Followers

Copyright

QRCode

Wednesday, April 28, 2010

தல பிறந்தநாள் கவிதை - happy b'day thala





அன்பு தலைக்கு அர்ப்பணம்
தன்னம்பிக்கை
கொண்டு உன்னை
நீயே உந்தி
கொண்டாய்.
ஆயிரம் சோதனை
உன்னை ஆட்டுவித்தாலும்
அயராது வெற்றி
கண்டாய்
அதனால் தான்
நீ தலை.
உன் காலடியில்
தவம்
கிடக்கிறது
கலை.
நீ மானுரு
ஏந்தி மண்ணில்
வசிக்கும்
மாமலை.
சில பேடிகள்
முயன்றால்
அடங்கி விடுமோ
உந்தன் அலை.
துடிப்பான நடிப்பை
கொண்டாய்.
சில நேரம்
நடிப்பையே
நாடி துடிப்பாய்
கொண்டாய்.
நீ வென்றது
நிழல் திரையில்
மட்டும் அல்ல.
எங்கள் நித்திரையிலும்
மன திரையிலும்
தான்.
உன்னை வேரோடு
சாய்க்க திட்டம்
தீட்டினார்கள்.
நீயோ விருட்சமாய்
வளர்ந்து வலிமை
கூட்டினாய்.
நீ வறுமையில்
வார்தெடுக்க பட்ட
தங்கம்.
அதை மின்னி
பறை சாற்று கிறது
உன் அங்கம்.
நீ விளம்பரம்
விழையாத
மனிதன்.
ஆனாலும் உன்னை
விளம்பர படுத்தி
விடுகின்றன.
உன் பணிவும்
துணிவும் கனிவும்.
யார் யாருக்கோ
யார் யாரோ
இருந்தார்கள்.
உச்சத்தில் தூக்கி
விட.
ஆனால் உனக்கோ
ஊரே இருந்தது.
உன் அச்சத்தை
போக்கி விட.
நீ எங்களில்
ஒருவன்.
இல்லை இல்லை
எங்களுக்காகவே
ஒருவன்.
உன் கரங்கள்
பிறருக்கு
கொடுத்து சிவப்பது
பிறருக்கு தெரிய
கூடாது
என்பதற்காகவா
இயற்கையிலேயே
சிவப்பாக பிறந்தாய்.
நீ கொடை யில்
மட்டுமல்ல
எங்கள் போன்று
ரசிக படையிலும்
சிறந்தாய்.
வேடிக்கைக்காக படம்
பார்க்க வந்தவரை
கூட நீ
வாடிக்கையாக வர
வைத்தவன்.
நீ துவண்டு
விடாத வீர
களிறு.
வெற்றியில் அமைதி
காத்தது போதும்.
ஒரே ஒரு முறை
பிளிறு.
புலி என நடிக்கும்
எலிகள் மண்ணோடு
மண்ணாய் புதைந்து
போகட்டும்.
எத்தனை தடைகள் 
வந்து போனாலும்.
இங்கு ஆட்சி
புரிந்து கொண்டு
இருப்பது என்னவோ
மன்னனாகிய
நீ தான்!

ஒரு அஜித் ரசிகர் எழுதிய கவிதை இது .... தலையின் பிறந்தநாளுக்கு அன்பு பரிசாய் அவர் ரசிகர்களுக்கு இதை சமர்பிக்கிறேன்....

11 comments:

Anonymous said...

vaalthugal thala

SShathiesh-சதீஷ். said...

வாழ்த்தும் போது இடையின் ஏனுங்க தளபதி.

"ராஜா" said...

//வாழ்த்தும் போது இடையின் ஏனுங்க தளபதி

தூக்கியாச்சி தல அந்த வார்த்தைய...

SShathiesh-சதீஷ். said...

தூக்க வேண்டுமென்ற அவசியமில்லை. இருப்பினும் என் கருத்தையும் மதித்தமைக்கு நன்றி தோழா.

"ராஜா" said...

//கடையம் ஆனந்த்

நன்றி ஆனந்த் வாழ்த்துக்களுக்கு

//SShathiesh-சதீஷ்.
நன்றி நண்பா

Yoganathan.N said...

கவிதை நன்றாக உள்ளது... வாழ்த்துகள். :) அடுத்த பிறந்த நாளின் போது, 50-ஆவது படத்தின் பாதி வேலைகளாவது முடிந்திருக்க வேண்டும் என கடவுளை வேண்டிக் கொள்கிறேன். :)

கார்க்கிபவா said...

//தூக்கியாச்சி தல அந்த வார்த்தை/

ராஜா, :)))))))))

வாழ்த்துகள்.. நான் உங்களுக்கு சொன்னேன்

கார்க்கிபவா said...

//புலி என நடிக்கும்
எலிகள் மண்ணோடு
மண்ணாய் புதைந்து
போகட்டும்/

:)))

உடனே எடுத்துடாதிங்க..சும்மாதான் போட்ட்டேன்

கார்க்கிபவா said...

//உன்னை வேரோடு
சாய்க்க திட்டம்
தீட்டினார்கள்/

அது யாருங்க?

ஒன்னு சொல்றேன் சகா

யாரோட உயர்வையும் யாரலயும்..

தடுக்க முடியாதுடா.. கெடுக்க முடியாதுடா

:))

உதயகுமார் said...

இது நான் தலைக்காக எழுதிய கவிதைதான். அஜித் போன்ற தன்னம்பிக்கை உள்ள மனிதர்கள்தான் பின்புலம் இன்றி வாழ்வில் முன்னேற முடியும் என்பதற்கான ஒரே சாட்சி.
தலை என்றும் நிமிர்ந்து நிற்கும்.

என் கவிதையை பிரசுரித்தற்கு நன்றி

krishna said...

Thalyin rasigarkalaga iruka nangal epoluthum perumaipadukirom.. "Thala" Ungal mugathai parthal pothum.. Enathu Athma santhiyadayum...

LinkWithin

Related Posts with Thumbnails