Followers

Copyright

QRCode

Tuesday, October 5, 2010

தலையின் மங்காத்தா ஆட்டம் ஆரம்பம்...

தல கிளம்பிருச்சி ... என்னை போன்ற தல ரசிகனுக்கெல்லாம் ரொம்ப நாளா இருந்த  ஏக்கம் இன்னும் கொஞ்ச நாளில் தீர போகிறது .. ஆம் தல மங்காத்தா ஆட்டத்தை  ஆரம்பிக்க போகிறார்...  என்னதான் தல கடைசி ரெண்டு படத்துல சொதப்பி இருந்தாலும் இந்த விஷயத்தை கேட்ட வுடனே எனக்கு ஏதோ ஒரு இனம் புரியா சந்தோசம் ... பின்ன இனிமேல் அடிக்கடி புதுசு புதுசா தல போஸ்டர் வெளிய வரும் ... கொஞ்ச நாளில் பாடல் வெளி வந்து விடும் ... அப்பறம் என்ன படம்தான் ... இப்பவே எனக்கு மங்காத்தா படம் எப்படி இருக்கும்னு பாக்க ஆசை இல்லை இல்லை  வெறி வந்து விட்டது ...  இனி ஒவ்வொரு போஸ்டரா வெளிவிட்டு என் எதிர்பார்ப்பை எகிற வைத்து விடுவார்கள் ...  படம் எப்படி இருந்தாலும் என் எதிர்பார்ப்பு வீணாகாது ... ஏன் என்றால் எனக்கு படத்துல தல மட்டும் இருந்தா போதும் ... வேறு எதுவும் தேவை இல்லை ... நான் அப்படிப்பட்ட ஒரு அஜித் வெறியன் ... எங்க கிராமத்தில் முதல் முதலில் அஜித் ரசிகனாக ஆகியது நான்தான் .. இன்று ஒரு பெரிய கூட்டமே அஜித் ரசிகனாக இருக்கிறது .. காரணம் நான்தான் ... அமர்க்களம் வந்த நேரம் அதன் பிறகு ஒவ்வொரு அஜித் படம் வெளி வரும் பொழுது முதல் நாளே  என் காசை செலவு செய்து குறைந்தது நான்கு பேரையாவது படம் பார்க்க கூட்டி செல்லுவேன் ... அதில் இரண்டு பேராவது அஜித்திற்கு வரும் கூட்டத்தை பார்த்து வியந்து அவர் ரசிகனாக மாறி விடுவார்கள் ... இப்படியே ஒன்று இரண்டானது இரண்டு நான்கானது ... நான்கு எட்டாகி இன்று என் கிராமத்தில் இருக்கும் பதினைந்து வயதிற்கு மேற்பட்ட கல்யாணமாகாத பசங்களில் பாதி பேர் தல ரசிகர்கள்தான் ...   தல பிறந்தநாள், இல்லை படம் வெளி வரும் நாளில் எல்லாம் குழாய் செட் கட்டி இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவுக்கு தீவிர ரசிகர்கள் எல்லாம் என்னால் எங்கள் ஊரில் உருவாகி விட்டார்கள் ...   அஜித் என்றால் எங்களுக்கு அப்படி ஒரு கொண்டாட்டம் ... இத ஏன் இப்ப இங்க சொல்லுறன்னு கேக்கிறீங்களா... தலையோட மங்காத்தா official poster வெளி வந்து விட்டது... பாருங்க பாஸ் ஸ்டில்ல .. 


சும்மா நச்சுன்னு இருக்குள்ள... என்னதான் சொல்லுங்க தல தலதான்... தல ரசிகனுக்கெல்லாம் மண்டையில் வெங்காயம்தான் இருக்குன்னு சொன்ன சில பெருங்காயங்கள் எல்லாம் வயிறெரிய போகிற நாள் வெகு தொலைவில் இல்லை ... 

(அப்புறம் இந்த பதிவை படித்து விட்டு நீயெல்லாம் ஒரு மனுசனா? ஒரு நடிகனை இப்படி கண்மூடித்தனமாக ரசிக்கிராயே? அறிவுகெட்ட ஜென்மம் ... உன்னை மாதிரி ஆட்களால்தான் இந்த சமூகம் இப்படி முன்னேறாமல் இருக்கு ... என்று சமூக கண்ணோட்டத்தோடு வரும் பின்னூட்டங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் ..)   


(அதேபோல் மறுபடியும் கன்ன(gun) தூக்கிட்டாரா உங்க ஆளு ... அவருக்கு வேறு எதுவுமே தெரியாதா என்கிற ரீதியில் வரும் பின்னூட்டங்களும் வரவேற்க்கபடுகின்றன )

4 comments:

எஸ்.கே said...

வெங்கட் பிரபுவின் முதல் 2 படங்கள் நன்றாக இருந்தன. கோவா சரியில்லை. இதை நன்றாக எடுப்பார் என நினைக்கிறேன். பார்க்கலாம்!

வினோ said...

நானும் எதிர்பார்க்கிறேன்

Yoganathan.N said...

//ஒவ்வொரு அஜித் படம் வெளி வரும் பொழுது முதல் நாளே என் காசை செலவு செய்து குறைந்தது நான்கு பேரையாவது படம் பார்க்க கூட்டி செல்லுவேன் ... அதில் இரண்டு பேராவது அஜித்திற்கு வரும் கூட்டத்தை பார்த்து வியந்து அவர் ரசிகனாக மாறி விடுவார்கள் ... இப்படியே ஒன்று இரண்டானது இரண்டு நான்கானது ... நான்கு எட்டாகி இன்று என் கிராமத்தில் இருக்கும் பதினைந்து வயதிற்கு மேற்பட்ட கல்யாணமாகாத பசங்களில் பாதி பேர் தல ரசிகர்கள்தான் ...//
நல்ல டெக்னிக். ஹிஹி :)

//தல பிறந்தநாள், இல்லை படம் வெளி வரும் நாளில் எல்லாம் குழாய் செட் கட்டி இனிப்பு வழங்கி கொண்டாடும் அளவுக்கு தீவிர ரசிகர்கள் எல்லாம் என்னால் எங்கள் ஊரில் உருவாகி விட்டார்கள் ... அஜித் என்றால் எங்களுக்கு அப்படி ஒரு கொண்டாட்டம் ... //
சூப்பர். I miss these kind of places here in Malaysia.

Btw, என் பக்கம் கொஞ்ச நாள் ஆலயே காணல... நேரமிருந்தால் வந்துட்டு போங்க. :)

அருண் said...

படம் நல்லாயிருக்கும்னு தோணுது,வெயிட் பண்ணி பார்ப்போம்.

LinkWithin

Related Posts with Thumbnails