Followers

Copyright

QRCode

Saturday, October 2, 2010

எந்திரன் - ரசிகனல்லாதவனின் பார்வை

மக்கா இந்த படத்துல கடைசி இருபது நிமிஷம் சும்மா ரஜினி பட்டைய கெளப்பி இருப்பாரு அப்படின்னு சொன்னா அது ரொம்ப சாதாரண வார்த்தை ... ஒரு சீன ரோபோவோட ரோபோவா கலந்துட்ட வசீகரன ரோபோ ரஜினி கண்டுபிடிக்க ஒவ்வொரு ரோபோவா கத்திய வச்சி தட்டிகிட்டே வருவார் ...ஒரு ரோபோ மேல சந்தேகப்பட்டு அது தலைய வெட்டும்போது  அதோட டாப் கழண்டு  உள்ள இருக்கிற circuit தெரியும் .. அப்ப ஐஸ்வர்யாராய பாத்து சும்மா ஸ்டைலா ரோபோ அப்படின்னு சொல்லுவாரு பாருங்க (அதேதான் டிரைலர்ல  வருமே அந்த வசனம்தான் ) சும்மா தியேட்டர் அதிருச்சி... இப்படி கிளைமாக்ஸ் முழுசா ரஜினி ரஜினி ரஜினி மட்டும்தான் ... மூன்று முகம் நடை ,அதே ஸ்டைல் என்று அசத்தி இருப்பார் ரஜினி ... 

அதே போல் முதல் பாதியில் நல்ல புள்ளையாக அதே ரோபோவில் காமெடியில் பின்னி பெடல் எடுத்திருப்பார்... ஐஸ் பிட் அடிக்க உதவி செய்து பின்னர் அவர் ஆசிரியர்களிடம் அப்பாவியாக அவரை  மாட்டி விடும் சீன  , முதன் முதலில் கோயில் திருவிழாவில் அடிக்க வரும் ரவுடிகள் கையில் இருக்கும் ஆயுதங்கள்  அனைத்தையும் மேக்னட் சக்தி மூலம் தன பக்கம் கவர்ந்து இழுக்கும் காட்சி என்று வெடி சிரிப்பு வர வைக்கும் காட்சிகள் ஏராளம் ... சில காட்சிகளில் டைமிங் காமெடியிலும் அசத்துகிறார்.... படத்தின் ஹீரோ இந்த ரோபோ ரஜினிதான் ... படத்தில் வரும் ஒரே ஒரு பஞ்ச வசனமும் இந்த ரோபோ ரஜினிக்குதான் 

இன்னொரு ரஜினி அடக்கி வாசிக்கிறார் .. படத்தில் அவருக்கு அறிமுக பாடளும் இல்லை சண்டைகாட்சிகளும் இல்லை பஞ்ச வசனமும் இல்லை .. தீவிர ரஜினி ரசிகர்களை இது சற்று ஏமாற்றம் அடைய செய்திருக்கும்... கடைசி சண்டையில்கூட ரோபோவை கணினி தொழில்நுட்பம் கொண்டே வீழ்த்துகிறார் ...     
 படம் முழுவதும் இளமையாக தெரிகிறார் ... சில காட்சிகளில் கமலுடன் போட்டி போடும் இளமை அவர் முகத்தில் ... எல்லா புகழும் சங்கருக்கே...

ஐஸ் அழகு பதுமையாக வந்து போகிறார் ... சில காட்சிகளில் கொள்ளை அழகு சில காட்சிகளில் கிழடு தட்டிய முகம் என்று கலவையாக இருக்கிறார் ... இரும்பிலே ஒரு இருதயம் பாடலில் வரும் இரண்டாவது கெட்டப்பில் அள்ளுகிறார்   ... அதேபோல் பிறந்தநாள் பார்ட்டி காஸ்டியும் அவர் அழகை எடுப்பாக காட்டுகிறது ... ஆனால் படத்தில் இவர் நடிக்க பெரியதாய் ஸ்கோப் இல்லை  .. சிவாஜியில் ஸ்ரேயா பண்ணிய ரோல் அளவுக்குகூட இவர் ரோலில் நடிப்பிற்கான வாய்ப்பு இல்லை.... ஒரு வேளை ரோபோவிற்கு இவர் மேல் காதல் வந்தால் மட்டுமே  கதையின் நம்பகத்தன்மை கூடும் என்ற காரணத்திற்க்காக ஷங்கர் இவரை தேர்வு செய்திருப்பாரோ?

ஹீரோ ரோபோவை ஆண்டி ஹீரோ ரோபோவாக மாற்றுவதோடு முடிந்து விடுகிறது வில்லனின் வேலை... நம் ஊர் வில்லன்கள் யாரும் கண்டிப்பாக இந்த கதாபாத்திரத்தில் நடிக்கம் சம்பாதித்து இருக்க மாட்டார்கள் ... அவ்வளவு வீக்கான வில்லன் ... 

ரகுமான் , சாபு சிறில் , ரத்தினவேலு  இவர்களின் பங்களிப்பு நீங்கள் இந்த படத்தை பார்த்தால்தான் தெரியும் ...கடைசி பதினைந்து நிமிட பிரமாண்டத்திற்கு ரத்தினவேளுவும் ஒரு காரணம் ... மனிதர் மிரட்டி இருப்பார்...

படத்தின் இரண்டாம்பாதியின்   முதல் முக்கால்மணிநேரம் படத்தின் பெரிய மைனஸ்... ஷங்கர் தன hi-tech  செண்டிமெண்ட் காட்சிகளால்  நம் நெஞ்சை ஈரமாக்கி கொண்டே இருப்பார் ... முதல் பாதியில் வரும் பிரசவம் பார்க்கும் ஸீன்., தீபிடிக்கும் கட்டிடத்தில் spider  man போல ரோபோ ரஜினி பறந்து பறந்து மக்களை காப்பாற்றும் காட்சி இரண்டாம் பாதியில் . அந்த கொசு காட்சி ... கலாபவன் மணி வரும் காட்சி என்று நம் பொறுமையை சோதிக்கும் காட்சிகளும் நிறைய உண்டு படத்தில் ...  படத்தின் இறுதியில் ரோபோ ரஜினி திருந்துவது , பின்னர் அதை எல்லார் முன்னிலையிலும் dis assemble செய்வது(மற்ற இரட்டை வேட படங்களில்  ஒரு ஹீரோ சாவதை போல ) என்று புளித்த மாவு காட்சிகளை தவிர்த்திருக்கலாம் ..       

கடைசி இருபது  நிமிடம்  கலக்கல் ...  மொத்த படத்தையும் விட இந்த இருபது நிமிடம் படமாக்கவே அதிகம் நேரம் செலவாகி இருக்கும் என்று எண்ணுகிறேன் ...

படத்தில் நிறைய லாஜிக் மீறல்கள் .. ரோபோவிற்கு மனித உணர்ச்சிகள் எப்படி வந்தது என்பதை பற்றி சரியாக சொல்லவில்லை என்பதால் அதற்க்கு ஐஸ் மேல் வரும் காதலை முழுவதுமாக ஏற்று கொள்ள முடியவில்லை ... ஆனால் இவை எல்லாம் ரஜினி பண்ணும் வில்லதனத்திற்கு முன்னால் காணாமல் போய் விடுகிறது ...

கதாநாயகி மேல் காதல் கொள்ளும் வில்லன் அவளை கடத்துகிறான் அவளை ஹீரோ எவ்வாறு காப்பாற்றுகிறான் என்ற பழைய கதையை ரோபோடிக்ஸ் என்னும் புது தொழில்நுட்பத்தில் தந்திருக்கிறார் சங்கர் ... அவர் தன முயற்ச்சியில் கொஞ்சம் சறுக்கி இருந்தாலும் ரஜினி தன நடிப்பால் அவரையும் தன்னோடு சேர்த்து சிகரத்தில் ஏற்றி இருக்கிறார் ..

இந்த படம் குழந்தைகளை கண்டிப்பாக குஷிபடுத்தும்  .. குடும்பம் குடும்பமாக மக்கள் தியேட்டருக்கு படையெடுக்க போவது உறுதி .. கலாநிதி காட்டில் அடைமழைதான் ...
எந்திரன் - தமிழ் சினிமாவின் புது முயற்சி ... இன்னும் கொஞ்சம் ஷங்கர் தன் செண்டிமெண்ட் தனத்தை விட்டு கொடுத்திருந்தால் மனதார பாராட்டலாம்   


13 comments:

sweet said...

ajith-oda eegan, asal padangalai super screen play solra nee SHANKAR script-ai kurai solreyaa?

kaala kodumai--ppaaa

madhumidha
madhumidha1@yahoo.com

"ராஜா" said...

ஆழ்வார் படத்தோட திரைக்கதையையும் சூப்பெர்னு சொல்லி இருப்பேனே அத எழுதாம விட்டுடீங்க ....

சிவாஜிக்கும் இந்த படத்துக்குமே திரைகதையில் எவ்வளவு ஒற்றுமை இருக்கிறது என்று உங்களுக்கு தெரியவில்லையா ? போங்க பாஸ் சும்மா கடுப்பாகிகிட்டு

..அடுத்தவனுக்கு மரியாதையே கொடுக்க தெரியல உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியபோகுது

"ராஜா" said...

ஆழ்வார் படத்தோட திரைக்கதையையும் சூப்பெர்னு சொல்லி இருப்பேனே அத எழுதாம விட்டுடீங்க ....

சிவாஜிக்கும் இந்த படத்துக்குமே திரைகதையில் எவ்வளவு ஒற்றுமை இருக்கிறது என்று உங்களுக்கு தெரியவில்லையா ? போங்க பாஸ் சும்மா கடுப்பாகிகிட்டு

..அடுத்தவனுக்கு மரியாதையே கொடுக்க தெரியல உங்களுக்கு எப்படி இதெல்லாம் தெரியபோகுது

ILLUMINATI said...

கலக்கல் விமர்சனம் நண்பா.. :)

பாலா said...

படத்தில் தேவை இல்லாத காட்சிகள் என்று நாம் நினைப்பதெல்லாம் (கொசு, தீவிபத்து) கண்டிப்பாக குழந்தைகளுக்காக எடுக்கப்பட்டதை போல இருக்கிறது. இவை எல்லாம் இல்லாமல் இருந்தால் நன்றாகத்தான் இருக்கும். ஆனால் குழந்தைகளும் படத்தை ரசிக்க வேண்டும் என்றால் இவை எல்லாம் தேவைதான்.

"ராஜா" said...

@ illuminatti

நன்றி நண்பா ... ரஜினியின் வில்லத்தனமான நடிப்பிற்க்காக படம் பார்க்கலாம் ...


@ bala

நிறைய காட்சிகளில் ஷங்கர் காட்டியுள்ள விடியோ கேம் விளையாட்டு கவரவில்லை...

sweet said...

ama indha video game-la AJITH nadichu irundha ivaru SUPER o SUPER-nu solluvaaru

unga thalai eppavum tharu thalai thaanga

avarai mudhal-la cinema-la nadikkuradhukku eettha maathiri fit-a irukka sollunga

SURYA, VIKRAM evalo alaga varranga

appuram Dance

thalai keela ninnalum unga thalai dance-la Vijay-ai beat panna mudiyaadhu

okey cool

mangaattha, ungaattha, engaattha ennanga title

padam solludhe padatthoda result :)

i am not male-ya

female only

add my id

madhumidha1@yahoo.com

sweet said...

ennadhu SIVAJI screenplay, endhiran screen play onna irukka?

ATHI PUTTHISAALI AJITH FAN GAJA BOY sorry RAJA BOY vaalga

ajith-kku comedy panna varala

but ajith fanz eppavum comedy piece-a irukkenga


good keep it up

DR said...

தமிழ்மணம் ஓட்டுப் பட்டை இல்லை. இருந்திருந்தா மைனஸ் ஓட்டு போட்டு இருப்பேன். இண்ட்லி-யில் லைக் பட்டன் பிரஸ் பண்ண புடிக்கலை...

"ராஜா" said...

@ sweet

யோவ் எந்திரன் விமர்ச்சனத்துக்கும் அஜித்துக்கும் என்ன சம்பந்தம் ...
அஜித் படம் குப்பையா இருந்தாலும் எனக்கு புடிச்சிருக்குன்னுதான் சொல்லுவேன் யோவ் இப்ப இன்னான்ற ...

சினிமால பிட்டா இருக்கிறதுன்னா எப்புடி ... நவரத்னா கூல் விளம்பரத்துக்கு மண்டையில முடி இல்லாம six packல வரதுவா?.... இளமையா வரதுன்னா எப்படி முத்தூட் பைனான்ஸ் விளம்பரத்துல நீ சொல்லுற நடிகர் வருவாரே அது மாதிரியா? முதுகுல முப்பது தையல் போட்டு ப்ளேட் வச்சி ஒரு கட்டத்துல எழுந்து நடக்கவே முடியாத நிலமையில இருந்த ஒருத்தன் ஆடுற டான்ஸ ஏகன்னு ஒரு படத்துல வர்ற ஏ சாலான்னு ஒரு பாட்டுல பாத்து தெரிஞ்சிக்கோ...

யோவ் நீ இம்புட்டு எழுதுறதுல இருந்தே தெரியிது உன் வயிறு எம்புட்டு எரியிதுன்னு...

அது என்ன மங்காத்தா உங்காத்தான்னு ...எங்க படம் நாங்க எப்படிவேணா பேர் வைப்போம் இஸ்டம் இருந்தா பாரு இல்ல போய்கிட்டே இரு சும்மா வந்து இம்ச பண்ணாத...

மொதல்ல உண்மையான பேரோட வந்து கமெண்ட் போடு ... நான் நாகரீகமா பதில் சொல்லுறேன்...

"ராஜா" said...

@ dinesh

நன்றி நண்பா ... ஒவ்வொரு மனுசனுக்கும் ஒவ்வொரு பீலிங்...

Yoganathan.N said...

@ராஜா
I don't think he deserves a reply. Leave that creature alone...

நான் இன்னும் படம் பார்க்கவில்லை. மலேசியாவில் சக்கை போடு போடுகிறது. :)

"ராஜா" said...

//நான் இன்னும் படம் பார்க்கவில்லை. மலேசியாவில் சக்கை போடு போடுகிறது. :)

ஆமாம் தல எங்க ஊர்ல முதல் முறையாக ரெண்டு திரை அரங்குகளில் house fullஆக ஓடி கொண்டிருக்கிறது... வேறு எந்த படமும் ரெண்டு திரை அரங்குகளில் house fullஆனது இல்லை...

LinkWithin

Related Posts with Thumbnails