Followers

Copyright

QRCode

Monday, December 6, 2010

நந்தலாலா- இவர்கள் நடித்திருந்தால்


இப்ப தமிழ் கூ(நா)றும்  பதிவுலகத்தில சூடான பேச்சு மிஸ்கினின் நந்தலாலாவை பற்றித்தான்... ஆனந்த விகடன் பத்திரிகையில் மிஸ்கின் ஒருமுறை இப்படி கூறி இருந்தார் .. "இந்த கதையை நான் பல ஹீரோக்களிடம் சொன்னேன் .. ஆனால் அவர்கள் ரொம்ப கஷ்டமா இருக்கும்போல என்று சொல்லி நடிக்க பயந்தார்கள் .. அதனால்தான் நானே நடித்து விட்டேன்" .. இது வழக்கமாய் ஹீரோவா நடிக்க வர்ற எல்லா இயக்குனர்களும் சொல்லுரதுதான்னாலும் நான் இத கொஞ்சம் சீரியஸா எடுத்து ஒரு வேலை அந்த ஹீரோக்கள் எல்லாம் இந்த படத்தில் நடிக்க ஒத்து கொண்டிருந்தாள் படம் எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பார்த்தேன் ... அதன் விளைவுதான் இந்த பதிவு ...


முதலில் நம்ம தளபதி விஜய் அவர்கள் ...


2011 முதல் விஜய் உலகபடங்களில் நடிக்க போகிறார் என்று அவர் தந்தை திருவாய் மலர்ந்திருந்தார் அல்லவா .. அது இந்த நந்தலாலாதான்...




மிஸ்கின் : சார் படத்தோட ஆரம்பத்துல நீங்க மனநல மருத்துவமனையில் இருந்து தப்பிக்கிறீங்க ..



எஸ்.ஏ.சி: நிறுத்து நிறுத்து .. என் பையன மென்டலா நடிக்க சொல்லுறியா?



மிஸ்கின் : சார் உங்க பையன் மென்டலா நடிக்கவே வேண்டாம் சார் .. அவர் எப்பவும் ங்ங்ங்கண்ணா போட்டு பேசுவாரே அதே மாதிரி பேச சொல்லுங்க போதும் ... அப்பறம் பாருங்க உங்க வீட்டுக்கு தேசிய விருதே தேடி வரும் ...



எஸ்.ஏ.சி:  நீ என் பையனோட மாஸ் தெரியாம பேசுற ... என் பையன மட்டும் மென்டலா காட்டுன தமிழ்நாடு மட்டும் இல்ல கேரளாவும் சேந்து எரியும் ...நீ கேரளாகாரன்தான பேசாம நான் சொல்லுற மாதிரி கதைய மாத்து , உன்ன விஜய் ஆரம்பிக்க போற வி.மு.காவோட கேரளா மாநில கொள்கை பரப்பு செயலாளரா ஆக்கி என் பையனை கும்புட்டு நிக்கிறமாதிரி என் பையனோட செலை பக்கத்துல உனக்கு ஒரு செலை வச்சிருவோம்...

விஜய்: நைனா நீ கொஞ்சம் கம்முண்ணு கெட .. ங்ங்ண்ணா... நீங்க முழு கதையையும் சொல்லுங்க்ண்ணா ...


(மிஷ்கின் முழு கதையையும் சொல்லி முடிக்கிறார்...)

விஜய்: கதை ஓ.கே.. எங்கப்பா சின்ன சின்ன சேஞ்ச் சொல்லுவாறு ... அத கொஞ்சம் திருத்திக்கிட்டீங்கன்னா .. படத்த ஆரம்பிச்சிடலாம்னா...

எஸ்.ஏ.சி : மொத இந்த படத்துல விஜய் மெண்டல் கிடையாது ... அவர் சின்ன வயசுல அவங்க ஊருள ஏழைகளை கொடுமபடுத்திர பண்ணையார போட்டு தள்ளிட்டு ஜெயிலுக்கு போராறு ... ஜெயிலில இருக்கும் போது அவரு அம்மா ஞாபகம் வர , அவங்க அம்மாவ பாக்கணும்னு ஜெயில விட்டு தப்பிக்கிராறு .. அப்பதான் அந்த சின்ன பையன வழியில பாக்குராறு... அவனும் அவங்க அம்மாவ பாக்க போய்கிட்டு இருக்கான் .. விஜய் போர ஊரு திருப்பாச்சி .. பையன் போர ஊரு சிவகாசி ... ரெண்டுமே கேரளா பார்டெர்ல இருக்கு... அந்த பையன் கேரக்டெர்ல நம்ம குட்டி தளபதி சஞ்சய்தான் நடிக்கிராறு ... அவருக்கு ஓபெனிங்க் சீனே தூள் பரக்கணும் ... அவர் கால மொதல்ல காட்டி அப்படியே தமிழ்நாடு  மேப் ஒண்ணு சுத்தி சுத்தி வந்து அவர் காலடியில விழனும்... பின்னாடி 2030 அப்படின்னு எழுத்து போடனும் .. 2030ல அவர்தான் தமிழக முதல்வர் அப்படிங்கிரத சிம்பாலிக்கா காட்டனும் ..

மிஷ்கின் : ஸார் இது அவார்ட் படம் ..

எஸ் ஏ சி : யோவ் அவார்ட் படம் எடுத்தா வார்ட் கவுன்சிலர் கூட ஆக முடியாது .. நான் சொல்ற மாதிரி படம் எடு அடுத்த விஜய் கவர்ன்மெண்ட்ல நீதான் கலை மற்றும் ஊடக துறை அமைச்சர்... உன் இஷ்டத்துக்கு பேட்டி கொடுக்கலாம்...

மிஷ்கின்: ஸார் நான் இலக்கிய புஸ்தகத்த மட்டும்தான் வாசிப்பேன் .. உங்களுக்கெல்லாம் வாசிக்க மாட்டேன் ...

கோபமாக அந்த வீட்டை விட்டு வெளியேறுகிறார் மிஷ்கின்...

அடுத்த வாரம்  ஆனந்த விகடனில் பேட்டி

மிஷ்கின் : தமிழ் சினிமா நடிகர்களுக்கு சுத்தமாக ரசனை இல்லை ,, ரெண்டு மூணு பிட்டு படம் பார்த்து விட்டு நடிகனாக வேண்டும் என்று சினிமாவிர்க்குல் நுழைந்து விடுகிறார்கள்... சிறந்த நடிப்பை வெளிபடுத்த திரிஷாக்களுடன் நூறு முறை அமெரிக்காவில் டேட்டிங்க் போன அனுபவம்  மட்டும் போதாது .. இயக்குனர்களை மதிக்க தெரிய வேண்டும் ...

(அடுத்து மிஷ்கின் நம்ம தல வீட்டிர்க்கு கதை சொல்ல போகிறார்) ...



மிஷ்கின் : ஸார் இந்த படத்துல நடிக்க தகுதியான ஒரே ஆளு நீங்கதான்... கமலுக்கு அப்புறம்  இந்த கேரக்டர் நீங்க மட்டும்தான் சரியா பண்ண முடியும் ...

தல : எப்படி இவ்வளவு உறுதியா சொல்லுறீங்க?

மிஷ்கின் : நீங்க கதைக்கு   சம்பந்தமே இல்லாம எல்லா படத்துளையும் நடந்துகிட்டே இருப்பீங்க ... இந்த படத்துல கதை படியே நீங்க எப்பவும் நடந்துகிட்டேதான் இருக்கணும் ... அதான் சொன்னேன் ... நீங்க நடந்தா ச்சீ நடிச்சா படத்துக்கு பொருத்தமா இருக்கும்...

தல: ஏலே  .. இனிமே நா நடக்க மாட்டேன் .. என் படம்தான் ஓடும்...

மிஷ்கின்: (ஆகா பஞ்ச் டயலாக் பேச ஆரம்பிச்சிட்டாரே... ) இந்த கதையை நான் உங்ககிட்ட சொல்ல வந்ததுக்கு உங்களுக்கு பையன் இல்லாததும் இன்னொரு காரணம். .... ஏற்கனவே ஒரு குடும்பமே ஒண்ணு சேந்து என் கதையை கொல்ல  பாத்தானுக ... நீங்க தனி ஆள் தல அதான் தைரியமா வந்தேன்...

தல : ஏலே நான் தனி ஆள் இல்ல எனக்கு பின்னாடி ஒரு கூட்டமே இருக்கு ...

மிஷ்கின் : (நைசா பின்னாடி எட்டி பாத்து) தல உங்க பின்னாடி குப்பைகூடைதான் இருக்கு ...

தல : நீ ரொம்ப பேசுர ... கதையை என் பிஆர்ஓகிட்ட சொல்லிட்டு போ .. எனக்கு அடுத்த வாரம் தேனிக்கு பக்கத்துல அத்திபட்டில ரேக்லா ரேஸ் இருக்கு .. அத முடிச்சிட்டு உன்னை கூப்புடுறேன்...

அடுத்த வாரம் ஆனந்த விகடன்..

கேள்வி: நீங்களும் அஜித்தும் சேந்து பண்ண போற படம் என்னாச்சு?

மிஷ்கின் : நான் தலைக்கு மேல மயிரு இருக்கிறவங்ககிட்ட மட்டும்தான் வேலை செய்வேன்... மீசைக்கு கீழ மயிர் இருந்தா எனக்கு பிடிக்காது .. பாருங்க நானே அத எடுத்திட்டேன்...


இதற்க்கு அஜித்தின் பதில் என்ன என்று கேட்க எல்லா பத்திரிக்கைகளும் போட்டி போட்டு அவரை சந்திக்க முயல .. தல ரொம்ப கூலாக  வெங்கட் பிரபுவை வைத்து எங்காத்தா எடுக்க கிளம்பி விடுகிறார் ...  நான்கு மாதம் கழித்து மிஷ்கினுக்கு  பதில் சொல்லுகிறார்

நான் இல்லாம அவர் மூணு மொக்கை போட்டுட்டார் .. அவர் இல்லாம நான் இருபது மொக்கை போட்டுட்டேன் ...யாருக்கும் யாரும் தேவை இல்லை


பெரிய நடிகர்களை நம்பி பயன் இல்லை என்று மிஷ்கின் அடுத்து நம்ம டீ.ஆரை தேடி போகிறார்


டீ ஆர்: வாங்க மிஷ்கின் ... தலைக்கு மேல மயிர் இருக்கிறவாங்கக்கூட மட்டும்தான் வேலை செய்வேண்ணு சொல்லிட்டு இப்ப உடம்பு முலுசும் மயிர் இருக்கிற என்ன தேடி வாரீங்கா...

மிஷ்கின் : எல்லாம் நேரம்தான்... சரி நான் கதைய சொல்லி முடிக்கிறேன் அப்பறம் நாம பேசிக்கலாம் ...

(கதையை சொல்லி முடிக்கிறார்)

டீ ஆர் :  நீ சொன்ன கதை டாப்பு
            ஆனா நான் இதுல நடிச்சா மக்கள் வப்பான் ஆப்பு
            நான் சொல்லுறேன் சில சேஞ்சு
            அத நீ செய்யி துணிஞ்சு
            அப்பால  எகிறும்பாறு உன் ரேஞ்சு
            யே டண்டனக்கா யே டனக்குனக்கா

டீ ஆர் படம்னா தமிழ்நாடு  மட்டும் இல்ல ... இந்தியாவே எதிர்பார்க்கும் ... படத்துல ஹீரோவா  நான் நடிக்கிறேன் ... அந்த பையன் கேரக்டர்ல என் பையன் குறள் நடிப்பான் ...

"யாருக்கும் அடிபணியாது எங்கட்சி .. டீ ஆரோட பலமே தங்கச்சி"....  குரலரசனோட  நான் அவன் அம்மாவ தேடி போறேன் .. அவங்க அம்மாவ பாக்குற நான் அப்படியே ஷாக் ஆகி நிக்கிறேன் ... காரணம் அது நான் சின்ன வயசுல ரொம்ப பாசமா வளத்த என் தங்கச்சி... அந்த சீன்ல நான் போடுறேன் பாருங்க பேக்ரவுண்ட் ம்யூசிக் ஆ சிம்ஸக் சீம்ஸக் .. டுமுக்கு டுமுக்கு சிம்ஜ்க்க் சிஜக்க் ... டுப்பு டுப்பு ... (வாயிலேயே ம்யூசிக் போட்டு காட்டுகிறார் )அப்படியே ஆடியன்ஸ் கண்ணுல தண்ணி வர தியேட்டர்ல உக்காந்து இருப்பான் ... அப்பதான் ஒரு பிளாஷ் பேக் காட்டுறோம் சின்ன வயசுல முள் குத்தி அவ கால்ல வந்த  ரத்தத்த பாத்துதான் பாசத்துல அதிர்ச்சியாகி நான் மெண்டலாவே  ஆகிறேன்...
அப்படிபட தங்கச்சி ஏன் இப்படி ஆனா? அவங்க ஊரு எம்எல்ஏ பையன் அவளை ஏமாத்தி கெடுத்திரான்.. அவனுக்கும் அவளுக்கும் பொறந்த பையந்தான் குறள் ... இவங்க ரெண்டு பேரையும் அவங்க அப்பனோட சேத்து  வைக்க நான் எம்எல்ஏ வோட போராடுறேன் ... இதுதான் கதை ... படத்துல எனக்கு  ஜோடியா மும்தாஜ் நடிப்பாங்க ...

ஏற்கனவே என் பையன் சிம்புவ "லிட்டில் சூப்பர் ஸ்டார்" ஆக்கி ரஜினியோட கொட்டத்தை அடக்கியாச்சி ... இப்ப கமல்தான் என் குறி அதனால டைட்டில் போடும்  போது என் பையன் குரலரசன் பேருக்கு முன்னாடி லிட்டில் உலக நாயகன் அப்படின்னு போடனும் ... இந்த படத்த பாத்து கமல் உங்களை இவ்வளவு நாள் மதிக்காம போனது என் தப்புதான்னு என் கால்ல விழுந்து கதற கதற மன்னிப்பு கேக்கணும்... கேக்க வைப்பான் ஸார் என் பையன் ... கேக்க வப்பான் ...அவன் புலிக்கு போறந்தவன் ஸார்...

மிஷ்கின் : (மனதிர்க்குல் கரடிக்கு பிறந்தவண்ணு சொல்லு கரெக்டா இருக்கும் )அப்ப உங்க வீட்டுல எல்லாமே புலிதானா? நீங்க வெறும் டம்மி பீசா? ...

"இப்படி ஒரு படம் எடுக்கிறதுக்கு பதிலா நான் கேரளாவுக்கு அடிமாடா போய்டலாம்... நீங்க யாருமே வேணாம் நானே நடிக்கிறேன் ஹீரோவா..."

சொல்லிவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறார் மிஷ்கின் ...


இந்த படம் வெளிவந்த பின்னர் படத்தை பற்றி கருத்து கூறுமாறு விஜயின் தந்தை எஸ்ஆசியிடம் கேட்கபட்டது ..

எஸ்ஏசி: ஸார் மிஷ்கின் இவ்வளவு பெரிய திருடனா இருக்க கூடாது ஸார்? கதைய திருடலாம் தப்பில்லை ஆனா டைட்டில் கார்ட்ல அந்த ஒரிஜினல் படத்தோட பேரையாவது போட்டு இருக்கலாம்... ஒரு கிரியேட்டரா என் மனசு ரொம்ப கஷ்டபடுது ஸார்? நானும் என் மகனும் ரொம்ப கஷ்டபட்டு சங்கவியோட டேட்ஸ் வாங்கி எடுத்த படம் ஸார் விஷ்ணு .. அந்த படத்த அப்படியே ஆட்டைய போட்டிருக்காரு ஸார் இவர்... அதுல விஜயும் சங்கவியும் காடு மலைண்ணு நடந்தே சங்கவியோட கிராமத்துக்கு பயணம் போவாங்க... அவங்க பயணத்தோட நடுவுல நெஞ்ச குத்துற மாதிரி(சங்கவி நெஞ்சை விஜய்)  எத்தன சீன் கஷ்டபட்டு யோசிச்சி எடுத்தேன் தெரியுமா ஸார்? மிஷ்கின் கொஞ்சம் கூட சொரணையே  இல்லாமல் என் கதையை கொஞ்சம் மாத்தி எடுத்து தமிழ் சினிமாவில் நெஞ்சை தைக்கிற மாதிரியான படம் அப்படின்னு பேர் எடுத்துட்டாறு... எனக்கு நன்றினு ஒரு சிலைடு கூட போடலேண்ணுதான் எனக்கு வருத்தமா இருக்கு...


இந்த பேட்டியை கேட்டு ஒரு இயக்குனர் அடுத்த நாள் சூசைட் பண்ணி கொள்கிறார்.. அவர் வேறு யாரும் இல்லை நந்தலாலாவின் ஒரிஜினல் கிகுஜிரோவின் இயக்குனர் டகேஷி கிடோனா


போனஸ் :

எனக்கு வந்த ஒரு விஜய் எஸ்எம்எஸ்

கஸ்டமர் : இந்த டீவீ என்ன விலை?

சேல்ஸ்மேன்: 2 லட்சம்

கஸ்டமர் : அப்படி என்ன இருக்கு இந்த டிவியில?

சேல்ஸ்மேன்: விஜய் படம் வந்தா அதுவா ஆஃப் ஆகிக்கிடும்..

கஸ்டமர் : அப்ப உயிர காக்கிற டிவியிண்ணு சொல்லுங்க.. 

(அப்ப தல படம் வந்தா டிவி கீழ விழுந்து தற்கொலை பண்ணிக்கிடுமாண்ணு பின்னூட்டம் போட நினைப்பவர்கள் கடையில் காவலன் படத்தில் விஜய் பேசி இருக்கும் அத்துணை பஞ்ச் டயலாக்க்குகளும் பின்னூட்டதில் போடபட்டு வைரஸ் அட்டாக் நடத்தி கடை காலி செய்யபடும்)



12 comments:

Arun Prasath said...

me the first....

Arun Prasath said...

யப்பா நல்லா கற்பனை சார்

"ராஜா" said...

@ Arun Prasath
நன்றி நண்பா...

ஆர்வா said...

மிஷ்கின் விகடன்ல பேட்டி கொடுக்கிற கற்பனை அற்புதம்

ராஜகோபால் said...

//இப்ப கமல்தான் என் குறி அதனால டைட்டில் போடும் போது என் பையன் குரலரசன் பேருக்கு முன்னாடி “லிட்டில் உலக நாயகன்” அப்படின்னு போடனும் ... இந்த படத்த பாத்து கமல் உங்களை இவ்வளவு நாள் மதிக்காம போனது என் தப்புதான்னு என் கால்ல விழுந்து கதற கதற மன்னிப்பு கேக்கணும்... கேக்க வைப்பான் ஸார் என் பையன் ... கேக்க வப்பான் ...அவன் புலிக்கு போறந்தவன் ஸார்... //

கமலுக்கு கரடிகுட்டிகிட்ட இருந்து கடியா தாங்க முடியாது.

ராஜகோபால் said...

//குட்டி தளபதி சஞ்சய்தான் //

குட்டி சாத்தான் சஞ்சய்தான் கரக்ட்டாருக்கும்

உட்டா 2011-ல ஓட்டு உரிமை இல்லாமலே உலக அரசியலில் முதல் முறையா மந்திரியாகிடுவாரற்றுக்கு

வினோ said...

பதிவு அருமை...

Anonymous said...

நானும் என் மகனும் ரொம்ப கஷ்டபட்டு சங்கவியோட டேட்ஸ் வாங்கி எடுத்த படம் ஸார்//
ஹை சங்கவி..விடவே மாட்டீங்களாய்யா

Anonymous said...

கல்கக்கல் பதிவு அடிக்கடி இது மாதிரி தாளிச்சி விடுங்க

Anonymous said...

சாங்கவி,விஜய் ஃபோட்டோ சூப்பர்

Anonymous said...

விஜய் படம் வந்தா அதுவா ஆஃப் ஆகிக்கிடும்//
சூப்பர் டிவியா இருக்கே எப்போ ஈரோடு வரும்?

ஹரிஸ் Harish said...

சூப்பர் நண்பா...

LinkWithin

Related Posts with Thumbnails