளஸ் ...

அதே போல வசனம் படத்தின் இன்னொரு பலம்... சசியின் நக்கலும் நையாண்டியும் வசனத்தில் பளிச்சிடுகிறது ... இசை ஜேம்ஸ் வசந்தன் பின்னணி இசையில் கோட்டை விட்டாலும் பாடல்களில்  அள்ளுகிறார் .. கடற்கரையில் நைட் எஃபக்டில் எடுக்க பட்டிருக்கும் விலைமாதர்களை பற்றிய பாடல் காரமான ஊறுகாய் என்றால் பிளாஷ்பேக்கில் வரும் குடும்ப பாடல் அம்மா கையால் சாப்பிடும் ருசியான தயிர் சாதம் ... பின்னணி இசையில் இன்னும் கொஞ்சம் மிரட்டி இருந்திருக்கலாம் ...

படத்தில் இடைவேளை விடும் போது நமக்கு ஒரு பெரிய எதிர்பார்ப்பு உருவாகிறது யார் இந்த ஈசன் என்று ... அப்பொழுதுதான் ஈசன் கதாபாத்திரம் படத்தில் நுழைகிறது... படம் பார்க்கும் அனைவரையும் சமுத்திரக்கனிதான் அந்த ஈசன் என்று நினைக்க வைக்கும் அளவிர்க்கு முதல் பாதியில் திரைக்கதை அமைத்து இருப்பது சசியின் புத்திசாலிதனம்...

 படத்தின் பெரிய பலவீனம் படத்தின் முதல் பாதிக்கும் இரண்டாம் பாதிக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாதது ... அதனாலயே படம் முடியும் போது நமக்கு ஏதோ இரண்டு படங்கள் பார்த்தை போன்ற உணர்வு எழுவதை தவிர்க்க முடியவில்லை ... குறிப்பாக வைபவிர்க்கு காதல் வருவதும் அவருக்கு திருமணம் நிச்சயமாவதும் எதர்க்காக படத்தில் வருகிறது என்றே தெரியவில்லை ... அதே போல ஒரு ஆஸ்பத்திரியில் இருக்கும் மெயில் செர்வரை ஹேக் பண்ணி அதில் இருக்கும் மெயிலை modify பண்ணுவது எல்லாம் காதில் பூ சுற்றும் வேலை ...

ஒரு டிராக்கில் பார்ட்டி என்ற பெயரில் இன்று நம் நாட்டில் நடக்கும் கூத்துகளையும் அதனால் அப்பாவி பெண்கள் எப்படி எல்லாம் பாதிக்க படுகிறார்கள் , அவர்களின் குடும்பம் எப்படி சீரழிகிறது என்பதையும், இன்னொரு டிராக்கில் இன்றய அரசியல்வாதிகளும் பெரிய பெரிய பிசினஸ் மக்னெட்டுகளும் எப்படி எல்லாம் ஊழல் செய்து மக்கள் பணத்தை கொள்ளை அடிக்கிறார்கள்  என்பதையும் அப்பட்டமாய் காட்டி இருப்பதற்காகவே சசிக்கு ஒரு சல்யூட் அடிக்கலாம் ...
   
 குறைகளை எல்லாம் தவிர்த்து பார்த்தால் இந்த ஈசன் இப்படி ஒரு படம் பார்த்து எவ்வளவு நாள் ஆச்சி என்று நம்மை கண்டிப்பாக நினைக்க வைக்கும் ....
  
முதல் படத்தில் மிக பெரிய வெற்றியை கொடுத்த இயக்குனர்கள் , இரண்டாம் படம் எடுப்பது என்பது அந்தரத்தில் கம்பியில் நடப்பதை போன்றது .. கொஞ்சம் தவறினாலும் மண்ணை கவ்வ வேண்டியதுதான்... ஆனால் சசி இதில் ஜெயித்து விட்டார் என்றே நினைக்கிறேன்....     

5 comments:

"ராஜா" said...

படத்திர்க்கு நிறைய எதிர்மறையான விமர்சனங்கள் வலையுலகில் ... ஆனால் எனக்கு பிடித்திருந்தது....

வினோ said...

நல்ல விமர்சனம் ராஜா...

பனித்துளி சங்கர் said...

இன்னும் படம் பார்க்கவில்லை . உங்களின் விமர்சனம் சிறப்பாக உள்ளது . பகிர்வுக்கு நன்றி

Unknown said...

நல்ல விமர்சனம் இன்னும் ரெண்டு நாளுல எங்கவூரு சைட்டுல பார்த்துட்டு சொல்லுறேன்

ஹி ஹி

"ராஜா" said...

@ வினோ
நன்றி நண்பா ...

@ ஆகாயமனிதன்

பாத்தாச்சு உங்க பதிவ

@ பனித்துளி சங்கர்

நன்றி நண்பா உங்கள் முதல் பின்னூட்டதிர்க்கு

@ விக்கி உலகம்

அது என்ன உங்கஊறு சைட்டு

LinkWithin

Related Posts with Thumbnails