ஒரு பத்து வயது சிறுவனை தன் நடிப்பினால் அழ வைக்க , ஒரு வாரம் முழுவதும் அவனை அந்த பாதிப்பில் இருந்து வெளிவராமல் சாப்பாட்டின் சுவை கூட அறிந்துகொள்ள முடியாத பித்து பிடித்த மனநிலையில் அவனை சுற்ற வைக்க முடியுமா? என்னை கமல் என்னும் கலைஞன் அவ்வாறு என்னுடைய பத்தாவது வயதிலேயே அலைய வைத்தான் ஒரு படத்தின் மூலமாய் ... படம் மூன்றாம் பிறை ... பொதிகை டீவியில் பார்த்தேன் ... அந்த படத்தின் பாதிப்பு அடுத்த ஒரு வாரம் என்னை விட்டு நீங்கவில்லை ... என்னுடய நண்பன் ஒருவனையும் படம் ரொம்ப பாதித்துவிட நாங்கள் இருவரும் சேர்ந்து கமலுக்கு ஒரு கடிதம் எழுத பிளான் பண்ணினோம் ... போஸ்ட் ஆஃபிஸ் போயி ஒரு இன்லண்ட் கடிதம் வாங்கி இவ்வாறு எழுதினோம் ... அன்புள்ள கமல் , நீங்களும் ஸ்ரீதேவி அக்காவும் பிரிந்ததை எங்களால் தாங்க முடியவில்லை ... உடனே எப்படியாவது நீங்கள் இருவரும் சேரும்படி படம் எடுத்து அதை டீவியில் ஒளிபரப்புங்கள் என்று .. ஆனால் கமலின் முகவரி கடைசி வரை எங்களுக்கு கிடைக்காததால் அதை போஸ்ட் செய்ய முடியவில்லை.... இதை ஏன் சொல்லுகிறேன் என்றாள் ஒரு சிறுவனை சிரிக்க வைப்பது அவனை குதூகலபடுத்துவது என்பது மிகவும் எளிது... ஒரு குரங்கு யானை கூட அதை செய்து விடும் ஆனால் தன் நடிப்பாள் அவனுள் சோகத்தை பரப்பி அவனை அழவைப்பது என்பது ரொம்ப கடினம் ... அப்பொழுது இருந்தே கமல் ஒரு நடிகனாக என் மனதில் மிக ஆழமாக பதிந்து விட்டார் ... இன்று வரை அவர் என்னை ஒரு படத்தில் கூட ஏமாற்றாவில்லை ... இந்தியன் படத்தில் இருந்து உன்னை போல் ஒருவன் வரைக்கும் அவரின் அனைத்து படங்களையும் முதல் நாளே பார்த்து விடுவோம் நானும் ,என்னுடய அந்த நண்பனும் ... ஒவ்வொரு முறையும் ஏதாவது ஒரு பிரமிப்போடுதான் திரையரங்கை விட்டு வெளியேறுவோம்....
இன்னொரு விஷயம் கமலிடம் எனக்கு மிகவும் பிடித்தது அவரின் வெளிப்படையான வாழ்க்கை முறை .... எல்லா தவறுகளையும் செய்து விட்டு தன்னை உத்தமனாக காட்டிக்கொள்ளும் மனிதர்கள் மத்தியில் என்னை பொறுத்தவரை கமல் ஒரு உத்தமனாகவே தெரிகிறார் ,,,
இன்னொரு விஷயம் தன்னுடய சினிமா வாழ்க்கையில் ரசிகர்களை எப்பொழுதும் தன் சுயநலத்திர்க்காய் பயன்படுத்தி கொள்ளமாட்டார்... ஏன் தன்னுடய படத்தின் விளம்பரத்திர்க்காக மற்ற நடிகர்கள் செய்யும் ரசிகர்களை ஏமாற்றும் எந்த விசயத்தையும் இவர் இதுவரை செய்ததில்லை ... அதுதான் கமல்
அவரின் அத்துணை படங்களும் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் என்றாலும் நண்பர் ராஜகோபால் பத்து படங்களை மட்டுமே எழுத வேண்டும் என்று சொல்லி விட்டார் .. இதோ என்னுடய பத்து ...
மூன்றாம் பிறை :
எனக்கு மிகவும் பிடித்த தமிழ் படம்... இந்த படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் அழுகை வராதவர்கள் கண்டிப்பாய் குருடர்களாகத்தான் இருப்பார்கள் ... கமலுக்கு தேசிய விருது வாங்கி தந்த படம் ... இன்றும் எப்பொழுதாவது டிவியில் போட்டால் முழுவதும் பார்த்து விடுவேன்
குணா :
மூன்றாம் பிறைக்கு பின்னர் கமலுக்குள் இருக்கும் நடிப்பு ராட்சசன் முழுவதும் வெளிவந்த படம் ... அபிராமியின் மேல் கமலுக்கு வரும் காதலும் அபிராமிக்கு கமலின் மேல் வரும் காதலும் கவிதை ரகம்... இளையராஜா கமல் கூட்டணியிலேயே எனக்கு பிடித்த படம் இதுதான் ... கமலுக்கு போட்டியாக ராஜா தன் பின்னணி இசையால் படம் முழுவதும் ராஜா நடை போட்டு இருப்பார்
சதிலீலாவதி
முழுக்க முழுக்க சிரித்து கொண்டே இருக்க வேண்டுமா இந்த படம் பாருங்கள் ... கமலின் காமெடி படங்களில் one of the best இது ... கமல் கோவை சரளாவுடன் ஜோடி சேர்ந்தது கமல் என்னும் கலைஞன் சிறந்த படைப்புக்காக ஈகோ எதுவும் பார்க்க மாட்டான் என்பதர்க்கு சிறந்த உதாரணம் ...
அபூர்வ சகோதர்கள்
இந்த மாதிரி ஒரு படம் தமிழ் சினிமாவில் இனிமேல் யாராலும் நடிக்கவே முடியாது ... கமல் செய்த மிகப்பெரும் சாதனை இந்த படம் ... உன்னை நெனச்சேன் பாட்டு படிச்சேன் பாடலில் மாஸ்க் மாட்டி கொண்டு அவர் அழும் காட்சி அவர் உலக தரம் வாய்ந்த நடிகன் என்பதர்க்கு ஒரு சின்ன உதாரணம் ...
இந்தியன்
இந்த படத்தில் ஷங்கர் நாட்டு மக்களுக்கு எடுத்த பாடத்தை விட கமல் மற்ற நடிகர்களுக்கு எடுத்த பாடம்தான் எனக்கு பிடித்தது ... மேக் அப் உதவியால் வயதானவரின் முகத்தை கொண்டு வந்து விடலாம் .. ஆனால் நடை , பேச்சு என்று அப்படியே ஒரு எழுவது வயது கிழவனை நம் முன்னே கொண்டு வர கமலால் மட்டுமே முடியும் ...
அன்பே சிவம்
ஒரே படத்தில் ஒரே கதாபாத்திரம் ஆனால் ரெண்டு வேறு தோற்றம்... விபத்துக்கு முன்னாள் வரும் கமல் விபத்துக்கு பின்னால் முகம் கால் எல்லாம் சிதிலமடைந்த கமல் .... ரெண்டு கமலுக்கும் வித்தியாசமும் இருக்க வேண்டும் ஆனால் ரொம்ப நுணுக்கமான ஒற்றுமைகளும் தெரியவேண்டும் ... இதை மனதில் வைத்து கொண்டு மறுபடியும் அன்பே சிவம் பாருங்கள் உங்களுக்கே தெரியும் கமல் என்னும் நடிகனின் உழைப்பு
பம்மல் கே சம்பந்தம்
கமல் மௌலி கூட்டணியில் வந்த காமெடி சரம் இந்த படம் ... ஒரு காமெடிக்கு சிரித்து முடிப்பதற்க்குள் அடுத்த காமெடி வந்து விடும் ... non stop comedy சரவெடி இந்த படம்
விருமாண்டி
இளையராஜாவை இன்னமும் பயன்படுத்தி கொண்டிருக்கிற ஒரே உச்ச நச்சத்திரம் கமல் மட்டும்தான் .. ராஜாவும் தன்னை நம்பினால் அவர்களை தான் கைவிடுவதில்லை என்பதை நிரூபித்த படம் ... நடிப்பில் கமலும் பின்னணி இசையில் ராஜாவும் அடித்த கும்மிக்களுக்காவே இந்த படம் எனக்கு மிகவும் பிடிக்கும்...
ஆளவந்தான்
வில்லதனத்திலும் தன்னால் முத்திரை பதிக்க முடியும் என்பதை அழுத்தமாய் கமல் நிரூபித்த படம்... ஜெயிலில் ரியாஸ் கானை கொன்று தப்பிக்கும் இடம் இந்த படத்தில் நான் மிகவும் ரசித்த காட்சி.... அதே போல் மனிஷாவை கொன்று விட்டு பின் தன் தவறை எண்ணி அழும் காட்சியும் நன்றாக இருக்கும்...
மகாநதி
இந்த மாதிரி ஒரு படம் எடுக்க ரொம்ப தைரியம் வேண்டும் ... அந்த தைரியம் நடிகர்களில் கமலஹாசனுக்கு மட்டுமே இருக்கிறது... ஒரு துரோகியின் மூலம் சிதைந்து போன ஒரு அழகான குடும்பத்தை பற்றிய கதை... என்னை மிகவும் பாதித்த சில படங்களில் இதுவும் ஒன்று ...
நான் மேலே சொன்ன படங்கள் எல்லாம் எனக்கு உடனே ஞாபகம் வந்த படங்கள் மட்டுமே .. இதை தவிர்த்து இன்னும் நிறைய படங்கள் உண்டு கமல் நடித்ததில் எனக்கு பிடித்த படங்கள் ...
கமல் மேல் எத்தனையோ விமர்சனங்கள் வந்தாலும் அவை எதுவும் கமல் என்னும் நடிகன் மேல் என்னுள் இருக்கும் மரியாதையை இதுவரை சிறிதளவு கூட குறைத்ததில்லை...
ஒன்று மட்டும் உறுதி கமலை இன்று சிலர் புறக்கணித்தாலும், சினிமா என்னும் கலை அழிந்த பின்னும் அடுத்து வரும் தலைமுறையினர் அதை மரியாதையோடு பார்ப்பார்கள் என்றாள் அதர்க்கு காரணமான வெகு சிலரில் கமலும் ஒருவராய் இருப்பார் ... சினிமா ஒரு வியாபாரமாக மட்டுமே ஆக்கபட்டு கொண்டிருக்கிற இந்த நாளில் வியாபார்த்தையும் தாண்டி அதை ஒரு கலையாக மாற்ற நடிகர்களில் தன்னந்தனியாக போராடிக்கொண்டு இருக்கும் கமலுக்கு ஒரு ராயல் சல்யூட் ...
இந்த பதிவை நான் தொடர நான் அழைப்பது
சதீஷ் குமார்
பப்ளி ஹரிஷ்
மற்றும் கமல் ரசிகர்கள் அனைவரையும்
மற்றும் கமல் ரசிகர்கள் அனைவரையும்
16 comments:
நன்றி ராஜா என்னை தொடர்ந்தமைக்கு., மிகவும் அருமை உங்களின் கமலின் தொகுப்பு.
சதீஷ்குமார் னு இருக்கே அது நானா..?#சந்தேகம்
லென் தியான முன்னுரை..ஆனா எல்லா பட விமர்சனமும் அட்டகாசம்..
ஆமாம் சார் கொஞ்சம் பெரிய முன்னுரை.... ஆனா படிக்க தூண்டுது... நல்ல தொகுப்பு
நல்ல தேர்வுகள் நண்பா...
//நன்றி ராஜா என்னை தொடர்ந்தமைக்கு., மிகவும் அருமை உங்களின் கமலின் தொகுப்பு
நன்றி நனபா
// சதீஷ்குமார் னு இருக்கே அது நானா..?#சந்தேகம்
நீங்கதான் தலைவரே
//லென் தியான முன்னுரை..
இன்னும் ரொம்ப எழுதலாமேண்ணு யோசிச்சேன் ... ரொம்ப நீளமாகிடுமெண்ணு விட்டுட்டேன்
//ஆனா படிக்க தூண்டுது... நல்ல தொகுப்பு
நன்றி நண்பா
//ஆனா படிக்க தூண்டுது... நல்ல தொகுப்பு
நன்றி தல
உங்கள் ரசனை எல்லாமே சூப்பராக உள்ளது!
ரொம்ப ரசிச்சி பதிவு பண்ணீருக்கீங்க..அருமை..
என்ன தல என்ன இப்படி சொல்லாம கொல்லாம் கோத்து விட்டுடீங்க..ரைட்டு...
தொடர்ந்திருவோம்..கொஞ்சம் டைம் குடுங்க பாஸ்..நிறைய ஆனி இருக்கு..
நல்ல தேர்வு நீங்கள் கூறியதில் எனக்கு மிகவும் பிடித்தது மூன்றாம் பிறை :குணா :சதிலீலாவதி, அபூர்வ சகோதர்கள்,இந்தியன்,அன்பே சிவம்
பம்மல் கே சம்பந்தம், இவைகள் எல்லாம் பிடித்த படம்
ஒன்று மட்டும் உறுதி கமலை இன்று சிலர் புறக்கணித்தாலும், சினிமா என்னும் கலை அழிந்த பின்னும் அடுத்து வரும் தலைமுறையினர் அதை மரியாதையோடு பார்ப்பார்கள்//
உண்மைதான்..அவர் வாழும் வரலாறு
//உங்கள் ரசனை எல்லாமே சூப்பராக உள்ளது!
நன்றி தல
//தொடர்ந்திருவோம்..கொஞ்சம் டைம் குடுங்க பாஸ்..நிறைய ஆனி இருக்கு..
அவசரம் இல்லை நண்பா .. நேரம் கிடைக்கும்போது தொடருங்கள்
//நல்ல தேர்வு நீங்கள் கூறியதில் எனக்கு மிகவும் பிடித்தது மூன்றாம் பிறை :குணா :சதிலீலாவதி, அபூர்வ சகோதர்கள்,இந்தியன்,அன்பே சிவம்
பம்மல் கே சம்பந்தம், இவைகள் எல்லாம் பிடித்த படம்
நன்றி நண்பரே ... எனக்கு கமல் படங்களில் ரொம்ப பிடித்தது மூன்றாம் பிறைதான்.... கமல் மட்டும் இல்லை ஸ்ரீதேவியும் அதில் கலக்கி இருப்பார் ...
//உண்மைதான்..அவர் வாழும் வரலாறு
வாழும் போதும் வரலாறுதான் .. வாழ்ந்து முடித்த பின்னும் அவர் வரலாறாய் இருக்க போகிறவர்தான் ...
காரணம் தமிழ் சினிமாவில் மக்கள் ரசனையை மாற்ற அவர் காட்டும் அக்கறை ... மிஸ்கினின் நந்தலாலாவிர்க்காய் குரல் கொடுத்த ஒரே முன்னணி நடிகன் ... மற்ற நடிகர்கள் எல்லாம் இப்படிப்பட்ட படங்கள் மக்கள் ரசிக்க ஆரம்பித்து விட்டால் தங்கள் பிழைப்பில் மண் விழுந்து விடும் என்பதற்காய் படத்தை பற்றி எதுவும் சொல்ல பயபடுகிறார்கள் என்று எண்ணுகிறேன் ...
ரொம்ப ரசிச்சி எழுதி, ரொம்ப ரசிச்சி
படிக்க வச்சிட்டீங்கள்! அருமை!
சதிலீலாவதி, பம்மல் கே.சம்மந்தம்
இரு நகைச்சுவைப் படங்கள் பற்றி
சொன்னீர்கள். 'மகராசன்' என்ற படம்
பார்த்திருந்தால் அதைப் பற்றியும்
சொல்லுங்களேன்.
கமல் பாடிய பாடல்:
http://kalaiyanban.blogspot.com/2010/11/raasaathi.html
@ கலையன்பன்
நன்றி நண்பா... மகாராசன் படம் இன்னும் பார்த்ததில்லை ... நிறைய பேர் சொல்லுகிறீர்கள் அந்த படம் பற்றி ... பார்க்க வேண்டும்
எனது வலைப்பூவில் வந்து...
என்னைத் தொடர இணைத்துக்
கொண்டதற்கு மிக்க நன்றி,
நண்பரே!
Post a Comment