எந்தவித குறையும் இல்லாமல் நாம் படைக்கபட்டு இருக்கிறோம் என்பதே பெரிய வரம்தான் நமக்கு ... நேற்று என் சொந்தகார பெண் ஒருவருக்கு குழந்தை பிறந்தது ... குழந்தைக்கு இரண்டு கையும் இல்லை ... அந்த அழகான குழந்தையை , அதன் பால் வடியும் பிஞ்சு முகத்தை பார்க்கும் போது என்னையும் அறியாமல் அழுது விட்டேன் .. இந்த குழைந்தையை இந்த சமூகம் என்ன பாடு படுத்த போகிறது என்று எண்ணி பார்க்கும் பொழுது ... அப்பொழுதுதான் நான் உணர்ந்தேன் நாம் எவ்வளவு பெரிய வரம் வாங்கி வந்திருக்கிறோம் என்று ... கடவுள் மனிதனுக்கு கொடுத்தது ஆரோக்கியமான உடல் மற்றும் ஒருவர் மேல் ஒருவர் வைக்கும் அன்பு மட்டும்தான் ... அது மட்டுமே போதும் இந்த உலகில் மனிதன் சந்தோசமாக வாழ ... அவனுக்கு தேவையான அனைத்தையும் படைத்திருக்கிறான் அவன் ... ஆனால் நாம்தான் நாகரீகம் என்ற பெயரில் நம்மை சிதைத்து கொண்டு உள்ளோம் ...
இன்று என்னதான் அறிவியல் வளர்ச்சி கண்டு இருந்தாலும் , அந்த ஆதி மனிதன் அனுபவித்து வந்த சந்தோசத்தை நம் தலைமுறை இழந்துதான் விட்டது ... நாம் நம்மை கெடுத்து கொண்டது மட்டும் இல்லாமல் இந்த பூமியையும் கெடுத்து விட்டோம் .. நான் அறிவியல் வளர்ச்சியை குறை கூறவில்லை ... ஆனால் இந்த வளர்ச்சி மனிதனுக்குள் பண ஆசையைத்தான் வளர்திருக்கிறதே தவிர கடவுள் நமக்கு கொடுத்த அன்பு என்னும் உன்னதமான உணர்வை குறைத்து விட்டதே ..
. நமக்குள் இன்று விஸ்வரூபம் கொண்டு வளர்ந்திருக்கும் பண ஆசையை விட சக மனிதர்கள் மேல் காட்டும் அன்புணர்ச்சி அதிகமாக வளர்ந்து இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்? இன்று நாம் அனுபவிக்கும் பல துன்பங்கள் இல்லாமல் போய் இருந்திருக்குமே , கடவுள் நமக்கு அளித்த இந்த வாழ்வை முழு சந்தோசத்துடன் வாழ முடியாமல் போவதற்கு மிக முக்கிய காரணம் இந்த பணத்தாசைதானே ... பணம் அதிகம் வைத்திருந்தால்தான் சந்தோசமாக வாழ முடியும் என்ற ஒரு மாயையை ஒவ்வொரு மனிதனின் மனதிற்குள்ளும் விதைத்து விட்டோம் .. அதனால்தான் இன்று எல்லாருமே பணம் என்னும் கானல் நீரை தேடி ஓடி கொண்டு இருக்கிறோம் ... நாம் என்னதான் பணம் சம்பாதித்தாலும் நம் மனம் அடங்குவதில்லை ... லட்சாதிபதி ஆகி விட்டால் நம் அடுத்த குறி கோடீஸ்வரனாவது .. அதற்காக நாம் எவ்வளவு கஷ்டபடுகிறோம் ... ஆனால் நாம் நினைத்த பணம் கிடைத்து விட்டால் சந்தோசபடுகிரோமா? மிக குறைந்த நாளிலேயே தெரிந்து விடும் அந்த பணத்தை கொண்டு நாம் கடவுள் கொடுத்த சந்தோசத்தை வாங்கி விட முடியாது என்பதை ....
நான் படித்த காலத்தில் என் அப்பா நீ நல்லா படிச்சி நல்ல வேலைக்கு போய் கை நிறைய சம்பாதித்தால்தான் உலகம் உன்னை மதிக்கும் , நீ சந்தோசமாக வாழ முடியும் என்று கூறினார் ... அவர் சொல்லியதை வேத வாக்காக நினைத்து என் இல வயது சந்தோசங்களை எல்லாம் புஸ்தக மூட்டை என்னும் பொதிக்குள் தொலைத்து விட்டு படித்தேன் ... இன்று கை நிறைய சம்பாதித்தாலும் அவர் சொன்ன அந்த சந்தோசம் மட்டும் முழுவதும் கிடைக்கவிலையே ... நான் தெரியாத்தனமாக இந்த போட்டி உலகத்திற்குள் நுழைந்து விட்டேன் .... நான் இங்கு வாழ வேண்டுமானால் கடைசி வரை போராடித்தான் ஆக வேண்டி உள்ளது .... ஆனால் இறுதியில் நான் வெற்றி பெற்றாலும் வாழ்கையை திரும்பி பார்க்கும் பொழுது நான் பல சந்தோசங்களை இழந்து விட்டு வந்திருப்பது கண்டிப்பாக தெரியும் ... இது எனக்கு மட்டும் இல்லை , பொதுவாக எல்லாருக்கும் இது பொருந்தும் ..
கடவுள் இந்த வாழ்கையை முழுவதும் எனக்காக மட்டுமே படைத்து இருக்கிறார் ... ஆனால் என் வாழ்நாள் முழுவதும் எனக்காக வாழும் நேரம் மிகவும் குறைவே ... யாரோ ஒரு முதலாளி சம்பாதிக்கவே நான் வாழுகிறேன் ... இல்லை நானே முதலாளி ஆனாலும் கடைசி வரை என் பெரும்பாலான நேரத்தை செலவழித்து நான் சம்பாதித்த இந்த பணத்தை கொண்டு சந்தோசமாக வாழ எனக்கு நேரம் கிடைப்பதில்லை ... ஏன் என்றால் இது போட்டி உலகமாம் ... நாம் ஓய்வு எடுக்க சென்று விட்டால் உலகம் நம்மை மறந்து விடுமாம் .. நான் இறுதி வரை போட்டி போட்டு கொண்டே இருந்தால் இந்த வாழ்கையை நான் வாழ்ந்து என்ன பயன்?
பொதுநலன் என்னும் சொல் பணம் என்ற மாய வலையால் விழுங்க பட்டு விட்டதா ? பணம் மனிதனுக்குள் சுயநலத்தை அல்லவா வளர்த்து விட்டது ... ஒரு குறிப்பிட்ட மனிதர்கள் மட்டும் சுகபோகமாக வாழ்ந்து கொண்டும் ... ஒரு சாரர் சாப்பிடகூட வழி இல்லாமல் செத்து கொண்டு இருப்பதற்கும் காரணம் இந்த பணம் வளர்த்து விட்ட சுய நலம்தானே .... கடவுள் படைத்த இந்த உலகம் எல்லா மனிதர்களுக்கும் சொந்தம்தானே .. அதில் விளையும் எல்லா வளங்களும் எல்லாருக்கும் பொதுதான் .. கடவுள் பணக்காரனுக்கு வருடம் முழுவதும் மழையையும் ஏழைகளுக்கு மாதம் ஒரு முறை மழையையும் கொடுக்க வில்லையே .. எல்லாருக்கும் ஒரே மழையைதானே கொடுக்கிறார் ... அப்படி இருக்க இந்த நிலம் எனக்கு சொந்தம் அது உனக்கு சொந்தம் என்று கூறு போட்டு பங்கு போடும் உரிமையை யார் கொடுத்தது நமக்கு?
மனிதனுக்குள் ஏற்ற தாழ்வை விதைக்கத்தானே இந்த பணம் உதவி இருக்கிறது? யாரை இது வரை சந்தொசபடுத்தி இருக்கிறது இந்த பணம்? இருந்தாலும் இன்னமும் நாம் அதன் பின்னால்தான் ஓடி கொண்டு இருக்கிறோம் ... ஏன் என்று தெரியாமலே .. ஒரு நிமிடம் யோசித்து பார்த்தால் புரியும் .. கடவுள் நமக்கு கொடுத்த வாழ்க்கை என்னும் வரத்தை இந்த பணம் என்னும் சாத்தான் முழுவதும் விழுங்கி கொண்டு இருக்கிறது என்பது ... நம் அடுத்த தலைமுறைக்காவது இந்த சாபத்தில் இருந்து விடுதலை கொடுப்போம் , அன்பின் மகத்துவத்தை அவர்களுக்கு உணர்த்துவோம் .... கடவுள் கொடுக்கும் வரத்தை முழுவதும் அவர்களாவது அனுபவிக்கட்டும் .... கடவுள் என்றாவது இந்த வரத்தை நிறுத்தி விட யோசிக்கும் முன் நாம் முந்திகொள்ளுவோம்...
7 comments:
Very well said. All true.
நல்ல பதிவு......வாழ்த்துகள்
பின்னி இருக்கீங்க நண்பா!உனது வாழ்க்கை முழுதும் உனது வாழ்க்கை அல்ல.
இது தான் நடந்துகிட்டு இருக்கு இப்ப.
நன்றி சேனாதிபதி .... உங்கள் வலைப்பூவில் இருக்கும் அந்த கண்ணாடி பந்து கதையைத்தான் நான் சொல்ல முயற்சித்திருக்கிறேன் ...
@ rkguru
நன்றி தல
@ILLUMINATTI
உண்மை நண்பா ... மனித வாழ்கையை தொலைத்து விட்டு பொம்மைகளாய் வாழ்ந்து கொண்டு இருக்கிறோம் ....
I would like to add one more point ... neenga sonnadhu pola idhu poti ulagam mattum illa, poramai konda ulagam, aduthavanga enna seyyrangalo adhayae naamum seyyanum ,individuality madhipe illa... Avanga seyyura maadhiriye naamum senja naamum panam sambathikalam... suthi suthi naama kandupudicha panathuke naame adimai aagurom
s... u r correct
nice one..
இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும்
இவர் போல யார் என்று ஊர் சொல்ல வேண்டும்.....
dala super
Post a Comment