Followers

Copyright

QRCode

Tuesday, November 2, 2010

சுறாவும் பாட்ஷாவும் பின்னே நானும்....







வருடம் 1996, பாட்சா என்ற மாபெரும் வெற்றி பெற்ற திரைபடத்தின் வெள்ளி விழா ... தமிழ் நாட்டின் ஒரே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசுகிறார் ... வரிக்கு வரி அனல் பறக்கிறது , அன்றைக்கு தமிழகத்தை ஆண்டு கொண்டு இருந்த ஜெயலலிதாவிர்க்கு சவால் விடும் பேச்சு அது ... காரணம் அந்த காலகட்டத்தில் தமிழகம் எங்கும் நடந்து  கொண்டு இருந்த குண்டு வெடிப்பு சம்பவங்கள்... இவர் ஆட்சிக்கு வந்தால் ஆண்டவனால்கூட தமிழகத்தை காப்பாற்ற முடியாது என்று பயப்படாமல் நேருக்கு நேராய் ஜெயலலிதாவை எதிர்த்து பேசினார் .. அந்த பேச்சில் ஒரு உண்மை இருந்தது , தமிழ்நாட்டின் மேலும் தமிழ் மக்கள் மேலும் அவருக்கு இருந்த ஒரு அக்கறை தெரிந்தது , குறிப்பாய் சுயநலம் இல்லாத பொதுநலம் அந்த பேச்சில் தெரிந்தது ... அந்த பேச்சை தொடர்ந்து தமிழகத்தில் பெரும்பான்மையான மக்களின் மனதில் ஒரு மாற்றம் ... அந்த மாற்றம் அடுத்த தேர்தலில் எதிரொலித்தது .. ஜெயலலிதா மக்களால் தோற்கடிக்கபட்டார் ... அதுவும் படுபயங்கரமான தோல்வி ... எப்படி  என்றால் அவரால் கூட  பர்கூர் தொகுதியில் ஜெயிக்க முடியவில்லை ... அவரின் இந்த அதல பாதாள வீழ்ச்சிக்கு ரஜினியின் அந்த பேச்சும்  மிக பெரிய காரணம் ... ஆனால் ரஜினி தனக்கு இருக்கும் இந்த மாஸை பயன்படுத்தி   அரசியலில் இறங்கி முதல்வர் பதிவியை பிடிக்க வேண்டும் என்று ஆசைபடவில்லை  .... அன்றய சூழ்நிலையில் அவர் நினைத்திருந்தாள் ஒரு கட்சி ஆரம்பித்து இன்றைக்கு தமிழக  அரசியலில்  ஒரு அசைக்க முடியாத சக்தியாக ஏன் தமிழகத்தை ஆளும் சக்தியாக கூட இருந்திருக்கலாம்.... ஆனால் சுயநலத்திர்க்காக அரசியலில் இறங்குபவர் இல்லை அவர் என்பதை  அழுத்தமாக் நிரூபித்தார் ....தன் சக்தியை கொண்டு வேறு ஒருவரை ஜெயிக்க வைத்தார் (பின்னாளில் அதுவே அவருக்கு ஆப்பாக அமைந்தது வேறு கதை... இந்த பதிவுக்கு சம்பந்தம் இல்லாதது என்பதால் அதை பற்றி எழுதவில்லை  )...   

ஆனால் இன்று ஒரு சில நடிகன்கள் அடிக்கிற கூத்துகளை பார்க்கும்  பொழுது கடவுள் ரஜினியை மட்டும் ஏன் அவ்வளவு பெரிய உயரத்தில் அமர வைத்தான் என்பது நமக்கு விளங்கும் .. அவர் அதை ஒரு போதும் தவறாக உபயோகிக்க மாட்டார் என்று தெரிந்துதான்  இவ்வளவு பெரிய மக்கள் சக்தியை அவர் பின்னாளில் வர வைத்தான் போல ...  அவருக்கு இருக்கும் புகழில் கால் தூசி கூட இல்லாத இருவரை  பற்றிய பதிவுதான் இது ...

முதலில் விஜயகாந்த் இன்று தமிழக அரசியலில் இருக்கும் ஒரு விஷ கிருமி... ரசிக படையை வைத்து சினிமாவில் சம்பாதிப்பதை விட அரசியலில் பல மடங்கு அதிகம் பணம் சம்பாதிக்க முடியும் என்று வெளிச்சம் போட்டு காட்டியவர் இவர் ....  தோட்டத்தில் இருக்கும் களை செடி  அவர் கட்சி ... தானும் வாளராது அடுத்தவனையும் வளர விடாது ...  கலைஞர்  காசு தருகிறார் என்பதற்காய் தனித்து நிர்க்கிறேன் என்று அம்மாவிர்க்கு விழும் ஓட்டுகளை பிரித்து கொண்டு இருக்கிறார் ... போன நாடாளுமன்ற தேர்தலிலேயே எந்திரன் பட்ஜெட்டை விட ரெண்டு மடங்கு  அதிகமான பணம் அவருக்கு கொடுக்கபட்டதாக பேச்சு... இந்த முறை ரெண்டு பெரிய தலைகளிடமும் மாறி மாறி பேரம் பேசி வருகிறாராம் ... யார் அதிகமாக கல்லாவை நிரப்புகிறார்களோ அவர்களுக்கு சாதகமாக முடிவு எடுக்க போகிறாராம் ... அய்யா கொடுத்தால்  வழக்கம் போல தனித்து நிற்பது ... அம்மா கொடுத்தால் அவருடன் கூட்டணி என்பது முடிவாம் .. ஆக மொத்தம் மக்களுக்கோ  இல்லை அவரின் ரசிகர்களுக்கோ நல்லது செய்ய வேண்டும் என்று அவர் கட்சி ஆரம்பிக்கவில்லை, எல்லாம் டப்புக்காக மட்டும்தான் ...  ரஜினியின் மாஸில் கால்வாசிக்கூட இல்லாத இவரே இவ்வளவு சம்பாதிக்கும் பொழுது ரஜினி நினைத்தால் தமிழ்நாட்டையே எழுதி வாங்கலாம்,,,

இவர விடுங்க அடுத்தவர் ,,, தொடர்ந்து ஆறு அடிவாங்கின படங்களை கொடுத்து,,, அவர் ரசிகர்களே கண்டுகொள்ளாமல் இருக்கும் காவலன் என்னும் படத்தில் நடித்து கொண்டு ,,, கூடிய விரைவில் காணாமல் போனவர்கள் லிஸ்டில் சேரும் அபாயம் நிறைந்த ஒரு ஜீவன்,,,, தளபதி என்று அவருக்கு அவரே பெயர் சூட்டி கொண்டு அந்த வார்த்தையவே அசிங்கபடுத்திய விஜய. காவலன் சூட்டிங்க்ல ஒரு பேட்டி கொடுத்திருக்காராம்.. “கோவையில் சிறு குழந்தையை கடத்தி கொன்றவர்கள் தண்டிக்கபட  வேண்டியவர்கள் ... தமிழகம் முழுவதும்  இப்படிப்பட்ட செயல்கள் நடந்து கொண்டு இருப்பது வருத்தம் அளிக்கிறது...தமிழகம் இப்பொழுது எங்கே சென்று  கொண்டு இருக்கிறது என்று தெரியவில்லை அப்படின்னு ரொம்ப அக்கறையா ஒரு பேட்டி .... தமிழ்நாட்டு மேல யாரு அக்கறைபடுராங்கண்ணு பாத்தீங்களா? ஆரம்ப காலத்தில எப்படியாவது தமிழ் சினிமாவில் கொஞ்சம் கூட நடிப்பு வராத தானும் சின்னதா ஒரு இடத்த பிடிச்சிரனும்னு சங்கவியையும், சுவாதியையும் வச்சி பலான படமா தன்னோட அப்பாவ வச்சி எடுத்து டெவளப் ஆன ஒரு நடிகன்.. இவ்வளவு கஷ்டபட்டு மாமியார் முதுகுக்கு  சோப்பெல்லாம் போட்டு அவர் நடிகனா டெவளப் ஆனது எதுக்கு பின்னால கட்சி ஆரம்பிச்சி மக்களுக்கு நல்லது செய்யவா? இல்ல தமிழ் சினிமாவை ஆஸ்கார்  உயரத்திர்க்கு  கொண்டு போகவா? டப்புக்காக மட்டும்தான்... சினிமா ஒரு தொழில் அதில் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் படம் எடுத்து சம்பாதிக்கலாம் ... ஆனால் அடுத்த கட்டமாக கட்சி என்று அவர்கள் இறங்கும் பொழுதுதான்  நம் அடிமனதில் கோபம் கரை புரண்டு ஓடுகிறது... நாட்டுல எவ்வளவோ நல்லவனுக எல்லாம் அமைதியா இருக்கும் போது , இவரு ஏன் இப்படி தமிழ் நாட்டு மக்களை நினைத்து நீலி கண்ணீர் விடுகிறார் என்று தெரியவில்லை? இவர் கொடுத்த இந்த பேட்டியை பாத்தா ஒரு சின்ன கொழந்தகூட சரியா சொல்லிடும் எலி அம்மணமா ஆடுறது  விஜயகாந்த் மாதிரி அரசியலில் இறங்கி காசு பார்க்கத்தான் என்று .... நல்ல வேலை இன்றய இளைங்கர்கள் கொஞ்சம் உஷார் ... அதனாலத்தான் எஸ்எம்எஸ் . இ – மெயில் என்று இவரை கிழி கிழி என்று கிழித்து இவர ஒரு காமெடி பீஷா மாத்திட்டாணுக்க... ஆனால் இன்னமும் மனசுக்குள் தன்னை ஒரு ரஜினியாக நினைத்து கொண்டு இவர் பண்ணுகிற கூத்துகளை பார்க்கும் பொழுது ஒருபுறம் சிரிப்பாக இருந்தாலும் இன்னொரு பக்கம் கடுப்பாக இருக்கிறது .. ரஜினி பேசுவதர்க்கு ஒரு மதிப்பு இங்கு மக்கள் தருகிறார்கள் என்றால் காரணம் அதில் எப்பொழுதும் சுயநலம் இருக்காது , அப்படிப்பட்ட அவரே ஒரு முறை ராமதாஸை பழி தீர்க்க ரெட்டை இலைக்கு ஓட்டு கேட்டு மூக்குடைபட்டார்... ஆனால் தன் ஒவ்வொரு செயலிலும் சுயநலமாகவே செயல்படும் விஜய் இன்னமும் இப்படி உதார் விட்டு கொண்டு இருப்பது பார்பதர்க்கு காமெடியாக இருக்கிறது...

யார் இதை எல்லாம் சீரியஸாக எடுத்து கொள்ளுவார்கள் என்று அவர் எதிர்பார்க்கிறார்... அவரும் அவர் அப்பாவும் வேண்டுமானால் இவரின் இந்த பேட்டியை பெரிய விஷயமாக நினைக்கலாம் .. மற்றபடி யாரும் இவரின் இது போன்ற செயல்களை பெரியதாய் எடுத்து கொள்ளுவதே இல்லை .. இதை எழுதும் என்னை போன்ற ஒன்றிரண்டு பேரும் அவரை நக்கல் அடித்துதான் எழுதுகிறார்கள்..  மக்கள் ஒண்ணும் ஏமாளிகள் இல்லை ... இப்படி அதிகமா ஆசபட்டு பின்னாடி ஆப்பு வாங்குறதுக்கு பதிலா   போயி உருப்படியா நல்ல கதையா செலக்ட் பண்ணி நடிங்க ... அதிலயாவது நாலு காசு பாக்குறீங்க அதிகமா ஆசபட்டு இதையும் விட்டுடாதீங்க....

(, படிப்பு , சமூக தொண்டு இப்படி எந்த தகுதியும் இல்லாமல் சினிமாவின் மூலம் ஏமாற்றி மக்கள் மனதில் புகுந்து பஞ்ச் டயலாக் பேசி அது மூலமா ஒரு கூட்டம் தனக்கு பின்னாடி வந்தவுடனே பெரிய அப்பாடக்கரை போல (நன்றி சந்தானம் )  வாய்க்கு வந்தபடி பேசும் இவரை போன்ற நடிகர்களை பார்க்கும் பொழுது எனக்கு எப்பவும் ஒரு காண்டு வரும் .. இன்று தினமலரில் இவரின் இந்த பேட்டியை பார்த்த பொழுதும பயங்கர கோபம் வந்தது அதனால் தான் இந்த பதிவு) 

9 comments:

Philosophy Prabhakaran said...

ஆட்சியில் அமர்கிற தகுதி விஜய்க்கு மட்டுமல்ல... ரஜினிக்கும் கிடையாது...

DHANS said...

ஆட்சியில் அமர்கிற தகுதி விஜய்க்கு மட்டுமல்ல... ரஜினிக்கும் கிடையாது...//

ithai naan valimoligiren

"ராஜா" said...

@ philosophy prabakaran

உண்மைதான் ... அதை பற்றி தனியாக ஒரு பதிவே போடலாம் ...

@ dhans

நன்றி தல

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

அவர் அரசியலுக்கு வரமாட்டார். எந்திரன் கொடுத்த மாஸ் புகழை மனதிலிருந்து கரைக்க,.. இமயம் சென்றுவிட்டார்,.

விஜய் போன்ற துச்சா பசங்களைப் பத்தி பேசும் போது "பெரியதலை"யைப் பேசி அவரை அசிங்கப்படுத்தாதீங்க.

கும்பகோணத்தில் நடந்த தீவிபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றொர்களுக்கும் , உறவுகளுக்கும் அத செஞ்சு தாரேன், இத செஞ்சு தாரேன்னு உதார் உட்டுட்டு அப்புறம் காணமப்போனவங்கதான் இந்த விஜய்யும், விஜய காந்தும் அத பத்தி சிந்திங்க பாஸ்.

கட்டுரை அருமை.

NKS.ஹாஜா மைதீன் said...

its 100% true.....good one.....

"ராஜா" said...

//கும்பகோணத்தில் நடந்த தீவிபத்தில் இறந்த குழந்தைகளின் பெற்றொர்களுக்கும் , உறவுகளுக்கும் அத செஞ்சு தாரேன், இத செஞ்சு தாரேன்னு உதார் உட்டுட்டு அப்புறம் காணமப்போனவங்கதான் இந்த விஜய்யும், விஜய காந்தும் அத பத்தி சிந்திங்க பாஸ்.

இதுவேற நடந்துச்சா? பப்ளிசிட்டி தேடுவதற்கு எதை எல்லாம் பயன்படுத்தி கொள்கிறார்கள்,, சுனாமி வந்த பொழுது கடற்கரையில் குவிந்து கிடந்த பிணங்களின் கழுத்தில்,,, கையில் கிடந்த நகைகளை களவாடி சென்றவர்களுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமே இல்லை ...

"ராஜா" said...

//its 100% true.....good one.....

நன்றி தல கருத்துக்கும் வருகைக்கும்

பெண்மணி said...

விஜய் பல ஏழை குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுகொண்டு செய்து வருவதாக கேள்விபட்டிருக்கிறேன். நீர் அப்படியேதும் சமுக சேவை செய்கிறீரா இல்லை இப்படிமக்களுக்கு தேவயில்லாத பதிவுகள் எழுதுவதோடு சரியா.

"ராஜா" said...

// விஜய் பல ஏழை குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றுகொண்டு செய்து வருவதாக கேள்விபட்டிருக்கிறேன்.

நல்லா விசாரிச்சி பாருங்க அதெல்லாம் அவரோட கொழந்தைகளா இருக்க போவுது...

//இப்படிமக்களுக்கு தேவயில்லாத பதிவுகள் எழுதுவதோடு சரியா

ஆமாங்க சரியா சொல்லிட்டீங்க ... இதுவே தண்டமுன்னா இத படிச்சி அதுக்கு பின்னூட்டமும் போடுற நீங்க பண்ணுறது என்னங்கண்ணா?

LinkWithin

Related Posts with Thumbnails