ஒரு படம் எடுக்கணும்னா அதுக்கு நிறைய கற்பனை பண்ண தெரிஞ்சிருக்கணும் , , எந்த ஒரு நிகழ்வையும் ஒரு வித்தியாசமான பார்வையில் பார்க்க தெரிந்திருக்க வேண்டும் ... கதை எழுத தெரியனும் ... எழுதுன கதைய விறுவிறுப்பா எடுக்க தெரியனும் .. இப்படியெல்லாம் நெறைய தெரியனும் ... wait please நான் சொல்றது அந்த காலம் .. ஆனா இன்னைக்கு படம் எடுக்கிறதுங்கிரது அதுவும் தமிழ் படம் எடுக்கிறதுங்கிரது ரொம்ப ஈசியான வேல ..
நீங்க படம் எடுக்க ஆசைபடுகிறீர்களா? கீழ படிங்க... உங்களுக்காகத்தான் இந்த பதிவு...
ஏதாவது ஒரு வெளிநாட்டு படம் ஒன்றை திரும்ப திரும்ப பார்க்க வேண்டும் (அந்த படம் புரியிர வரைக்கும் )... அது எந்த ஊர் படமா இருந்தாலும் சரி .... ஆனால் முக்கியமான விஷயம் அந்த படம் நம்ம ஊரில் ரிலீஸ் ஆகி இருக்க கூடாது... அந்த படத்தோட மெயின் கதையை அப்படியே எடுத்துக்கொங்க... (உதாரணமா ஹீரோ ரோபோ செய்யுறான் ... அதுக்கு உணர்ச்சிகளை உருவாக்குகிறான் , அது அவனுக்கு துரோகம் செய்கிறது ... இதுதான் மெயின் கதை) அதுல நம்ம ஊரு கலாச்சாரத்த மிக்ஸ் பண்ணுங்க (கள்ளக்காதல் , கடத்தல் , கட்டாய கல்யாணம் , இப்படி ஏதாவது உங்க கதைக்கு ஏத்தமாதிரி ).... நல்ல ம்யூசிக் டைரக்டர் வச்சி ரெண்டு மெலடி (அதுவும் ஏதாவது ஒரு வெளிநாட்டு ஆல்பத்துல இருந்து சுட்டா போதும்), ரெண்டு குத்து பாட்டு, ஒரு ஹீரோ இண்ட்ரோடக்சன் பாட்டு , கதாநாயகிக்கு கிலுகிலுப்பா ரெண்டு மூணு சீன்(முடிந்தால் ஒரு ரேப் சீன்) , ஹீரோவுக்கு ரெண்டு மூணு சண்டை .... அவ்ளோதான் உங்க படம் சூப்பேர் டூப்பேர் ஹிட் .... நீங்களும் பெரிய டைரக்டர் ஆகி டிவியில தமிழ் நாட்டுக்கு ஆஸ்கார் வாங்கி தருவதுதான் என்னோட லட்சியம் அப்படின்னு உளறிக்கிட்டு இருக்கலாம் ... நாங்களும் உங்க படத்த பாத்திட்டு உங்கள ஏதோ பெரிய திறமைசாலி , கண்டிப்பா நம்ம சினிமாவுக்கு ஒரு ஆஸ்கார் வாங்கி கொடுத்திடுவாறுண்ணு நம்பிக்கிட்டு இருப்போம்... நீங்க உங்க அடுத்த படத்துக்கு நல்ல கதைய டிவிடில தேடிக்கிட்டு இருக்கலாம்.... கதை எதுவும் கிடைக்காத வரைக்கும் என்னோட அடுத்த படம் நம்ம தமிழ் சினிமாவை உலக அளவில எடுத்திட்டு போக போற படமா இருக்கணும் ..கதைக்காகவே குறைந்தது 3 வருசமாவது நான் யோசிக்கணும் அப்படின்னு ரீல் வீட்டுக்கிட்டு திரியலாம்... அப்படி ஏதாவது ஒரு கதை எவனாவது எடுத்து வச்சிருந்தான்னா அத அப்படியே திருடி இது என்னோட நாலு வருட உழைப்பு , என்னோட கனவு படம் இது அப்படின்னு கலர் கலரா ரீல் விட்டு உங்க படத்துக்கு டெம்ப்ட் ஏத்தலாம்... நாங்களும் உங்க வாந்திய பாத்திட்டு அது அடுத்தவன் எடுத்த வாந்திய அள்ளி குடிச்சி நீங்க எடுத்த வாந்திண்ணு தெரியாமலே என்னமா வாந்தி எடுத்திருக்கான் பாருயா ... இவன தவிர வேற யாராளையும் இப்படி வாந்தி எடுக்க முடியாதுயா? அப்படின்னு உங்களுக்கு முதுகு சொறிஞ்சி விடுவோம்.. நீங்களும் அடுத்த வாந்திய எங்க யாருகிட இருந்து அள்ளி குடிக்கலாம்னு தேட போய்டலாம்
நான் மேலே சொன்னது எல்லாம் நூத்துக்கு நூறு உண்மை... நீங்க இன்னும் நான் சொன்னத நம்பவில்லை என்றால் கடந்த பத்து பதினைந்து வருடங்களில் வந்த படங்களில் உங்களுக்கு மிகவும் பிடித்த படங்களை மனதில் நினைத்து கொள்ளுங்கள்... இப்ப கீழ இருக்கிற படங்களை எல்லாம் பாருங்கள் நான் சொன்னது உண்மையா இல்லையாண்ணு உங்களுக்கு புரியும் ....
முதலில் கமல் & கே.எஸ்.ரவிக்குமார்
ORIGINAL
ORIGINAL
ORIGINAL
வாந்தி
கமல் k.s.ரவிக்குமார் இல்லாமல்
ORIGINAL
வாந்தி
ORIGINAL
வாந்தி
ORIGINAL
வாந்தி
கமல் மட்டுந்தான் இந்த வேலைய பாக்குறாரா? நம்ம சூப்பேர் ஸ்டார் எடுக்கிறது எல்லாம் அக்மார்க் அவர் சொந்த வாந்திதானா என்ன? அவரும் அடுத்தவன் வாந்திய அள்ளி குடிச்சிருக்காரு
original
வாந்தி
original
வாந்தி
அடுத்து நம்ம இயக்குனர் மணிரத்னம் ...
original
வாந்தி
original
வாந்தி
original
வாந்தி
இவர பார்த்து இவர மாதிரியே வசனம் எழுதி , இவர மாதிர்யே புரியாம படம் எடுத்து தன்னை அறிவு ஜீவியாக காட்ட நினைக்கும் ஒரு இயக்குனர் .. பாவம் இவரும் காப்பிதான்...
original
வாந்தி
original
வாந்தி
நான் பார்த்ததிலேயே மகா மட்டமான அப்பட்டமான காப்பி இது ... (போக்கிரி , சந்தோஷ் சுப்ரமணியம் போன்ற படங்கள் கணக்கில் சேராது , அது காப்பி என்று சொல்லியே எடுக்கப்பட்ட படங்கள் )
original
வாந்தி
இந்த படம் எப்படிப்பட்ட அப்பட்டமான காப்பி என்பதை தெரிந்துகொள்ள அந்த படங்களை பார்க்க வேண்டிய தேவை இல்லை .. கீழே இருக்கும் விக்கிபீடியா லிங்கிற்கு சென்று ரெண்டு படங்களின் plot படித்து பாருங்கள் ...
original
வாந்தி
original
வாந்தி
original
வாந்தி
original
வாந்தி
original
வாந்தி
(ஆனால் இந்த படத்தை எடுக்கும் பொழுதே முருகதாஸ் இது மெமண்டோ படத்தின் தழுவல்தான் என்று சொல்லிவிட்டுதான் எடுத்தார் ... )
இப்படி தமிழ் சினிமாவின் அடையாளங்களாய் நாம் நினைத்து கொண்டு இருக்கும் பெரும்பாலான படங்கள் எல்லாமும் வேற்று மொழி படங்களின் அப்பட்டமான காப்பியாகவே இருக்கின்றன ... காப்பி அடித்தாவது அவர்கள் நமக்கு நல்ல படங்கள் எடுத்து காட்டுகிறார்களே என்று நீங்கள் கேட்டால் , உண்மைதான் காப்பி அடிப்பதன் மூலம் நமக்கு நல்ல படங்கள் கிடைக்கின்றனதான் , ஆனால் அதை என்னவோ தான்தான் சுயமாக எடுத்தேன் , என்னை போன்ற படைப்பாளிகள் இந்த உலகிலேயே யாரும் இல்லை என்று அவர்கள் அடிக்கும் சுய தம்படம்தான் கொஞ்சம் ஓவராக இருக்கிறது ...
இந்த படங்களை தவிர்த்து கடந்த பதினைந்து வருடங்களில் தமிழ் சினிமாவில் வந்த மிக சிறந்த சுயமாக சிந்திக்கப்பட்டு எடுக்க பட்ட படங்கள் (என்னுடைய பார்வையில்) கீழே இருக்கும் இந்த படங்கள்தான் ... (சில படங்கள் மறதியின் காரணாமாக விட்டு போய் இருந்திருக்கலாம்)
1. பருத்தி வீரன்
2. சேது
3. சுப்ரமணியபுரம்
4. வாலி
5. சாமி
6. மொழி
7. அழகிய தீயே
8. அழகி
9. தவமாய் தவமிருந்து
10. காதல்
நான் இந்த படங்களை மட்டும் குறிப்பிட்டு சொல்ல காரணம் நான் மேலே சொன்ன படங்கள் எல்லாமும் ஏதோ ஒரு வகையில் தமிழ் சினிமாவில் பெரிய தாக்கத்தை உண்டு பண்ணிய தமிழ் சினிமாவின் போக்கை மாற்றிய படங்களாக இருக்கும் ... அதே போல் கதையிலேயோ இல்லை அதை திரையில் கொண்டு வந்த விதத்திலேயோ நம் மனதை முழுமையாக ஆக்கிரமித்த படங்களாக இருக்கும்...
(இந்த பதிவில் நான் சொல்லி இருக்கும் தமிழ் படங்கள் மற்றும் அதன் ஆங்கில படங்கள் பற்றிய விபரம் எல்லாம் எனக்கு மெயிலில் வந்தது ... பிடித்திருந்ததால் பதிவிடுகிறேன்)
13 comments:
அழகிய தமிழ் மகன், குருவி, சுறா ஆகிய படங்களை விட்டு விட்டீர்களே...
இதை வன்மையாக கண்டிக்கிறேன்.
very good article........nice
தல,இந்த காப்பி அடிச்சிட்டு படம் எடுத்துட்டு பெரிய மேதாவி மாதிரி பேசுற பன்னாடைங்கள கூட கண்டுக்காம இருந்துடலாம்.ஆனா இதுங்களுக்கு வேற வேலையே இல்லாம குருட்டுத்தனமா சப்போர்ட் பண்ணுதுங்க பாருங்க...
அதுங்கள போட்டுத் தள்ளனும்.இவனுக காப்பி அடிச்சிட்டு எகத்தாளமா சுத்த இந்த சப்போர்ட் பண்ற பீசுங்க பாதி காரணம்.
சூப்பர்... எனக்கும் அதே மெயில் வந்திருந்தது... ஆனால் நீங்கள் மேலும் சில படங்களை குறிப்பிட்டிருந்தீர்கள்... நன்றி...
அதெப்படீங்க, இவ்வளவு பெரிய ஆராய்ச்சி பண்ணீருக்கீங்க, நெஜமாவே பாராட்டறனுங்க
வந்தியக்கூட தமிழ்நாட்டு மசாலாக்களை சேர்த்து புதுசுமாதிரி விருந்து வச்சுட்டாங்களே இந்த பயபுள்ளைக....
@ bala
தல இந்த பதிவு தமிழ் சினிமாவின் வாந்திகளை பற்றி .. நீங்க சொன்ன படங்கள் எல்லாம் தமிழ் சினிமாவின் பேதிகள் ..
@ NKS.KAJA MYDEEN
நன்றி தல
@ ILLUMINATTI
உண்மைதான் தல .. நானே முன்பு கமலை பற்றி சொல்லும் போது ஏற்றுக்கொள்ளுவதில்லை .... என்ன பண்ண அவர்களுக்கு பிடித்த நடிகனின் படங்களை காப்பி என்று சொன்னால் ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள் ... இந்த விஷயத்தில் நாம் சொந்த விருப்பு வெறுப்புகளை உதறிவிட்டு பார்த்தால் உண்மை புரியும் .... ஆனால் ஒன்று தமிழ் சினிமா இருக்கும் வரைக்கும் இந்த காப்பி என்ற விஷயம் இருந்து கொண்டேதான் இருக்கும் ... இன்னும் கொஞ்ச நாளில் inception அப்படியே தமிழில் எடுக்க பட்டு இருக்கும் ... நம் மக்களும் பத்திரிக்கைகளும் அந்த இயக்குனரை பெரிய அறிவாளி என்று பெருமை பேசி கொண்டு இருப்பார்கள் ... எனக்கு இந்த விஷயத்தில் நம்ம ஊர் பத்திர்க்கைகள் மேல்தான் கோபம் ... நமக்கே இவ்வளவு தெரியும் போது அவர்களுக்கு அந்த படங்கள் வரும் பொழுதே இது காப்பி என்பது கண்டிப்பாக தெரிந்திருக்கும் .. அப்படி இருந்தும் அவர்கள் இதை பற்றி எப்போலுதும் எலுதுவதே இல்லையே ... அவர்கள் நினைத்தால் இந்த உண்மையை பெரும்பான்மையான மக்களுக்கு புரிய வைக்கலாம் ...
@ DrkandaswamyPhd
நன்றி ஐய்யா
@ philosophy prabakaran
நன்றி நண்பா
@ ரஹீம் கஸாலி
ஆமா தல நானும் எல்லாம் நம்ம பசங்களோட சொந்த சரக்குன்னு நெனச்சி ஆரம்பத்துல ஏமாந்துட்டேன்
உங்களது சிறந்த படங்கள் பட்டியலில், விருமாண்டி மற்றும் ஹேராம் இல்லாதது, ஒரு சின்ன வருத்தம்...
Post a Comment