Followers

Copyright

QRCode

Wednesday, October 27, 2010

மங்காத்தா - strictly no rules & strictly for ajith fans...

தலையின் மங்காத்தா ஆட்டம் ஆரம்பம் ஆகி விட்டது ... தல ரசிகர்களின் கொண்டாட்டங்களுக்கு அளவே இல்லை ... பல நாட்களாக pre productionஇல் இருந்த இந்த படம் ஒருவழியாக ஆரம்பம் ஆகி விட்டது .. மிக நீண்ட எதிர்பார்பிற்கு பின்னர் , பக்காவாக ஸ்கிரிப்ட் உள்பட அனைத்தும் தயார் செய்து களத்தில் இறங்கி விட்டனர் தலையும் , அவர் இந்த முறை நம்பி பொறுப்பை கொடுத்து  இருக்கும் வெங்கட்டும் ... படத்தின் தயாரிப்பாளர் தயாநிதி படத்தை பற்றிய மிக பெரிய சந்தோசத்தில் இருக்கிறாராம் .. இருக்காதா தலையின் அம்பதாவது படமல்லவா? இப்பொழுதே படத்தின் promotion வேலைகளுக்கு என்ன செய்யலாம் என்பதை பற்றிய ஆலோசனைகளில் இருக்கிறாராம் .. கண்டிப்பாக எந்த தல படத்திற்கும் இல்லாத விளம்பரம் இந்த படத்திற்கு உண்டு ...இதுவே தல ரசிகர்களுக்கு பெரிய கொண்டாட்டம்தான்...


வெங்கட்டை பொறுத்த வரை முதல் முறையாக  பெரிய நடிகரை வைத்து இயக்குகிறார்... அவரிடம் என்னை போன்ற தல ரசிகர்கள் கேட்டு கொள்வது எல்லாம் எப்படியாவது நல்ல ஹாலிவுட் படத்தை காப்பி அடித்தாவது படத்தை ஹிட் ஆக்கி விடுங்கள் என்பதுதான் ... ஊரே அந்த வேலையை பார்த்து கொண்டு இருக்கும் பொழுது  தலையும் அதே வழியில் செல்வது ஒன்றும் பெரிய குற்றம் ஆகி விடாது ... ஏகன் முதல்பாதியில் வரும் அஜித்தை என்னை போன்ற தல ரசிகர்கள் அனைவரும் ரசித்தார்கள் ... அந்த படம் ராஜூ சுந்தரத்தின் அரைகுறை இயக்கத்தினால் இரண்டாம் பாதியில் இழுவையாக இருந்தது .. வெங்கட் படம் முழுவதும் அந்த ஏகன் முதல் பாதி தலையை ஸ்க்ரீனில் கொண்டு வர வேண்டும் என்பது என்னுடைய விருப்பம் ...   

தல சும்மாவே அழகு .. இந்த படத்திற்காக இன்னும் கொஞ்சம் உடம்பை குறைத்து படு ஸ்மார்ட்டாக இருக்கிறாராம் ... தலைய ஸ்க்ரீன்ல பார்க்க வேண்டும் என்ற ஆவல் இப்பொழுதே  எனக்கு அதிகமாகி விட்டது .....  அவரோட ஸ்க்ரீன் ப்ரசென்ஷ் ஒன்றே போதும் என்னை பொறுத்தவரை பார்த்து கொண்டே இருப்பேன் ... அந்த வகையில் இந்த படம் அஜித் ரசிகர்களுக்கு நல்ல வேட்டையாக இருக்கும் ... பில்லா படத்தில் இருந்ததை விட ரொம்ப ஸ்மார்ட் அஜித்தை இந்த படத்தில் பார்க்கலாம் என்று வெங்கட் சொல்லி இருக்கிறார் ... அதை விட அதிகம் வேண்டாம் பில்லா அளவுக்கு தலையை அழகாக காட்டினாலே போதும் எங்களுக்கு ... 

இசையை பொறுத்தவரை யுவன் எங்களுக்கு எப்பொழுதும் பெஸ்ட் ... அவர் இசை அமைத்த தல படங்கள் எல்லாமே இசை விருந்துதான் .. தீனா , பில்லா மற்றும் ஏகன் ... இதில் ஏகன் படம் பெரிய அளவில் ஓடவில்லை என்றாலும் பாடல்கள் அனைத்தும் பக்காவாக அமைந்தது... அதே போல் வெங்கட் யுவன் கூட்டணியும் வெற்றி கூட்டணிதான் ... ஜனவரி மாதம் பாடல்களை வெளியிட முடிவு செய்துள்ளார்களாம் ... 

படத்தின் இன்னொரு மாஸ் attraction நாகர்ஜூன்... ரட்சகன் படத்திற்கு பின்னர் அவர் நடிக்கும் நேரடி தமிழ்  படம் ... படத்தில் இவர் இருந்தாலும் தலைதான் மாஸ் கேரக்டரில் வருகிறாராம் ... தல நாகர்ஜூன் கூட்டணி திரையில் என்ன மேஜிக் செய்ய போகிறது என்பதை பார்க்க அடுத்த மே வரைக்கும் தல ரசிகர்கள் காத்திருக்க வேண்டும் .. மே ஒன்னில் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளனராம்... 

மூன்றாவது முறையாக தலையுடன் ஜோடி சேர போகிறார் த்ரிஷா ... இவர் தலையுடன் இதற்க்கு முன் நடித்த இரண்டு படங்களும் வியாபார ரீதியாக பெரிய வெற்றியை பெற வில்லை என்றாலும் தலைக்கு நல்ல பெயரை பெற்று தந்த படங்கள் , அதிலும் இரண்டு படங்களிலும் காதல் காட்சிகள்("ஜி"- அஜித் திரிஷாவை முதல் தடவை  பார்க்கும் அந்த மழை காட்சி , இரண்டாம் பாதியில் கடைசியில் வரும் அந்த கோயில் ஸீன், "கிரீடம்"- இரண்டாம் பாதியில் வரும் தண்ணீர் தொட்டி காட்சி)  சிறப்பாக  அமைந்திருந்தது .. அது இந்த படத்திலும் தொடரும் என்று நம்பலாம் ... அந்த இரண்டு படங்களும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து எடுத்த படங்கள் ... முதல் முறையாக த்ரிஷா பக்கா "தல" படத்தில் அவருடன் ஜோடி சேர்கிறார் ... கண்டிப்பாக இந்த ஜோடி வழக்கம் போல கலக்கும்  ... 

இப்படி எல்லா விதத்திலும் அவர் ரசிகர்களிடம் சகட்டுமேனிக்கு எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வைத்திருக்கிறது இந்த மங்காத்தா ... குறிப்பாக நான் மிக பெரிய எதிர்பார்ப்பில் இருக்கிறேன் ... என் எதிர்பார்ப்பு எப்பொழுதும் வீண் போனதில்லை (ஜனா , ஆஞ்சநேயா , ஆழ்வார் , திருப்பதி என்று ஒரு சில படங்களை தவிர .. ) தல கண்டிப்பாக இதிலும் கலக்குவார் ... இப்பவே பயங்கர த்ரில்லிங்கா இருக்கேன் தலைய ஸ்க்ரீன்ல பாக்க ....

(நான் அஜித் படம் வெற்றி பெற வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் படம் பார்க்க போவதில்லை எனக்கு அஜித்திடம் என்ன பிடிக்குமோ அது படத்தில் இருந்தாலே போதும் ...  படம் வெற்றியும் பெற்றால் எனக்கு டபுள் ட்ரீட்தான்...)

venkat take your own time... but we want a maas masala from our thala ...

and  if you are a true thala fan convey ur best wishes to our thala in this post...

No comments:

LinkWithin

Related Posts with Thumbnails